தமிழ்வழிபாட்டுப்பயிற்சிக்கூடம்

.

தமிழைப் பாடு துயரம் போகும்.தமிழைப் பாடு இன்பம் பெருகும்.தமிழைப் பாடு ஒழுக்கம் சிறக்கும்
தமிழைப் பாடு அருள் கொழிக்கும்
என்றனர் நாயன்மார்கள்ஆழ்வார்கள்
நேற்று வெள்ளிக்கிழமைஈழத்திழ் பண்டைத் துறை சம்புகோளப்பட்டினம் (மாதகல்)சிங்களப் பெயர் தம்பகொலபடுண
(
சம்பு = தம்பகோள = கொலபட்டினம் = படுண)

21 
அடி உயரச் சிவனார் திருவுருவச் சிலை முன்னிலையில்
காலை 0900 மணி தொடக்கம்
36 
அருட்சுனைஞர் தீக்கை பெற்றனர்.தமிழ் வழிபாட்டுப் பயிற்சியில் ஒரு படிநிலை இத்தீக்கை.தமிழ்நாடு ஈந்த தவத்திரு முபெசத்தியவேல்முருகனாரின் திருவருட்பணி.மருத்துவர் நந்தகுமாரின் அயரா உழைப்பு.


தமிழ்வழிபாட்டுப்பயிற்சிக்கூடம்

பெருமான் திருவருளால் திருநிறை. மறவன்புலவு க. சச்சிதானந்தம் ஐயா அவர்களின் வழிகாட்டலிலும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள தெய்யவத் தமிழ் அறக்கட்டளையின் இணைப்பங்கிலும் தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பினை இரு பாலாருக்கும் இலங்கையில் வழங்கும் தமிழ்வழிபாட்டுப்பயிற்சிக்கூடம் யாழ்ப்பாணத்தில் இணுவிலில் மாசிமாதம் 2014 முதல் அமைந்துள்ளது. தமிழில்வழிபட ஆர்வமுள்ளோருக்கு இப்பயிற்சி முதற்கட்டமாக இலங்கையில் சித்திரை 2014 முதல் செந்தமிழ் வேள்விச் சதுரர் திருநிறை. சத்தியவேல் முருகானர் ஐயாவல் நேராடியக வழங்கப்படுகிறது. திருமணம், திருமண உறுதி, திருவடிப்பேறு முதலான வாழ்வியல் சடங்குகளை இங்கு பயிலலாம். திருக்குடமுழுக்கு, மண்டலத் திருக்குடமுழுக்கு ஆகிய திருச்சடங்குகளையும் இங்கு பயிலலாம். தற்போது பயிற்சித்திட்டத்தில் ஆர்வமுள்ளோருக்குக் குறுகியகாலக் கல்வி (15 நாள்கள்) வழங்கப்பட்டு வருகிறது. இதன் தூரநோக்கம் நீண்டகாலப் பட்டயப்படிப்பு பல்கலைக்கழகச் சான்றுடன் (1 முதல் 2 ஆண்டு) வழங்குவதாகும். தமிழறிவு, சைவசிந்தாந்த அறிவு, ஆகம அறிவு, செய்முறைச் தொண்டு அறிவு, பூசனை அறிவு, ஒடுக்க அறிவு, ஞான அறிவு, பண்ணிசை அறிவு ஆகிய சைவசமயப் பன்முக அறிவுத்துறைகளை வளர்க்க இப் பயிற்சி வழங்கப்படும்.No comments: