தென் சூடானில் எண்ணெய் வளம் மிக்க பிரதான நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
பொலிவியாவின் முதல் தொலைத்தொடர்பாடல் செய்மதி
சிரியாவில் கார்க் குண்டுத் தாக்குதல் 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி

23/12/2013 ''இராணுவத்தை
பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும்
அந்நாட்டிற்கான அமெரிக்க மற்றும் சர்வதேச ஆதரவை முடிவுக்கு கொண்டுவர வழிவகை
செய்யும்'' -–அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை
தென் சூடானின் எண்ணெய் வளம்மிக்க முக்கிய மாநிலமான யுனிட்டியையும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக முன்னாள் உப ஜனாதிபதி ரெயிக் மாசர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக போராடும் படையினர் தனது கட்டளையின் கீழேயே செயற்படுவதாக மாசர் உறுதிப்படுத்தியுள்ளார். மாசர் ஒரு வாரத்துக்கு முன் அரசாங்கத்தை கவிழ்க்க சதிப் புரட்சியொன்றை முன்னெடுத்ததாக ஜனாதிபதி சல்வா கிர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே மாசரின் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிரியாவில் அரசாங்கப் படையினருடனான மோதல்கள் ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை குறைந்தது 500 பேர் பலியாகியுள்ளனர். தென் சூடானில் நிலவும் நெருக்கடியை களைய அரசியல் வழிமுறையொன்றை கண்டறிய அந்நாட்டில் மோதல்களில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரியுள்ளார்.
இராணுவத்தினரைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் கைப்பற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும் அந்நாட்டிற்கு அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் நீண்ட காலமாக வழங்கி வரும் ஆதரவு முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு வழிவகை செய்யும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
தென் சூடானில் விமானமொன்று தாக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழுவினருடன் கலந்துரையாடி வரும் பராக் ஒபாமா, யேமனிலுள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தென் சூடான் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.
பெருமளவில் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் சூடானில் யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்த உலக கிறிஸ்தவ தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மாசருக்கு விசுவாசமான போராளிகளின் ஆக்கிரமிப்பிலுள்ள பொர் நகருக்கு அண்மையில் 3 விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் காயமடைந்த 4 அமெரிக்கர்களும் நைரோபியிலுள்ள மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். மேற்படி விமானங்கள் உகண்டாவுக்கு சொந்தமானவை என கருதியே அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பப் படுகிறது. நன்றி வீரகேசரி
பொலிவியாவின் முதல் தொலைத்தொடர்பாடல் செய்மதி
23/12/2013 பொலிவியா தனது முதலாவது தொலைத்தொடர்பாடல் செய்மதியை விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவியுள்ளது.
சீனாவின் சிசுவான் மாகாணத்திலுள்ள தளமொன்றிலிருந்து இந்த செய்மதி ஏவப்படும் காட்சி லா பாஸ் நகரில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த செய்மதிக்கு ஸ்பெயின் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராடிய
பூர்வீக இனத்தைச் சேர்ந்த வீரரது பெயர் சூட்டப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சிரியாவில் கார்க் குண்டுத் தாக்குதல் 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி
23/12/2013 சிரிய
ஹொம்ஸ் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கார்க் குண்டுத்
தாக்குதலில் 5 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 7 பேர்
பலியாகியுள்ளனர்.
ஒம் அல்- அம்ட் நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. பலியானவர்களில் இரு பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சிரியா தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அந்நாட்டில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது அரை மில்லியன் பேர் காயமடைந்துள்ளதாகவும் மில்லியன்கணக்கானோர் தொடர்ந்து இடம்பெயர்ந்த நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படாமை காரணமாக அவர்களில் பலர் உயிராபத்தான நிலையில் உள்ளதாக மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.
ஆதலால் சிரிய அரசாங்கமும் கிளர்ச்சியாளர்களும் 33 மாத காலமாக இடம்பெற்றுவரும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி

No comments:
Post a Comment