இலங்கைச் செய்திகள்


புலி சந்தேக நபர் யாழில் கைது

புத்தரின் உருவத்தை பச்சை குத்திய பெண்ணை இன்று நாடு கடத்த தீர்மானம்

சட்டவிரோதமாக ஆஸி . செல்ல முயன்ற 25 பேர் திருப்பி அனுப்பி வைப்பு

புத்தளத்தில் சுழல் காற்று

புலி சந்தேக நபர் யாழில் கைது


25/04/2014 யாழ்ப்பாணத்தில் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார்  இன்று கைது செய்துள்ளனர்.
யாழ் பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலுக்கு அமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கோபி, தேவியன், அப்பன் ஆகியோருடன் தொடர்புகள் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
நன்றி வீரகேசரி 





புத்தரின் உருவத்தை பச்சை குத்திய பெண்ணை இன்று நாடு கடத்த தீர்மானம்

24/04/2014   புத்தரின் உருவத்தை தனது கையில் பச்சை குதிக்கொண்டு இலங்கைக்கு வந்த பிரித்தானியப் பெண்ணை இன்று  நாடு கடத்த இலங்கை சுற்றுலா சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்படி பெண்ணுக்கான விமான டிக்கெட்டை இலங்கை சுற்றுலா சபை வழங்கி உள்ளது. 
பிரித்தானியப் பிரஜையும் பெண் தாதியுமான நயோமி கொல்மன் என்பவரே இவ்வாறு புத்தரின் உருவத்தை பச்சை குத்திக் கொண்டு இலங்கை வந்திருந்தவராவார்.
இது தொடர்பாக அவர் ஏ.எப்.பி.செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில்,
இது தொடர்பாக  நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தாம் லண்டன் சென்ற பிறகே சிந்திக்க வேண்டி உள்ளதாகவும், இது நீதி மன்றம் செல்ல வேண்டிய அளவு பாரிய ஒரு பிரச்சினையாகத் தான் கருதவில்லை என்றும் இப்படியான ஒரு நிலை வேறு எவருக்கும் ஏற்படக் கூடாது என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.நன்றி வீரகேசரி 



சட்டவிரோதமாக ஆஸி . செல்ல முயன்ற 25 பேர் திருப்பி அனுப்பி வைப்பு


23/04/2014    இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு  சென்ற 25 பேரை நேற்றிரவு அந்தமான் தீவிலிருந்து அகதிகள் தொடர்பான சர்வதேச அமைப்பினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 
இவர்களை இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி




புத்தளத்தில் சுழல் காற்று

23/04/2014   புத்தளம் மாவட்டத்தில் நேற்றிரவு வீசிய சுழல் காற்று காரணமாக 6 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
கல்பிட்டி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மீன்பிடி படகுகளும் இதன் போது சேதமடைந்துள்ளதுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது .



நன்றி வீரகேசரி





No comments: