தமிழ் சினிமா திருடன் போலீஸ்


ஆரண்ய காண்டம் என்ற படத்தை எடுத்து வெகு நாட்கள் காணாமல் போன எஸ்.பி.சரணின் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம் திருடன் போலீஸ்.


ஒரு பொருள் கையில் இருக்கும் பொது அதன் அருமை தெரியாது ...அது இல்லாத போது தான் அருமை தெரியும் என்பார்கள் அல்லவா... அந்த கருத்தை மையமாக வைத்து மிக உணர்ச்சி பூர்வமாக அப்பா மகனின் உறவை எடுத்து இருக்கிறார் புதுமுக இயக்குனர் கார்த்திக் ராஜு.

கதை என்ன?

ஒரு தந்தை மகன் நடுவில் உள்ள பாசத்தை பேசுகிறது இந்த படம். 
தினேஷ் ஒரு தலைமை கான்ஸ்டபிளின் மகன், இவர் வெட்டியாக வாழ்கையை ஓட்டுகிறார் கூடவே அப்பாவிடம் தினமும் திட்டு, கோபம், சண்டை என யாரடி மோகினி ஸ்டைலில் பயணிக்கிறது. ஒரு சமயத்தில் திடிரென்று அப்பா இறந்துபோக தினேஷ் இடிந்துபோகிறார்.

பிறகு தந்தையின் வேலை தினேஷ்க்கு கிடைக்க தன் வேலையை தொடர்கிறார். ஆனால் தன் தந்தை இறந்த காரணம் அறியமுடியாமல் திணறுகிறார். பிறகு கண்டுபிடித்து எதிரிகளை எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் திருடன் போலிஸ் கதை.

நடிகர், நடிகைகளின் பங்களிப்பு 

படத்தில் “அட்டக்கத்தி” தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், ராஜேஷ், முத்துராமன், நிதின் சத்யா மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் முக்கிய இடத்தில் வருகிறார். 
அட்டகத்தி தினேஷ் வெட்டியாக திரியும் கேரக்டரிலும் சரி, அப்பாவின் போலீஸ் வேலை கிடைத்தவுடன் காவல் நிலையத்துக்கு கம்பீரமாக சென்று அதன் பிறகு மேல் அதிகாரியின் எடுபிடி வேலைக்கு போவது என மிக இயல்பாக நடித்து இருக்கிறார்.
ஐஸ்வர்யாவுக்கு சொல்லும் அளவுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் ஐஸ்வர்யாவும், தினேஷ் இடையே காதலை அழகாகவும் காட்டியுள்ளனர், ஜோடி பொருத்தம் நன்றாகவே இருக்கிறது. 


காமெடிக்கு நாங்க கேரண்டி என்ற விதத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் ஜான் விஜய்யும் அசத்தியுள்ளனர். இரண்டாம் பாதியில் அவர்கள் வரும் காட்சி அனைத்திலும் செம ரகளை.


ஆடுகளம் நரேன், ராஜேஷ், முத்துராமன், நிதின் சத்யா மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் என அனைவரும் சிறு நேரம் வந்தாலும் மனதில் இடம் பெறுகின்றனர்.


பலம் 

போலீஸ் வேலையில் இருக்கும் கஷ்டங்களையும், சில மறைமுக விஷயங்களையும் சொன்னது. இனி டிராஃபிக்கில் வெயிலில் நிற்கும் ஒரு போலீஸ்காரரைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம் வரும். வெல்டன்!


ராஜேந்திரன் மற்றும் ஜான் விஜய் இறுதியில் அடிக்கும் லூட்டி.


பலவீனம் 

முதல் பாதி பல தமிழ் படங்களின் சாயல் தெரிகிறது எனவோ உண்மை தான்,

ஜான் விஜய் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரனின் கேரக்டரை வடிவமைத்த விதம்.. முதல் பாதியில் கெத்தான வில்லனாக காட்டி விட்டு பின் பாதியில் செம காமெடி பீஸ் போல் காட்டியது ஒத்து போகவில்லை.

ஹீரோயினை இதிலும் ஊறுகாயாக மட்டும் யூஸ் செய்திருப்பது.

2 பாடல்கள் தவிர எந்த பாடல்களும் கேட்கும் ரகம் இல்லை 

மொத்தத்தில் திருடன் போலீஸ் - ஒரு யதார்த்த அப்பாவின் கனவு 
-நன்றி cineulagam

No comments: