இலங்கைச் செய்திகள் மட்டக்களப்பில் இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை

 ஓலைத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவில் 510 ஏக்கர் காணி தனி நபரால் அபகரிப்பு

80 இலட்சம் ரூபாய் செலவில்மூன்று வைத்திய பிரிவுகள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் திறந்து வைப்பு

 யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் ஊழியர்கள் 12 ஆவது நாளாக போராட்டம்

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் தோண்டும் பணி இன்று ஆரம்பம்


========================================================================

  மட்டக்களப்பில் இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை
23/12/2013     மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஆரை­யம்­பதி பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள இரு ஆல­யங்கள் உடைக்­கப்­பட்டு உண்­டி­யல்­க­ளி­லி­ருந்த பெருந்­தொகை பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிசில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டு­ள்­ளது.இச்­சம்­பவம் நேற்று அதி­காலை இடம் பெற்­றி­ருக்­க­லா­மென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
300 வரு­டங்கள் பழைமை வாய்ந்த ஆரை­யம்­பதி வர­லாற்று பிர­சித்தி பெற்ற எள்­ளிச்­சேனை பிள்­ளையார் ஆலயம் மற்றும் 100 வரு­டங்கள் பழைமை வாய்ந்த ஸ்ரீ பேச்­சி­யம்மன் ஆலயம் என்­ப­னவே நேற்று அதி­காலை உடைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆலய பரி­பா­லன சபைத்­த­லைவர் பூபா­ல­சிங்கம் புஸ்­ப­ராசா தெரி­வித்தார்.
ஒவ்­வொரு வரு­டமும் ஆடி மாதத்தில் குறித்த ஆல­யங்­களின் திருக்­க­தவு திறத்­த­லுடன் வரு­டாந்த உற்­ச­வமும் நடை­பெறும் அக்­காலப் பகு­தியில் உண்­டியல் திறக்­கப்­பட்டு அதி­லுள்ள பணம் ஆலய நிர்­வா­கத்­திடம் சேர்க்­கப்­படும். இது பல இலட்சம் ரூபா­யாக இருக்கும். இவ்­வாறு பக்­தர்­களால் போடப்­பட்ட ஆறு மாதங்­க­ளுக்­கு­ரிய பணம் இரு கோயில் உண்­டி­யல்­க­ளி­லு­மி­ருந்து கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன.

கொள்­ளை­யர்கள் உண்­டி­யல்­க­ளி­லி­ருந்த தாள் நாண­யங்­களை மாத்­தி­ரமே எடுத்­துச்­சென்­றுள்­ளதை அவ­தா­னிக்க முடிந்­தது.சில்­லறை நாணயங்கள் உண்­டி­யல்­களின் அடிப்­ப­கு­தியில் காணப்­ப­டு­கின்­றன.காத்­தா­ன­குடி பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நன்றி வீரகேசரிஓலைத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவில் 510 ஏக்கர் காணி தனி நபரால் அபகரிப்பு

23/12/2013      மன்னார் பிரதேச சபைக்குற்பட்ட பகுதியில் மூன்று கிராமங்களை உள்ளடக்கிய 510 ஏக்கர் காணி தனி நபர் ஒருவரினால் அபகரிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம்  தெரிவித்துள்ளார்.


இவ்விடயம்  தொடர்பாக வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட ஓலைத்தொடுவாய் கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட உவரி,தாழங்காடு,கருப்பன் குடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களையும் உள்ளடக்கி புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவரினால் 510 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு போலி ஆவணங்களை தயாரித்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த 510 ஏக்கர் காணியில் தமது காணிகளும் உள்ளடங்குவதாக உரிமை கோரி சுமார் 20 இற்கும் மேற்பட்டவர்கள் மன்னார் பிரதேச சபைக்கு வந்து பிரதேச சபையின் உப தலைவராகிய என்னிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் காணியை சட்டவிரோதமாக விற்பனை செய்த புதுக்குடியிருப்பைச் சேர்ந்த குறித்த நபரையும்,அதனை வாங்கிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரையும் அழைத்து பேர்ச்சு வார்த்தையினை மேற்கொண்டோம்.
இதனைத்தொடர்ந்து  கடந்த 16-12-2013 அன்று பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பிரதேச சபைக்கு அழைக்கப்பட்டு சட்டத்தரணியூடாக ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டது. இதன் போது ஓய்வு பெற்ற வடமாகாண காணி ஆணையாளர் கே.குருநாதன் முன்னிலையில் பல விளக்கங்கள் முன்வைக்கப்பட்டது.
மன்னார் பிரதேச சபை குறித்த காணி தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.எனினும் காணிகளை பறிகொடுத்த குறித்த கிராம மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
விற்பனை செய்யப்பட்ட குறித்த 510 ஏக்கர் காணியில் குறித்த நபர் எது வித வேளைத்திட்டங்களையும் மேற்கொள்ளாதிருக்க மன்னார் பிரதேச சபை தடை விதித்துள்ளது என மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.     நன்றி வீரகேசரி


 80 இலட்சம் ரூபாய் செலவில்மூன்று வைத்திய பிரிவுகள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் திறந்து வைப்பு

23/12/2013            80 இலட்சம் ரூபாய் செலவில் நவீன வைத்திய சாதனங்களுடன் விபத்து மற்றும் காயங்கள் சிகிச்சைப் பிரிவு உட்பட மூன்று வைத்திய பிரிவுகள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது.


அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டலில் சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் மட்டக்களப்பு-காத்தான்குடி தள வைத்தியசாலையில் முதற்தடவையாக நோயாளிகளின் நலன் கருதி நவீன வைத்திய சாதனங்களுடன் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் காயங்கள் சிகிச்சைப் பிரிவு, மத்திய கிருமி நீக்கல் வழங்கல் பிரிவு, வைத்தியசாலை துணிகள் வழங்கல் பிரிவு என்பன மூன்று வைத்திய பிரிவுகளை திறந்து வைக்கும் நிகழ்வு 22-12-2013 நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இதன் போது வைத்தியசாலையின் மூன்று பிரிவுகள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி தள வைத்தியாலை  வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் சதுர்முகம், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நஸீர்தீன், காத்தான்குடி தள வைத்தியாலை  அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் நிஹாஜ் உட்பட உலமாக்கள் .இராணுவ அதிகாரிகள்,ஊர் பிரமுகர்கள்,புத்திஜீவிகள், காத்தான்குடி வைத்தியசாலை வைத்தியர்கள்,வைத்திய தாதிகள், வைத்திய ஊழியர்கள, அபிவிருத்திச் சங்க ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

   நன்றி வீரகேசரி
 யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் ஊழியர்கள் 12 ஆவது நாளாக போராட்டம்

23/12/2013        யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார தொண்டர் ஊழியர்கள் இன்று  12 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தங்களுடைய போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காவிடில் விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்ததையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநருடன் கடந்த 21 ஆம்திகதி இடம்பெற்ற  சந்திப்பில் தொண்டர்களில் 80 பேருக்கு முதற்கட்டமாக நிரந்தர நியமனம் வழங்குவதாகவும் ஏனையவர்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஒப்பந்த அடிப்படையில் பணியில் இணைத்துக்கொள்ளப்படுவதாகவும் உறுதிமொழியளிக்கப்பட்டது. எனினும் இதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
வைத்தியசாலையில் நீண்டகாலமாக தொண்டர் ஊழியர்களாக பணியாற்றிய அனைவருக்கும் இந்நியமனம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறு இல்லையென்றால் எங்கள் முடிவுகள் பாராதூரமாக அமையுமெனவும் தொண்டர்கள் எச்சரித்துள்ளனர்.         நன்றி வீரகேசரிதிருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் தோண்டும் பணி இன்று ஆரம்பம்


28/12/2013    மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி இன்று சனிக்கிழமை மீண்டும் தோண்டப்பட்டுள்ளது.

மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டது.
மன்னார் நீதிவானின் உத்தரவிற்கமைவாக இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் குறித்த மனிதப்புதைகுழி தோண்டும் நடவடிக்கை ஆரம்பமாகியது.
இதன் போது மனித புதை குழி காணப்படுகின்ற இடத்தைச்சுற்றியுள்ள வீதி     உடைக்கப்பட்டு மனித புதை குழி தோண்டப்பட்டது. இதன் போது மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சிலவும் புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இதன் போது மீட்கப்பட்ட மனித எச்சங்களை சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்திய ரெட்ண உட்பட அவருடன் வருகை தந்திருந்த 5 வைத்திய நிபுணர்களும் இணைந்து பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதோடு அதனைச் சூழ்ந்த பகுதிகளும் தோண்டப்பட்டன.
இதேவேளை, முழுமையாக மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளை மீட்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனித புதை குழி தோண்டும் போது உடற்கூற்று நிபுணர் ஆர்.எம்.பி.ராஜகருணா, அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரி பி.யு.மடவல,தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஏ.விஜயரத்ன,பேராதணை பகுப்பாய்வு திணைக்கள அதிகாரி கே.நந்தசேன, மன்னார் பொலிஸ் அத்தியட்சர் டி. லக்சிறி விஜயசேன, உதவி பொலிஸ் அத்தியட்சர் ஐ.வி.ரி.சுகதபால, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதே வேளை குறித்த மனித எழுலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.மனித எழும்புக்கூடுகள் மீட்கும் பணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியில் இருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் நீர் இணைப்பிற்காக பள்ளம் தோண்டிய போது மூன்று மண்டையோடுகளும் மனித எழும்புகளும் மீட்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த மனித புதைகுழி மன்னார் நீதவான் முன்னிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தோண்டப்படது.
இதன் போது சுமார் 10 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி
T

No comments: