தேர் குடைசாய்ந்ததில் ஆலய பிரதமகுரு படுகாயம் : யாழில் சம்பவம்
பிள்ளையார் ஆலய மூல விக்கிரகங்கள் திருட்டு : காரைநகரில் சம்பவம்
ஊடகவியலாளர் மீது யாழில் தாக்குதல்
கோபி, தேவியன், அப்பன் ஆகியோரின் உடல்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய அனுராதபுரத்தில் அடக்கம்
பயங்கரவாதப் பட்டியலில் பொது பலசேனா
====================================================================
தேர் குடைசாய்ந்ததில் ஆலய பிரதமகுரு படுகாயம் : யாழில் சம்பவம்
15/04/2014 யாழ்ப்பாணம் கலட்டிப்பிள்ளையார் ஆலயத்தின் தேர்திருவிழா நேற்று முற்பகல்
10 மணியளவில் இடம்பெற்றபோது தேர் தேர்குடை சாய்ந்ததில் பிரதம குரு
படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பக்தர்கள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆலயத்தின்
பிரதம குரு படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
புது வருடப்பிறப்பு தினத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றமை பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி வீரகேசரி
15/04/2014 காரைநகர் துறைமுகப் பிள்ளையார் ஆலய மூல விக்கிரகம் உட்பட அதனுடன் இருந்த
மூன்றுக்கும் மேற்பட்ட விக்கிரகங்கள் களவு போயுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ்
நிலையத்தில் ஆலய தர்மகார்த்தா சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தாபனம் செய்வதற்க்காக மூல விக்கிரகம் உட்பட ஏனைய விக்கிரகங்களும்
ஆலயத்தின் உட்புறத்தில் தனியான ஒரு இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு விக்கிரகங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையை உடைத்து
உட்புகுந்த திருடர்கள் ஆலயத்தின மூல விக்கிரகம் உட்பட ஏனைய
விக்கிரகங்கங்களையும் திருடிச் சென்றுள்ளார்கள்.
ஊர்காவற்றுறை பொலிசார் குறிப்பிட்ட திருட்டு சம்பவம் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
ஊடகவியலாளர் மீது யாழில் தாக்குதல்
15/04/2014 யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி, மாலுசந்தி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சிவஞானம் செல்வதீபன் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவராவார்.
வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று
கொண்டு இருந்த இவரின் பின்னால் சென்ற இனம்தெரியாதோர் நீ ஊடகவியலாளரா? என
கேள்வி எழுப்பியதோடு தலையில் பலமாக தாக்கி உள்ளதாக தெரியவருகின்றது.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி வீரகேசரி
கோபி, தேவியன், அப்பன் ஆகியோரின் உடல்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய அனுராதபுரத்தில் அடக்கம்
16/04/2014 வவுனியா, நெடுங்கேணி, வெடிவைத்த கல்லு பகுதியில் உள்ள காட்டில் தப்பிச் செல்ல முற்பட்ட போது இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அடையாளப்படுத்தப்பட்ட கோபி,தேவியன் மற்றும் அப்பன் ஆகியோரின் உடல்கள் அனுராதபுரத்தில் புதைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையானது நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த 12 ஆம்
திகதி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்ததாவது,
சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரூடாக பொலிஸாருக்கு தகவல்
அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பொலிஸார் விஷேட விசாரணைகளை
ஆரம்பித்தனர். நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் ஸ்தல விசாரணைகள்
கெப்பிட்டிக்கொல்லாவ நீதிவான் நீதிமன்ற நீதிபதியூடாக கடந்த
வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இந் நிலையில் நீதிவான் உத்தரவுக்கமைய கோபி,ப்பன்,தேவியன் ஆகியோரின்
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம்
ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு 12 ஆம் திகதி
சனிக்கிழமை விஷேட சட்ட வைத்திய அதிகாரியூடாக பிரேத பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டதுடன் அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கமைய
அனுராதபுரத்திலேயே அந்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன. என்றார்.
இதனிடையே இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த
மூவரினதும் சடலங்கள் அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்ட போது அங்கு அம்மூவரினதும் உறவினர்களும் வருகை
தந்திருந்தனர்.
கோபியின் அம்மாவும், மனைவியும் இதன் போது வைத்தியசாலையில் கோபியை
அடையாளம் காட்டியதுடன் பொலிஸாருக்கும் வாக்கு மூலம் அளித்தனர். இதனை
விட தேவியனும் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டார்.
எவ்வாறாயினும் அப்பனின் சகோதரர்கள் இருவர் வைத்தியசாலைக்கு
வந்திருந்த போதும் அப்பனை அடையாளம் காண அவர்களால் முடியவில்லை.
அப்பனுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு பல வருடங்கள் ஆவதால் அவரை
அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளதாக பொலிஸாரிடம் அவர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளின்
பலனாக வெடிவைத்த கல்லு பகுதியில் வைத்து இராணுவத்தினரால்
சுட்டுக்கொல்லப்ப ட்ட மூவரும் தேடப்பட்டுவந்த கோபி, தேவியன் மற்றும்
அப்பன் ஆகியோரே என உறுதிப்படுத்தப்பட்டதுடன் அது தொடர்பிலான அறிவித்தலும்
பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டது.
இந் நிலையிலேயே நீதிமன்ற உத்தர்வுக்கமைய கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகி
யோரின் சடலங்கள் அனுராதபுரத்தில் அரு கருகே அடக்கம் செய்யப்பட்டமை குறிப்
பிடத்தக்கது.
பயங்கரவாதப் பட்டியலில் பொது பலசேனா
16/04/2014 பொதுபலசேனா ஒரு பயங்கரவாத அமை ப்பு என பயங்கரவாத அமைப்புக்களை பட்
டியலிடும் பிரபல சர்வதேச நிறுவனமான 'ட்ரக்' எனும் நிறுவனம்
குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச அளவில் அரசியல் வன்முறைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும்
அமெரிக்காவை தளமாகக்கொண்ட 'பயங் கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்
கூட்டமைப்பு' ( Terrorism Research & Analysis Consortium (TRAC)
) எனும் நிறுவனமே பொதுபலசேனாவை பய ங்கரவாத அமைப்பாக
பெயரிட்டுள்ளது.பொதுபலசேனா அமைப்பு இலங்கை யில் செயற்பட்டுவரும் விதம்
தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னரே அதனை பயங்க ரவாத அமைப்பாக பெயரிட்டுள்ளது.
இது குறித்து பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் கூட்டமைப்பான
'ட்ரக்' வெளியிட்டுள்ள விளக்கத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும்
கத்தோலிக்கர்களுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பு தொடர்ந்தும்
செயற்பட்டுவருவதாகவும் குறித்த சிறுபானமையின மதப் பிரிவினரின் மதஸ்தலங்கள்
மீது அவர்கள் வன்முறைகளை பிரயோகித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் பொது பல சேனா அமைப்பானது இலங்கை அரசுடன் மிக சமீபமாக
செயற்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நெருங்கிய
தொடர்பினைப் பேணுவதாகவும் அந்த அமைப்பின் இணையத்தளத்தில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை விட 'மென்மையான இலக்குகள் மீது பயங்கரவாத செயல்களை ஒத்ததாக உள்ளது'
என பொது பல சேனா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமைக்கான காரணத்தை
விளக்கியுள்ள 'ட்ரக்'அமைப்பு மியன்மாரின் பயங்கரவாத செயற்பாடுகளுடன்
தொடர்புடையதாக கூறப்படும் விராது தேரருடன் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட
அத்தே ஞான சார தேரர் இணைந்து காணப்படும் புகைப்படத்தினையும் தனது
இணையத்தில் பிரசுரித்து அதனூடாக பயங்கரவாதம் தொடர்பில் கேள்வி
எழுப்பியுள்ளது.
சுமார் 3800 பேர் வரையிலான கல்வி பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பிலான
பகுப்பாய்வாளர்களை ஒன்றிணைத்து செயற்படும் ஒரு அமைப்பான பயங்கரவாத
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் கூட்டமைப்பு எனும் 'ட்ரக்' அமைப்பே
மேற்படி பொது பல சேனாவை இவ்வாறு பயங்கரவாத தடைப் பட்டியலில் சேர்த்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் தமது அமைப்பு பயங்கரவாத அமைப்பு பட்டியலில்
சேர்க்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதனை முற்றாக
நிராகரிப்பதாகவும் பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த
விதானகே குறிப்பிட்டுள்ளார். தமது அமைப்புடன் எவ்வித கலந்துரையாடலும்
இன்றியே குறித்த அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தம்மை பெயரிட்டுள்ளதாகவும் அது
ஜனநாயக அமைப்பொன்றின் இலட்சனம் அன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மியன்மார் விரத்து தேரருடன் பொதுபல சேனா தேரர் சந்தித்து படம் எடுத்துக்
கொண்டதால் தம்மை பயங்கரவாத அமைப்பு என்று கூற முடியாது எனவும் அப்படியாயின்
தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே பயங்கரவாத
பட்டியலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு இல்லை அது மிகவும் பகிரங்கமாக செயற்படும்
அமைப்பு என அவர் தெரிவித்துள்ளார்.சிங்கள பௌத்த மக்களுக்கு உலகில்
விடுக்கப்படும் அழுத்தம் இதன்மூலம் வெளிப்படுவதாக டிலந்த வித்தானகே
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரித்தானிய தமிழர் பேரவைஇ கனேடியன் தமிழ் காங்கிரஸ் மற்றும்
மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களையும் 'ட்ரக்' என்ற அமைப்பு
பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment