இலங்கைச் செய்திகள்

 திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
 
ஏமாற்றப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் : விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பி வைப்பு

''வெடிச் சத்தம் கேட்டதையடுத்து மகனுடன் தொடர்புகொள்ள முயன்றபோதும் முடியவில்லை'': தாயார் சாட்சியம்

மன்னார் புதைகுழி விவகாரம் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா உரிய கவனம் செலுத்தும்


ஸ் ரீபன் ரெப்பை சந்­தித்­த­வர்­க­ளுக்கு புல­னாய்­வா­ளர்கள் அச்­சு­றுத்தல்

 இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன

விண்வெளி செல்லவுள்ளார் தமிழ் மாணவி

==========================================================================
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு


07/01/2014    மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் ஆறு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று வரை இந்த மனித புதைகுழியிலிருந்து 32 எலும்புக்கூடுகள், மற்றும் மண்டையோடுகள் , மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் முழுமையற்ற மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முழுமையாகக் காணப்படும் எலும்புக்கூடுகள் அடையாளம் இடப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. இன்று  மன்னார் மாவட்ட நீதிவான் செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரட்ண தலைமையில் புதைகுழி தோண்டும் பணி இடம் பெற்றது. இதன்போது ஆறு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் பெண்கள் அணியும் செப்பு தாயத்து ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வரம் மாந்தை வீதியில் குடிநீர் விநியோகத்திற்காக குழாய்களை நிலத்திற்கு அடியில் புதைப்பதற்காக கடந்த மாதம் 20 ஆம் திகதி குழிதோண்டப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து இவ்விடயம் குறித்து மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு பொலிஸார் அறிவித்தனர். மன்னார் மாவட்ட நீதிவான் செல்வி ஆனந்தி கனகரட்ணம் தலைமையில் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி புதைகுழி தோண்டும் பணி ஆரம்பமானது. இன்று ஆறாவது நாளாக காலை முதல் மாலை வரை புதைகுழி தோண்டப்பட்டது. இன்றைய தினம் ஆறு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து புதையில் இருந்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
நாள்தோறும் புதைகுழி தோண்டப்படும் போது தொடர்ந்தும் எலும்புக்கூடுகளும், மண்டையோடுகளும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருவதனால் மேலும் பல எலும்புக்கூடுகள் இந்தப் புதைகுழிக்குள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நேற்று புதைகுழிதோண்டப்பட்டபோது ஆறுவயது சிறுவன் ஒருவனது எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றையதினம் இந்த எலும்புக்கூட்டின் தலைப்பகுதி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. நேற்றைய தினம் முழுமையான பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதைகுழிக்குள் இன்னும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்பதால் மெதுவாகவே தோண்டும் பணியை மேற்கொள்ளவேண்டியிருப்பதாக சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரட்ண தெரிவித்துள்ளார்.
திருக்கேதீஸ்வரம் மாந்தை வீதியின் ஓரமாக இந்தப் புதைகுழி அமைந்துள்ளது. இதுவரை எட்டரை மீற்றர் நீளத்திற்கும் 1.8 மீற்றர் அகலத்திற்கும் புதைகுழி தோண்டப்பட்டுள்ளது. 1.1 மீற்றர் ஆழம் வரையிலேயே இதுவரை குழிதோண்டப்பட்டிருக்கிறது. இந்த குழிக்கு அருகில் மேலும் பல எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அப்பகுதியையும் தோண்டும் முகமாக அருகிலுள்ள சிறிய காடுகள் துப்புரவு செய்யப்பட்டது. இதேபோல் 2010 ஆம் ஆண்டு குறித்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்ட போது மூன்று அடிக்கு அகலமாக்கப்பட்டதாகவும் தெரிகின்றது. இதனால் வீதியை உடைத்து அப்பகுதியிலும், தோண்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியில் பாரிய கிணறொன்று காணப்பட்டதாகவும், தற்போது அந்தக் கிணறு மூடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியையும் தோண்ட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றயை தினம் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்றின் கைப்பகுதியிலிருந்தே செப்புத் தாயத்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று புதைகுழி தோண்டப்பட்டபோது அப்பகுதிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை நேரடியாக வந்து இந்தப் பணிகளை பார்வையிட்டிருந்தார்.
ஆறு தினங்கள் புதைகுழி . தோண்டப்பட்டதையடுத்து தற்காலிகமாக இந்தப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி அகழ்வுப்புணியை தொடர்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி








மன்னார் புதைகுழி விவகாரம் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா உரிய கவனம் செலுத்தும்








ஏமாற்றப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் : விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பி வைப்பு


08/01/2014    தமக்கு வழங்கப்பட்டது போலி விமான பயணச் சீட்டு எனத் தெரியாது சபரிமலை யாத்திரைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 55 யாதிரிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த யாத்திரிகர்களிடம் வழங்கப்பட்டது போலி பயணச் சீட்டு என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்து அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் 55 பேரும் விமான பயணச் சீட்டு வழங்கிய முகவருக்கு எதிராக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
போலி விமான பயணச் சீட்டுக்களை வழங்கி  சபரிமலை யாத்திரிகர்களை ஏமாற்றிய நபர்களை பொலிஸார் தேடி வருவதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி 




''வெடிச் சத்தம் கேட்டதையடுத்து மகனுடன் தொடர்புகொள்ள முயன்றபோதும் முடியவில்லை'': தாயார் சாட்சியம்

08/01/2014       கொழும்பிலிருந்து முதல் நாள் எனது மகன் வீட்டுக்கு வந்திருந்தார். மாலை 6 மணியளவில் மகன் வெளியே சென்றிருந்தார். இரவு 7.30 மணியளவில் வெடிச்சத்தமொன்று கேட்டது. அதன் பின் பல வெடிச்சத்தங்கள் தொடர்ந்து கேட்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கின்றது என எண்ணி மகனுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை. இரவு 8.30 மணி போல் துப்பாக்கிதாரிகளினால் எனது மகன் படுகொலை செய்யப்பட்ட தகவலை நான் அறிந்தேன் என்று திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்த தங்கத்துரை சிவானந்தாவின் தாயாரான சுகிர்தா தங்கத்துரை தெரிவித்தார்.
திருமலையில் 2006ஆம் ஆண்டு 5 மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை திருமலை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிவான் டி. சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான தங்கத்துரை சிவானந்தாவின் தாயார் சுகிர்தா தங்கத்துரை சாட்சியமளித்தார். இந்த சாட்சியத்தை அரச சட்டவாதி டிலான் நெறிப்படுத்தினார். பிரதிவாதிகளின் சார்பில் சட்டத்தரணி அஜித் பிரசன்னா ஆஜராகியிருந்தார்.     நன்றி வீரகேசரி











மன்னார் புதைகுழி விவகாரம் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா உரிய கவனம் செலுத்தும்

08/01/2014    மன்னார் புதை குழி விவகாரம் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா உரிய கவனம் செலுத்தும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர் குற்றங்களை கையாலும் விசேட தூதுவர் ஸ்ரிபன் ஜெ ரெப் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள ஜெ ரெப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தது. இதில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதி ராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இலங்கை மனித உரிமை விவகாரம் , மன்னாரின் மனிதப் புதைகுழி விவகாரம் , தமிழர் காணிகள் அபகரிப்பு மற்றும் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அடங்கிய விடயங்கள் தொடர்பில் எடுத்துக் கூறினர்.
இதனை செவிமடுத்ததன் பின்னரே தூதுவர் ரெப் மேற்கண்டவாறு உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விபரிக்கையில் கூறியதாவது;
மன்னார் புதைகுழி சம்பவம் இன்று வடக்கில் பெரியதொரு சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடர்பிலான உண்மை நிலையினை கண்டறியவேண்டும்.
இவ்வினப் படுகொலையின் பின்னணி, , இதனை யார் செய்தது என்ற உண்மை விடயங்கள் கண்டறியப்படவேண்டும்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக குற்றம் சுமத்திவருகின்ற நிலையில் அவற்றின் உண்மையினை வெ ளிப்படுத்தும் வகையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது இராணுவத்தினர் செய்துள்ளனரா அல்லது விடுதலை புலி இயக்கத்தினரால் செய்யப்பட்டுள்ளதா என்பது கண்டறியப்பட வேண்டும். அத்தோடு மன்னார் புதைகுழி ஆய்வு விடங்களின் விசாரணைகளை சீனா முன்னெடுக்கப்போகின்றது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனை சீனா மேற்கொள்ளக் கூடாது மாறாக மேலைத்தேய நாடுகளில் நியாயமானஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். இவ்விடயங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜதந்திரி ஜெரெப்புடனான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.
மேலும் வடக்கில் தற்போது பரவியுள்ள இராணுவ அடக்கு முறைகளில் இருந்தும் காணி அபகரிப்பு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெகு விரைவில் தீர்வு காணப்படவேண்டும்.
அத்தோடு பெண்கள் மீது இடம்பெறும் வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இவை தொடர்பில் உரிய தீர்வுகளை அமெரிக்கா பெற்றுக்கொடுக்கும் என அமெரிக்க விசேட தூதுவர் ரெப் உறுதியளித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் இடம்பெறவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டின்போது இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பிலும் வடக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பிலும் உரிய தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.
யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்தொடர்பில் தீர்வுகள் கிடைக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினோம்.
அவை அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டில் தீர்வு காணப்பதற்கு வலியுறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தமிழர்களின் உரிமைகள் தொடர்பிலும் அவற்றைப் பெற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் தொடர்பிலும் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நடத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.      நன்றி வீரகேசரி









ஸ் ரீபன் ரெப்பை சந்­தித்­த­வர்­க­ளுக்கு புல­னாய்­வா­ளர்கள் அச்­சு­றுத்தல்

09/01/2014    வடக்­கிற்கு நேற்று விஜயம் செய்த போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் விசேட தூதுவர் ஸ் ரீபன் ரெப்பி­னு­டைய சந்­திப்­புக்­களை அவ­தா­னித்த புல­னாய்­வா­ளர்கள் அச்­சந்­திப்­புக்­களில் செய்தி சேக­ரிக்கச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களின் புகைப்­படக் கரு­வி­களைத் தரு­மாறும் அங்கு எடுக்­கப்­பட்ட படங்­களை அழிக்­கு­மாறும் வற்­பு­றுத்­தி­யுள்­ளனர்.
இதே­வேளை யாழில் கிறின் கிறாஸ் விடு­தியில் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளுடன் நடை­பெற்ற சந்­திப்­புக்­களை அவ­தா­னித்த புல­னாய்­வா­ளர்கள் தொடர்­பாக அங்கு செய்தி சேக­ரித்த ஊட­க­வி­ய­லாளர்கள் போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் விசேட தூதுவர் ஸ் ரீபன் ரெப்பின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வந்த பொழுது அப்­பு­ல­னாய்­வா­ளர்கள் தொடர்­பாக அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு தூதுவர் ரெப்பும் அறி­வு­றுத்­தி­யுள்­ளமை அங்கு கூடி­யி­ருந்­த­வர்கள் மத்­தியில் வியப்பைத் தோற்­று­வித்­துள்­ளது.
இவ்­வி­டயம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:
நேற்று யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்த தூதுவர் ஸ் ரீபன் ரெப் பிற்­பகல் யாழ். கிறின் கிறாஸ் விருந்­தினர் விடு­தியில் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளுடன் சந்­திப்­பொன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்தார். இச்­சந்­திப்­புக்­களின் பொழுது செய்தி சேக­ரிக்கச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களை அங்கு படம் எடுக்க வேண்டாம் என புல­னாய்­வா­ளர்கள் அச்­சு­றுத்­தி­யுள்­ளனர். அதனை மீறி சந்­திப்­புக்­களைப் படம் எடுத்­த­வர்­களின் புகைப்­படக் கரு­வி­களைத் தரு­மாறு புல­னாய்­வா­ளர்கள் அச்­சு­றுத்­தி­யுள்­ளனர்.
இதனை தூதுவர் ஸ் ரீபன் ரெப்பின் கவ­னத்­திற்கு ஊட­க­வி­ய­லா­ளர்கள் தெரி­யப்­ப­டுத்­திய பொழுது இங்கு இச்­சந்­திப்­புக்­களை மேற்­கொண்­ட­வர்­க­ளி­டமும் புல­னாய்­வா­ளர்கள் விசாரணை நட த்துவார்கள் எனவும் அவர் களுக்கு என்ன நடக்கும் என்பது தனக்குத் தெரியும் எனவும் சிரித்த முகத்துடன் பதிலளித்ததாக அப்பகுதியில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி







இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன

09/01/2014   இறுதி யுத்தம் நடை­பெற்ற இடத்தில் தடை­செய்­யப்­பட்ட கொத்துக் குண்­டு­களும் இர­சா­யனக் குண்­டு­களும் பேர­ழி­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஆயு­தங்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என தம்­மிடம் மக்கள் முறை­யிட்­டுள்­ள­தா­கவும் மோதல் தவிர்ப்பு வல­யங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்டு அங்கும் பலர் கொல்­லப்­பட்­ட­தா­கவும் சர்­வ­தேச போர்க்­குற்ற விவ­கா­ரங்­களைக் கையாளும் அமெ­ரிக்­காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜெ ரெப்பிடம் மன்னார் மற்றும் யாழ்.மறை­மா­வட்ட ஆயர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 
இப்­ப­கு­தியில் இடம்­பெற்­றுள்ள போர்க்­குற்­றங்கள்  தொடர்­பாக வெளிக்­கொண்டு வந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்­ட­னை­களைப் பெற்றுக் கொடுத்து இனங்கள் சமா­தா­னத்­துடன் வாழ்­வ­தற்கு சர்­வ­தேசம் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் குறித்த தூது­வ­ரிடம் கூட்­டாக கோரிக்கை விடுத்­துள்­ளனர்.
போர்க் குற்ற விவ­கா­ரங்கள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக வடக்­கிற்கு வந்­துள்ள சர்­வ­தேச போர்க்­குற்ற விவ­கா­ரங்­களைக் கையாளும் அமெ­ரிக்­காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜெ ரெப் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து ஆயரின் இல்­லத்தில் யாழ். ஆயர் தோமஸ் செளந்­த­ர­நா­யகம் மற்றும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆகி­யோ­ருடன் விசேட சந்­திப்பு ஒன்றை மேற்­கொண்டார்.
இச்­சந்­திப்புத் தொடர்­பாக யாழ்.மறை­மா­வட்ட ஆய­ருடன் மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­விக்­கையில்,
இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­க­ளுக்­கான கார­ணங்­களைக் கண்­ட­றி­வ­தற்கும் அதற்­கான நிவா­ர­ணங்­களைத் தேடு­வ­தற்­கா­க­வுமே குறித்த தூதுவர் இலங்­கைக்கு வந்­துள்ளார். நான் குறித்த தூது­வ­ரிடம் எடுத்­துக்­கூ­றிய விட­யங்­களை யாழ்.ஆயர் தோமஸ் செளந்­த­ர­நா­யகம் ஆண்­டகையும் குறித்த தூது­வ­ருக்கு விளக்கியுள்ளார். யுத்­தத்­தின்­போது பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்­பாக எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். அந்த வகையில் வானத்­தி­லி­ருந்து வீசப்­பட்ட கொத்துக் குண்­டுகள் மற்றும் விமா­னத்­தி­லி­ருந்து வீசப்­பட்ட ''எயார் பம்ஸ்'' எனப்­படும் தடை­செய்­யப்­பட்ட குண்­டுகள் ஆகி­ய­வற்­றினால் கொல்­லப்­பட்ட மக்கள் தொடர்­பாக எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். 
இத்­த­கைய குண்­டுகள் வானத்­தி­லேயே அந்­த­ரத்தில் வெடிப்­பதால் அதி­க­மான பிர­தே­சங்­க­ளுக்கு பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய குண்­டு­க­ளாகும். இதேபோல் யுத்­தத்தின் போது பயன்­ப­டுத்­தப்­பட்ட இர­சா­யனக் குண்­டுகள் தொடர்­பா­கவும் குறித்த தூது­வ­ரிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். இத்­த­கைய இர­சா­யனக் குண்­டு­களை முதன்­மு­த­லாக 2008ஆம் ஆண்டு 7ஆம் மாதக் காலப்­ப­கு­தியில் அக்­க­ரா­யனில் பயன்­ப­டுத்­தி­னார்கள். இத்­த­க­வலை முள்­ளி­வாய்க்­காலில் இறுதி யுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் இருந்த மக்கள் எமக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
இவ்­வாறு மக்கள் பாதிக்­கப்­ப­டு­வதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இதேபோல் கிளி­நொச்சி, தர்­ம­புரம், புதுக்­கு­டி­யி­ருப்பு ஆகிய வைத்­தி­ய­சா­லை­களில் மீதும் புது­மாத்­தளன் பகு­தியில் பாட­சா­லையில் தற்­கா­லி­க­மாக இயங்­கி­வந்த வைத்­தி­ய­சாலை மீதும் ஷெல் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று அநேக உயிர்கள் அங்கு பலி கொள்­ளப்­பட்­டது.
இறு­தி­யாக க.பொ.சாதா­ரண தர மற்றும் உயர்­தரப் பிரிவு மாண­வர்­களை தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அழைத்­துக்­கொண்டு போய் முத­லு­தவி பயிற்­சி­களை வழங்கிக் கொண்­டி­ருந்­த­போது அந்த மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யதில் அந்த மாண­வர்கள் இறந்­தார்கள். இந்த விடயம் தொடர்­பாக நாங்­களும் மக்­களும் பேசிக் கொள்­கின்ற விடயம் என்­பதைச் சுட்­டிக்­காட்­டு­கின்றோம்.
மருந்தும், உணவும் ஆயுதம்
இதே­வேளை மருந்­தையும் உண­வையும் இறுதி யுத்தம் இடம்­பெற்ற பகு­தியில் ஒரு ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­தி­னார்கள் என்ற விட­யத்­தையும் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். குறிப்­பாக உண­வுகள் பற்­றாக்­கு­றை­யாகக் காணப்­பட்­டதால் மக்­க­ளுக்குச் சிறி­ய­ள­வி­லேயே கிடைத்­தது. மருந்துத் தட்­டுப்­பாடும் காணப்­பட்­டது. இதே­வேளை இங்­கி­ருந்த வைத்­தி­யர்­களை அழைத்து அவர்­க­ளுக்குச் சொல்­லப்­பட்­ட­தற்கு அமைய அவர்கள் அப்­ப­கு­தியில் மருந்துத் தட்­டுப்­பாடு இருக்­க­வில்லை என்­பதை எழுதிக் கொடுத்­தி­ருக்­கி­றார்கள். ஆனால் அங்கு மருந்துத் தட்­டுப்­பாடு இருந்­தது என்­பது உண்­மை­யாகும். இவை தொடர்­பாக விரி­வாக தூதுவர் ரெப்­விடம் எடுத்துக் கூறி­யுள்ளோம்.
இதே­வேளை மோதல் தவிப்பு வல­யங்­க­ளாக முன்னர் சுதந்­தி­ர­பு­ரத்தில் அமைக்­கப்­பட்ட வல­யத்­திற்குள் விடு­த­லைப்­பு­லிகள் இருக்­க­வில்லை. அவர்கள் அதற்கு பின்­னா­லேயே இருந்­துள்­ளனர். ஆனால் மோதல் தவிர்ப்பு வல­யத்தில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்ட மக்கள் அங்­கி­ருந்து மாத்­தளன் பகு­திக்கு சென்ற வேளையில் அம்­மக்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இவ்­வாறு அந்த மக்கள் இடம்­பெ­யர்ந்து போகின்ற வழி­யிலும் மக்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்டு பலர் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள். 
இதே­வேளை மாத்­தளன் பகு­தியில் மக்கள் சென்ற பின்னர் அங்கு மோதல் தவிர்ப்பு வல­ய­மாக அறி­விக்­கப்­பட்ட பிர­தே­சத்­திற்­குள்ளும் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு அங்கும் பலர் கொல்­லப்­பட்­டார்கள். வலை­ஞர்­மடம், மாத்­தளன், புது­மாத்­தளன், முள்­ளி­வாய்க்கால் ஆகிய பகு­தி­களும் முன்னர் மோதல் தவிர்ப்பு வல­ய­மாக அறி­விக்­கப்­பட்ட சுதந்­தி­ர­புரம், உடை­யார்­கட்டு, வள்­ளி­புனம் ஆகிய பகு­தி­களும் சிறிய பகு­தி­க­ளா­கவே காணப்­பட்­டது. இந்த பகு­தி­க­ளுக்­குள்ளும் வெளி­யிலும் விடு­த­லைப்­பு­லி­களும் நின்று தாக்­கு­தல்­களை நடத்­தி­யதால் இரு­த­ரப்­பி­ன­ரு­டைய மோதல்­க­ளிலும் அநே­க­மான மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள்.
இவர்களால் உரு­வாக்­கப்­பட்ட மோதல் தவிர்ப்பு வல­யத்­திற்குள் விடு­லைப்­பு­லிகள் இருக்­கி­றார்கள் என்­ப­தற்­காக நம்­பிக்­கை­யுடன் இருந்த மக்கள் மீது தாக்­குதல் நடத்த முடி­யாது. அவர்கள் மக்­களை மனிதக் கேட­ய­மாக வைத்­தி­ருந்­தாலும் அந்த மக்கள் மீது தாக்­குதல் நடத்தி கொல்­லக்­கூ­டாது. அது ஒரு பிழை­யான காரி­ய­மாகும். இவை தொடர்­பா­கவும் விரி­வா­கவும் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம்.
ஆலயங்கள் மீது தாக்குதல்
இவை­போன்று ஆல­யங்­களில் மக்கள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­த­போது குண்­டுகள் போடப்­பட்டு மக்கள் கொல்­லப்­பட்­டனர். முக்­கி­ய­மாக நவாலி சென்.பீற்றர்ஸ் தேவா­லயம், குரு­நகர் புனித யாகப்பர் ஆலயம் ஆகி­ய­வற்றில் மக்கள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­த­போது குண்­டுகள் போடப்­பட்டு மக்கள் கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள்.
இதே­வேளை போர் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் அப்­ப­கு­தியில் இருந்து சர்­வ­தேச தன்­னார்வத் தொண்டு நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களை வெளி­யேற்­றி­யி­ருந்­தனர். இவர்கள் அங்­கி­ருந்து இவ்­வி­ட­யங்­களை அவ­தா­னிப்­பார்கள் என்­ப­தற்­காக அங்­கி­ருந்து அனுப்­பப்­பட்­டுள்­ளார்கள். சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம், ஐக்­கிய நாடுகள் சபை நிறு­வ­னங்கள் என்­ப­ன­வற்றை அங்­கி­ருந்து அவர்­களின் விருப்­ப­மின்றி அகற்­றி­யுள்­ளனர். போருக்குப் பின்­னரும் அவர்­க­ளு­டைய தேவைகள் இப்­ப­கு­தியில் காணப்­ப­டு­கின்ற போதிலும் அவர்கள் இன்­னமும் இங்­கு­வ­ர­வில்லை. அதற்கு அவர்­க­ளுக்கு அனு­ம­தியும் இல்லை. ஆதலால் மக்கள் மிகவும் பாதிப்­ப­டைந்­துள்­ளனர் என்­ப­தையும் தூது­வ­ரிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம்.
இதேபோல் இங்கு நான் பணி­யாற்றிக் கொண்­டி­ருந்த காலப்­ப­கு­தியில் செம்­மணி என்ற இடத்தில் 500 பேர் வரை கொல்­லப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்­ளனர். இச்­சம்­பவம் நடை­பெற்று பல ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் நீதி­மன்­றத்தில் வழக்கு நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது நீதிவான் அப்­ப­கு­தியை தோண்டிப் பார்க்­கு­மாறு தெரி­வித்த பொழுது, அப்­ப­கு­தியை தோண்டிப் பார்த்த போது மூன்று, நான்கு பேரு­டைய தட­யங்கள் மட்­டுமே எடுக்க முடிந்­தது. அது தொடர்­பா­கவும் தூது­வ­ரிடம் எடுத்­துக்­கூ­றினோம்.
அப்­ப­கு­தியில் புதைக்­கப்­பட்ட எலும்­புக்­கூ­டு­க­ளுக்கு என்ன நடந்­தது. அதேபோல் மாத்­தளன் பகு­தி­யிலும் இறுதி யுத்­தத்­தின்­போது கொல்­லப்­பட்­ட­வர்கள் புதைக்­கப்­பட்­டுள்­ளனர். அங்கும் என்ன நடந்­தது என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.
காணாமல் போனோர் விவகாரம்
சட்­டத்­திற்கு மாறாக கைது செய்­யப்­பட்டு காணா­மற்­போன நபர்கள் தொடர்­பாக முழு­மை­யாக விசா­ர­ணை­களை நடத்த வேண்டும் எனக் கோரி­யுள்ளோம். ஏனெனில் மனி­த­னு­டைய உயி­ருடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மாகும். இதேபோல் போரால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வெளியே வந்த பிற்­பாடு அநா­தை­க­ளாக இருக்­கின்­ற­வர்­களில் வாழ்­வா­தார மேம்­பா­டு­க­ளுக்கு பாதிக்­கப்­பட்ட நிலையில் இருக்­கினர். உள்ளம் பாதிக்­கப்­பட்ட நிலையில் இருக்­கின்ற இவர்­க­ளுக்கு உள­வியல் ரீதி­யான புனர்­வாழ்வு அளித்­த­லுக்கு எந்­த­வொரு செயற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இவ்­வாறு மக்கள் உள­வ­லு­வூட்டல் செயற்­பா­டு­களைப் பெறு­வ­தற்கு அவர்­க­ளுக்கு உரிமை இருக்­கின்­றது. ஆனால் அதுவும் இன்­னமும் இப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.
மக்கள் தொகையில் வித்தியாசம்
இதே­வேளை முள்­ளி­வாய்க்­காலில் கடந்த 2008ஆம் ஆண்டு ஐப்­பசி மாதத்­திற்குப் பின்­னரும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்­திற்கு முன்­ன­ரு­மான எட்டு மாதக் காலப்­ப­கு­தியில் வசித்­த­வர்­களில் சனத்­தொகைப் புள்­ளி­வி­பரம் தொடர்­பா­கவும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் அக்­கா­லப்­ப­கு­தியில் வசித்­த­வர்­களின் விப­ரங்கள் தொடர்­பா­கவும் மாவட்ட அர­சாங்க அதி­பர்கள் விரி­வான அறிக்­கை­களை கையொப்­ப­மிட்டு சமர்ப்­பித்­துள்­ளனர். இந்த மக்கள் இறு­தி­யுத்­தத்தின் போது வவு­னியாப் பகு­திக்கு இடம்­பெ­யர்ந்து சென்­றுள்­ளனர். ஆனால் இந்த மக்கள் தொகைக்­கி­டையில் பெரி­ய­தொரு வித்­தி­யாசம் காணப்­ப­டு­கின்­றது. இதற்­க­மைய ஒரு இலட்­சத்து 46 ஆயி­ரத்து 679 மக்கள் காணா­மற்­போ­யுள்­ளனர். அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­ய­வில்லை. இது தொடர்­பான தக­வலை யாருமே தெரி­விப்­ப­தற்குத் தயா­ராக இல்லை. இவ்­வி­டயம் தொடர்­பாக நான் எனது ஆவ­ணங்­க­ளுக்கு அமைய பல­ரிடம் கோரி­ய­போதும் யாருமே எதையும் சொல்­ல­வில்லை. ஆனால் என்­னிடம் புல­னாய்­வா­ளர்கள் மட்டும் வந்து விசா­ரணை செய்­து­விட்டு சென்­றுள்­ளனர்.
காணி அபகரிப்பு
காணி அப­க­ரிப்பு எமது இனத்தை இல்­லாமல் அழிப்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்கள் தொடர்­பாக விரி­வாக எடுத்துக் கூறி­யுள்ளோம். அரசின் உத­வி­யுடன் இடம்­பெ­று­கின்ற குடி­யேற்­றங்கள் அதா­வது தமிழ் அர­சி­யலை ஒரு தளம்பல் நிலைக்குக் கொண்டு செல்­வ­தற்­கான அரசின் ஆத­ர­வுடன் இடம்­பெ­று­கின்ற குடி­யேற்­றங்­களை நிறுத்­து­மாறு 56ஆம் ஆண்டு காலத்­தி­லி­ருந்து சொல்லிக் கொண்டு வரு­கின்றோம். இதனை நிறுத்­து­மாறும் அர­சாங்­கத்­திடம் கோரி வரு­கின்றோம்.
இதே­வேளை மொழியை வலு­வி­ழக்கச் செய்யும் நோக்­குடன் செய்­யப்­ப­டு­கின்ற திட்­டங்கள், பெளத்த மதம் சார்­பி­லான பிர­சார நட­வ­டிக்­கைகள், விகாரை அமைத்தல் போன்ற விட­யங்கள் தொடர்­பா­கவும் தூது­வ­ரிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம்.
வடக்கில் உள்ள இரா­ணு­வத்தின் தொகை தொடர்­பா­கவும் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். வடக்கில் யுத்தம் முடி­வ­டைந்­துள்­ளது. நாம் ஒரு சாதா­ரண வாழ்க்­கைக்கு தயார்ப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்றோம். எனவே எமக்கு ஒரு சிவில் நிர்­வாகம் வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்ளோம். இதே­வேளை இரா­ணு­வத்தின் பிர­சன்னம் இப்­ப­கு­தியில் அதி­க­ரித்­துள்­ளதால் இறந்­த­வர்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்குக் கூட எமக்கு அனு­ம­தி­யில்லை என்ற விட­யத்­தையும் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம்.
எனவே இத்­த­கைய சூழல் இப்­ப­கு­தியில் நடை­பெ­று­வ­தா­கவும் இதனை மாற்றி நல்­ல­தொரு சூழல் ஏற்­படும் வகையில் அன்று தென்­னா­பி­ரிக்­காவில் இடம்­பெற்ற உண்­மையும் நேர்­மை­யு­மான நல்­லி­ணக்­க­மான ஒரு நிலை­மையை உரு­வாக்கி சுமு­க­மான ஒரு நிலையை உரு­வாக்க முடியும். அதற்­கொரு சூழலை இப்­ப­கு­தியில் ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யுள்ளோம்.
போர்க்குற்றத்தை வெளிப்படுத்த வேண்டும்
இங்கு ஒரு போர்க்­குற்றம் நடை­பெற்­றது என்­பதை வெளிக்­கொண்டு வரு­வ­தற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். இதனை இந்த நாட்டினுடைய நன்மைக்காகவும் இந்த மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்குடன் கோரியுள்ளோம். தனிப்பட்ட நபர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இதனை நாம் கோரவில்லை என்றார்.
ஆளுநர், முதலமைச்சருடனும் சந்திப்பு
இதேவேளை சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைக் கையாளுகின்ற அமெரிக்காவின் விசேட தூதுவரான ஸ் ரீபன் ரெப் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இவர் உதயன் பத்திரிகையின் அலு வலகத்திற்கும் சென்று வடக்கின் தற் போதைய நிலை தொடர்பாக ஆராய்ந்­துள்ளார். குறித்த பத்­தி­ரிகை நிலை­யத்­திற்குச் சென்ற ரெப் அப்­பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரி­ய­ரான கான­ம­யில்­நாதன் மற்றும் அப்­பத்­தி­ரி­கையின் முகா­மைத்­துவப் பணிப்­பா­ளரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஈ.சர­வ­ண­பவன் ஆகி­யோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்­திப்பின் போது வடக்கில் தற்­பொ­ழுது மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற ஊட­கங்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றைகள் தொடர்­பாக தூது­வ­ருக்கு எடுத்துக் கூறப்­பட்­டுள்­ள­துடன் போர்க்­குற்­றங்கள் மற்றும் தற்­போ­தைய மக்­களின் நிலை தொடர்­பான அறிக்­கை­க­ளையும் குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தூதுவரிடம் கையளித்துள்ளார். நன்றி வீரகேசரி 







விண்வெளி செல்லவுள்ளார் தமிழ் மாணவி
09/01/2014   விண்வெளிக்கு முதல்முறையாக செல்வதற்கு தமிழ் மாணவியொருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 
இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது. 
அதில் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மாணவி. அவர் பெயர் சிவேன் ஞானகுலேந்திரன் . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு அவர் விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 



No comments: