மீண்டும் ஜோடி சேரும் பிரபு-குஷ்பூ!

.

kushboo-prabhu-2
பிரபு-குஷ்பூ இருவரும் ஒரு காலத்தில் ராசியான ஜோடியாக வலம் வந்தவர்கள். தர்மத்தின் தலைவன், மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, சின்ன வாத்தியார், கிழக்குக்கரை, பாண்டித்துரை, தர்மசீலன் என பல படங்களில் ஜோடியாக நடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கிடையே காதல் இருப்பதாகவும் நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
ஒரு கட்டத்தில பிரபல பத்திரிகைகளில் பிரபு-குஷ்பூவிற்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக செய்தி வெளியாகி, பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதையடுத்து, பிரபு-குஷ்பூ இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்திக்கொண்டனர். பின்னர், திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தபோதும், பிரபுவுடன் எந்த படத்திலும் குஷ்பூ இணைந்து நடிக்கவில்லை.இருவரும் வெவ்வேறு துருவங்களில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், அப்படி எதிரும் புதிருமாக சென்று கொண்டிருந்த பிரபு-குஷ்பூ இருவரையும் மீண்டும் இணைக்கும் முயற்சியில் தற்போது ஒரு இயக்குனர் இறங்கியிருக்கிறார். அவர் முதலில் கதையை பிரபுவிடம் சொல்லி இதில் உங்களுக்கு ஜோடியாக நடிக்க குஷ்பூவிடம் பேசப்போகிறேன் என்று சொன்னபோது, அவர்கள் நடித்தால் நானும் நடிக்கத்தயார். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறிவிட்டாராம்.
அதையடுத்து இதுபற்றி குஷ்பூவிடம் பேசியபோது, கதையும், எனக்குரிய கேரக்டரும பிடித்திருக்கிறது. அதனால் நான் நடிக்கிறேன் என்று ஒத்துக்கொண்டாராம். ஆக, நீண்ட இடைவேளைக்குப்பிறகு மீண்டும் பிரபுவும், குஷ்பூவும் ஜோடி சேர்ந்து நடிக்கப்போகிறார்கள்.
Nantri 123tamilcinema

No comments: