சிட்னியில் இடம் பெற்ற மாபெரும் திருக்குறள் மாநாடு

.சசிகரன் புண்ணியமூர்த்தி

அவுஸ்த்ரேலியா சிட்னியில் துர்க்கை அம்மன் கோவில் ஆதரவுடன் தமிழ் ஓசை வழங்கும்மாபெரும் திருக்குறள் மாநாடு மாநாடு நேற்று மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது . இதன்போது பல நாடுகளில் இருந்ந்து வருகை தந்த பேராசிரியர்கள் திருக்குறளின் மகிமை பற்றி மிகவும் விளக்கமாக எமது எதிர்கால சந்ததியினருக்கு விளக்கி கூறியிருந்தனர் .
இந்த நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து தமிழருவி சிவகுமாரன் அருள்தந்தை அமுதன் அடிகளார் தமிழ் நாட்டில் இருந்து பேராசிரியர் மறை மலை இலக்குவனார் ,பேராசிரியர் நாவுக்கரசர் மு. சிவச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இந்த நிகழ்வுக்கு மிகவும் ஆர்வத்துடன் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இந்த காலகட்டத்தில் எமது கலை கலாசார பாரம்பெரியம் என்பவற்றை மெருகூட்டும் வகையில் புலம்பெயர் நாடுகளில் முதலாவது நாடாக இந்த திருக்குறள் மாநாடு இடம் பெற்றமை ஒரு சிறப்பம்சமாக விளங்குகின்றது .
இதன் போது உலகிலேஜே வாழும் நாடுகளில் முதல் தடவையாக திருக்குறள் மாநாடு இடம்பெற்றுள்ளமை அவுஸ்த்ரேலியா சிட்னியில் என்பது குறிப்பிடத்தக்கது.

Nantri : seithy

No comments: