.
ஆஸ்திரேலியா கன்பராவில் சென்ற சில ஆண்டுகளாக நடைபெற்ற திருவாசக விழா இம்முறை திருமுறை விழா என்ற பெயரில் நடைபெற்றது அங்குள்ள விஷ்ணுசிவா கோயிலில், 13-04-2014 அன்று, நடைபெற்ற இவ்விழாவிற்கு பெரும் திரளானமக்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.
பெருமை மிக்க சைவத் தமிழ்ப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் சிறப்பையும்தமிழ் மக்கள் குறிப்பாக வருங்காலச் சந்ததியினர் உணர்ந்து பயன் பெற வேண்டுமென்றநோக்கில் இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டது.
விழாவின் தொடக்கத்தில் திரு சிவபாதசிங்கம் அவர்கள் தீபாராதனை செய்துபஞ்சபுராணம் பாடினார். தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டுபெர்யபுரானாம் ஆகியவை பஞ்சபுராணம் எனப்படும்.
இதனைத் தொடர்ந்து திருமதி வானதி இரத்தினவேல் அவர்களுடன் சேர்ந்துசபையினர் சிவபுராணம் ஓதினர்.
பின் சிறுமி அஸ்வினி முரளீதரனின் சைவத் திருமுறைகள் என்ற தலைப்பிலானபேச்சு மிகவும் சிறப்பாக அமைந்து திருமுறைகள அறிமுகம் செய்வதாக இருந்தது.
இதன் பின் திருமதி தமிழ்ச் செல்வி யோகானந்தனின் கானாமிர்த்த இசைப்பள்ளிமாணவர்கள் திருமுறை இசை வழங்கி எல்லோரையும் மகிழ்வித்தனர்.
இதனைத் தொடர்ந்து சதுரிக்கா சபேசன் அஜே ரமேஷ் ஆகிய சிறுவர்கள் முறையேசைவ சமயக் குரவர்கள், நமச்சிவாய வாழ்க என்ற தலைப்புக்களில் பேசினார்கள்.
விழாவை ஒழுங்கு செய்த கலாநிதி கணேசலிங்கம் அவர்களின் தலைமையுரைபின்னர் இடம்பெற்றது. சைவத்தின் தலை சிறந்த பக்தி இலக்கியமாகத் திகழ்வனபன்னிரு திருமுறைகள் என்பதையும் அவை கிடைத்த வரலாற்றையும்தொகுக்கப்பட்ட முறையையும் சுருக்கமாக விளக்கினார். இவை பக்தி நூல்கள்மட்டுமல்ல, தமிழர் பண்பாட்டையும் தமிழின் இனிமையையும் பெருமையையும்வெளிக்கொணரும் சிறந்த இலக்கியம்மாகத் திகழ்வன என்றும், இவற்றைப்பேணாது விடின் தமிழ் இலக்கியம் பண்பாடு ஆகியவற்றின் கணிசமான பகுதியைஇழந்துவிடுவோம் என்றும் கூறினார். இறை அருள் பெற்ற அருளாரின் திருமுறைப்பாடல்கள் இறை வாக்காக வந்தன என்பதை விளக்கி அவற்றை ஓதிப் பயன் பெறவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சிட்னியிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் கலாநிதிஞானா குலேந்திரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. "நம்மைப் பேணும்அம்மை" என்ற தலைப்பில் காரைக்கால் அம்மையாரைப் பற்றியதாகஅமைந்தது. இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்த அம்மையார், இறைவனிடமிருந்துமாம்பழம் பெற்ற கதையையும், பேய் வடிவு பெற்று சிவபெருமானைத்தொழுததையும், சிவனே அவரை “நம்மைப் பேணும் அம்மை” என்று கூறினதுபோன்ற கதைகளையும் சுவையுடன் எடுத்துரைத்தார். பாடல்களை இசை பொருந்தமுதலில் பாடியவர் அம்மையார் என்றும் பின் வந்த சம்பந்தர் நாவுக்கரசர்போன்ற அருளாளருக்கும் வழிகாடினவர் என்றும் விளக்கினார். பேசும்பொழுது,இடைக்கிடை தனது இனிய குரலால் பக்திப் பாடல்களைப் பண்ணோடு பாடிஅனைவரையும் மெய்மறக்கச் செய்தார்.
இறுதி நிகழ்ச்சியாக "திருநீற்றின் மகிமை" என்ற நாடகம் இடம்பெற்றது. சிறுவர்கள்நடித்த இந்த நாடகத்தில் பாண்டிய மன்னனின் வெப்பு நோயைக் குணப்படுத்தசமணரால் முடியாத நிலையில் ஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம் பாடி திருநீறு பூசிகுணப்படுத்திய கதை சித்தரிக்கப்பட்டது. சிறுவர்களின் நடிப்பும் தமிழ் உச்சரிப்பும்பலரும் மெச்சக் கூடியதாக இருந்ததன.
விழாவை ஒழுங்கு செய்வதில் இணைந்து பணியாற்றிய திருமதி யோகேஸ்வரிகணேசலிங்கம் அவர்கள் நன்றியுரை கூறினார்.
பல்வைத்திய கலாநிதி திருமதி அபிராமி யோகநாதன் அவர்களின் தேவாரத்துடன்விழா இனிது நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment