மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய்
காலம் கடத்தப் போகின்றன
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்
காலம் கடத்தப் போகின்றன
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்
இவற்றின் வருகைக்காகக் காத்திருக்கும் குஞ்சுகளுக்கு
என்னவொரு மனமிருக்கப்போகிறது
என்னவொரு மனமிருக்கப்போகிறது
பசுங்குளத்தின் தண்ணீர் காய்ந்த கதை வந்து
சொல்லும் கொக்குகளை
மீண்டும் மீண்டும் நம்புகின்றன குஞ்சுகள்
செத்த மீன்கள் பற்றிய கனவுகளோடு
சொல்லும் கொக்குகளை
மீண்டும் மீண்டும் நம்புகின்றன குஞ்சுகள்
செத்த மீன்கள் பற்றிய கனவுகளோடு
முன்பொரு நாள்
குளத்தோடு முரண்பட்டு வெளியேறிய கொக்குகள்
மீண்டும் குளத்திடமே வந்தன
தம்மை உரு மாற்றிக் கறுப்பு நிறச் சொற்களோடு
குளத்தோடு முரண்பட்டு வெளியேறிய கொக்குகள்
மீண்டும் குளத்திடமே வந்தன
தம்மை உரு மாற்றிக் கறுப்பு நிறச் சொற்களோடு
நீர்த்தணலில் வாழும் மற்றோர் மீன் பறவை
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகளை நோக்கி
நா கூசும் வார்த்தைகளால் சபிக்கத் தொடங்கின
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகளை நோக்கி
நா கூசும் வார்த்தைகளால் சபிக்கத் தொடங்கின
கொக்குகளிடமிருந்து
மூத்திர நெடிலுடன் கூடிய பிணப்புழுக்கம் வருவதாகக்
குளத்திடம் குற்றம் சுமத்தின நீர்ப் பறவைகள்
மூத்திர நெடிலுடன் கூடிய பிணப்புழுக்கம் வருவதாகக்
குளத்திடம் குற்றம் சுமத்தின நீர்ப் பறவைகள்
குளம் சிரித்தது
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகளும் சிரித்தன
இரண்டு சிரிப்புகளுக்குமிடையில் நுழைந்து சென்றன
நூற்றாண்டுகளாய்த்
தணியாத பகையும் மறப்பும் பசியும்
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகளும் சிரித்தன
இரண்டு சிரிப்புகளுக்குமிடையில் நுழைந்து சென்றன
நூற்றாண்டுகளாய்த்
தணியாத பகையும் மறப்பும் பசியும்
காற்றுக் கொணர்ந்து தருகிறது குஞ்சுகளிடம்
நொண்டிக் கொக்குகளின் உதிர்ந்த சிறகொன்றையும்
அவற்றின் சிதைந்த அலகுகளையும்
குஞ்சுகள் இப்போது
கடுங்கோடைகளிலும் வாழப் பழகிவிட்டன
கொக்குகளையும் நம்பாது
மீட்டிரை தருவோரின் கோணங்கித் தனங்களையும் சபித்தபடி
நொண்டிக் கொக்குகளின் உதிர்ந்த சிறகொன்றையும்
அவற்றின் சிதைந்த அலகுகளையும்
குஞ்சுகள் இப்போது
கடுங்கோடைகளிலும் வாழப் பழகிவிட்டன
கொக்குகளையும் நம்பாது
மீட்டிரை தருவோரின் கோணங்கித் தனங்களையும் சபித்தபடி
Nantri: /eathuvarai.
No comments:
Post a Comment