வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் ‘நடா’ நடராஜாவுக்கு அஞ்சலி

.
இலங்கையில்   வடமராட்சியில்    பிறந்து   1956  ஆம்  ஆண்டு  முதல்   வீரகேசரி   பத்திரிகையில்    பணியாற்றி   சில   வருடங்களுக்கு   முன்னர்    இளைப்பாறிய  நடராஜா   கடந்த   5 ஆம்  திகதி  சனிக்கிழமை   இரவு  கொழும்பில்  தனியார்  மருத்துவமனையில்   காலமானார்.
கரவெட்டி   விக்னேஸ்வரா   கல்லூரியின்   முன்னாள்  மாணவரான  நடராஜா   தமது   கல்வியைத்தொடர்ந்து   கொழும்பில்  அரசகரும  மொழித்திணைக்களத்தில்   பணியாற்றினார்.   அதன்பிறகுää   வீரகேசரி   பத்திரிகையின்   விளம்பர  இலாகாவில்  பணியிலிருந்துää   வீரகேசரி   செய்திப்பிரிவுக்கு  வந்தார்.   அங்கு  துணை  ஆசிரியராகவும்   சிரேஷ்ட   பதில்  செய்தி  ஆசிரியராகவும்  செய்தி  ஆசிரியராகவும்   பணியாற்றி   பிரதம  ஆசிரியராக  பதவி  உயர்வுபெற்று   பலவருடங்கள்    சேவையாற்றினார்.
வீரகேசரியில்   சுமார்   ஐம்;பது  ஆண்டுகளுக்குமேல்   பணியிலிருந்து   ஓய்வுபெற்ற நடராஜாää    கடந்த   சிலவாரங்களாக   சுகவீனமுற்றிருந்தார்.   பல  தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு   ஊடகத்துறையில்   சிறந்த  வழிகாட்டியாகவிருந்த  நடராஜாவைப்பற்றிய    விரிவான   கட்டுரையை    சமீபத்தில்  அவுஸ்திரேலியா  தமிழ்முரசு   இணைய   இதழில்  எழுதியிருந்தேன்.  குறிப்பிட்ட   கட்டுரையை  கனடாவில்   பதிவுகள்   இணைய  இதழ்ää    கனடா  செந்தாமரை   இலங்கை   தினக்குரல்  ஆகிய  பத்திரிகைகள்   மீள்பிரசுரம்   செய்திருந்தமை   குறிப்பிடத்தக்கது.
நடராஜாவின்   மறைவுச்செய்தியை   கொழும்பு   மாநகர  சபை  உறுப்பினரும்  அகில  இலங்கை   கண்ணதாசன்  மன்றத்தின்  தலைவருமான  கவிஞர்  வேலணை  வேணியன்   தொலைபேசி   ஊடாகத்     தெரிவித்தார்.
நடராஜாவின்   துணைவியாருடன்   தொலைபேசியில்   தொடர்புகொண்டு   ஆழ்ந்த  அனுதாபங்களைத்தெரிவித்தேன்.
மூத்த   பத்திரிகையாளரான   நடராஜாவின்   மறைவு  ஈடுசெய்யப்படவேண்டிய  இழப்பாகும்.
முருகபூபதி

No comments: