நைஜீரியாவில் கல்லூரியினுள் தாக்குதல்: 50 மாணவர்கள் பலி
அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட அமெரிக்கா உத்தரவு
அமெரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்சரிக்கை
--------------------------------------------------------------------------------------------------------
நைஜீரியாவில் கல்லூரியினுள் தாக்குதல்: 50 மாணவர்கள் பலி
30/09/2013 நைஜீரியாவில் கல்லூரியொன்றுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 மாணவர்கள் வரை உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோப் மாகாணத்தில் குஜ்பா நகரில் விவசாயக் கல்லூரியொன்று அமைந்துள்ளது.
அங்குள்ள விடுதியில் நள்ளிரவில் மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது போகோ ஹராம் தீவிரவாதிகள் கும்பலாக திடீரென்று புகுந்தனர்.
ஒவ்வொரு அறையாக சென்று சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தப்பி ஓடிய மாணவர்களையும் இறக்கமின்றி சுட்டு தள்ளினர்.
வகுப்பறைகளுக்கும் தீ வைத்தனர். இதில் 50 மாணவர்கள் பரிதாபமாக
உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் இராணுவத்தினர் சென்று பலியான 26
மாணவர்களின் உடல்களை மீட்டனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என்று
தெரிவிக்கப்பட்டது. கல்லூரியில் படித்த சுமார் 1,000 மாணவர்கள் தப்பி ஓடி
விட்டதாக கல்லூரி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு, தனி நாடு கேட்டு
போராடி வருகிறது. இவர்கள் அப்பாவி மக்கள் மீது அடிக்கடி தாக்குதல்
நடத்துகின்றனர்.
இந்த மாதத்தில் மட்டும் போகோ ஹராம் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள்
143 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் இராணுவ உடை அணிந்து தாக்குதலில்
ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட அமெரிக்கா உத்தரவு
02/10/2013 அமெரிக்காவில்
அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒபாமா
கேர் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒபாமாவின் சுகாதார நலத்திட்டத்திற்கான
நிதி ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
குடியரசுக்கட்சியினர் அதிகமுள்ள பிரதிநிதிகள் சபையில் ஒபாமாவின்
இத்திட்டத்திற்கான நிதியை நிறுத்திவைப்பதற்கான தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றுவதற்கான
காலக்கெடுவும் முடிந்தது.
இதனையடுத்து
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு
அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியிழக்கும் சூழல்
ஏற்பட்டுள்ளது. 1995-96 க்கு பிறகு முதன் முறையாக அமெரிக்காவில் அரசு
நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு
ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி அமெரிக்க நிதியாண்டின் தொடக்கமாகும். இதற்கு
முன் எவ்வளவு பொதுக் கடனை வாங்கலாம் எனத் தீர்மானித்து அதற்கான சட்டத்தை
நிறைவேற்றி அதிபருக்கு அனுப்ப வேண்டும். அடுத்த நிதி ஆண்டுக்கு 17.8
டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = 1 லட்சம் கோடி) டாலர் அளவுக்கு பொதுக்கடன்
தொகை உயர்த்தப்பட்டால் மட்டுமே அடுத்த ஆண்டு பட்ஜெட்டை உருவாக்க முடியும்.
ஆனால், கடன் வாங்கும் அளவை உயர்த்த எதிர்க்கட்சி அனுமதிக்காததால் இழுபறி
நிலை நீடிக்கிறது.
உள்நாட்டுப்
பாதுகாப்பு உள்ளிட்ட எந்த அவசரகாலப் பணிகளும் பாதிக்கப்படக்கூடாது என
தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ சேவை, மருத்துவம் உள்ளிட்ட முக்கிய சேவைகள்
தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் ஊழியர்களுக்கும் சம்பளம் கிடையாது.
நிதிச் சிக்கல் தீரும்வரை அவர்கள் பணிக்கும் திரும்ப முடியாது. அனைத்து
நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களும் வழக்கம்போலச் செயல்பட்டன.
ஆப்கானிஸ்தான் உள்பட வெளிநாடுகளில் பணிபுரியும் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஊதியமோ, படிகளோ தடையில்லாமல் வழங்கப்படும். அதேவேளையில் வெளிநாட்டவர் அமெரிக்கா வருவதற்கான விசா பெறுவதில் தடங்கல்கள் ஏற்படும்.
ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களிடையே விரைவில் பேச்சு நடந்து சமரசத் தீர்வு ஏற்படும். ஒருவார காலத்துக்குள் தேக்க நிலை நீங்கிவிடும் என்று அமெரிக்க அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். nantri Thenee
ஆப்கானிஸ்தான் உள்பட வெளிநாடுகளில் பணிபுரியும் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஊதியமோ, படிகளோ தடையில்லாமல் வழங்கப்படும். அதேவேளையில் வெளிநாட்டவர் அமெரிக்கா வருவதற்கான விசா பெறுவதில் தடங்கல்கள் ஏற்படும்.
ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களிடையே விரைவில் பேச்சு நடந்து சமரசத் தீர்வு ஏற்படும். ஒருவார காலத்துக்குள் தேக்க நிலை நீங்கிவிடும் என்று அமெரிக்க அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். nantri Thenee
No comments:
Post a Comment