வசந்த ஆண்டு வருக

.

மிகபெரும் பிரளயங்களை
கடந்தும் இன்னும் 
உயிர்வாழ முடிவதை எண்ணி
பூரித்து நிற்கிறேன் 
நிறங்கள் நிரந்திரமில்லை 
மதங்கள் மாற்றத்திற்குரியவை 
மாதங்களை போல 
அவற்றையும் கடந்து போகும் 
மனதை தந்துவிடு 

நிரப்ப இயலா 
வெற்றிடங்களை 
அன்பால் நிரப்பும் 
வல்லமை கொடு 

வாழ்வின் எல்லை வரை 
சென்று மீண்டவர்களின் 
வலியை உணர செய் 

புலமற்று நிராதரவாய் 
இருக்கும் மனங்களுக்கு 
மருந்தாய் இருக்கும் 
மகத்தான உள்ளத்தை தா 


எத்தனை துயர சம்பவங்கள் 
வந்தாலும் அதை எதிர்த்து 
போராடும் துணிவை தா 

அக்கம் பக்கம் இருப்பவர்கள் 
அனைவரும் அயலகவாசிகளாக 
இருக்க 
அயலகத்தில் இருந்து 
அன்பை அனுப்பிகொண்டிருக்கும் 
அந்த உள்ளங்களில் 
இன்னும் நிரப்பு பெரும் அன்பை 

யாசிப்பதும் வாசிப்பதும் 
சுவாசிப்பை போல 
எப்பொழுதும் பிணைந்து 
இருக்கும் ஒரு உன்னத உறவை கொடு 

அவமானங்களையும் 
வலிகளையும் ,புரகநிப்புகளையும் 
துடைத்தெறியும் துணிவை கொடு 

தாயன்பை போல தகப்பன் அன்பையும் 
சகோதர பாசத்தையும் 
நட்பின் நேசத்தையும் 
எம் மக்கள் உணரும் 
பாக்கியத்தை கொடு 

மனிதம் தொலைக்காத 
மனிதர்களை அடையாளம் காட்டு 
அவர்களின் கரங்களில் 
இவ்வுலகை ஒப்படைத்து விட்டு 
இவ்வுலகை விட்டு 
விடுதலையாகும் வரம் ஒன்றை கொடு 


ஒவ்வொரு முறையும் இப்படியான 
வேண்டுதல்களோடுதான் 
உன்னை வேண்டுகிறேன் 
வருடத்தின் கடைசி நாட்களில் 
ஆனாலும் நீ கண்மூடி கிடப்பதன் 
அர்த்தம் புரியாமல் 
மீண்டும் ஒரு மீள்பதிவிடுகிறேன் 

வரும் ஆண்டு வசந்தத்தின் 
வாசத்தை எங்கள் 
நாசிகள் நுகர அருள்புரிவாயா 
மலரின் மென்மையை 
ஸ்பரிசிக்கும் வரம் தருவாயா 
இசையின் லயிப்பில் 
பறக்கும் வரம் தருவா ?

தர வேண்டும் தர வேண்டும் 
வர வேண்டும் வர வேண்டும் 
அதற்காகவேனும் 
இந்த புது வருடத்தை வரவேற்கிறேன் 
வாழ்த்துக்கள் சொந்தங்களே 
வசந்த ஆண்டு வருகைக்காக 
உங்களை வரவேற்கிறேன் 

Nantri saraladevi.com

No comments: