தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2014

.

.

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா    இந்த ஆண்டிற்கான “தமிழ் வளர்த்த சான்றோர் விழா”வினை  மார்ச் மாதம் 16 ஆம் திகதி அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்துடன்  இணைந்து
ஹோம்புஸ் ஆண்கள் உயர் பாடசாலை மண்டபத்தில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது.  சரியாக 5.30 மணிக்குத் அரங்கு நிறைந்த அவையினருடன்     விழா ஆரம்பித்தது. செந்தமிழ்க் கவிதைகளாலே நிகழ்ச்சிகளைப் பல் மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள் தொகுத்து வழங்கியமை விழாவிற்கு மெருகூட்டியது.

அமிழ்தமாம் இளமைகுன்றா அருந்தமிழ் மொழிக்கு
    அளப்பரிய பணியியற்றி அணிகள் பூட்டித்
தமிழ்மணக்க உலகரங்கிற் பெருமை சேர்த்த
    தனித்துவம்மிகு திருமுருக வாரியார் மற்றும்
புகழ்மணக்க யாழ்நகரில் வாழ்ந்த வணபிதா
    புனிதன்திரு தனிநாயக அடிக ளாரையும்
அகமகிழ்வொடு நினைவுகூர்ந்து எடுக்குமிவ் விழாவில்
    அன்பொடுநான் மங்கலவிளக் கேற்றிட அழைப்பது……

தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக் கழகந் தன்னில்
  தகைமைமிகு தமிழ்த்துறைத் தலைவராய்ப் புகழ்
விஞ்சவிரு தசாப்தங்கள் கடமை யாற்றி
    விருதுகள்பல பெற்றுயர்ந்து புலம்பெ யர்ந்து
எஞ்சியநாள் கழித்திடஅவுஸ் திரேலி யாவில்
   இணையிலாத்தமிழ் அமுதசுரபி யாய்த் தமிழைக்
கொஞ்சிமகிழ் ஞானாவைக் குதூகலமாய்  விழாவில்
   குத்துவிளக் கேற்றஅழைக் கின்றேன் வருக!

என்று பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் திரு குலேந்திரன் தம்பதியினரை அழைத்ததைத் தொடர்ந்து அவர்களால்  மங்கலவிளக்கு ஏற்றப்பட்டது.

மங்கலவிளக்கேற்றும் நேரத்தில் திருமதி சிவரதி அவர்களின் மாணவர்களான  செல்வி மகிசா பூபாலசிங்கம் - செல்வி அபிசா பூபாலசிங்கம் -செல்வி கவிநிலா நக்கீரன் - செல்வன் குருசஞ்சீவ் இரவீந்திரராஜா –செல்வி தர்சனா  இரவீந்திரராஜா ஆகியோர் தேவாரமும் புராணமும் பண்ணிசையுடன் பாடியது ‘சகல விழாக்களிலும் இப்படி இறைவணக்கத்துடன் மங்கல விளக்கேற்றுதல் சிறப்பாகவும் முன்மாதிரியாகவும் சைவசமயக் கோட்பாட்டுக்கு ஏற்பதாகவும்  அமையும்  என்பதை உணர்த்தியது.

‘இதுபெரிய சிரமமடா தமிழ்ப டித்தல்’
   என்போர்மிக நாணிடவே இங்கு பிறந்து
மதுரமிகு தமிழ்மொழியை மகிழ்ந்து கற்று
    மாநகராம் சிட்னியிலே வதிவோர் மெச்சும்
யதுகிரியை வருகவென அழைத்திடு வேனே!
    யாம்மகிழத் தேன்குரலில் திருமறை யோடு
புதுமைமிகத் தமிழ்வாழ்த்தும் நாட்டுக் கீதமும்
    பொறுமையுடன் அரங்கேறி இசைத்;திடு வீரே!!

என்று செல்வி யதுகிரி லோகாசன் அவர்களை  அழைத்ததும் அவர் தமிழ்வாழ்த்தையும் நாட்டுக் கீதத்தையும் பலரும் மெச்சும்படி பாடினார்.

தணியாத தமிழ்ப்பற்றும் சமய வேட்கைத்
       தனிப்பற்றுங் கொண்டுயர்ந்து கலாநிதி ஆகி
அணியாகப் பேரவையில் அங்கம் வகித்து
    அளப்பரிய சேவைதனை வழங்கும் சைவ
மணியான பேரறிஞர் கணேச லிங்கம்
    மகிழ்வோடு விழாவிற்பங் கேற்க வந்தார்
பணிவாகக் கரங்கூப்பி வரவேற் கின்றேன!;
    பரிந்துவந்து ஆசியுரை வழங்கு வீரே!

என அன்புடன் கலாநிதி கணேசலிங்கம் அவர்களை வரவேற்றதும்
சென்ற வருடம் ‘தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2013’ல் நல்லூரைச் சேர்ந்த சிவத்திரு  ஆறுமுக நாவலர் பெருமானுக்கும் நவாலிர் ‘தங்கத் தாத்தா’ சோமசுந்தரப் புலவர் அவர்களுக்கும்   டாக்டர் இளமுருகனார் பாரதியும் அவரோடிணைந்த செயற்குழுவினரும் வெகு சிறப்பாக விழா எடுத்தார்கள் என்பதையும் நினைவுகூர்ந்து தனது ஆசி உரையில் கல்வி ஒழுக்கம் பண்பு ஆகியவற்றிற் சிறந்தவர்கள் சான்றோர்! இன்று நடைபெறும் சான்றோர் விழா இருபெரும் தமிழ்ச் சான்றோரைப் போற்றுவதாக அமைகிறது. ஓருவர் தனிநாயக அடிகளார். வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணி செய்தவர். இவர் தமிழ் நிலத்திலும் வெளி நாடுகளிலும் தமிழ்மொழி தமிழர் பண்பாடு ஆகியவற்றைப் பரப்பியவர். பல ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியவர்.உலகத் தமிழ் மாநாடுகளை நடாத்தி "Tamil Culture"(தமிழர் பண்பாடு) என்ற தரமான சஞ்சிகையையும் வெளியிட்டவர் என்றும் மற்றவர் கிருபானந்த வாரியார் அவர்கள். முருக பக்தரான இவர் வாழ்நாள் முழுவதும் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தித் தமிழ் சைவம் ஆகியவற்ன் பெருமையையும் சிறப்பையும் மக்களுக்கு உணர்த்தியவர். அவரின் பேச்சு தமிழ் இலக்கிய இன்பமும் பக்திச் சுவையும் கலந்து கேட்பவரின் மனதைப் பரவசப்படுத்தும். இவ்விருவரும் இல்லறத்திலும் இணையாது தமிழ்மொழியின் பேரழகில் தம்மை இழந்து பணிசெய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச் சான்றோர் விழாவை ஓழுங்குசெய்து நடத்தும் பெருமக்களைப் பாராட்டுகின்றேன்.இவ்விழா சிறப்புடன் நடைபெற இறை அருளை வேண்டி வாழ்த்துகிறேன்’ என்றும் சிறப்புறக் கூறித் தனது  ஆசி உரையை நிறைவுசெய்தார்.
அடுத்த நிகழ்ச்சியான வரவேற்புரையை வழங்க உலகசைவப் பேரவை அவுஸ்றேலியா (சிட்னி கிளை)யின் தலைவர் திரு அருச்சனமணி அவர்களை …

    உலகசைவப் பேரவையின் சிட்னிக் கிளையின்
    ஊக்கமிகு தலைவராய்ப் பதவி ஏற்று
பலதுரித செயற்றிட்டம் வகுத்து எம்மைப்
    பாசமுடன் அரவணைத்து வழிந டத்தும்
வலதுகர மாயிருக்கும் அருச்சுன மணியே!
    வரவேற்புரை வழங்கியிந்த விழாவிற்கு வந்த
நலவிரும்பி அனைவரையும் இருகை கூப்பி
    நற்றமிழால் வரவேற்க வருவீ ரையா!

….. என்று அழைத்ததும் அவர் வரவேற்புரையில் தமிழகத்தில் இருந்து வருகைதந்த சொல்வேந்தர் இயலிசை அரசி பேராசிரியர் சரசுவதி இராமநாதன் அவர்களையும் மங்கல விளக்கேற்றிய பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் அவர்களையும் ஆசி உரை வழங்கிய கலாநிதி கணேசலிங்கம் அவர்களையும் சிறப்புரை வழங்க வருகைதந்த திரு தனபாலசிங்கம் அவர்களையம் அவையோரையும் அன்புடன் தமிழ் வளர்த்த சான்றோர் விழாவிற்கு  உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியாவின் சார்பில் அன்புடன் வரவேற்றார். உலக சைவப் பேரவையைத் தோற்றுவித்த ஞானசூரியன் என்றழைக்கப்படும் அமரர் சிவநந்திஅடிகளாரைப் பற்றிய சில தகவல்கனளைக் கூறி அன்னாரை நன்றியறிதலுடன் நினைவுகூர்ந்தார். அவரது காலத்தில் உலக சைவ மாநாடுகள் பலவற்றைப் பல நாடுகளிலும் திறம்பட அவர் முன்னின்று நடாத்தியமை பெரும் சாதனை என விதந்துரைத்தார்.சிவநந்தி அடிகளாருக்கும் தனிநாயக அடிகளாருக்கும் உள்ள ஒற்றுமைபற்றியும் குறிப்பிட்டார். வாரியாரைப்பற்றக் குறிப்பிடும்பொழுது கூடுதலாக வடமொழிக் கலப்பில்லாது பாமரருக்கும் விளங்கும்வண்ணம்  தமிழ் இலக்கிய சொற்பொழிவுகளை நடாத்தியமை குறிப்பிடத் தக்கது என்றார்.

பவவினை அழித்தெமைப் பரனுடன் சேர்த்திடும்
நவநிதி யளித்டும் திருமுறைப் பாக்களை
சிவரதி பண்ணொடு செம்மையாய் இசைத்திட
உவந்துநான் அழைப்பனே உருக்கமாய்ப் பாடவே!

….. என்று பல் மருத்துவ கலாநிதி சிவரதி கேதீஸ்வரன் அவர்களை அழைத்ததும் அவர் தனது மாணவர்களான செல்வி மகிசா பூபாலசிங்கம் - செல்வி அபிசா பூபாலசிங்கம் - செல்வி கவிநிலா நக்கீரன் - செல்வன் குருசஞ்சீவ் இரவீந்திரராஜா – செல்வி தர்சனா இரவீந்திரராஜா ஆகியோருடன் மிகவும் திறமாகப் பண்ணிசை வழங்கி அவையோரைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தினார்.
பூழியர்கோன் வெப்பொழித்த…….” என்ற சேக்கிழார் பெருமானின் புராணம் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே….” என்ற தேவாரம் அப்பர் சுவாமிகள் இயற்றிய “மாதர் பிறைக் கண்ணியானை…….” என்ற தேவாரம் சுந்தரர் பெருமானின் “மீளா அடிமை உமக்கே ஆளாய்….” என்ற தேவாரம் - மாணிக்கவாசகர்பெருமானின் “கண்களிரண்டும் அவன்கழல் கண்டு… என்ற தேவாரம் - சேக்கிழார் பெருமான் அருளிய “இறவாத இன்ப அன்பு வேண்டி….என்னும் புராணமும் ” அருணகிரிநாதரின்  “முத்தைத்தரு பத்தித் திருநகை….” என்ற திருப்புகழ் ஆகியவற்றை அழகுறப் பாடியபின்  கச்சியப்ப சுவாமிகள் அருளிய “வான்முகில் வழாது பெய்க….”என்ற புராணத்துடன் பண்ணிசையை நிறைவு செய்தார்கள்.

புவியா தரித்திடும் தனிநா யகத்தின்
அவியாப்; புகழைச் செஞ்சொலால் இயம்பிட
ரவிந்திர ராஜா தர்ச னாவைக்
கவியால் அழைக்கிறேன் களிப்பொடு வருகவே!;

செல்வி தர்சனா இரவீந்திரராஜா அவர்கள் வண. பிதா  தனிநாயக அடிகளாரைப் பற்றிய சிறந்ததொரு சிற்றுரையைப்  பலரும் மெச்சும்படி ஆற்றுகையில் ‘தமிழ்த் தூது அடிகளாருடைய இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பாகும். அடிகளார்  தான் சென்ற நாடுகளிலெல்லாம்  தமிழின் பெருமைகளை எடுத்துரைத்து வந்த இவர் தனது இறுதி மூச்சுவரை தமிழுடனேயே வாழ்ந்தார். எம் முன்னோர்கள் ‘உலகம் அறிவுடையார் மாற்று’ என்று குறிப்பிடுகின்றனர். அதாவது இந்த உலகில் பல கோடிமக்கள் இருப்பினும் அவர்கள் எல்லாம் அறிவுடையவர்களின் அறிவுரைகளுக்கு உட்பட்டு இருக்கின்றார்கள். இது முற்றிலும் அடிகளாருக்குப் பொருந்தும்’ என்று பல நல்ல கருத்துகளைக் கூறி அமைந்தார்.
வண.பிதா தனிநாயக அடிகளாரின் தனிப் புகழைத் தண்டமிழ்க் கவிதையாற் பாடிட….

இசையோடு  இயேசுபுகழ் பாடிப் பாடி
இன்பமுறும்; அமைதியுள்ளம்  கொண்ட செம்மல்
திசைராசா அவர்களைநான் அடிக ளாரின்
சீர்பாடிட அழைத்திடுவேன் அன்ப வருக!

….என்று அரங்கிற்கு அழைக்கப்பட்டதும் திரு திசைரைசா அவர்கள் தனது கம்பீரமான குரலில்

ஆழி சூழ் ஈழம் நெடுந்தீவின் தந்தையும்
அருகினில் வாழும் காவலூர் அன்னையும்
சூழ் தவப்பயன் சேர்ந்திடத் தோன்றிய
தமிழ் மகன் தனிநாயகனார் வாழ்வினை
நாளும் நினைந்து நினைந்து மகிழ்வது
நற்றமிழ் மக்களாம் நம்கடன் அன்றோ?

இன்தமிழ் அமுதம் அள்ளிப் பருகியே
இனிமையை அகிலம் அனைத்தும் பெருக்கிட
தன்தமிழ் தாய்க்குத் தமிழ்ப்பணி புரிந்திட
தன்னை அர்ப்பணித்தார் தனிநாயகனார்
அன்னை அளித்த வாக்கினை ஏற்று
அன்பின் இறையின் அருட்பணி தாங்கியும்
முன்னவன் பணியுடன் முத்தமிழ் ஆய்ந்தனர்
தன்னிகரில்லா தமிழ் நாயகனார்.

‘யாமறிந்த மொழிகளுள் தமிழ்மொழிபோல்
பூமியில் என்றும் கண்டிலேம்’ என்று
பாரதி பாடிய பாட்டினை எண்ணி
பாரினில் எங்குமே தமிழ்த் தூதிசைத்தார்
பண்பினார் தவத்திரு தனிநாயகனார்.

தமிழ்மணம் கமழும் நாடுகள் அனைத்தும்
தரணியில் புகழ்பெறும் ஆங்கில நாட்டிலும்
சிங்கப்பூரிலும் கம்போடியாவிலும்
இந்தோனீசியத் தீவுகள் தோறும்
சங்கத் தமிழின் சான்றினைப் பெரிதாய்
அங்கம் அங்கமாய் ஆராய்ந் துணர்ந்தார்.

அகிலம் ஒன்றே அனைவரும் ஒன்றே
யாதும் ஊரே யாவரும் தோழரே
என்றெல்லோர்க்கும் இயம்பினார் அடிகள்.
திருமறை ஓதி தெய்வம் பணிந்தவர்
திருவாசகத்திலும் தேவாரங்களினதும்
சிறப்பினை வியந்து புகழ்ந்து போற்றினார்.

இத்தாலி ஜேர்மனி இங்கிலாந் திருந்து
வித்தக குருமார் வீரமா முனிவர்
கால்வெல்ட் ஐயர் போப் முதலானோர்
முத்தமிழ்தன்னை முழுதாய்க் கற்று
முயன்று தமிழினை உயர்த்திட வைத்ததை
வியந்து சேவியர் செந்தமிழ்ச் செல்வர்
தம்மொழி இன்மொழி முன்மொழி இதுவென
பன்மொழி தேர்ந்து பாரினில் உயர்ந்து

பேராசிரியராய் மலேசிய மண்ணில்
முதல்தமிழ் உலக ஆய்வு மாநாட்டை
அமைத்தனர் பின்னர் தமிழக நகரிலும்
வானுயர் நகராம் பாரிஸ் நகரிலும்
தேனுறை பூங்கா யாழ் நகரதிலும்
அன்னை நற்றமிழ்க்கு ஆய்வுகள் செய்து
உலகத் தமிழ்மொழி ஆய்வு மாநாட்டினை
ஊக்கிய உத்தமர் தனி நாயகமே!
வாழ்க தவத் திரு தனிநாயகம் அடிகள்
வளர்க உலகில் தமிழ்மொழி என்றும்.’

சுவைமிகு கவி படைத்தார்.
இதனைத் தொடர்ந்து வண.பிதா தனிநாயக அடிகளார் பற்றிய சிறப்புச் சொற்பொழிவை ஆற்றும்வண்ணம் ……

துணையெனவெண் டாமரையாள் வாணி அருளச்
   சொற்கூட்டம் போட்டியிட்டவர் நாவைக் கெஞ்ச
பிணைந்தபடி ஆங்கிலமும் தமிழம் தம்மைப்
   பேசுவரோ எனத்தினமும் தவங்கி டக்க
இணையேது இவர்பேச்சுக் கென்று கேட்போர்
   இறுமாந்து செவிமடுக்கத் தனபால சிங்கம்
அணையாத புகழ்படைத்த அடிகள் பற்றி
    அற்புதமாய்ச் சிறப்புரைப்பர்! அன்ப வருக!.

என்று விழா இணைப்பாளர் பாரதி அவர்கள் அன்படன் அழைக்க தனது வழமையான பாணியிலே சிறப்புரை வழங்கினார்.                                                       அவர் முதலில் “சான்றோர் என்றால் யார்? என்றதற்குப் பல சான்றுகளை அற்புதமாகத் தந்த பாங்கு மெச்சக்கூடியதாக இருந்தது. சான்றோரை விளக்கம் செய்ய எமக்குப் புறநாநூற்றில் இருந்து செய்தி சொல்கிறார். சங்ககாலப் புலவரான பிசிராந்தையரிடம் ஒருவர் ‘உங்களுக்கு இவ்வளவு ஆண்டுகள்சென்றும் இன்னமும் தலை நரைக்கவில்லையே! இதற்கு என்ன காரணம்?’ என்று வினவியதும் புலவர் ‘எனக்கு இன்னமும் ஏன் தலை நரைக்கவில்லை என்று கேட்கிறீரே! ஏனென்றால் பண்பான மனைவி- அறிவுள்ள பிள்ளைகள் தற்குறிப்பறிந்து ஏவல் செய்யும் ஏவலாளர்கள். செங்கோல் செலுத்துகின்ற மன்னர் இவற்றையெல்லாம்விட ஆன்றகொள்கை வித்தடங்கிய சான்றோர் பலர் வாழும் ஊர் நான் வாழும் ஊர் அதனால் என் தலைமுடி நரை காணவில்லை. சான்றோரின் மகிமையைப் புலவர் வெளிக்காட்டியதை அழகுறச் சொன்னளார். யாழ்ப்பாணத்தில் வாரியாரின் மழைபோல ஓழுகுகின்ற பேச்சுகளைக் கேட்டதை நினைவு கூர்ந்த தனபாலசிங்கம் தமிழை - கம்பராமாயணத்தை -  மகாபாரதத்தை சாதாரண மக்களிடையே எடுத்துச் சென்று  ஜனரஞ்சகப்படுத்தியவர்தான் வாரியார் சுவாமிகள் என்று விதந்துரைத்தார். மேலும் அவர் “ ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கூறிய கணியன் பூங்குன்றனாருக்கு அவர் பிறந்த பாண்டிநாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்துகொண்டே இந்த உலகத்தைக் கண்ட மாநகரக் காட்சி சொந்தமாகியது. அதுபோல ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதை வாழ்ந்து காட்டியவர் தனிநாயக அடிகளார். கரம்பனிற் பிறந்த அவருக்கு இந்தப் பூமியிலே கால் படாத இடமில்லை.  கடைசிகாலத்தில் அவர் அமைதிகொண்டது அவர் பிறந்த மண்ணிற்கு வந்துதான்.தேன்பாடும் மட்டுநகரில் வாழ்ந்த வீரமாமுனிவர் இயற்றிய ‘தேம்பாவாணி’யைத் தமிழ் மக்களிடையே பரப்பிவிட்டவர் தனிநாயக அடிகளார். வாழ்வில இறைபத்தியையும் தமிழ்ப் பற்றையும் சங்கமிக்கச் செய்த மகான் அவர். தேம்பாவணியிலே வரும் சில பாடல்களை அடிக்கடி கூறும் அடிகளார் ‘அறக்கடல் நீயே! அருட்கடல் நீயே! …….இனி அனைத்தும் நீயே!’ என்ற பாடலையும்  ‘உருவில்லாள் உருவாகி உலகில்மனிதன் உதிப்பக்................
கருவில்லாள் கருத்தாங்கிக் கன்னித்தாய் ஆகினையே!’  என்ற பாடல் போன்றவற்றையும் அடிகளார் மேற்கோள் காட்டுவது வழக்கம் என்றுஞ் சொன்னார்.  ‘தமிழ்மொழியைத் தனக்குத் தாய்மொழியாகத் தந்த இறைவனைக் கைகூப்பி வணங்கிவந்த அடிகளார் “யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல நின்பால் அன்பும் அருளும் அறனும் மூன்று ….” என்று பரிபாடலில் வரும் பாடல் வரிகளைப் பல இடங்களில் எடுத்துக்காட்டிய அடிகளார் இதைத் தன் வாழ்வாக வரித்துக் கொண்டவர் என்றும் …. ஒருவரைச் சான்றோர் என்று கொள்வதற்கு அவரிடம் சில தகுதிகள் அமைந்திருக்க வேண்டும். அவர் உடல்  உள்ளம் சிந்தனை எல்லாமே சான்றாண்மையை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும். இவைகளுடன் சான்றோராக விளங்கிய தனிநாயக அடிகளார் சிரிப்பிற்கும் நட்பிற்கும் கொடுத்த இடம் மேலானது என்றும்….அடிகளாரின் சிறப்பைப் பலர் புகழ்ந்து பேசியதற்குப் பல உதாரணங்களை மேற்கோள் காட்டினார். ஒருமுறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் மாநாட்டிற்கு சொல்லின் செல்வர்  இரா.பீ. சேதுப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்குவதாக இருந்தது. அதிலே தனிநாயக அடிகளாரின் சொற்பொழிவும் இருந்தது. கூட்டத்திற்குச் சொல்லின் செல்வர் வரத் தாமதமாகிவிட்டது. ஆனால் ரேத்திலே மிகவும் கட்டுப்பாடுகொண்ட அடிகளார் திரு சேதுப்பிள்ளைக்காகப் பார்க்கவில்லை. தனது உரையைத் தலைவரில்லாமலே பேசி முடித்தார். தாமதித்துவந்த சேதுப்பிள்ளை தனது உரையின் நிறைவில் அவையோரைப் பார்த்து “தனிநாயகத்திற்கோர் சபாநாயகம்; வேண்டுமோ? ” என்று கூறி அடிகளாரின் பெருமையை மேலும் விளக்கும் வண்ணம் “தனிநாயகம் பேசிற்று” என்று உரைத்ததும் ‘ஏன் ஓர் அடிகளாரைப் போயும் போயும் அஃறிணையில் அழைத்தார் என்ற வியப்பைப் போக்க அதற்கு விளக்கமும் தந்தார். தனிநாயகம் பேசிற்று என்றால் ‘தமிழ் உலகம் பேசிற்று’என்று சொல்வது சரி. அந்தக் கருத்தில் தனிநாயகம் பேசிற்று …தமிழ் பேசிற்று என்றேன்’  …என்றார். ஒருமுறை டாக்டர் மு வரதராசனார் பேசும்பொழுது ‘எங்கள் சிறப்பெல்லாம் தமிழ்நாட்டிற்கு உள்ளே தான். ஆனால் தனிநாயக அடிகளாரின் சிறப்புத் தரணியெல்லாம் பரவி இருக்கிறது’ என்றார். பேராசிரியர் கைலாசபதி அவர்கள் குறிப்பிடுகையில் ‘அடிகளார் பாதிரிமார்களில் ஓர் இளவரசன்’ என்று புகழ்ந்துள்ளார். தனபால் அவர்கள் மேலும் தொடர்கையில் ‘ மேல்நாட்டு அறிஞர்களின் ஆக்கங்களை மேல்நாட்டார்  தலைமேலே போற்றி வருவது போலத் தமிழ் அகத்துறை இலக்கியங்களை ஒருமுறை படித்துப் பார்க்குமா என்று ஏங்கினார்.     இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் - திருவள்ளுவரின் திருக்குறள் போன்ற நூல்களையம் இவர்கள் போற்றும் நிலைவர வேண்டும் என்பது இவர் கனவாகும். - ‘கத்தோலிக்கப் பாதிரியாக வாழ்ந்த வாழ்க்கை   தனிமனிதனாக நின்று தமிழுக்குப் பணிசெய்வதற்கு வசதியாக அமைந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கம்போடியா – தாய்லாந்து – பேர்மா – போத்துக்கல் போன்று உலகிற் பல   நாடுகளுக்கும் சென்று அங்கங்கே அடைபட்டுக் கிடந்த தமிழர்களை அவர்களின் கலாசாரத்தை தமிழ்ப்பண்பாட்டை தமிழ்கூறு  நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்துவைத்த பெருமை அடிகளாரையே சாரும்’ என்றும்   ‘தமிழரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் வெளிக்கொணர்தற்கு அடிகளார் 1952ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் வெளியிட்ட “தமிழ்ப் பண்பாடு” – (Tamil Culture) என்ற முத்திங்கள் ஏடு மகத்தானது என்றும் கூறினார்.  1964 ஆம் ஆண்டு நடைபெற்ற கீழைத்தேய மொழிகளின் மாநாட்டிற் பங்கெடுத்த  பன்மொழிப் புலவர் பொ. மீனாட்சிசுந்தரனார்- டாக்டர் மு வரதராசனார் - அறிஞர் சுப்பிரமணயம் ஆகியோருடன் கலந்துகொண்ட அடிகளார் மாநாட்டின் இடைவேளையின்போது நடை  பெற்ற கலந்துரையாடலின் போதுதான் ‘உலகத் தமிழாராய்சி மன்றம்’ என்பதன் பிரசவம் நடைபெற்ற தகவலையும் அன்று தமிழ்நாட்டு அறிஞர்கள் உலகத் திராவிட மாநாடு என்று பெயர்சூட்டவிளைந்த பொழுது அடிகளார் அவர்களுக்கு இடங்கொடாது சளைக்காது வாதாடி அதற்கு ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்’ என்ற பெயரைச் சூட்டின தகவலையும் தந்தார். அவர் காலத்திலேயே பல மாநாடுகளைத் திறம்படச் செயலாற்றியமை அவரின் அயரா உழைப்பின் பெறுபேறே என்றும்   பேச்சாற்றல் கொண்ட அடிகளார் எழுதுவதிலும் மிகுந்த புலமை வாய்ந்தவர் என்பதை அவரின் கட்டுரைகளில் ஒன்றான  ‘பூக்களைக் கொண்டே தமிழர் எல்லாவற்றையம் சொல்லிவிட்டார்கள்’ என்ற ஆங்கிலக்  கட்டுரை சான்று பகரும் என்பதையும் சுட்டிக்காட்டி அதன் விளக்கத்தையும் தனது வித்துவத் திறமை வெளிப்படும் விதத்தில் கையாண்டமை அற்புதம். அடிகளாரின் முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  மலேசியாவில் அதன் பிரதமர் அப்துல் ரகுமான் தலைமையில் பல நாட்டுப் பேரறிஞர்கள் குழுமியிருந்த அவையில் தன்னைத் தமிழனாகப் பிறக்கவைத்த இறைவனுக்கு முதற்கண் தலைவணங்கும் பொழுது (விபுலானந்தஅடிகளார் இயற்றிய) தேம்பாவணியில் இருந்து ‘கலையணிச் செல்லன் கமலச் சேவடி தலையணி புனைந்து சாற்றுதும் தமிழே’ என்ற வரிகளால் வாழ்த்திய பின்னர்தான் அடிகளார் தனது பேருரையை நிகழ்த்தினார் என்ற தகவலையும் சிறப்புறக் கூறினார். அத்துடன் திருமூலர் பெருமானின் திருமந்திரத்தில் வரும் ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே’ என்ற இரு வரிகளையும் பட்டி தொட்டிகளில் இருந்த எல்லோருக்கும் தெரியச் செய்து அந்த வரிகள் இன்று எங்கும் ஒலிக்கச் செய்த பெருமை தனிநாயக அடிகளாரையே சாரும் என்பதையும் ஆணித்தரமாகக் கூறினார். 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் திகதி அடிகளார் இறையடி சேர்ந்தார் என்றும் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் தந்தை செல்வநாயகத்தின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார் இதவே அவரின் இறுதிப் பேச்சாக அமைந்திருந்தது என்றும் அக்கூட்டத்திலே தமிழ் ஆராய்ச்சியானது ஐரோப்பியர்களின் வருகையினாலோ அல்லது கிறித்தவ மிசனரிமார்களின் வருகைக்குப் பின்னரோ அன்றிச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தோற்றத்தினாலோ ஏற்பட்டதென்று தவறாக விளங்க வேண்டாம் என்றும் தமிழ் ஆராய்ச்சி 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொல்காப்பியரின் காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றது என்றும் தமிழறிஞர்கள் பலர் பழந்தமிழ் நூல்களை ஆய்ந்து ஆய்ந்து பல ஆராய்ச்சி உரைகளை எழுதியுள்ளார்கள் என்றும் பலவித உண்மைக் கருத்துகளை தனது மதிநுட்பம்கொண்டு விளக்கியமை பாராட்டத்தக்கதாகும். இறுதியாக அவர்’ ‘தனிநாயக அடிகளார் தமிழரின் கலாசாரத்தை – பெருமையை உலகறியச்செய்த தமிழ்ப்பற்றாளர். இவர் ஓர் சான்றோர். ஆவர் எனக்கூறித் தது சிறப்புரையை நிறைவுசெய்தார். அவருக்கு சைவ ஆர்வலர் தமிழன்பர் திரு ந கணபதிப்பிள்ளை அவர்கள் மலர் மாலை அணிந்து கௌரவித்தார்.

 இதையடுத்து விழா இணைப்பாளர் கலாநிதி இளமுருகனார் பாரதி ஒரு சில கவிதைகளால் வண. பிதா தனிநாயக அடிகளார் பெருமையைக் கூறினார்.

மாணிக்கத் தீபமான இலங்கை நகரின்
   வடபகுதி தனிற்பிறந்து கற்று யர்ந்து
காணிக்கையாய்த் தமிழன்னை களிகொளத் தன்னை
    கடமையுணர் வொடர்ப்பணித்த அடிகளார் புகழ்
ஏணிக்கும் அளவேது? இயம்பப்  போமோ?
    ஏசுபதம் போற்றியே தமிழைத் தனித்துவப்
பாணியிலே பரப்பிநின்ற பெற்றி என்னே!
   பண்பாளன் தனிநாயக அடிகள் போற்றி!

அருளதனால் ஒளிர்கின்ற  காந்த விழிகள்
    அன்பதனால் உயிர்க்கின்ற அறத்தின் தோற்றம்
தெருளெல்லாம் புலர்கின்ற கர்த்தர் ஒளி
     தெளிவெலாம் மலர்கின்ற சாந்த முகம்
வருந்துவர்க் குதவிசெயும் வள்ளல் உள்ளம்
  வண்டமிழை உலகரங்கிற் பரப்பும் ஓர்மம்
பெருந்தவத்தோன் தனில்இவைகள் பொதுளிப் பில்கும்
      பேராசான் தனிநாயகம் அடிகள் அன்றோ?

நண்பதனால் எந்தையிடம் தமிழால் இணைந்தார்
    நடையதனால் தமழ்மொழியை உலகிற் களித்தார்
பண்பதனால் பாடறிந்து ஒழுகும் பாங்கு!
     பலர்போற்றும் தன்னடக்கம் பழுத்த கேண்மை!
திண்ணமொடு தமிழையுல கரங்கிற் பரப்பத்
     திசையெலாம் தமிழ்மகாநா டமைத்த ஞானி!
எண்ணரிய அருங்குணங்கள் விஞ்சி வாழ்ந்த
     எழில்பூத்த அடிகளாரை நினைவு கூர்வாம்

             என்று எடுத்தியம்பினார்.


 ஒரு சிறு இடைவேளையின் பின்னர்விழா தொடர்ந்தது.

காரானை முகத்தானை முதல்வ ணங்கிக்
   கன்னித்தமிழ் வளர்த்தோரை நினைவு கூர
ஆராத காதலுடன் விழாவுஞ் சிறக்க
   அரும்பாடு பட்டோர்கள் மகிழ்வு எய்தச்
சீராக நன்றியுரை செப்பிட வேண்டி
   செயலாளர் நாயகமாய்ச் சேவை புரியும்
நாராயணப் பெருந்தகையை நற்றமிழ் கொண்டு
   நானழைக்க அரங்கிற்கு நண்ப வருக!

என்று அழைத்ததும் உலகசைவப் பேரவையின் செயலாளர் திரு நாராயணன் அவர்கள் விழாவினைச் சிறப்புற ஒழுங்குசெய்த அன்பு நெஞ்சங்களுக்கு  நன்றி நவிலும்வண்ணம் விழாவிற்கு உதவிய சகலரையும் அன்புகூர்ந்து நன்றி நவின்றார்.


விழாவின் அடுத்த நிகழ்ச்சியாகத் திருமுருக கிருபானந்த வாரியாரைப்பற்றிய சிற்றுரை இடம்பெற்றது.

தவநெறியில் வாழ்ந்துயர்ந்து தமிழ்முரு கனவன்
   தானேதுணை யென்றவனின் திருப்புகழ் பாடிப்
புவனமெலாம் போற்றிடவே சைவமதத் திற்கும்
   பொன்னனைய தமிழ்மொழிக்கும் சேவை செய்தே
சிவசிவவென் றென்நாளும் சிந்தை மகிழ்ந்த
    திருமுருக வாரியாரின் தேசு செப்ப
நிசேவிதாபால சுப்ரமணியம் தன்னை  நானும்
    நேசக்கரம் நீட்டியழைத் திடவே வருக!

என்று விழா இணைப்பாளர் அழைத்ததும் செல்வி நிசேவிதா அவர்கள் வாரியாரின் பிறப்பு – கல்வி- கலைப் பயிற்சி பற்றிப் பல தகவல்களைத் தந்ததுடன் மேலும்
“குடும்பச் செலவிற்குப் பிரசங்கம் செய்துவந்த தந்தையார் வாரியாரைத் தனக்குப் பிற்பாட்டுப் பாடுவதற்கும் கையேடு வாசிப்பதற்கும் தன்னுடன்;   அழைத்துச் செல்வதுண்டு.   சில காலம் வீணை பயின்றுவந்த வாரியார் சங்கீதத்திலும் பேச்சுவன்மையிலும் சிறந்து காணப்பட்டார்.19ஆம் வயதிலே தாய் மாமனின் மகளான அமிர்தலட்சுமிக்கு இவரைத் திருமணம் செய்துவைத்தார்கள். தானே தனித்துப் பிரசங்கம் செய்ய ஆரம்பித்த வாரியாரின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவியது. முருகனருள் கைவரப் பெற்ற வாரியாருக்குச் செல்வம் பெருகத்தொடங்கியது..   பரந்து வளர்ந்த தமிழ்ப் பற்றுடன் விரிந்து மலர்ந்தது சைவத் திருப்பணி.   தெய்வத் தமிழின் தூய்மை பேணி இறை சேவை ஆற்றுவதைத் தம் தலையாய பணியாகக் கொண்டார்.    பெருகிவரும் செல்வமெல்லாவற்றையும் மனம் உருகி உருகி ஏழைகளுக்கும் கல்வி கற்கப் பணமில்லாது கலங்குபவர்களுக்கும் கோயில்களின் திருப்பணிக்கும் வாரி வாரி வழங்கினார்..  சொற்பொழிவுகளுக்கு அழைப்பவர்கள்   கொடுப்பதை இவர் மனநிறைவோடு ஏற்பவர் அதாவது பொருளை மட்டும் பாராது அருளைமட்டும் கணக்கில் வைப்பவர் இவர்.. அருணகிரிநாதரைத் தன் மானசீகக் குருவாகக்கொண்ட இவர் 1940ஆம் ஆண்டிலே அருணகிரிநாதர் அறச்சாலை ஒன்றை அமைத்துத் திருப்புகழைப் பரப்பி உலகறியச் செய்துவந்தார். வெள்ளை உள்ளம் கொண்ட வாரியாருக்குக் கள்ளங் கபடமற்ற பிள்ளைகளிடம் கொள்ளை ஆசை. பாமர மக்களுக்கு இராமாயணம் மகாபாரதம் பெரியபுராணம் திருவிளையாடற் புராணம் கீதோபதேசம் முதலிய பல நூல்களை இலகு தமிழில் இன்னிசையுடன் கதாப்பிரசங்கங்களாக விளக்கி வந்து அழியாப் புகழ் சேர்த்தார். ஆதிசங்கரர் ராமானுஜர் போன்ற சமயத் தலைவர்கள் கூறிவரும் சமய தத்துவங்களையெல்லாம் பாமர மக்களுக்கும் எளிதில்   ஆன்மிகச் சொற்பொழிவுகளால் விளக்கிவந்தார்.   திருப்புகழ் அமிர்தம் என்ற சஞ்சிகை ஒன்றை 37 ஆண்டுகளாக நடத்தி வந்தமை அருணகிரிநாதரின் மேல் வாரியாருக்கிருந்த ஆழ்ந்த பயபக்தியையும் திருப்புகழின் மேலிருந்த தீரா மோகத்தையும் எடுத்தியம்பும்.       மனிதர்களை மனித நேயம் உள்ளவர்களாக மாற்றி வந்தவர் வாரியார். 1936ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 57வருடங்கள்  'முருகனுக்குப்  பூசைசெய்த பின்புதான் எதையாவது உண்ணும் கொள்கையை 'இறுதிவரையும் இவர் கடைப்பிடித்தவர். பல திரைப் படங்களிலும் திறம்பட நடித்துப் புகழ் சூடினார். கருணை உள்ளம் கொண்ட வாரியார் 64ஆவது திருப்பணித் தொண்டர் எனச் சைவப்பேரறிஞர்களால் அழைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 முருகனின் பூரண திருவருளைப் பெற்ற வாரியார் சுவாமிகளுக்குக் கிடைத்த கௌரவங்கள் பலவாகும். திருப்புகழ் ஜோதி – அருள்மொழி அரசு - இசைப் பேரறிஞர் - அமுதமொழிக் கொண்டல் - திருப்பணிச் சக்கரவர்த்தி – கலைமாமணி – இலக்கிய முது முனைவர் - தமிழ்ப் பேரவைச் செம்மல் - திருப்பணிச் சரபம் - முத்தமிழ் வள்ளல் இப்படி எத்தனையோ சிறப்புகள் பெற்றார். இவர் இலங்கை மலேசியா இலண்டன் பரிஸ் அமெரிக்கா கனடா எனப் பல இடங்களில் சைவத்தோடு தமிழ் வளர்த்துப் பெருமை தேடியவர். குருவாய் அருவாய் என ஓங்கிய குரலில் முழங்கிவந்த அவரின் திருவாய் 1993ஆம் ஆண்டு மார்கழி மாதம் 7ஆம் திகதி மூடிக்கொண்டது.
அவரின் இறவாப் புகழ் சைவர்கள் மத்தியில் என்றும் நிலைத்து வாழும் என்பதில் ஐயமில்லை” என்று இனிமையாகக் கூறி தனது சிற்றுரையை நிறைவுசெய்தார்.

சந்ததமும் தமிழ்மாந்தும் சுந்தர முருகன்
    தவப்பேறு பெற்றுப்பல தசாப்தங் களாக
விந்தையெனச் சுவைபில்கத் தமிழ்பொ ழிந்த
    வித்தகனாம் வாரியாரின் விழுமிய தொண்டைப்
புந்தியிலே தினமிருத்திப் பொங்கர வனையே
    போற்றிவழி பாடுசெயும் புலவர் ஏறே!
நந்திவர்மா! நறுந்தமிழால்; நற்கவி நவின்றிட
    நானுவந்து அழைத்திடுவேன் நண்ப வருக!.

என்று நண்பன் கவிஞர் நந்திவர்மன் அவர்களைப் பாரதி அவர்கள் கவிகூறி அழைத்ததம் அவர் வாரியாரின் பெருமை என்னும் தலைப்பில் அற்புதமான   அறுசீர்க்கழிநெடிலடி அசிரிய விருத்தப் பாக்களை அந்தாதித் தொடையாகப் பாடித் தனது கவித்துவத்தை பலரும் மெச்சும்படி வெளிக்கொணர்ந்தார். இதோ அவரின் கவிதை ….

வாரியார் என்று நாங்கள்
வாஞ்சையாய் அழைத்து வந்த
சீரியர் தமிழும் முருகும்
சிந்தையில் கொண்ட பெரியர்
ஆரியர் மொழியின் மேலாய்
அருந்தமிழ் போற்றிச் செய்த
காரியம் யாவுந் தமிழைக்
கவினுறச் செய்த செயலே!

செயலிலே செம்மை கொண்டார்
சிந்தையில் இறையுங் கொண்டார்
நயமுடன் கதைகள் சொல்லும்
நாவினில் இனிமை கொண்டார்
உயர்வுடன் எவரும் வாழும்
உணர்வினை இலக்காய்க் கொண்டார்
அயர்விலா துழைக்கும் வாழ்வை
அந்தமாய் அமைத்துக் கொண்டார்.

கொண்டதன் கொள்கை தன்னில்
குறியுடன் வாழ்ந்து வந்தார்
வண்டென உலகஞ் சுற்றி
வள்ளலின் புகழைச் சொன்னார்
அண்டினோர் தம்மை அன்பால்
அருள்வழி சேர வைத்தார்
பண்டைய கதைகள் மூலம்
பண்பினை எடுத்துச் சொன்னார்.

சொன்னதைச் சுவையாய்ச் சொல்லிச்
சொக்கிட வைத்தார் எம்மை
உன்னத எண்ணங் கொண்டு
ஒளியுடன் நாளும் வாழ்ந்து
முன்னவன் கழலே சேரும்
முனைப்புடன் பணிகள் செய்யும்
நன்னெறி காட்டித் தந்தார்
நலமுடன் வாழச் செய்தார்.

செய்திடும் செயல்கள் யாவும்
சிவனவன் தாளே முடிவில்
எய்திடும் வழியே என்று
ஏற்புடன் வாழ்ந்த அடியார்
மெய்தரும் வாழ்வை நூலாய்ச்
சிவநெறித் தொண்டர் அருளே
பெய்திட எமக்குத் தந்தார்
பெருவழி காட்டித் தந்தார்.

தந்ததோர் நூற்றின் மேலாம்
தனிப்பெருந் நுல்கள் தன்னுள்
சிந்தையைக் கவர்ந்து நிற்கும்
திருப்புகழ் விளக்க நூலும்
கநதவேள் கருணை என்னும்
களிதரு சமய நூலும்
விந்தையாய்ப் புராணக் கதைகள்
விரித்திடும் நூலும் உண்டாம் .
;
உண்டெனத் தெய்வம் என்று
உணர்ந்துடன் தெளியும் வண்ணம்
கண்டவர் கேட்போர் உள்ளம்
கரைந்திடும் வகையில் நன்றாய்த்
தொண்டரின் கதையுஞ் சொல்லித்
தொழுதெழும் வகையுஞ் சொல்லி
அண்டமும் வியக்கும் வண்ணம்
ஆயிரம் உரைகள் பொழிந்தார்.

பொழிந்திடும் உரையில் தமிழே
பொலிந்திடும் இசையுஞ் சேரும்
நுழைந்திடும் குறும்புக் கதைகள்
நூல்பல தொட்டுச் செல்லும்
குழைந்திடும் கேட்போர் உள்ளம்
குலம்பல மேன்மை கொள்ளும்
விழைந்திடும் அடியார் உள்ளம்
விண்ணவன் பாதம் எட்ட

எட்டினார் இலக்கு யாவும்
ஏந்தலின் அருளே உறறுப்
பட்டமும் பலவும் பெற்றார்
பாமர மக்கள் மனமே
தொட்டிடும் வகையில் இனிய
திருப்புகழ் அமிர்தம் என்னுங்
கட்டுரைத் திங்கள் இதழில்
கருத்துகள் சொல்லிப் போனார்.

போனதோர் இடங்கள் எல்லாம்
பொய்யிலான் பெருமை பாடி
தேனெனத் தமிழில் பேசித்
திரைப்படம் மூன்றில் தோன்றிக்
கோனவன் கோயில் பணிகள்
கூடவே செய்து காட்டி
வானவன் கழலே சேர்ந்தார்
வண்புகழ் வாரி யாரே!

 நந்திவர்மனின் நயம்பெய்த கவிதைகளை நலமே கேட்டீர். நீங்கள் ஆவலுடன் காத்திருந்த  சிறப்பு நிகழ்ச்சியாக எமது பிரதம விருந்தினரைப்  பாவினாற் பாரதி அழைக்கிறார்…

நான்முகன் நாயகி நித்தம்
நாவினில் நடஞ்செய நீவிர்
தேன்கலந் திட்ட பாகாய்த்
தீஞ்சுவை பீறிப் பாய
சான்றோர் கிறங்கி நிற்கச்
சபையோர் வியந்து போற்ற
வான்கருங் கொண்டல் பெய்யும்
வற்றிடா மழையைப் போல
மேன்மைகொள் சைவ நீதி
விளக்கிடக் காதை எல்லாம்
கானமாய்ச் செவிகள் மாந்தக்
களிப்பொடு விகடஞ் சேர்த்த
தானமாய்த் தமிழால் மாரி
தாயே பொழிந்து நின்றாய்!
ஞானமே! சரஸ்வதி இராம
நாதனே! தமிழைப் பொழிக!


இந்த ஆண்டின் சிறந்த மகளிர் விருதைப் பெற்ற செல்வி இலக்ஸ்மி லோகதாசன்  அவர்கள் பேராசிரியர் சரசுவதி இராமநாதனுக்கு மலர்மாலை அணிவித்துக் கௌரவித்தார்   திருமதி சரஸ்வதி இராம நாதனை அறிமுகஞ்செய்ததும் பலத்த கரகோசத்துடன் அவர் தனது சிறப்புச் சொற்பொழிவை ஆரம்பித்தார். மடை திறந்த வெள்ளம் போல வாரியாரின் சிறப்பைச் செப்பிடமுன் ஒப்பற்ற பரம்பொருளுக்கு வாழ்த்து என்று கூறி “உலகெலாம் உணர்ந்(து) ஓதற் கரியவன்....” என்ற சேக்கிழார் பெருமானின் புராணத்தை இசையொடு பாடியதைத் தொடர்ந்து இறைவன் படைத்த தமிழுக்கு வாழ்த்து எனப் பாரதியாரின் “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி…..”என்னும் வாழ்த்தையும் பாடி அவையிலுள்ளோரையும் வாழ்த்தி வணங்கி – ‘அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் என்னை இங்கு கொண்டுவந்தது. உலக சைவப் பேரவை என்னை இந்த விழாவிற்கு இரு கரங்கூப்பி வரவழைத்தது’ என்று அவைகளுக்கும் நன்றி பாராட்டியபின் உரையைத் தொடர்ந்தார்;. அவர் தனது வாழ்க்கையே தமிழ் என்றும் தான் ஒன்பது வயதிலே மேடை ஏறியவர் என்றும் இன்று 75 வயதிலும் தொடர்ந்து தமிழ்ப்பணி; செய்வதாகவும்  தனது தமிழ்ப் பணிபற்றிச் சொல்லிவிட்டுக்  கிருபானந்த வாரியார் சுவாமிகளைப் பற்றியும் தவத்திரு வண. பிதா தனிநாயக அடிகளாரைப் பற்றியும் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்த அவர்‘சேவியர் நிக்கொலஸ் ஸ்ரான்ஸ்லோஸ் என்பவரைத் தெரியுமா?’ என்று ஒரு வினாவைக் கேட்டபின் ‘அவர் தான் தனிநாயக அடிகளார்’ எனப் பதிலையும் கூறினார். மேலும் “தனிநாயக அடிகளாரின் தந்தையார் காதலுக்காகக் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினார். தனிநாயகமோ  கிறிஸ்தவ மதத்திற்காகக்; காதலைவிட்டுத் துறவியானார். இளங்கோ அடிகளாரோ அரசை வேண்டாம் என்று   ; துறவு கொண்டார். தமிழ்ப்பற்றைத் துறக்கவில்லை. தனிநாயக அடிகளாரோ இல்லறவாழ்வைவிட்டுத் துறவியானார் ஆனால் தமிழ்ப் பற்றைத் துறக்கவில்லை. இளங்கோ அடிகள் சிவனைப் பாடினாலும் முருகனைப் பாடினாலும் கொற்றவையைப் பாடினாலும் தான் சமணன் என்பதை மறந்து பாடினார். இதேபோல தனிநாயக அடிகளாரும்    கிறித்தவர் என்ற வெறி இல்லாமல் தமிழ்ப்பற்றாளர் என்பதை நிரூபித்துக் காட்டியவர்.  சுருக்கமாக வாரியார் ஒரு சிவப்பழம் தனிநாயகம் ஒரு கிறித்தவப்பழம் - வாரியார் ஞானப் பழம்  தனிநாயகம் தமிழ்ப்பழம்.ஓருவர் கடல் கடந்து தமிழகத்திற்குவந்தவர் - மற்றவர் தமிழகத்திலிருந்து கடல்கடந்து தமிழ் வளர்த்தவர். இருவரும் தமிழ்ச் சான்றோர்களே! தனிநாயக அடிகளார் 34ஆம் வயதில் நெல்லை மாவட்டத்திற்கு ஆயராக வந்து பின்னர்  சங்க இலக்கியம் பற்றி ஆய்வுசெய்வதற்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே சேர்ந்தவர் அப்பொழுது அவரைச் சந்திக்கும் பாய்க்கியம் பெற்றேன் பின்னர் அவர் ஏற்படுத்திய முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இரண்டாவது முறையாகச் சந்திக்கும் பேறு பெற்றேன்.  வாரியார் சுவாமிகளுடன் சுமார் 30 வருடங்கள் குடும்பத்தோடு பழகி இருக்கிறேன். இந்த இரு சான்றோரையும் பார்ப்பதற்கு ‘என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்று எண்ணத் தோன்றுகின்றது”என்றார். “ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்புண்டு. ஆங்கிலம் வியாபாரத்திற்கு - இலத்தீன் சட்டத்திற்கு – பிரான்சு மொழி தூதுக்குரிய மொழி - இத்தாலிய மொழி காதலுக்கு உரிய மொழி – வடமாழி கம்பீரத்திற்கு உரிய மொழி – ஆனால் தமிழோ இரக்கத்திற்கும் பத்திக்கும் என்று தனிநாயக அடிகளார் அடிக்கடி கூறுவதுண்டு.
ஒருமுறை வாரியார் சுவாமிகள் நெய்வேலியில் ஒரு பெரிய கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவர் அந்தக் கூட்டத்திலே
“இயமன் நீதி தவறாதவன். உயிரை எடுக்கும் காலம் வந்துவிட்டால் அவன் எந்த நேரத்திலே வர வேண்டுமோ வந்துவிடுவான். ஒருவர் சம்சாரி என்றாலும் சரி சந்நியாசி என்றாலும் சரி ஏழை என்றாலும் சரி பணக்காரன் என்றாலும் சரி படித்தவன் எனறாலும் சரி படிக்காதவன் என்றாலும் சரி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றாலும் சரி நேரம் வந்ததும் உயிரை எடுத்துவிடுவான் . இப்படிச் சொன்னதுதான் தாமதம் குண்டர்கள் கூட்டத்து மத்தியிலிருந்து ஓடி வந்தார்கள். என் கன்னத்திலும் உடம்பிலும் மாறிமாறி அடித்தார்கள் உதைத்தார்கள். நான் தினம் பூசைபண்ணும் முருகனின் சிலையையும் அடித்து உடைத்தார்கள் நான் முருகனை அடிக்காதீர்கள் என் அப்பனை அடிக்காதீர்கள் என்னை அடியுங்கள என்று கதறியும் அவர்கள் கேட்கவில்லை. மூன்று நாள்கள் சிகிச்சை பெற்ற பின் இங்கு வந்தேன்” என்று  மதுரையில் சிவராத்திரிக்கு ஒரு பெரிய கூட்டத்திற் பேச வந்த வள்ளலார் தனக்குச் சொல்லியதாகக் கூறினார். வள்ளலாரைப் பார்தததும் கலங்கிய கண்களுடன்
‘இப்படியெல்லாம் உங்களை அடித்திருக்கிறார்களே சுவாமி’ என்று அவரை வினவியதற்கு அவர் “என்னுடைய முருகனை - நான் தினமும் பூசைபண்ணுகிற முருகனை அடித்து உடைத்துவிட்டாங்கள். அதுதான் எனககு மிகவும் மனவருத்தம். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நான் பொதுவான நியதியைத்தான் சொன்னேன். அது அவர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சைபெறும் அரசியல்வாதியைக் கிண்டல் செய்தேனென்று அடித்துவிட்டார்கள். அவ்வளவுதான்.” என்றார் “அரசியல் கிண்டல் பேசியதற்காக வாரியார் தாக்கப்பட்டார் எனப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டன.  . இதற்கெல்லாம் பயப்படுபவன் வாரியார் அல்ல ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்ற அப்பர் பெருமானின் கொள்கைப்படி தான் நான் நடப்பேன்” என்றார்.
மதுரையிலே வாரியாருடன் சேர்ந்து பட்டிமண்டப நிகழ்ச்சி முடிந்தபின்பு வாரியார் சுவாமிகள் எல்லோருக்கும் விபூதி வழங்கியபின்னர் தனது விரிந்த நெற்றியிலே பரவலாகப்பூசுவதைக்கண்ட கறுப்புச் சட்டை அணிந்த (நாத்திகர்கள்) அவரைநோக்கிவந்து“என்ன நிரம்ப வெள்ளை அடிக்கிறீர்களே!” எனக் கேட்டார்கள் மறுபடியும் என்ன ஒரேயடியாக வெள்ளை அடிக்கிறீர்களே எனக் கிண்டல்செய்யவும் வாரியார் அவர்களைப் பார்த்து “குடி இருக்கிற வீட்டிற்குத் தான் வெள்ளை அடிப்பார்கள். என் நெஞ்சம் ஆண்டவன் குடியிருக்கும் வீடு. அதுதான் நான் வெள்ளையடிக்கிறேன். “ என்று சாமர்த்தியமாகப் பதிலளித்தை மெச்சிச் சொன்னார். “வாரியார் என்ன வார்த்தை சொன்னாலும் அதற்கு அர்த்தம் இருக்கும். பாமர மக்களுக்கும் எளிதில் விளங்கும்வண்ணம் சிரிக்கச் சிரிக்கப் பேசிச் சிந்திக்கவைத்துப் பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துச் சொன்னவர் வாரியார் சுவாமிகள்.;.  நாத்திகராக இருந்த கண்ணதாசனை இருவரின் பேச்சுகள்தான் ஆத்திகராக மாற்றியது. ஓன்று வாரியார் சுவாமிகளின் பேச்சு . மற்றது ஆனந்தராமகிருஸ்ணனின் பேச்சு. காங்கேய நல்லூரில் கோயிலில் நைவேத்தியம் செய்வதற்கும் வசதியில்லாது போயிற்று என்பதை திருவருள் உணர்த்தியதை அடுத்து  அவர் 10 நாள்களாகத் தனது சொற்பொழிவினாற் சேரும் பணத்தை முற்றாக -  அங்கு நிலம் வாங்கி விவசாயம் செய்து நிரந்தரமான வருமானத்தைக் கோயிற் செலவுகளுக்குப் பாவிக்கலாம் என்ற உறுதியுடன் - இரவு பகலாகச் சேர்த்த பணத்தைக் கோயிலுக்குக் கொடுத்திருந்தார் அன்றும் இன்றும் அவர் பணத்தில் வாங்கிய வயலில் இருந்துதான் அருணகிரிநாதர் சன்னதியிலே திருப்பணிக்குப்  பொருள் கிடைக்கிறது என்பதையும் வாரியாரின் வேறு பல தொண்டுகளையும்; அம்மையார் அவர்கள் விரிவாக எடுத்தியம்பினார்.

தனிநாயக அடிகளார் சமயத்தைத் துறக்கவில்லை -  இல்வாழ்க்கையைத் துறந்தாலும் தமிழ்ப் பற்றைத் துறக்கவில்லை. அவர் தன் இடத்தில் இருந்துகொண்டே தமிழ்த் தொண்டு செய்தார். வாரியாரோ ஊர் ஊராகச் சென்று சென்று பாமர மக்களுக்குக்கூட விளங்கும் வண்ணம் திருமுறை – கம்பராமாயணம் பெரியபுராணம் திருவிளையாடற் புராணம் தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை இலக்கிய நயத்தோடு நகைச்சுவையோடு உலகியலோடு சொல்லிச் சொல்லித் தமிழை வாரி வாரி வழங்கினார். எத்தனையோ ஏழைகளின் கல்விப்பணிக்கு உதவி செய்தார். ஆயிரம் ஆயிரமாகக் கோயில் திருப்பணிக்கு வாரி வழங்கினார். இவ்வண்ணம் இரு சான்றோருக்கும் எடுக்கப்பட்ட விழாவில் தனக்கு உரை நிகழ்த்தத் தந்த வாய்ப்பிற்கு உலக சைவப் பேரவையை வாழ்த்தி நன்றி கூறித் தன் இனிமையான பேச்சை நிறைவுசெய்தார்.
"சரஸ்வதி இராம நாதனே! பேருரை சிறக்கச் செய்தீர் பிஞ்ஞகன் அருள வாழி! "என்று பாரதி அவர்கள் அம்மையாருக்கு நன்றிகூறியதும் 'தினமின்று விழாக்கணடோர் சிந்தை மகிழத் தேவாரப் பண்ணுடனே நிறைவு செய்ய' செல்வி யதுகிரியின் தேவாரத்துடன் சான்றோர் விழா இனிதே நிறைவுற்றது.
தமிழ் அன்பர் ஓவியர் ஞானம் அவர்கள் அன்புடன் புகைப்படங்களை எடுத்துதவியதை உலக சைவப் பேரவை நன்றியுடன் பாராட்டுகின்றது.


உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா    இந்த ஆண்டிற்கான “தமிழ் வளர்த்த சான்றோர் விழா”வினை  மார்ச் மாதம் 16 ஆம் திகதி அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்துடன்  இணைந்து
ஹோம்புஸ் ஆண்கள் உயர் பாடசாலை மண்டபத்தில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது.  சரியாக 5.30 மணிக்குத் அரங்கு நிறைந்த அவையினருடன்     விழா ஆரம்பித்தது. செந்தமிழ்க் கவிதைகளாலே நிகழ்ச்சிகளைப் பல் மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள் தொகுத்து வழங்கியமை விழாவிற்கு மெருகூட்டியது.

அமிழ்தமாம்; இளமைகுன்றா அருந்தமிழ் மொழிக்கு
    அளப்பரிய பணியியற்றி அணிகள் éட்டித்
தமிழ்மணக்க உலகரங்கிற் பெருமை சேர்த்த
    தனித்துவம்மிகு திருமுருக வாரியார் மற்றும்
புகழ்மணக்க யாழ்நகரில் வாழ்ந்த வணபிதா
    புனிதன்திரு தனிநாயக அடிக ளாரையும்
அகமகிழ்வொடு நினைவுகூர்ந்து எடுக்குமிவ் விழாவில்
    அன்பொடுநான் மங்கலவிளக் கேற்றிட அழைப்பது……

தஞ்சாëர்த் தமிழ்ப்பல்கலைக் கழகந் தன்னில்
  தகைமைமிகு தமிழ்த்துறைத் தலைவராய்ப் புகழ்
விஞ்சவிரு தசாப்தங்கள் கடமை யாற்றி
    விருதுகள்பல பெற்றுயர்ந்து புலம்பெ யர்ந்து
எஞ்சியநாள் கழித்திடஅவுஸ் திரேலி யாவில்
   இணையிலாத்தமிழ் அமுதசுரபி யாய்த் தமிழைக்
கொஞ்சிமகிழ் ஞானாவைக் குதூகலமாய்  விழாவில்
   குத்துவிளக் கேற்றஅழைக் கின்றேன் வருக!
என்று பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் திரு குலேந்திரன் தம்பதியினரை அழைத்ததைத் தொடர்ந்து அவர்களால்  மங்கலவிளக்கு ஏற்றப்பட்டது.மங்கலவிளக்கேற்றும் நேரத்தில் திருமதி சிவரதி அவர்களின் மாணவர்களான  செல்வி மகி~h éபாலசிங்கம் - செல்வி அபி~h éபாலசிங்கம் -
செல்வி கவிநிலா நக்கீரன் - செல்வன் குருசஞ்சீவ் இரவீந்திரராஜா –
செல்வி தர்சனை இரவீந்திரராஜா ஆகியோர் தேவாரமும் புராணமும் பண்ணிசையுடன் பாடியது ‘சகல விழாக்களிலும் இப்படி இறைவணக்கத்துடன் மங்கல விளக்கேற்றுதல் சிறப்பாகவும் முன்மாதிரியாகவும் சைவசமயக் கோட்பாட்டுக்கு ஏற்பதாகவும்  அமையும்;’ என்பதை உணர்த்தியது.


‘இதுபெரிய சிரமமடா தமிழ்ப டித்தல்’
   என்போர்மிக நாணிடவே இங்கு பிறந்து
மதுரமிகு தமிழ்மொழியை மகிழ்ந்து கற்று
    மாநகராம் சிட்னியிலே வதிவோர் மெச்சும்
யதுகிரியை வருகவென அழைத்திடு வேனே!
    யாம்மகிழத் தேன்குரலில் திருமறை யோடு
புதுமைமிகத் தமிழ்வாழ்த்தும் நாட்டுக் கீதமும்
    பொறுமையுடன் அரங்கேறி இசைத்;திடு வீரே!!
என்று செல்வி யதுகிரி லோகாசன் அவர்களை  அழைத்ததும் அவர் தமிழ்வாழ்த்தையும் நாட்டுக் கீதத்தையும் பலரும் மெச்சும்படி பாடினார்.

தணியாத தமிழ்ப்பற்றும் சமய வேட்கைத்
       தனிப்பற்றுங் கொண்டுயர்ந்து கலாநிதி ஆகி
அணியாகப் பேரவையில் அங்கம் வகித்து
    அளப்பரிய சேவைதனை வழங்கும் சைவ
மணியான பேரறிஞர் கணேச லிங்கம்
    மகிழ்வோடு விழாவிற்பங் கேற்க வந்தார்
பணிவாகக் கரங்கூப்பி வரவேற் கின்றேன!;
    பரிந்துவந்து ஆசியுரை வழங்கு வீரே!
என அன்புடன் கலாநிதி கணேசலிங்கம் அவர்களை வரவேற்றதும்
சென்ற வருடம் ‘தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2013’ல் நல்லூரைச் சேர்ந்த சிவத்திரு  ஆறுமுக நாவலர் பெருமானுக்கும் நவாலிêர் ‘தங்கத் தாத்தா’ சோமசுந்தரப் புலவர் அவர்களுக்கும்   டாக்டர் இளமுருகனார் பாரதியும் அவரோடிணைந்த செயற்குழுவினரும் வெகு சிறப்பாக விழா எடுத்தார்கள் என்பதையும் நினைவுகூர்ந்து தனது ஆசி உரையில் கல்வி ஒழுக்கம் பண்பு ஆகியவற்றிற் சிறந்தவர்கள் சான்றோர்! இன்று நடைபெறும் சான்றோர் விழா இருபெரும் தமிழ்ச் சான்றோரைப் போற்றுவதாக அமைகிறது. ஓருவர் தனிநாயக அடிகளார். வுhழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணி செய்தவர். இவர் தமிழ் நிலத்திலும் வெளி நாடுகளிலும் தமிழ்மொழி தமிழர் பண்பாடு ஆகியவற்றைப் பரப்பிழயவர். புல ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியவர்.உலகத் தமிழ் மாநாடுகளை நடாத்தி ‘வுயஅடை ஊரடவரசந’ (தமிழர் பண்பாடு) என்ற தரமான சஞ்சிகையையும் வெளியிட்டவர் என்றும் மற்றவர் கிருபானந்த வாரியார் அவர்கள். முருக பக்தரான இவர் வாழ்நாள் முழுவதும் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தித் தமிழ் சைவம் ஆகியவற்ன் பெருமையையும் சிறப்பையும் மக்களுக்கு உணர்த்தியவர். ஆவரின் பேச்சு தமிழ் இலக்கிய இன்பமும் பக்திச் சுவையும் கலந்து கேட்பவரின் மனதைப் பரவசப்படுத்தும். இவ்விருவரும் இல்லறத்திலும் இணையாது தமிழ்மொழியின் N;பரழகில் தம்மை இழந்து பணிசெய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச் சான்றோர் விழாவை ஓழுங்குசெய்து நடத்தும் பெருமக்களைப் பாராட்டுகின்றேன்.இவ்விழா சிறப்புடன் நடைபெற இறை அருளை வேண்டி வாழ்த்துகிறேன்’ என்றும் சிறப்புறக் கூறித் தனது  ஆசி உரையை நிறைவுசெய்தார்.
அடுத்த நிகழ்ச்சியான வரவேற்புரையை வழங்க உலகசைவப் பேரவை அவுஸ்றேலியா (சிட்னி கிளை)யின் தலைவர் திரு அருச்சனமணி அவர்களை …
    உலகசைவப் பேரவையின் சிட்னிக் கிளையின்
    ஊக்கமிகு தலைவராய்ப் பதவி ஏற்று
பலதுரித செயற்றிட்டம் வகுத்து எம்மைப்
    பாசமுடன் அரவணைத்து வழிந டத்தும்
வலதுகர மாயிருக்கும் அருச்சுன மணியே!
    வரவேற்புரை வழங்கியிந்த விழாவிற்கு வந்த
நலவிரும்பி அனைவரையும் இருகை கூப்பி
    நற்றமிழால் வரவேற்க வருவீ ரையா!
….. என்று அழைத்ததும் அவர் வரவேற்புரையில் தமிழகத்தில் இருந்து வருகைதந்த சொல்வேந்தர் இயலிசை அரசி பேராசிரியர் சரசுவதி இராமநாதன் அவர்களையும் மங்கல விளக்கேற்றிய பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் அவர்களையும் ஆசி உரை வழங்கிய கலாநிதி கணேசலிங்கம் அவர்களையும் சிறப்புரை வழங்க வருகைதந்த திரு தனபாலசிங்கம் அவர்களையம் அவையோரையும் அன்புடன் தமிழ் வளர்த்த சான்றோர் விழாவிற்கு  உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியாவின் சார்பில் அன்புடன் வரவேற்றார். உலக சைவப் பேரவையைத் தோற்றுவித்த ஞானசூரியன் என்றழைக்கப்படும் அமரர் சிவானந்த அடிகளாரைப் பற்றிய சில தகவல்கனளைக் கூறி அன்னாரை நன்றியறிதலுடன் நினைவுகூர்ந்தார். அவரது காலத்தில் உலக வை மாநாடுகள் பலவற்றைப் பல நாடுகளிலும் திறம்பட அவர் முன்னின்று நடாத்தியமை பெரம் சாதனை என விதந்துரைத்தார். சிவானந்த அடிகளாருக்கும் தனிநாயக அடிகளாருக்கும் உள்ள ஒற்றுமைபற்றியும் குறிப்பிட்டார். வாரியாரைப்பற்றக் குறிப்பிடும்பொழுது கூடுதலாக வடமொழிக் கலப்பில்லாது பாமரருக்கும் விளங்;;கும்வண்ணம்  தமிழ் இலக்கிய சொற்பொழிவுகளை நடாத்தியமை குறிப்பிடத் தக்கது என்றார்.


பவவினை அழித்தெமைப் பரனுடன் சேர்த்திடும்
நவநிதி யளித்டும் திருமுறைப் பாக்களை
சிவரதி பண்ணொடு செம்மையாய் இசைத்திட
உவந்துநான் அழைப்பனே உருக்கமாய்ப் பாடவே!

….. என்று பல் மருத்துவ கலாநிதி சிவரதி கேதீஸ்வரன் அவர்களை அழைத்ததும் அவர் தனது மாணவர்களான செல்வி மகி~h éபாலசிங்கம் - செல்வி அபி~h éபாலசிங்கம் - செல்வி கவிநிலா நக்கீரன் - செல்வன் குருசஞ்சீவ் இரவீந்திரராஜா – செல்வி தர்சனை இரவீந்திரராஜா ஆகியோருடன் மிகவும் திறமாகப் பண்ணிசை வழங்கி அவையோரைப் பக்திப் பரவசத்தில் அழ்த்தினார்.
“éழியர்கோன் வெப்பொழித்த…….” என்ற சேக்கிழார் பெருமானின் புராணம் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே….” என்ற தேவாரம் அப்பர் சுவாமிகள் இயற்றிய “மாதர் பிறைக் கண்ணியானை…….” என்ற தேவாரம் சுந்தரர் பெருமானின் “மீளா அடிமை உமக்கே ஆளாய்….” என்ற தேவாரம் - மாணிக்கவாசகர்பெருமானின் “கண்களிரண்டும் அவன்கழல் கண்டு… என்ற தேவாரம் - சேக்கிழார் பெருமான் அருளிய “இறவாத இன்ப அன்பு வேண்டி….என்னும் புராணமும் ” அருணகிரிநாதரின்  “முத்தைத்தரு பத்தித் திருநகை….” என்ற திருப்புகழ் ஆகியவற்றை அழகுறப் பாடியபின்  கச்சியப்ப சுவாமிகள் அருளிய “வான்முகில் வழாது பெய்க….”என்ற புராணத்தடன் பண்ணிசையை நிறைவு செய்தார்கள்.
புவியா தரித்திடும் தனிநா யகத்தின்
அவியாப்; புகழைச் செஞ்சொலால் இயம்பிட
ரவிந்திர ராஜா தர்ச னாவைக்
கவியால் அழைக்கிறேன் களிப்பொடு வருகவே!;
செல்வி தர்சனா இரவீந்திரராஜா அவர்கள் வண. புpதா தனிநாயக அடிகளாரைப் பற்றிய சிறந்ததொரு சிற்றுரையை பலரும் மெச்சும்படி ஆற்றுகையில் ‘தமிழ்த் தூது அடிகளாருடைய இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பாகும். அடிகளார்  தான் சென்ற நாடுகளிலெல்லாம்  தமிழின் பெருமைகளை எடுத்துரைத்து வந்த இவர் தனது இறுதி மூச்சுவரை தமிழுடனேயே வாழ்ந்தார். எம் முன்னோர்கள் ‘உலகம் அறிவுடையார் மாற்று’ என்று குறிப்பிடுகின்றனர். அதாவது இந்த உலகில் பல கோடிமக்கள் இருப்பினும் அவர்கள் எல்லாம் அறிவுடையவர்களின் அறிவுரைகளுக்கு உட்பட்டு இருக்கின்றார்கள். இது முற்றிலும் அடிகளாருக்குப் பொருந்தும்’ என்று பல நல்ல கருத்துகளைக் கூறி அமைந்தார்.
வண.பிதா தனிநாயக அடிகளாரின் தனிப் புகழைக் தண்டமிழ்க் கவிதையால் பாடிட….
இசையோடு  இயேசுபுகழ் பாடிப் பாடி
இன்பமுறும்; அமைதியுள்ளம்  கொண்ட செம்மல்
திசைராசா அவர்களைநான் அடிக ளாரின்
சீர்பாடிட அழைத்திடுவேன் அன்ப வருக!
….என்று அரங்கிற்கு அழைக்கப்பட்டதும் திரு திசைரைசா அவர்கள் தனது கம்பீரமான குரலில்
ஆழி சூழ் ஈழம் நெடுந்தீவின் தந்தையும்
அருகினில் வாழும் காவலூர் அன்னையும்
சூழ் தவப்பயன் சேர்ந்திடத் தோன்றிய
தமிழ் மகன் தனிநாயகனார் வாழ்வினை
நாளும் நினைந்து நினைந்து மகிழ்வது
நற்றமிழ் மக்களாம் நம்கடன் அன்றோ?

இன்தமிழ் அமுதம் அள்ளிப் பருகியே
இனிமையை அகிலம் அனைத்தும் பெருக்கிட
தன்தமிழ் தாய்க்குத் தமிழ்ப்பணி புரிந்திட
தன்னை அர்ப்பணித்தார் தனிநாயகனார்
அன்னை அளித்த வாக்கினை ஏற்று
அன்பின் இறையின் அருட்பணி தாங்கியும்
முன்னவன் பணியுடன் முத்தமிழ் ஆய்ந்தனர்
தன்னிகரில்லா தமிழ் நாயகனார்.

‘யாமறிந்த மொழிகளுள் தமிழ்மொழிபோல்
éமியில் என்றும் கண்டிலேம்’ என்று
பாரதி பாடிய பாட்டினை எண்ணி
பாரினில் எங்குமே தமிழ்த் தூதிசைத்தார்
பண்பினார் தவத்திரு தனிநாயகனார்.

தமிழ்மணம் கமழும் நாடுகள் அனைத்தும்
தரணியில் புகழ்பெறும் ஆங்கில நாட்டிலும்
சிங்கப்éரிலும் கம்போடியாவிலும்
இந்தோனீசியத் தீவுகள் தோறும்
சங்கத் தமிழின் சான்றினைப் பெரிதாய்
அங்கம் அங்கமாய் ஆராய்ந் துணர்ந்தார்.

அகிலம் ஒன்றே அனைவரும் ஒன்றே
யாதும் ஊரே யாவரும் தோழரே
என்றெல்லோர்க்கும் இயம்பினார் அடிகள்.
திருமறை ஓதி தெய்வம் பணிந்தவர்
திருவாசகத்திலும் தேவாரங்களினதும்
சிறப்பினை வியந்து புகழ்ந்து போற்றினார்.

இத்தாலி ஜேர்மனி இங்கிலாந் திருந்து
வித்தக குருமார் வீரமா முனிவர்
கால்வெல்ட் ஐயர் போப் முதலானோர்
முத்தமிழ்தன்னை முழுதாய்க் கற்று
முயன்று தமிழினை உயர்த்திட வைத்ததை
வியந்து சேவியர் செந்தமிழ்ச் செல்வர்
தம்மொழி இன்மொழி முன்மொழி இதுவென
பன்மொழி தேர்ந்து பாரினில் உயர்ந்து

பேராசிரியராய் மலேசிய மண்ணில்
முதல்தமிழ் உலக ஆய்வு மாநாட்டை
அமைத்தனர் பின்னர் தமிழக நகரிலும்
வானுயர் நகராம் பாரிஸ் நகரிலும்
தேனுறை éங்கா யாழ் நகரதிலும்
அன்னை நற்றமிழ்க்கு ஆய்வுகள் செய்து
உலகத் தமிழ்மொழி ஆய்வு மாநாட்டினை
ஊக்கிய உத்தமர் தனி நாயகமே!
;க தவத் திரு தனிநாயகம் அடிகள்
வளர்க உலகில் தமிழ்மொழி என்றும்.’
சுவைமிகு கவி படைத்தார்.

இதனைத் தொடர்ந்து வண.பிதா தனிநாயக அடிகளார் பற்றிய சிறப்புச் சொற்பொழிவை ஆற்றும்வண்ணம் ……
துணையெனவெண் டாமரையாள் வாணி அருளச்
   சொற்கூட்டம் போட்டியிட்டவர் நாவைக் கெஞ்ச
பிணைந்தபடி ஆங்கிலமும் தமிழம் தம்மைப்
   பேசுவரோ எனத்தினமும் தவங்கி டக்க
இணையேது இவர்பேச்சுக் கென்று கேட்போர்
   இறுமாந்து செவிமடுக்கத் தனபால சிங்கம்
அணையாத புகழ்படைத்த அடிகள் பற்றி
    அற்புதமாய்ச் சிறப்புரைப்பர்! அன்ப வருக!.

என்று விழா இணைப்பாளர் பாரதி அவர்கள் அன்படன் அழைக்க தனது வழமையான பாணியிலே சிறப்புரை வழங்கினார்.                                                       அவர் முதலில் “சான்றோர் என்றால் யார்? என்றதற்குப் பல சான்றுகளை அற்புதமாகத் தந்த பாங்கு மெச்சக்கூடியதாக இருந்தது. சான்றோரை விளக்கம் செய்ய எமக்குப் புறநாநூற்றில் இருந்து செய்தி சொல்கிறார். சுங்ககாலப் புலவரான பிசிராந்தையரிடம் ஒருவர் ‘உங்களுக்கு இவ்வளவு ஆண்டுகள்சென்றும் இன்னமும் தலை நரைக்கவில்லையே! இதற்கு என்ன காரணம்?’ என்று வினவியதும் புலவர் ‘எனக்கு இன்னமும் ஏன் தலை நரைக்கவில்லை என்று கேட்கிறீரே! ஏனென்றால் பண்பான மனைவி- அறிவுள்ள பிள்ளைகள் தற்குறிப்பறிந்து ஏவல் செய்யும் ஏவலாளர்கள். செங்கோல் செலுத்துகின்ற மன்னர் இவற்றையெல்லாம்விட ஆன்றகொள்கை வித்தடங்கிய சான்றோர் பலர் வாழும் ஊர் நான் வாழும் ஊர் அதனால் என் தலைமுடி நரை காணவில்லை. சான்றோரின் மகிமையைப் புலவர் வெளிக்காட்டியதை அழகுறச் சொன்னளார். யுhழ்ப்பாணத்தில் வாரியாரின் மழைபோல ஓழுகுகின்ற பெச்சுகளைக் கேட்டதை நினைவு கூர்ந்த தனபாலசிங்கம் தமிழை - கம்பராமாயணத்தை -  மகாபாரதத்தை சாதாரண மக்களிடையே எடுத்துச் சென்று  ஜனரஞ்சகப்படுத்தியவர்தான்; வாரியார் சுவாமிகள் என்று விதந்துரைத்தார். மேலும் அவர் “ ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கூறிய கணியன் éங்குன்றனாருக்குத் அவர் பிறந்த பாண்டிநாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்துகொண்டே இந்த உலகத்தைக் கண்ட மாநகரக் காட்சி சொந்தமாகியது. அதுபோல ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதை வாழ்ந்து காட்டியவர் தனிநாயக அடிகளார். கரம்பனிற் பிறந்த அவருக்கு இந்தப் éமியிலே காலட படாத இடமில்லை.  கடைசிகாலத்தில் அவர் அமைதிகொண்டது அவர் பிறந்த மண்ணிற்கு வந்துதான்.தேன்பாடும் மட்டுநகரில் வாழ்ந்த வீரமாமுனிவர் இயற்றிய ‘தேம்பாவாணி’யைத் தமிழ் மக்களிடையெ பரப்பிவிட்டவர் தனிநாயக அடிகளார். வுhழ்வில இறைபத்தியையும் தமிழ்ப் பற்றையும் சங்கமிக்கச் செய்த மகான் அவர். தேம்பாவணியிலே வரும் சில பாடல்களை அடிக்கடி கூறும் அடிகளார் ‘அறக்கடல் நீயே! அருட்கடல் நீயே! …….இனி அனைத்தும் நீயே!’ என்ற பாடலையும்  ‘உருவில்லாள் உருவாகி உலகில்மனிதன் உதிப்பக்
கருவில்லாள் கருத்தாங்கிக் கன்னித்தாய் ஆகினையே!’  என்ற பாடல் போன்றவற்றையும் அடிகளார் மேற்கோள் காட்டுவது வழக்கம் என்றுஞ் சொன்னார்.  ‘தமிழ்மொழியைத் தனக்கத் தாய்மொழியாகத் தந்த இறைவனை கைகூப்பி வணங்கிவந்த அடிகளார் “யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல நின்பால் அன்பும் அருளும் அறனும் மூன்று ….” ஏன்று பரிபாடலில் வரும் பாடல் வரிகளைப் பல இடங்களில் எடுத்துக்காட்டிய அடிகளார் இதைத் தன் வாழ்வாக வரித்துக் கொண்டவர் என்று …. ஒருவரைச் சான்றோர் என்று கொள்வாதற்கு அவரிம் சில தகுதிகள் அநை;திருக்க வெண்டும். அவர் உடல்  உள்ளம் சிந்தனை எல்லாமே சான்றாண்மையை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும். இவைகளுடன் சான்றோராக விளங்கிய தனிநாயக அடிகளார் சிரிப்பிற்கும் நட்பிற்கும் கொடுத்த இடம் மேலானது என்றும்….
ஆடிகளாரின் சிறப்பைப் பலர் புகழ்ந்து பேசியதற்குப் பல உதாரணங்களைச் மேற்கோள் காட்டினார். உருமுறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் மாநாட்டிற்கு சொல்லின் செல்வர்; இரா.பீ. சேதுப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்குவதாக இருந்தது. அதிலே தனிநாயக அடிகளாரின் சொற்பொழிவும் இருந்தது. கூட்டத்திற்கு சொல்லின் செல்வர் வரத் தாமதமாகிவிட்டது. ஆனால் ரேத்திலே மிகவும் கட்டுப்பாடுகொண்ட அடிகளார் துpரு சேதுப்பிள்ளைக்காகப் பார்க்கவில்லை. தனது உரையைத் தவைவரில்லாமலே பேசி முடித்தார். தாமதித்துவந்த சேதுப்பிள்ளை தனது உரையின் நிறைவில் அவையோரைப் பார்த்து “தனிநாயகத்திற்கோர் சபாநாயகம்; வேண்டுமோ? ” என்று கூறி அடிகளாரின் பெருமையை மேலும் விளக்கும் வண்ணம் “தனிநாயக் பேசிற்று” என்று உரைத்ததும் ‘ஏன் ஓர் அடிகளாரைப் போயும் போயும் அஃறிணையில் அழைத்தார் என்ற வியப்பைப் போக்க அதற்கு விளக்கமும் தந்தார். தனிநாயகம் பேசிற்று என்றால் ‘தமிழ் உலகம் பேசிற்று’என்று சொல்வது சரி. அந்தக் கருத்தில் தனிநாயகம் பேசிற்று …தமிழ் பேசிற்று என்றேன்’  …என்றார். ஒருமுறை டாக்டர் மு வரதராசனார் பேசும்பொழுது ‘எங்கள் சிறப்பெல்லாம் தமிழ்நாட்டிற்கு உள்ளே தான். ஆனால் தனிநாயக அடிகளாரின் சிறப்பத் தரணியெல்லாம் பரவி இருக்கிறது’ என்றார். பேராசிரியர் கைலாசபதி அவர்கள் குறிப்பிடுகையில் ‘அடிகளார் பாதிரிமார்களில் ஓர் இளவரசன்’ என்று புகழ்ந்துள்ளார். தனபால் அவர்கள் மேலும் தொடர்கையில் ‘ மேல்நாட்டு அறிஞர்களின் ஆக்கங்களை மேல்நாட்டார்  தலைமேலே போற்றி வருவது போலத் தமிழ் அகத்துறை இலக்கியங்களை ஒருமுறை படித்துப் பார்க்குமா என்று ஏங்கினார். ஏமத இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் - திருவள்ளுவரின் திருக்குறள் போன்ற நூல்களையம் இவர்கள் பொற்றும் நிலைவர வேண்டும் என்பது இவர் கனவாகும். - ‘கத்தோலிக்கப் பாதிரியாக வாழ்ந்த வாழ்க்கை   தனிமனிதனாக நின்று தமிழுக்குப் பணிசெய்வதற்கு வசதியாக அமைந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கம்போடியா – தாய்hந்து – பேர்மா – போத்துக்கல் போன்று உலகிற் பல நாடுகளுக்கும் சென்று அங்கங்கே அடைபட்டுக் கிடந்த தமிழர்களை அவர்களின் கலாசாரத்தை தமிழ்ப்பண்பாட்டை தமிழ்கூறு  நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்துவைத்த பெருமை அடிகளாரையே சாரும்’ என்றும்   ‘தமிழரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் வெளிக்கொணர்தற்கு
அடிகளார் 1952ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் வெளியிட்ட “தமிழ்ப் பண்பாடு” – (வுயஅடை ஊரடவரசந) என்ற முத்திங்களறு; ஏடு மகத்தானது என்றும் கூறினார்.  1964 ஆம் ஆணடு நடைபெற்ற கீழைத்தேய மொழிகளின் மாநாட்டில் பங்கெடுத்த  பன்மொழிப் புலவர் பொ. மீனாட்சிசுந்தரனார்- டாக்டர் மு வரதராசனார் - அறிஞர் சுப்பிரமணயம் ஆகியோருடன் கலந்துகொண்ட அடிகளார் மாநாட்டின் இடைவேளையின்போது நழடபெற்ற கலந்துரையாடலின் போதுதான் ‘உலகத் தமிழாராய்சி மன்றம்’ என்பதன் பிரசவம் நடைபெற்ற தகவலையும் அன்று தமிழ்நாட்டு அறிஞர்கள் உலகத் திராவிட மாநாடு என்று பெயர்சூட்டவிளைந்த பொழுது அடிகளார் அவர்களுக்கு இடங்கொடாது சளைக்காது வாதாடி அதற்கு ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்’ என்ற பெயரைச் சூட்டின தகவலையும் தந்தார். அவர் காலத்திலேயே பல மாநாடுகளைத் திறம்படச் செயலாற்றியமை அவரின் அயரா உழைப்பின் பெறுபேறே என்றும்   பேச்சாற்றல் கொண்ட அடிகளார் எழுதுவதிலும் மிகுந்த புலமை வாய்ந்தவர் என்பதை அவரின் கட்டுரைகளில் ஒன்றான  ‘éக்களைக் கொண்டே தமிழர் எல்லாவற்றையம் சொல்லிவிட்டார்கள்’ என்ற ஆங்கிலக்  கட்டுரை சான்று பகரும் என்பதையும் சுட்டிக்காட்டி அதன் விளக்கத்தையும் தனது வித்துவத் திறமை வெளிப்படும் விதத்தில் கையாண்டமை அற்புதம். அடிகளாரின் முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  மலேசியாவில் அதன் பிரதமர் அப்துல் ரகுமான் தலைமையில் பல நாட்டுப் பேரறிஞர்கள் குழுமியிருந்த அவையில் தன்னைத் தமிழனாகப் பிறக்கவைத்த இறைவனுக்கு முதற்கண் தலைவணங்கும் பொழுது (விபுலானந்தஅடிகளார் இயற்றிய) தேம்பாவணியில் இருந்து ‘கலையணிச் செல்லன் கமலச் சேவடி தலையணி புனைந்து சாற்றுதும் தமிழே’ என்ற வரிகளால் வாழ்த்திய பின்னர்தான் அடிகளார் தனது பேருரையை நிகழ்த்தினார் என்ற தகவலையும் சிறப்புறக் கூறினார். அத்துடன் திருமூலர் பெருமானின் திருமந்திரத்தில் வரும் ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யமாறே’ என்ற இரு வரிகளையும் பட்டி தொட்டிகளில் இருந்த எல்லோருக்கும் தெரியச் செய்து அந்த வரிகள் இன்று எங்கும் ஒலிக்கச் செய்த பெருமை தனிநாயக அடிகளாரையே சாரும் என்பதையும் ஆணித்தரமாகக் கூறினார். 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் திகதி அடிகளார் இறையடி சேர்ந்தார் என்றும் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் தந்தை செல்வநாயகத்தின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார் இதவே அவரின் இறுதிப் பேச்சாக அமைந்திருந்தது என்றும் அக்கூட்டத்திலே தமிழ் ஆராய்ச்சியானது ஐரோப்பியர்களின் வருகையினாலோ அல்லது கிறித்தவ மிசனரிமார்களின் வருகைக்குப் பின்னரோ அன்றிச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தோற்றத்தினாலோ ஏற்பட்டதென்று தவறாக விளங்க வேண்டாம் என்றும் தமிழ் ஆராய்ச்சி 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொல்காப்பியரின் காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றது என்றும் தமிழறிஞர்கள் பலர் பழந்தமிழ் நூல்களை ஆய்ந்து ஆய்ந்து பல ஆராய்ச்சி உரைகளை எழுதியுள்ளார்கள் என்றும் பலவித உண்மைக் கருத்துகளை தனது மதிநுட்பம்கொண்டு விளக்கியமை பாராட்டத்தக்கதாகும். இறுதியாக அவர்’ ‘தனிநாயக அடிகளார் தமிழரின் கலாசாரத்தை – பெருமையை உலகறியச்செய்த தமிழ்ப்பற்றாளர். இவர் ஓர் சான்றோர். ஆவர் எனக்கூறித் தது சிறப்புரையை நிறைவுசெய்தார். அவருக்கு சைவ ஆர்வலர் தமிழன்பர் திரு ந கணபதிப்பிள்ளை அவர்கள் மலர் மாலை அணிந்து கௌரவித்தார்.


 இதையடுத்து விழா இணைப்பாளர் கலாநிதி இளமுருகனார் பாரதி ஒரு சில கவிதைகளால் வண. பிதா தனிநாயக அடிகளார் பெருமையைக் கூறினார்.
மாணிக்கத் தீபமான இலங்கை நகரின்
   வடபகுதி தனிற்பிறந்து கற்று யர்ந்து
காணிக்கையாய்த் தமிழன்னை களிகொளத் தன்னை
    கடமையுணர் வொடர்ப்பணித்த அடிகளார் புகழ்
ஏணிக்கும் அளவேது? இயம்பப்  போமோ?
    ஏசுபதம் போற்றியே தமிழைத் தனித்துவப்
பாணியிலே பரப்பிநி;ன்ற பெற்றி என்னே!
   பண்பாளன் தனிநாயக அடிகள் போற்றி!

அருளதனால் ஒளிர்கின்ற  காந்த விழிகள்
    அன்பதனால் உயிர்க்கின்ற அறத்தின் தோற்றம்
தெருளெல்லாம் புலர்கின்ற கர்த்தர் ஒளி
     தெளிவெலாம் மலர்கின்ற சாந்த முகம்
வருந்துவர்க் குதவிசெயும் வள்ளல் உள்ளம்
  வண்டமிழை உலகரங்கிற்; பரப்பும் ஓர்மம்
பெருந்தவத்தோன் தனில்இவைகள் பொதுளிப் பில்கும்
      பேராசான் தனிநாயகம் அடிகள் அன்றோ?

நண்பதனால் எந்தையிடம் தமிழால் இணைந்தார்
    நடையதனால் தமழ்மொழியை உலகிற் களித்தார்
பண்பதனால் பாடறிந்து ஒழுகும் பாங்கு!
     பலர்போற்றும் தன்னடக்கம் பழுத்த கேண்மை!
திண்ணமொடு தமிழையுல கரங்கிற் பரப்பத்
     திசையெலாம் தமிழ்மகாநா டமைத்த ஞானி!
எண்ணரிய அருங்குணங்கள் விஞ்சி வாழ்ந்த
     எழில்éத்த அடிகளாரை நினைவு கூர்வாம்
             என்று எடுத்தியம்பினார். ஒரு சிறு இடைவேளையின் பின்னர்விழா தொடர்ந்தது.
காரானை முகத்தானை முதல்வ ணங்கி
   கன்னித்தமிழ் வளர்த்தோரை நினைவு கூர
ஆராத காதலுடன் விழாவுஞ் சிறக்க
   அரும்பாடு பட்டோர்கள் மகிழ்வு எய்தச்
சீராக நன்றியுரை செப்பிட வேண்டி
   செயலாளர் நாயகமாய்ச் சேவை புரியும்
நாராயணப் பெருந்தகையை நற்றமிழ் கொண்டு
   நானழைக்க அரங்கிற்கு நண்ப வருக!
என்று அழைத்ததும் உலகசைவப் பேரவையின் செயலாளர் திரு நாராயணன் அவர்கள் விழாவினைச் சிறப்புற ஒழுங்குசெய்த அன்பு நெஞ்சங்களுக்கு  நன்றி நவிலும்வண்ணம் விழாவிற்கு உதவிய சகலரையும் அன்புகூர்ந்து நன்றி நவின்றார்.விழாவின் அடுத்த நிகழ்ச்சியாகத் திருமுருக கிருபானந்த வாரியாரைப்பற்றிய சிற்றுரை இடம்பெற்றது.
தவநெறியில் வாழ்ந்துயர்ந்து தமிழ்முரு கனவன்
   தானேதுணை யென்றவனின் திருப்புகழ் பாடிப்
புவனமெலாம் போற்றிடவே சைவமதத் திற்கும்
   பொன்னனைய தமிழ்மொழிக்கும் சேவை செய்தே
சிவசிவவென் றென்நாளும் சிந்தை மகிழ்ந்த
    திருமுருக வாரியாரின் தேசு செப்ப
நிசேவிதாபால சுப்ரமணியம் தன்னை  நானும்
    நேசக்கரம் நீட்டியழைத் திடவே வருக!
என்று விழா இணைப்பாளர் அழைத்ததும் செல்வி நிசேவிதா அவர்கள் வாரியாரின் பிறப்பு – கல்வி- கலைப் பயிற்சி பற்றிப் பல தகவல்களைத் தந்ததுடன் மேலும்
“குடும்பச் செலவிற்குப் பிரசங்கம் செய்துவந்த தந்தையார் வாரியாரைத் தனக்குப் பிற்பாட்டுப் பாடுவதற்கும் கையேடு வாசிப்பதற்கும் தன்னுடன்;   அழைத்துச் செல்வதுண்டு.   சில காலம் வீணை பயின்றுவந்த வாரியார் சங்கீதத்திலும் பேச்சுவன்மையிலும் சிறந்து காணப்பட்டார். 19ஆம் வயதிலே தாய் மாமனின் மகளான அமிர்தலட்சுமிக்கு இவரைத் திருமணம் செய்துவைத்தார்கள். தானே தனித்துப் பிரசங்கம் செய்ய ஆரம்பித்த வாரியாரின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவியது. முருகனருள் கைவரப் பெற்ற வாரியாருக்குச் செல்வம் பெருகத்தொடங்கியது..   பரந்து வளர்ந்த தமிழ்ப் பற்றுடன் விரிந்து மலர்ந்தது சைவத் திருப்பணி.   தெய்வத் தமிழின் தூய்மை பேணி இறை சேவை ஆற்றுவதைத் தம் தலையாய பணியாகக் கொண்டார்.    பெருகிவரும் செல்வமெல்லாவற்றையும் மனம் உருகி உருகி ஏழைகளுக்கும் கல்வி கற்கப் பணமில்லாது கலங்குபவர்களுக்கும் கோயில்களின் திருப்பணிக்கும் வாரி வாரி வழங்கினார்..  சொற்பொழிவுகளுக்கு அழைப்பவர்கள்   கொடுப்பதை இவர் மனநிறைவோடு ஏற்பவர் அதாவது பொருளைத் மட்டும் பாராது அருளைமட்டும் கணக்கில் வைப்பவர் இவர்.. அருணகிரிநாதரைத் தன் மானசீகக் குருவாகக்கொண்ட இவர் 1940ஆம் ஆண்டிலே அருணகிரிநாதர் அறச்சாலை ஒன்றை அமைத்துத் திருப்புகழைப் பரப்பி உலகறியச் செய்துவந்தார். வெள்ளை உள்ளம் கொண்ட வாரியாருக்குக் கள்ளங் கபடமற்ற பள்ளைகளிடம் கொள்ளை ஆசை. பாமர மக்களுக்கு இராமாயணம் மகாபாரதம் பெரியபுராணம் திருவிளையாடற் புராணம் கீதோபதேசம் முதலிய பல நூல்களை இலகு தமிழில் இன்னிசையுடன் கதாப்பிரசங்கங்களாக விளக்கி வந்து அழியாப் புகழ் சேர்த்தார். ஆதிசங்கரர் ராமானுஜர் போன்ற சமயத் தலைவர்கள் கூறிவரும் சமய தத்துவங்களையெல்லாம் பாமர மக்களுக்கும் எளிதில்   ஆன்மிகச் சொற்பொழிவுகளால் விளக்கிவந்தார்.   திருப்புகழ் அமிர்தம் என்ற சஞ்சிகை ஒன்றை 37 ஆண்டுகளாக நடத்தி வந்தமை அருணகிரிநாதரின் மேல் வாரியாருக்கிருந்த ஆழ்ந்த பயபக்தியையும் திருப்புகழின் மேலிருந்த தீரா மோகத்தையும் எடுத்தியம்பும்.       மனிதர்களை மனித நேயம் உள்ளவர்களாக மாற்றி வந்தவர் வாரியார். 1936ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகத் 57 வருடங்கள்  முருகனுக்குப் éசைசெய்த பின்புதான் எதையாவது உண்ணும் கொள்கையை இறுதிவரையும் இவர் கடைப்பிடித்தவர். பல திரைப் படங்களிலும் திறம்பட நடித்துப் புகழ் சூடினார். கருணை உள்ளம் கொண்ட வாரியார் 64ஆவது திருப்பணித் தொண்டர் எனச் சைவப்பேரறிஞர்களால் அழைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 முருகனின் éரண திருவருளைப் பெற்ற வாரியார் சுவாமிகளுக்குக் கிடைத்த கௌரவங்கள் பலவாகும். திருப்புகழ் ஜோதி – அருள்மொழி அரசு - இசைப் பேரறிஞர் - அமுதமொழிக் கொண்டல் - திருப்பணிச் சக்கரவர்த்தி – கலைமாமணி – இலக்கிய முது முனைவர் - தமிழ்ப் பேரவைச் செம்மல் - திருப்பணிச் சரபம் - முத்தமிழ் வள்ளல் இப்படி எத்தனையோ சிறப்புகள் பெற்றார். இவர் இலங்கை மலேசியா இலண்டன் பரிஸ் அமெரிக்கா கனடா எனப் பல இடங்களில் சைவத்தோடு தமிழ் வளர்த்துப் பெருமை தேடியவர். குருவாய் அருவாய் என ஓங்கிய குரலில் முழங்கிவந்த அவரின் திருவாய் 1993ஆம் ஆண்டு மார்கழி மாதம் 7ஆம் திகதி மூடிக்கொண்டது.
அவரின் இறவாப் புகழ் சைவர்கள் மத்தியில் என்றும் நிலைத்து வாழும் என்பதில் ஐயமில்லை” என்று இனிமையாகக் கூறி தனது சிற்றுரையை நிறைவுசெய்தார்.


சந்ததமும் தமிழ்மாந்தும் சுந்தர முருகன்
    தவப்பேறு பெற்றுப்பல தசாப்தங் களாக
விந்தையெனச் சுவைபில்கத் தமிழ்பொ ழிந்த
    வித்தகனாம் வாரியாரின் விழுமிய தொண்டைப்
புந்தியிலே தினமிருத்திப் பொங்கர வனையே
    போற்றிவழி பாடுசெயும் புலவர் ஏறே!
நந்திவர்மா! நறுந்தமிழால்; நற்கவி நவின்றிட
    நானுவந்து அழைத்திடுவேன் நண்ப வருக!.
என்று நண்பன் கவிஞர் நந்திவர்மன் அவர்களைப் பாரதி அவர்கள் கவிகூறி அழைத்ததம் அவர் வாரியாரின் பெருமை என்னும் தலைப்பில் அற்புதமான   அறுசீர்க்கழிநெடிலடி அசிரிய விருத்தப் பாக்களை அந்தாதித் தொடையாகப் பாடித் தனது கவித்துவத்தை பலரும் மெச்சும்படி வெளிக்கொணர்ந்தார். இதோ அவரின் கவிதை ….
வாரியார் என்று நாங்கள்
வாஞ்சையாய் அழைத்து வந்த
சீரியர் தமிழும் முருகும்
சிந்தையில் கொண்ட பெரியர்
ஆரியர் மொழியின் மேலாய்
அருந்தமிழ் போற்றிச் செய்த
காரியம் யாவுந் தமிழைக்
கவினுறச் செய்த செயலே!

செயலிலே செம்மை கொண்டார்
சிந்தையில் இறையுங் கொண்டார்
நயமுடன் கதைகள் சொல்லும்
நாவினில் இனிமை கொண்டார்
உயர்வுடன் எவரும் வாழும்
உணர்வினை இலக்காய்க் கொண்டார்
அயர்விலா துழைக்கும் வாழ்வை
அந்தமாய் அமைத்துக் கொண்டார்.

கொண்டதன் கொள்கை தன்னில்
குறியுடன் வாழ்ந்து வந்தார்
வண்டென உலகஞ் சுற்றி
வள்ளலின் புகழைச் சொன்னார்
அண்டினோர் தம்மை அன்பால்
அருள்வழி சேர வைத்தார்
பண்டைய கதைகள் மூலம்
பண்பினை எடுத்துச் சொன்னார்.

சொன்னதைச் சுவையாய்ச் சொல்லிச்
சொக்கிட வைத்தார் எம்மை
உன்னத எண்ணங் கொண்டு
ஒளியுடன் நாளும் வாழ்ந்து
முன்னவன் கழலே சேரும்
முனைப்புடன் பணிகள் செய்யும்
நன்னெறி காட்டித் தந்தார்
நலமுடன் வாழச் செய்தார்.

செய்திடும் செயல்கள் யாவும்
சிவனவன் தாளே முடிவில்
எய்திடும் வழியே என்று
ஏற்புடன் வாழ்ந்த அடியார்
மெய்தரும் வாழ்வை நூலாய்ச்
சிவநெறித் தொண்டர் அருளே
பெய்திட எமக்குத் தந்தார்
பெருவழி காட்டித் தந்தார்.

தந்ததோர் நூற்றின் மேலாம்
தனிப்பெருந் நுல்கள் தன்னுள்
சிந்தையைக் கவர்ந்து நிற்கும்
திருப்புகழ் விளக்க நூலும்
கநதவேள் கருணை என்னும்
களிதரு சமய நூலும்
விந்தையாய்ப் புராணக் கதைகள்
விரித்திடும் நூலும் உண்டாம் .
;
உண்டெனத் தெய்வம் என்று
உணர்ந்துடன் தெளியும் வண்ணம்
கண்டவர் கேட்போர் உள்ளம்
கரைந்திடும் வகையில் நன்றாய்த்
தொண்டரின் கதையுஞ் சொல்லித்
தொழுதெழும் வகையுஞ் சொல்லி
அண்டமும் வியக்கும் வண்ணம்
ஆயிரம் உரைகள் பொழிந்தார்.

பொழிந்திடும் உரையில் தமிழே
பொலிந்திடும் இசையுஞ் சேரும்
நுழைந்திடும் குறும்புக் கதைகள்
நூல்பல தொட்டுச் செல்லும்
குழைந்திடும் கேட்போர் உள்ளம்
குலம்பல மேன்மை கொள்ளும்
விழைந்திடும் அடியார் உள்ளம்
விண்ணவன் பாதம் எட்ட

எட்டினார் இலக்கு யாவும்
ஏந்தலின் அருளே உறறுப்
பட்டமும் பலவும் பெற்றார்
பாமர மக்கள் மனமே
தொட்டிடும் வகையில் இனிய
திருப்புகழ் அமிர்தம் என்னுங்
கட்டுரைத் திங்கள் இதழில்
கருத்துகள் சொல்லிப் போனார்.

போனதோர் இடங்கள் எல்லாம்
பொய்யிலான் பெருமை பாடி
தேனெனத் தமிழில் பேசித்
திரைப்படம் மூன்றில் தோன்றிக்
கோனவன் கோயில் பணிகள்
கூடவே செய்து காட்டி
வானவன் கழலே சேர்ந்தார்
வண்புகழ் வாரி யாரே!


 நந்திவர்மனின் நயம்பெய்த கவிதைகளை நலமே கேட்டிPர். நீங்கள் ஆவலுடன் காத்திருந்த  சிறப்பு நிகழ்ச்சியாக எமது பிரதம விருந்தினரை பாவிhற் பாரதி அழைக்கிறார்…
நான்முகன் நாயகி நித்தம்
நாவினில் நடஞ்செய நீவிர்
தேன்கலந் திட்ட பாகாய்த்
தீஞ்சுவை பீறிப் பாய
சான்றோர் கிறங்கி நிற்கச்
சபையோர் வியந்து போற்ற
வான்கருங் கொண்டல் பெய்யும்
வற்றிடா மழையைப் போல
மேன்மைகொள் சைவ நீதி
விளக்கிடக் காதை எல்லாம்
கானமாய்ச் செவிகள் மாந்தக்
களிப்பொடு விகடஞ் சேர்த்த
தானமாய்த் தமிழால் மாரி
தாயே பொழிந்து நின்றாய்!
ஞானமே! சரஸ்வதி இராம
நாதனே! தமிழைப் பொழிக!இந்த ஆண்டின் சிறந்த மகளிர் விருதைப் பெற்ற செல்வி லÑ;மி லோகதாசன்  அவர்கள் பேராசிரியர் சரசுவதி இராமநாதனுக்கு மலர்மாலை அணிவித்துக் கௌரவித்தார்   திருமதி சரஸ்வதி இராம நாதனை அறிமுகஞ்செய்ததும் பலத்த கரகோசத்துடன் அவர் தனது சிறப்புச் சொற்பொழிவை ஆரம்பித்தார். மடை திறந்த வெள்ளம் போல வாரியாரின் சிறப்பைச் செப்பிடமுன் ஒப்பற்ற பரம்பொருளுக்கு வாழ்த்து என்று கூறி “உலகெலாம் உணர்ந்(து) ஓதற் கரியவன்....” என்ற சேக்கிழார் பெருமானின் புராணத்தை இசையொடு பாடியதைத் தொடர்ந்து இறைவன் படைத்த தமிழுக்கு வாழ்த்து எனப் பாரதியாரின் “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி…..”என்னும் வாழ்த்தையும் பாடி அவையிலுள்ளோரையும் வாழ்த்தி வணங்கி – ‘அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் என்னை இங்கு கொண்டுவந்தது. உலக சைவப் பேரவை என்னை இந்த விழாவிற்கு இரு கரங்கூப்பி வரவழைத்தது’ என்று அவைகளுக்கும் நன்றி பாராட்டியபின் உரையைத் தொடர்ந்தார்;. அவர் தனது வாழ்க்கையே தமிழ் என்றும் தான் ஒன்பது வயதிலே மேடை ஏறியவர் என்றும் இன்று 75 வயதிலும் தொடர்ந்து தமிழ்ப்பணி; செய்வதாகவும்  தனத தமிழ்ப் பணிபற்றிச் சொல்டலிவிட்டு  கிருபானந்த வாரியார் சுவாமிகளைப் பற்றியும் தவத்திரு வண. புpதா தனிநாயக அடிகளாரைப் பற்றியும் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்த அவர்
‘சேவியர் நிக்கொலஸ் ஸ்ரான்ஸ்லோஸ் என்பவரைத் தெரியுமா?’ என்று ஒரு வினாவைக் கேட்டபின் ‘அவர் தான் தனிநாயக அடிகளார்’ என பதிலையும் கூறினார். மேலும் “தனிநாயக அடிகளாரின் தந்தையார் காதலுக்காகக் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினார். தனிநாயகமோ  கிறிஸ்தவ மதத்திற்காகக்; காதலைவிட்டுத் துறவியானார். இளங்கோ அடிகளாரோ அரசை வேண்டாம் என்று   ; துறவு கொண்டார். தமிழ்ப்பற்றைத் துறக்கவில்லை. தனிநாயக அடிகளாரோ இல்லறவாழ்வைவிட்டுத் துறவியானார் ஆனால் தமிழ்ப் பற்றைத் துறக்கவில்லை. இளங்கோ அடிகள் சிவனைப் பாடினாலும் முருகனைப் பாடினாலும் கொற்றவையைப் பாடினாலும் தான் சமணன் என்பதை மறந்து பாடினார். இதேபோல தனிநாயக அடிகளாரும்    கிறித்தவர் என்ற வெறி இல்லாமல் தமிழ்ப்பற்றாளர் என்பதை நிரூபித்துக் காட்டியவர்.  சுருக்கமாக வாரியார் ஒரு சிவப்பழம் தனிநாயகம் ஒரு கிறித்தவப்பழம் - வாரியார் ஞானப் பழம்  தனிநாயகம் தமிழ்ப்பழம்.ஓருவர் கடல் கடந்து தமிழகத்திற்குவந்தவர் - மற்றவர் தமிழகத்திலிருந்து கடல்கடந்து தமிழ் வளர்த்தவர். இருவரும் தமிழ்ச் சான்றோர்களே! தனிநாயக அடிகளார் 34ஆம் வயதில் நெல்லை மாவட்டத்திற்கு ஆயராக வந்து பின்னர்  சங்க இலக்கியம பற்றி ஆய்வுசெய்வதற்காக் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே சேர்ந்தவர் அப்பொழுது அவரைச் சந்திக்கும் பாய்க்கியம் பெற்றேன் பின்னர் அவர் ஏற்படுத்திய முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இரண்டாவது முறையாகச் சந்திக்கும் பேறு பெற்றேன். வுhரியார் சுவாமிகளுடன் சுமார் 30 வருடங்கள் குடும்பத்தோடு பழகி இருக்கிறேன். இந்த இரு சான்றோரையும் பார்ப்பதற்கு ‘என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்று எண்ணத் தோன்றுகின்றது”என்றார். “ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்புண்டு. ஆங்கிலம் வியாபாரத்திற்கு - இலத்தீன் சட்டத்திற்கு – பிரான்சு மொழி தூதுக்குரிய மொழி - இத்தாலிய மொழி காதலுக்கு உரிய மொழி – வடமாழி கம்பீரத்திற்கு உரிய மொழி – ஆனால் தமிழோ இரக்கத்திற்கும் பத்திக்கம் என்று தனிநாயக அடிகளார் அடிக்கடி கூறுவதுண்டு.
ஒருமுறை வாரியார் சுவாமிகள் நெய்வேலியில் ஒரு பெரிய கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவர் அந்தக் கூட்டத்திலே
“இயமன் நீதி தவறாதவன். உயிரை எடுக்கும் காலம் வந்துவிட்டால் அவன் எந்த நேரத்திலே வர வேண்டுமோ வந்துவிடுவான். ஒருவர் சம்சாரி என்றாலும் சரி சந்நியாசி என்றாலும் சரி ஏழை என்றாலும் சரி பணக்காரன் என்றாலும் சரி படித்தவன் எனறாலும் சரி படிக்காதவன் என்றாலும் சரி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றாலும் சரி நேரம் வந்ததும உயிரை எடுத்துவிடுவான் . இப்படிச் சொன்னதுதான் தாமதம் 4 குண்டர்கள் கூட்டத்து மத்தியிலிருந்து ஓடி வந்தார்கள். என் கன்னத்திலும் உடம்பிலும் மாறிமாறி அடித்தார்கள் உதைத்தார்கள். நான் தினம் éசைபண்ணும் முருகனின் சிலையையும் அடித்து உடைத்தார்கள் நான் முருகனை அடிக்காதீர்கள் என் அப்பனை அடிக்காதீர்கள் என்னை அடியுங்கள என்று கதறியும் அவர்கள் கேட்கவில்லை. மூன்று நாள்கள் சிகிச்சை பெற்ற பின் இங்கு வந்தேன்” என்று  மதுரையில் சிவராத்திரிக்கு ஒரு பெரிய கூட்டத்தில் பேச வந்த வள்ளலார் தனக்கச் சொல்லியதாகக் கூறினார். வள்ளலாரைப் பார்தததும் கலங்கிய கண்களுடன்
‘இப்படியெல்லாம் உங்களை அடித்திருக்கிறார்களே சுவாமி’ என்று அவரை வினவியதற்கு அவர் “என்னுடைய முருகனை - நான் தினமும் éசைபண்ணுகிற முருகனை அடித்து உடைத்துவிட்டாங்கள். அதுதான் எனககு மிகவும் மனவருத்தம். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நான் பொதுவான நியதியைத்தான் சொன்னேன். அது அவர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் அமெரிக்காவி;ல் சிகிச்சைபெறும் அரசியல்வாதியைக் கிண்டல் செய்தேனென்று அடித்துவிட்டார்கள். அவ்வளவுதான்.” என்றார் “அரசியல் கிண்டல் பேசியதற்காக வாரியார் தாக்கப்பட்டார் எனப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டன.  . இதற்கெல்லாம் பயப்படுபவன் வாரியார் அல்ல ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்ற அப்பர் பெருமானின கொள்கைப்படி தான் நான் நடப்;பேன்” என்றார்.
மதுரையிலே வாரியாருடன் சேர்ந்து பட்டிமண்டப நிகழ்ச்சி முடிந்தபின்பு வாரியார் சுவாமிகள் எல்லோருக்கும் விéதி வழங்கியபின்னர் தனது விரிந்த நெற்றியிலே பரவலாகப் éசுவதைக்கண்ட 3 கறுப்;புச் சட்டை அணிந்த (நாத்திகர்கள்) அவரைநோக்கிவந்த “என்ன நிரம்ப வெள்ளை அடிக்கிறீர்களே!” எனக் கேட்டார்கள் மறுபடியும் என்ன ஒரேயடியாக வெள்ளை அடிக்கிறீர்களே எனக் கிண்டல்செய்யவும் வாரியார் அவர்களைப் பார்த்து “குடி இருக்கிற வீட்டிற்குத் தான் வெள்ளை அடிப்பார்கள். என் நெஞ்சம் ஆண்டவன் குடியிருக்கும் வீடு. அதுதான் நான் வெள்ளையடிக்கிறேன். “ என்று சாமர்த்தியமாகப் பதிலளித்தை மெச்சிச் சொன்னார். “வாரியார் என்ன வார்த்தை சொன்னாலும் அதற்கு அர்த்தம் இருக்கும். பாமர மக்களுக்கும் எளிதில் விளங்கும்வண்ணம் சிரிக்கச் சிரிக்கப் பேசிச் சிந்திக்கவைத்துப பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துச் சொன்னவர் வாரியார சுவாமிகள்.;.  நாத்திகராக இருந்த கண்ணதாசனை இருவரின் பேச்சுகள்தான் ஆத்திகராக மாற்றியது. ஓன்று வாரியார் சுவாமிகளின் பேச்சு . மற்றது ஆனந்தராமகிருஸ்ணனின் பேச்சு. காங்கேய நல்லூரில் கோயிலில் நைவேத்தியம் செய்வதற்கும் வசதியில்லாது போயிற்று என்பதை திருவருள் உணர்த்தியதை அடுத்து  அவர் 10 நாள்களாகத் தனது சொற்பொழிவினாற் சேரும் பணத்தை முற்றாக -  அங்கு நிலம் வாங்கி விவசாயம் செய்து நிரந்தரமான வருமானத்தைக் கோயிற் செலவுகளுக்குப் பாவிக்கலாம் என்ற உறுதியுடன் - இரவு பகலாகச் சேர்த்த பணத்தைக் கோயிலுக்குக் கொடுத்திருந்தார் என்றும் இன்றும் அவர் பணத்தில் வாங்கிய வயலில் இருந்துதான் அருணகிரிநாதர் சன்;னதியிலே திருப்பணிக்குப்  பொருள் கிடைக்கிறது என்பதையும் வாரியாரின் வேறு பல தொண்டுகளையும்; அம்மையார் அவர்கள் விரிவாக எடுத்தியம்பினார்.


தனிநாயக அடிகளார் சமயத்தைத் துறக்கவில்லை -  இல்வாழ்க்கையைத் தறந்தாலும் தமிழ்ப் பற்றைத் துறக்கவில்லை. அவர் தன் அடத்தில் இருந்துகொண்டே தமிழ்த் தொண்டு செய்தார். வாரியாரோ ஊர் ஓராகச் சென்று சென்று பாமர மக்களுக்குக் கூட விளங்கும் வண்ணம் திருமுறை – கம்பராமாயணம் பெரியபுராணம் திரவிளையாடற் புராணம் தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றைச் இலக்கிய நயத்தோடு நகைச்சுவையோடு உலகியலோடு சொல்லிச் சொல்லித் தமிழை வாரி வாரி வழங்கினார். ஏத்தனையோ ஏளைகளின் கல்விப்பணிக்கு உதவி செய்தார். ஆயிரம் ஆயிரமாகக் கோயில் திருப்பணிக்கு வாரி வழங்கினார். இவ்வண்ணம் இரு சான்றோருக்கும் எடுக்கப்பட்ட விழாவில் தனக்கு உரை நிகழ்த்தத் தந்த வாய்ப்பிற்கு உலக சைவப் பேரவையை வாழ்த்தி நன்றி கூறித் தன் இனிமையான பேச்சை நிறைவுசெய்தார்.
சரஸ்வதி இராம நாதனே! பேருரை சிறக்கச் செய்தீர் பிஞ்ஞகன் அருள வாழி! என்று பாரதி அவர்கள் அம்மையாருக்கு நன்றிகூறியதும் தினமின்று விழாக்கணடோர் சிந்தை மகிழத் தேவாரப் பண்ணுடனே நிறைவு செய்ய
செல்வி யதுகிரியின் தேவாரத்துடன் இனிதே சான்றோர் விழா நிறைவுற்றது.
தமிழ் அன்பர் ஓவியர் அன்புடன் புகைப்படங்களை எடுத்துதவியதை உலக சைவப் பேரவை நன்றியுடன் பாராட்டுகின்றது.
No comments: