நாகரீகம்

.


சீறிய கைக்குட்டையை 
சட்டைப்பையில் வைப்பது
து}ய்மையின் நாகரீகம்

கூளைசாறும் கண்ணை கழுவாது
அஞ்சனம் தீட்டி அலைவது
அழகின் நாகரீகம்

கமக்கட்டுக் கழுவாது
சென்டடித்துத் திரிவது
வாசனை நாகரீகம்

கழுவுதல் மறந்து
மேலும் கீழும் துடைப்பது
சுத்தத்தின் நாகரீகம்

குறுக்குக்கட்டுடன்


குளிக்கப்போனவள்
மறந்துபோய் 
அப்படியே பாட்டிக்குப்போவது
பாட்டி நாகரீகம்.

மேலாடை மறந்து 
பெண்கள்
அப்படியே வேலைக்குப்போவது
ஆட்டக்கார ஆடை நாகரீகம்

உடைதைக்கப் பஞ்சியில்
தலைகணியுறையை
உடுத்துப்போவது
பள்ளியறை நாகரீகம்

ஒட்டுத்துணியுடன் ஒரங்காட்டி 
இடக்கு மிடக்காய் நடப்பது
பணமிடுக்கு நாகரீகம்

கடும் குளிரிலும்
கழுத்துச் சங்கிலி காட்டுவது
பொருளாதார நாகரீகம்

பள்ளியறை காட்சிகளை
பட்டப்பகலில் காட்டுவதும்
அந்தரங்க லீலைகளை
அரங்கத்தல் ஏற்றுவதும்
காமனின் நாகரீகம்

சிலிக்கோன் பிதுங்கிப்பிரள
பால்குடம் பார்த்து 
பாலகன் அழுவது
மார்வியல் நாகரீகம்

அறிவில் வளர்ந்தது
அறும்வழியே தெரிந்தது.

நோர்வே நக்கீரா 19.11.2014

No comments: