ரஷியாவுடன் உக்ரைன் கிழக்குப் பகுதியை இணைக்கலாமா? தேசிய பொது வாக்கெடுப்புக்கு இடைக்கால அதிபர் ஆதரவு
மாயமான மலேசிய விமானி செல்போனில் அவசர அழைப்பு; உறுதிபடுத்த மலேசியா மறுப்பு
475 பயணிகளுடன் கப்பல் கடலில் மூழ்கி விபத்து
காணாமல்போன MH370 விமானத்தை தேடும் நடவடிக்கையில் ரோபோ நீர்மூழ்கிக் கப்பல்
====================================================================
ரஷியாவுடன் உக்ரைன் கிழக்குப் பகுதியை இணைக்கலாமா? தேசிய பொது வாக்கெடுப்புக்கு இடைக்கால அதிபர் ஆதரவு
15/04/2014 உக்ரைனில் தேசிய அளவிலான பொது வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டின் இடைக்கால அதிபர் அலெக்சாண்டர் துர்ச்சினோவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரஷிய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் உக்ரைனின் கிழக்குப் பகுதியில், டொனெட்ஸ்க் நகர் உள்ளிட்டவற்றில் அரசு கட்டடங்களை கைப்பற்றியுள்ள ரஷிய ஆதரவாளர்கள் பொது வாக்கெடுப்பு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
அவர்களின் வேண்டுகோளின்படி உக்ரைனின் எதிர்கால அந்தஸ்தை நிலைநாட்டும் வகையில் உள்நாட்டிலேயே உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷிய ஆதரவாளர்களுக்கு கூடுதல் உரிமைகளையும் வழங்குவதா அல்லது ரஷிய கூட்டாட்சியுடன் அவர்கள் இணையவதற்கு அனுமதிப்பதா என்பதற்கான தேசிய பொது வாக்கெடுப்பை நடத்தலாம் என்று துர்ச்சினோவ் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பொது வாக்கெடுப்பை அடுத்த மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து நடத்தலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
ஆதரவாளர்களுக்கு கெடு: முன்னதாக, உக்ரைன் கிழக்குப் பகுதியில் அரசு கட்டடங்களை ஆக்கிரமித்துள்ள ரஷிய ஆதரவாளர்கள் திங்கள்கிழமைக்குள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அதிபர் அலெக்சாண்டர் துர்ச்சினோவ் விதித்த கெடுவை ரஷிய ஆதரவாளர்கள் நிராகரித்து விட்டனர். இதனால் அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
ரஷியா கண்டனம்: துர்ச்சினோவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷிய வெளியுறவுத்துறை, இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்று கூறியுள்ளது.
5 நகரங்கள் குறி:இதனிடையே, நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐ.நா. அரசியல் விவகாரத்துறை துணை பொதுச்செயலர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் டராங்கோ கூறுகையில், ""உக்ரைனின் கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தப் பிராந்தியத்தின் 5 நகரங்களில் அரசு கட்டடங்களை கைப்பற்ற குறிவைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் கூறுகையில், ""ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் அரசு செய்தித்தொடர்பாளர் மற்றும் ஊடகங்கள் கட்டுக்கதைகளைப் பரப்பி விடுகின்றன. அவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்'' என்றார்.
பான் கீ மூன் எச்சரிக்கை: முன்னதாக, ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ""கிழக்கு உக்ரைனில் பிரச்னை தீவிரமாகி வருவது குறித்து பான் கீ மூன் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையால் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த மிகுந்த கட்டுப்பாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பினருக்கும் பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்'' என்று கூறினார்.
10ஆவது கூட்டம்: உக்ரைனை ஐரோப்பிய யூனியனில் இணைக்க மறுத்து ரஷியாவுக்கு ஆதரவாக அப்போதைய அதிபர் விக்டர் யானுகோவிச் செயல்பட்டதால், எதிர்ப்பாளர்கள் அளித்த நெருக்கடியைத் தொடர்ந்து அவர் கடந்த பிப்ரவரி மாதம் நாட்டை விட்டு வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து உக்ரைனில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தில் 10ஆவது முறையாக இந்தப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. நன்றி தேனீ

14/04/2014 மாயமான
மலேசிய விமானம் ரேடார் இணைப்பில் இருந்து மாயமாவதற்கு முன், ஆபத்தை
உணர்த்தும் விதமாக துணை விமானி யாருக்கோ செல் போனில் அவசர அழைப்பு விடுக்க
முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அதனை உறுதிபடுத்த மலேசியா
மறுத்துள்ளது.
மலேசிய
தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன்
பீஜீங் சென்ற விமானம் கடந்த மாதம் 8–ந்தேதி அதிகாலையில் மாயமானது. இந்த
விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெற்கு இந்திய
பெருங்கடல் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்திருக்கலாம் என
கருதப்படுகிறது.
அதன்படி ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானங்கள் மற்றும், கப்பல்கள் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. மேலும் விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்கும் நோக்கில், அதற்கான நவீன கருவிகளுடன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாட்டு கப்பல்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

இந்த
நிலையில் மாயமான விமானத்தின் விமானி மற்றும் துணை விமானியின் போன்
அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், விமானம் நடுவானில் பறந்த போது துணை
விமானி பரிக் அப்துல் ஹமிது, தனது செல்போன் மூலமாக அவசர அழைப்பு
விடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேசியாவில்
இருந்து வெளிவரும் ‘நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில்
கூறியிருப்பதாவது:–மலேசியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பினாங்
தீவுக்கு மேலே விமானம் பறந்த போது, துணை விமானி, தனது செல்போன் மூலமாக
யாருக்கோ அவசர அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விமானத்தின் வேகம் காரணமாக செல்போன் ‘டவர்’ மாறியதால், இந்த இணைப்பு பாதியிலேயே துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த அழைப்பை அடுத்த ‘டவரால்’ இணைக்க முடியவில்லை. இதனால், பரிக் அப்துல் ஹமிது யாருக்கு தொடர்பு கொண்டார் என்பதை கண்டறிய முடியவில்லை. கோலாலம்பூரில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன் அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆக இருந்தது. ஆனால் விமானம் பினாங் மற்றும் இகாரி பகுதிகளுக்கு இடையே பறந்த போது அவர் போனை ‘சுவிட்ச் ஆன்’ செய்துள்ளார்.
இந்த பகுதியில் பறந்த போது தான், விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது என்பதால், அவர் யாரையோ தொடர்பு கொள்ள முயன்றது தெளிவாகிறது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மலேசியா மறுப்பு
மலேசியாவின்
மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பினாங் தீவுக்கு மேலே விமானம் பறந்த போது,
துணை விமானி, தனது செல்போன் மூலமாக யாருக்கோ அவசர அழைப்பு விடுத்தது
தொடர்பான தகவல்களை உறுதி படுத்த மலேசியா மறுத்துவிட்டது. அதிகாரிகளால்
ஆய்வு செய்வதற்கு முன்னதாக எதனையும் உறுதியா கூற முடியாது என்று மலேசியா
தெரிவித்துள்ளது.
“நாங்கள் உண்மை ஆய்வு செய்யாமல், இந்த செய்தித் தகவல் விககாரம் தொடர்பாக நாங்கள் எந்த ஒரு தகவல்களையும் தெரிவிக்க முடியாது” என்று அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுதின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக அமைப்புக்கள் உள்பட அனைத்து தரப்பிலிருந்தும் அதிகாரிகள் இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் மற்றும் தடங்களை பெற்றுள்ளனர். ஆனால் அவற்றை விசாரிக்கும் அவர்கள் ஆதாரமற்றது என்று கூறிவிடுகின்றனர் என்று கூறியுள்ளார்.
மேலும், மாயமான மலேசிய விமானத்திலிருந்து விமானி அழைப்பு விடுத்தாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் அளித்த ஹூசைன் “என்னை பொறுத்தவரையில், இல்லை” என்று கூறினார். இவ்விவகாரத்தில் போலீசார் மற்றும் உலக புலானாய்வு அமைப்புக்கள் விசாரித்து வருவதில் ஊகங்களை எழுப்ப விரும்பவில்லை என்று ஹூசைன் கூறியுள்ளார். நான் விசாரணையில் இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை. தற்போது விசாரணை மலேசியா போலீசால் மட்டும் நடைபெறவில்லை. எப்.பி.ஐ., எம்.ஐ.6., சீனா புலனாய்வு பிரிவு மற்றும் பிற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று ஹூசைன் கூறியுள்ளார். நன்றி தேனீ

16/04/2014 தென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று தென்கொரிய கடலில் மூழ்கியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
475 பயணிகள் இந்த கப்பலில் பயணம் செய்துள்ளனர்.
கப்பலில் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 18 ஹெலிகொப்டர்களும் 34 படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நன்றி வீரகேசரி
காணாமல்போன MH370 விமானத்தை தேடும் நடவடிக்கையில் ரோபோ நீர்மூழ்கிக் கப்பல்
16/04/2014 காணாமல்போன மலேசிய 'எம்.எச்.370' விமானத்தை தென் இந்து சமுத்திரத்தில் தேடும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரோபோ நீர்மூழ்கிக் கப்பலொன்று தனது தேடுதல் பணியை மீளவும் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது.
மலேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து வெளிப்பட்டது என
நம்பப்படும் சமிக்ஞைகள் அவதானிக்கப்பட்டதையடுத்து 'புளூபின் -
21' என்ற மேற்படி ரோபோ நீர்மூழ்கிக் கப்பல் கடலின் அடியில் விமானத்தின்
சிதைவுகளைத் தேடுவதற்காக முதன்முதலாக திங்கட்கிழமை இரவு
அனுப்பப்பட்டது.
மலேசிய 'எம்.எச்.370' விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி 239 பேருடன்
கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு பயணித்த வேளை காணாமல்போனது.
அந்த விமானம் தனது பயணப் பாதையிலிருந்து திசை திரும்பி அவுஸ்ரேலிய
பேர்த் நகரின் மேற்கே தென் இந்து சமுத்திரத்தில் மூழ்கியுள்ளதாக
செய்மதி தரவுகள் கூறுகின்றன.
அந்த விமானத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவுஸ்ரேலிய
கடற்படைக் கப்பலொன்று அமெரிக்க கடற்படையின் பிங்கர் லொகேட்டர்
உபகரணத்தை பயன்படுத்தி காணாமல்போன விமானத்தின் கறுப்புப்
பெட்டியிலிருந்து வெளிப்பட்டது என நம்பப்படும் 4 சமிக்ஞைகளை கடந்த
வாரம் இனங்காண்டறிந்தது.
எனினும் கடந்த 8 ஆம் திகதிக்கு பின்னர் எதுவித சமிக்ஞைகளும்
அவதானிக்கப்படவில்லை. இது ஒரு மாத ஆயுள் காலத்தைக் கொண்ட
விமானத்தின் கறுப்புப் பெட்டி செயலிழந்திருக்கலாம் என்ற அச்சத்தை
தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு 6 மணி நேரம் தேடுதல் நடவடிக்கையை
மேற்கொண்ட 'புளூபின் 21' உபகரணம், தனது 15,000 அடி ஆழம் வரை செயற்படும்
வரையறை தாண்டியதும்இ அதனது தன்னியக்க பாதுகாப்பு செயற்கிரம
முறைமை காரணமாக கடல் மேற்பரப்பிற்கு திரும்பியுள்ளது.
அந்த உபகரணத்தால் 6 மணி நேரமாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல்
நடவடிக்கையின் போது கவனத்தை ஈர்க்க கூடிய தரவுகள் எதுவும் கிடைக்கப்
பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
5 மீற்றர் நீளமான 'புளூபின் 21' ரோபோ நீர்மூழ்கிக் கப்பல் கடலின்
அடித்தளத்திலான ஒலி அலைகளையும் பொருட்களையும்
இனங்கண்டறியக்கூடியதாகும்.
இந்த ரோபோ உபகரணத்தின் மூலமான ஒவ்வொரு தேடுதல் நடவடிக்கையும் 16
மணித்தியாலம் கடலின் அடித்தளத்தில் செலவிடல், கடலின் ஆழத்துக்கும்
மேற்பரப்புக்குமான 4 மணி நேர பயணம், 4 மணி நேர தரவு உள்ளீடு
என்பனவற்றை உள்ளடக்கி 24 மணி நேரம் நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக
திங்கட்கிழமை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
No comments:
Post a Comment