தென்கொரிய கப்பலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை வெளியிட்ட பராக் ஒபாமா
3700 கி.மீ. தொங்கியபடி விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்த சிறுவன்: அமெரிக்காவில் பரபரப்பு
காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கை இந்த வாரம் பூர்த்தியாகலாம் - மலேசிய அமைச்சர்
===================================================================
தென்கொரிய கப்பலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை வெளியிட்ட பராக் ஒபாமா
26/04/2014 தென் கொரியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தென்கொரிய கப்பலில் உயிரிழந்தவர்களுக்கு தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு அவர் சில நிமிடங்கள் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலியையும் செலுத்தினார்.
இந்த கப்பலில் இருந்து இது வரை 183 சடலங்கள் மீட்கபப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி வீரகேசரி
3700 கி.மீ. தொங்கியபடி விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்த சிறுவன்: அமெரிக்காவில் பரபரப்பு
22/04/2014 அமெரிக்காவில் விமான சக்கர பகுதியில் ஒளிந்து கொண்டு 3ஆயிரத்து 700 கிமீ தூரம் பயணம் செய்த சிறுவன் தரையிறங்கும் போது கீழே குதித்து உயிர் தப்பிய அதிசய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹவாய் தீவில் உள்ள மவு என்ற இடத்தில் காகுலை விமான நிலைய ஓடு பாதையில் சுற்றி திரிந்த 16 வயது சிறுவனை பொலிசார் கைது செய்தனர். அச் சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில் விமான சக்கரத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்து வந்ததாக தெரிவித்துள்ளான். இதுகுறித்து பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது.
அமெரிக்காவில் உள்ள சான்டா கிளாரா என்ற பகுதியைச் சேர்ந்த சிறுவன், வீட்டில் பெற்றோருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வீட்டை விட்டு வெளியேறினான். அங்கிருந்து எங்கே போவது என்று தெரியாமல் சான்சோஸ் விமான நிலையத்துக்கு சென்றுள்ளான். அங்கு ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கர பகுதியில் எப்படியோ சென்று ஒளிந்து கொண்டான். அந்த விமானம் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து சென்று 3700 கிமீ தாண்டி ஹவாய் சென்றது.
சுமார் ஐந்தரை மணி நேரம் விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்துள்ளான். விமானம் தரையிறங்கும் போது வேலியின் அருகே குதித்துள்ளான். இதில் சிறுவன் எந்த காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறான்.
இதுகுறித்து விமான நிபுணர்கள் கூறுகையில், விமானம் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும் போது, காற்றில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். அதையும் தாண்டி சிறுவன் உயிர் பிழைத்துள்ளது அதிசயம் என்றனர். தற்போது இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கை இந்த வாரம் பூர்த்தியாகலாம் - மலேசிய அமைச்சர்
21/04/2014 காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கை குறுகிய பிரதேசத்துக்குள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகும். எதிர்வரும் இந்த வாரத்துக்குள் நீருக்கு அடியிலான ஆளற்ற நீர் மூழ்கிக் கப்பலின் தேடுதல் நடவடிக்கை பூர்த்தி செய்யப்படலாம் எனவும் மலேசிய செயற்பாட்டு போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுஸைன் தெரிவித்தார்.
ஆளற்ற புளூபின் 21 நீர்மூழ்கி கப்பலின் கடலுக்கடியிலான 6தேடுதல் நடவடிக்கைகளிலும் காணாமல் போன மலேசிய எம்.எச்.370 விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
மலேசிய எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8ஆம் திகதி 239பேருடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு பயணித்த வேளை காணாமல் போனது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment