உலகச் செய்திகள்



அமெரிக்கா, கனடாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு

தாய்லாந்தில் பிரதமர் பதவி விலகக் கோரி பேரணி
பிரித்தானியாவின் தென், மேற்கு பகுதியில் பாரிய புயல்

அமெரிக்க, கனடா மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கம்

அண்டார்ட்டிகா பனியில் சிக்கிய ரஷ்ய, சீனக் கப்பல்கள் விடுபட்டன



=============================================================================
அமெரிக்கா, கனடாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு

06/01/2014          அமெ­ரிக்கா மற்றும் கன­டா­வி­லுள்ள பல பிர­தே­சங்­களில் வர­லாறு காணாத வெப்­ப­நிலை வீழ்ச்­சியால் வட துரு­வத்­தி­லுள்­ள­தை­யொத்த உறை­ய­வைக்கும் குளிர் நில­வு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
கன­டா­வையும் வட கிழக்கு அமெ­ரிக்­கா­வையும் ஏற்­க­னவே தாக்­கிய பனிப்­புயல் கார­ண­மாக ௨ அடிக்கும் அதி­க­மான உய­ரத்­துக்கு பனிப்­பொ­ழிவு ஏற்­பட்­டது.
இந்த பனி­யுடன் கூடிய கால­நிலை கார­ண­மாக மேற்­படி பிராந்­தி­யத்தில் கடந்த புதன்­கி­ழ­மை­யி­லி­ருந்து ௧௬ பேர் பலி­யா­ன­துடன், ௫௦­௦க்கு மேற்­பட்ட விமான சேவைகள் இரத்துச் செய்­ய­ப்பட்­டுள்­ளன.
அமெ­ரிக்­காவின் மத்­திய மேற்கு பிராந்­தி­யத்தில் ௫௦ பாகை செல்­சியஸ் அள­வான தாழ்ந்த வெப்­ப­நிலை நில­வு­கி­றது.
இந்­நி­லையில் மக்­களை வீடு­களில் தங்­கி­யி­ருக்க, அறி­வு­றுத்­தி­யுள்ள அதி­கா­ரிகள் வீதி­களை மூடி­யுள்ள பனியை தொடர்ச்­சி­யாக அகற்ற பணி­யா­ளர்­களைக் கோரி­யுள்­ளனர்.
அமெ­ரிக்­காவின் மத்­திய மேற்கு பிராந்­தி­யத்­தி­லி­ருந்து மத்­திய அத்­தி­லாந்திக் பிராந்­தியம் வரை கடந்த பல வரு­டங்­களில் சந்­தித்­தி­ராத மோச­மான வெப்­ப­நிலை வீழ்ச்சி நில­வு­வ­தாக அமெ­ரிக்க தேசிய கால­நிலை சேவைகள் நிலையம் தெரி­விக்­கி­றது.
அமெ­ரிக்­காவின் வட - கிழக்கு பிராந்­தி­யங்­களில் பனிப்­பு­யலால் வீதி­களை மூடி­யுள்ள பனியை அகற்­று­வதில் பிர­தே­ச­வா­சிகள் கடும் போராட்­டத்தை எதிர்­கொண்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
நியூ ஜெர்­ஸியில் கடந்த இரு தசாப்த காலங்­களில் இல்­லாத மோச­மான குளிர்­கா­ல­நிலை நில­வு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.
கன­டாவின் ரொரன்டோ பிராந்­தி­யத்தில் ௨௯ பாகை செல்­சியஸ் தாழ்நிலை வெப்ப நிலையும் கியூபெக் நகரில் ௩௮ பாகை செல்­சியஸ் தாழ்நிலை வெப்ப நிலையும் நில­வு­கி­றது. இது அப்­பி­ராந்­தி­யங்கள் கடந்த இரு தசாப்­தத்­திற்கும் மேற்­பட்ட காலத்தில் எதிர்­கொண்­டி­ராத மிகத் தாழ்ந்த வெப்­ப­நி­லை­யாகும்.
மேலும் நியூயோர்க், கணக்­கிகட், மஸா­சுஸெட்ஸ் உள்­ள­டங்­க­லான அமெ­ரிக்க மாநி­ப­லங்­களில் இடம்­பெற்ற கடும் பனிப்­பொ­ழிவு கார­ண­மாக அந்தப் பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள பாட­சா­லைகள் மூடப்­பட்­டுள்­ள­துடன் போக்­கு­வ­ரத்­து­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. பிலடெல் பியாவில் ௧௦௦ அடி உய­ர­மான உப்புக் குவியல் சரிந்து விழுந்­ததில் அதன் கீழ் நசுங்­குண்டு உப்பு பண்­ட­க­சாலை பணி­யாளர் ஒருவர் பலி­யா­கி­யுள்ளார். அதே­ச­மயம் நியோர்க்கில் தனது வீட்டை விட்டு அலைந்து திரிந்த மூளைப் பாதிப்பு நோய்க்கு உள்­ளான பெண்­யொ­ருவர் குளிரில் உடல் விறைத்து மர­ண­மா­கி­யுள்ளார்.
அமெ­ரிக்­காவில் கடும் பனிப்­பொ­ழிவு கார­ண­மாக சுமார் ௧௨­௦௦ விமான சேவைகள் சனிக்­கி­ழமை இரத்துச் செய்­யப்­பட்­ட­துடன், சுமார் ௬௦­௦௦ விமான சேவைகள் தாம­தத்தை எதிர்­கொண்­டன. சிக்­காகோ ஓஹரே சர்வதேச விமான நிலையம், நியூ ஜெர்ஸியிலுள்ள நெவார்க் லிபேர்ட்டி சர்வதேச விமான நிலையம் என்பன பனிப்பொழிவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஒன்டாரியோவில் கடும் பனிப்பொழிவு அபாயம் தொடர்ந்து நிலவுவதாக கனேடிய சுற்றுச் சூழல் நிலையம் விசேட எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது.
 
 நன்றி வீரகேசரி






 தாய்லாந்தில் பிரதமர் பதவி விலகக் கோரி பேரணி

06/01/2014     
தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக் கோரி அரசு எதிர்ப்பாளர்கள் தலைநகர் பாங்காக்கில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். அப்போது, அடுத்த வாரம் நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர்.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுதிப் தவுக்சுபன் தலைமையில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் ஜனநாயக நினைவுச் சின்னத்திலிருந்து தொடங்கிய பேரணி சுமார் 7.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீடித்தது. இடைக்கால அமைச்சரவை முழுவதும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 13-ம் திகதி பாங்காக்கில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த அரசு எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 20 முக்கிய சாலை சந்திப்புகளில் போராட்டம் நடைபெறும்.
அன்றையதினம் அங்கு உள்ள அரசு அலுவலகங்களுக்குள் அலுவலர்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். மேலும், அரசு கட்டிடங்களுக்கு நீர் மற்றும் மின்சார இணைப்பை துண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில்தான் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இதுபோன்ற பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக பொதுமக்களின் ஜனநாயக மறுசீரமைப்புக் குழு (பிடிஆர்சி) செய்தித் தொடர்பாளர் அகனத் பிராம்பென் தெரிவித்தார்.
இதற்கிடையே, அரசு எதிர்ப்பாளர்களின் முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என அமைதி மற்றும் ஒழுங்கு நிர்வாக மையத்தின் பொறுப்பாளரும் இடைக்கால அரசின் துணைப் பிரதமருமான சுரபங் டொவிச்சுக்சைகுல் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இடைக்கால அமைச்சரவை பதவி விலகினால் அது சட்டத்தை மீறியதாகி விடும். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் சுரபங் தெரிவித்தார்.
கடந்த 2011 இல் பிரதமரான யிங்லக், தனது சகோதரரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நாட்டை விட்டு வெளியேறி டுபாயில் வசித்து வருபவருமான தக்ஷின் ஷினவத்ராவின் கைப்பாவையாக செயல்படுவதாகக் கூறி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்த யிங்லக், இடைக்கால அரசை அமைத்து அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். ஆனால், யிங்லக் பதவி விலகி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, மக்கள் கவுன்சிலின் கீழ் தேர்தல் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.  நன்றி வீரகேசரி 
 பிரித்தானியாவின் தென், மேற்கு பகுதியில் பாரிய புயல்
07/01/2014             

Kalaichelvi 
பிரித்தானியாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட புயலில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளன. பாரிய சக்தி கொண்ட அலையினால் இரவு முழுவதும் தொடர்ந்து பாரிய புயல் ஏற்பட்டதில் கடற்கரை பாறைகள் இடிபாடுகளுக்கு உட்பட்டதுடன் பிரட்டனின் முக்கியபான பல பகுதிகள் சேதமடைந்துள்ளன.

வீதிகள் உட்பட வயல் நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் சேதத்திற்கு உட்பட்டுள்ளது. தென், மேற்கு பகுதியில் 70அph என்ற அளவில் வன் காற்றின் வேகம் ,இருப்பதாக வானிலை அலுவலகம் கருத்து வெளியிட்டது. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று, முழுவதும் கடும் புயலுடனான கணத்த மழை பெய்ததாகவும் அதனால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் கருத்து வெளியிட்டுள்ளது. இப்புயல் காற்றினால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆபத்தான இடங்களுக்கு பயணிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். மேலும் போர்ட்லேண்ட், டோர்செட் போன்ற பகுதிகளில் வெள்ள ஆபத்து இருப்பதான மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






 நன்றி வீரகேசரி 
  அமெரிக்க, கனடா மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கம்

08/01/2014    அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி, கனடாவின் கிழக்குப் பகுதி ஆகியவற்றில் கடும் பனிக்காற்று வீசுவதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி முடங்கிக் கிடக்கின்றனர். தோலில் பனி வெடிப்புகள் ஏற்படுவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முகம் தவிர உடல் முழுவதும் கம்பளி உள்ளிட்ட ஆடையால் மூடியுள்ளனர்.
சாலைகளில் மிக அதிகமாக பனி மூடியுள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பனிச் செதுக்கும் கருவி மூலம் சாலைகளில் உறைபனிகள் அகற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

நாட்டின் மத்திய பகுதியில் திங்கள்கிழமை வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்சியஸாக இருந்தது.
மின்னியாபோலிஸில் வங்கிகள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருந்தன. அங்கு மைனஸ் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன், கடும் குளிர் காற்றும் வீசியது.
மில்வாகீ, செயின்ட். லூயிஸ் மற்றும் சிகாகோவில் மைனஸ் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது.

ஒக்லகோமா, டெக்ஸாஸ் மற்றும் இண்டியானா ஆகிய பிராந்தியங்களில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்காற்று வீசுகிறது.
மின்சாரம் தடைபட்டதால் மத்திய அட்லாண்டிக் மற்றும் மத்திய மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 61 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கடந்த சனிக்கிழமை முதல் இத்தகைய குளிருக்கு பலர் உயிரிழந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








நன்றி வீரகேசரி 
  
அண்டார்ட்டிகா பனியில் சிக்கிய ரஷ்ய, சீனக் கப்பல்கள் விடுபட்டன

08/01/2014        அண்டார்ட்டிகா வானிலையில் மாற்றம் ஏற்பட்டதால் உரை பனியில் சிக்கிய ரஷ்ய, சீனக்கப்பல்கள் விடுபட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் சர் டக்லஸ் மாசனின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாட ரஷ்ய கப்பலில் 74 பேர் கடந்த நவம்பர் மாதம் அண்டார்டிகா நோக்கிப் புறப்பட்டனர்.
அண்டார்டிகாவை நெருக்கியபோது கடந்த டிசம்பர் 24-ஆம் திகதி அவர்களது கப்பல் கடலின் உறைபனியில் சிக்கி நிலைகொண்டது. இதனை மீட்கும் முயற்சியில் பிரான்ஸ், சீனா, அஸ்திரேலிய கப்பல்கள் ஈடுபட்டன. ஆனால், வானிலை கடும் குளிராக மாறியதால் பனிக்கட்டிகள் சூழ்ந்த ரஷ்ய கப்பலை மீட்கமுடியவில்லை. இதன்போது உரைபனியில் சீனக்கப்பலும் மாட்டிக்கொண்டது.
தற்போது அங்கு கால நிலை மாற்றம் ஏற்பட்டு பனி உரைந்ததனால் இரு கப்பல்களும் நகரத்தொடங்கியுள்ளன.
இதையடுத்து இந்த இருகப்பல்களையும் மீட்கச்சென்ற அமெரிக்க கப்பற்படை கப்பல் போலார் ஸ்டார் தனது பயணத்தை இரத்து செய்து திரும்பியது.






 நன்றி வீரகேசரி


No comments: