தமிழ் சினிமா

மதயானைக் கூட்டம்
இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் அங்காளி பங்காளிச் சண்டையை மண் மணம் மாறாமல் சொல்ல வந்திருக்கும் படமே ‘மதயானைக் கூட்டம்’. 
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்று பார்ப்போம்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெரிய மனிதர் ஜெயக்கொடித் தேவரின் மரணத்தோடு தொடங்குகிறது படம்.
சாவு வீட்டில் நடக்கும் தெருக்கூத்துக் கலையின் வாயிலாகவே படத்தின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்கள்.
ஜெயக்கொடித் தேவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரம் செவனம்மா, தன் கணவர் வேறொரு பெண்ணை வைத்திருப்பது தெரிந்ததும் அவரைப் பிரிந்து தன் அண்ணன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறார்.
இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு குடும்பங்கள். இரண்டு குடும்பங்களுக்கும் பகை. இருந்தாலும், இளையதாரத்தின் மகனான பார்த்திபனும் (அறிமுகம் - கதிர்), மூத்ததாரத்தின் மகனான பூலோக ராசாவும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பிகளாக பாசத்தோடு உறவாடுகிறார்கள்.
இளையதாரத்திற்குப் பிறந்த மகளுக்கு திருமணம் முடித்த மறுநாளே, மாரடைப்பால் இறந்துவிடுகிறார் ஜெயக்கொடித் தேவர். இந்த மரணத்திற்குப் பிறகு இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டமும், கௌரவப் பிரச்சனையால் விழும் கொலைகளுமே இப்படத்தின் கதை.
நாயகன் கதிர் புதுமுகம் என்றாலும் கதைக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய கதாபாத்திரத்தை வளைத்துக் கொடுத்து நடித்து கதையை வலுப்படுத்தியிருக்கிறார்.
நாயகி ஓவியா கதாநாயகி என்பதற்காக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார். மற்றபடி, படத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு வலுவில்லை.
நாயகனின் அப்பாவுக்கு முதல் தாரமாக நடித்திருக்கும் ‘ஆரோகணம்’ விஜி தனது அனுபவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கோபத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷம் பயத்தை ஏற்படுத்துகிறது.
விஜியின் அண்ணனாக வரும் ராமமூர்த்தி வில்லன் கதாபாத்திரத்திற்கு அழகாக பொருந்தியிருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
என்.ஆர்.ரகுநந்தன் பின்னணி இசையிலும், பாடல்களிலும் முழுக்க முழுக்க மண் வாசனையை தெளித்திருக்கிறார்.
‘கோணக் கொண்டைக்காரி...’ பாடலில் ஜி.வி.யின் குரலில் துள்ளல் இளமை. அழகாகவும் படமாக்கியிருக்கிறார்கள்.
ராகுல் தருமன் படத்தின் கதைக்கேற்ப தன் வித்தியாசமான ஒளிப்பதிவினால் மேலும் விறுவிறுப்பை கூட்டியுள்ளார்.
தனது முதல் படத்திலேயே கிராமத்துக் கதை களத்தை நேர்த்தியாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். ஆனால் படத்தில் சில தொய்வுகள் இருந்தாலும் ஒரு சமூகத்துக்கிடையே நடைபெறும் மோதலை அச்சு மாறாமல் தெளிவாக காட்டியிருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கு இடம் கொடுக்காமல் கதையை நகர்த்துவதில் தனி முத்திரை பதித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மதயானைக் கூட்டம்’ மதம் பிடிக்கவில்லை!
நடிகர்: கதிர்
நடிகை: ஓவியா
இயக்குனர்: விக்ரம் சுகுமாரன்
இசை: எம்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு: ராகுல் தருமன்
- See more at: http://www.cineulagam.com/tamil/reviews-tamil/all/20131226100046/#sthash.WKrQPgRu.dpuf
 
 இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் அங்காளி பங்காளிச் சண்டையை மண் மணம் மாறாமல் சொல்ல வந்திருக்கும் படமே ‘மதயானைக் கூட்டம்’.  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்று பார்ப்போம். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெரிய மனிதர் ஜெயக்கொடித் தேவரின் மரணத்தோடு தொடங்குகிறது படம். சாவு வீட்டில் நடக்கும் தெருக்கூத்துக் கலையின் வாயிலாகவே படத்தின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்கள். ஜெயக்கொடித் தேவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரம் செவனம்மா, தன் கணவர் வேறொரு பெண்ணை வைத்திருப்பது தெரிந்ததும் அவரைப் பிரிந்து தன் அண்ணன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறார். இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு குடும்பங்கள். இரண்டு குடும்பங்களுக்கும் பகை. இருந்தாலும், இளையதாரத்தின் மகனான பார்த்திபனும் (அறிமுகம் - கதிர்), மூத்ததாரத்தின் மகனான பூலோக ராசாவும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பிகளாக பாசத்தோடு உறவாடுகிறார்கள். இளையதாரத்திற்குப் பிறந்த மகளுக்கு திருமணம் முடித்த மறுநாளே, மாரடைப்பால் இறந்துவிடுகிறார் ஜெயக்கொடித் தேவர். இந்த மரணத்திற்குப் பிறகு இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டமும், கௌரவப் பிரச்சனையால் விழும் கொலைகளுமே இப்படத்தின் கதை. நாயகன் கதிர் புதுமுகம் என்றாலும் கதைக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய கதாபாத்திரத்தை வளைத்துக் கொடுத்து நடித்து கதையை வலுப்படுத்தியிருக்கிறார். நாயகி ஓவியா கதாநாயகி என்பதற்காக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார். மற்றபடி, படத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு வலுவில்லை. நாயகனின் அப்பாவுக்கு முதல் தாரமாக நடித்திருக்கும் ‘ஆரோகணம்’ விஜி தனது அனுபவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கோபத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷம் பயத்தை ஏற்படுத்துகிறது. விஜியின் அண்ணனாக வரும் ராமமூர்த்தி வில்லன் கதாபாத்திரத்திற்கு அழகாக பொருந்தியிருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் பின்னணி இசையிலும், பாடல்களிலும் முழுக்க முழுக்க மண் வாசனையை தெளித்திருக்கிறார். ‘கோணக் கொண்டைக்காரி...’ பாடலில் ஜி.வி.யின் குரலில் துள்ளல் இளமை. அழகாகவும் படமாக்கியிருக்கிறார்கள். ராகுல் தருமன் படத்தின் கதைக்கேற்ப தன் வித்தியாசமான ஒளிப்பதிவினால் மேலும் விறுவிறுப்பை கூட்டியுள்ளார். தனது முதல் படத்திலேயே கிராமத்துக் கதை களத்தை நேர்த்தியாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். ஆனால் படத்தில் சில தொய்வுகள் இருந்தாலும் ஒரு சமூகத்துக்கிடையே நடைபெறும் மோதலை அச்சு மாறாமல் தெளிவாக காட்டியிருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கு இடம் கொடுக்காமல் கதையை நகர்த்துவதில் தனி முத்திரை பதித்திருக்கிறார். மொத்தத்தில் ‘மதயானைக் கூட்டம்’ மதம் பிடிக்கவில்லை! நடிகர்: கதிர் நடிகை: ஓவியா இயக்குனர்: விக்ரம் சுகுமாரன் இசை: எம்.ஆர்.ரகுநந்தன் ஓளிப்பதிவு: ராகுல் தருமன்   நன்றி விடுப்பு 

No comments: