இலங்கைச் செய்திகள்

.
வடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவியேற்பு

நியமனக் கடிதத்தை ஆளுநரிடமிருந்து பெற்றார் விக்கினேஸ்வரன்

ஓமந்தை– பலாலி ஒரு கி. மீ. ரயில் பாதைக்கு 270 மி.ரூபா : மாத்தறை– பெலி­யத்தைக்கு 1412 மி. ரூபா செலவென அதிர்ச்சி

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்
இலங்கை தொடர்பான நவிபிள்ளையின் வாய்மூல அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு


வடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவியேற்பு







டமாகாண சபை முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ் மொழியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்கள்.
இந்த நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, டக்ளஸ் தேவானந்தா, அஸ்வர் ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா.சம்பந்தன், அ.விநாயகமூர்த்தி, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், ஐ.தே.க. பிரமுகர் ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம், பிரபா கணேசன் உட்பட அரசியல் பிரமுகர்கள், மற்றும் விக்னேஸ்வரனின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




- See more at: 







நியமனக் கடிதத்தை ஆளுநரிடமிருந்து பெற்றார் விக்கினேஸ்வரன்

01/10/2013     முன்னாள் நீதியரசரும் வடமாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டவருமான சி.வி.விக்கினேஸ்வரன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியிடமிருந்து வடமாகாண முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தை இன்று பெற்றுக் கொண்டதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் வீரகேசரி இணையத்திற்கு தெரிவித்தார்.


அதன்படி நியமனக் கடிதம் இன்று வடமாகாண ஆளுநரின் இல்லத்தில் வைத்து விக்கினேஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் யார் முன்னிலையில், எங்கு, எப்போது முதலமைச்சர் பதவியேற்பது குறித்து கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




நன்றி வீரகேசரி

 

 

 

ஓமந்தை– பலாலி ஒரு கி. மீ. ரயில் பாதைக்கு 270 மி.ரூபா : மாத்தறை– பெலி­யத்தைக்கு 1412 மி. ரூபா செலவென அதிர்ச்சி

 01/10/2013    ஓமந்தை முதல் பலாலி வரை­யான ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்றர் வரை­யான பாதையை அமைக்க 270 மில்­லியன் ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் மாத்­தறை முதல் பெலி­யத்தை வரை­யான ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்­றரை அமைப்­ப­தற்கு 1,412 மில்லின் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரிவித்தார்.

ஒரே காலப்­ப­கு­தியில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதைக்­காக செல­வி­டப்­படும் நிதியில் இந்­த­ளவு பெரிய வித்­தி­யாசம் காணப்­பட முடி­யுமா? என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.
நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் கேந்­திர நிலை­யங்­களை சீனா­வுக்கு அடகு வைக்கும் செயற்­பாட்டில் அர­சாங்கம் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றது. குறிப்­பாக ரயில் பாதை­களை நிர்­மா­ணிக்கும் செயற்­பா­டு­களை குறிப்­பிட முடியும்.
ஓமந்தை முதல் பலாலி வரையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள ரயில் பாதை­யா­னது 91 கிலோ மீற்றர் நீள­மாகும். அதில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதையை அமைக்க 270 மில்­லியன் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது.
அதே­போன்று பலாலி முதல் காங்­கே­சன்­துறை வரையில் ரயில் பாதை அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. அதில் ஒரு கிலோ மீற்­ற­ருக்கு 343 மில்­லியன் ரூபா செல­வி­டப்­ப­ட­வுள்­ளது.
ஆனால் மாத்­தறை முதல் பெலி­யத்தை வரையில் 27 கிலோ மீற்றர் நீள­மான ரயில் பாதை அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்­றரை அமைப்­ப­தற்கு 1412 மில்லின் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் ஒரே காலப்­ப­கு­தியில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதைக்­காக செல­வி­டப்­படும் நிதியில் இந்­த­ளவு பெரிய வித்­தி­யாசம் காணப்­பட முடி­யுமா? இது அசா­தா­ர­ண­மாக காணப்­ப­டு­கின்­றதே?
இது தொடர்பில் நாட்­டுக்கு அர­சாங்கம் விளக்­க­ம­ளிக்­க­வேண்டும். சீன நிறு­வனம் ஒன்­றுக்கே இது தொடர்­பான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் இவ்வளவு அதிகரிப்பு இடம்பெறுவதற்கான காரணம் என்ன? இந்தக் கடன்களை எவ்வாறு திருப்பி செலுத்துவது? என்றார்.

 நன்றி வீரகேசரி

 

 

 

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

02/10/2013    பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி நகரத்தில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக கல்வியை தனியார் மயமாக்குதல், பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுதல், மற்றும் கைது செய்யப்படுதல் ஆகியவற்றை கண்டித்தும் இலவச கல்வியைப்

பாதுகாக்குமாறும் கோறிக்கை விடுத்தும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை நான்கு மணியளவில் கண்டி மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில் சத்தியாகிரகம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

  நன்றி வீரகேசரி



இலங்கை தொடர்பான நவிபிள்ளையின் வாய்மூல அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு


    02/10/2013
 ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக கடந்த 25ஆம் திகதி, ஐ.நா மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த வாய்மூல அறிக்கை மற்றும், கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24ஆவது அமர்வு கடந்தவாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த அமர்வு குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகத்தினால் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில், சிரியா, சூடான், கொங்கோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, சோமாலியா, இலங்கை ஆகிய நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேவையில் அமெரிக்கா வெளிப்படுத்திய கரிசனை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், இலங்கை தொடர்பான, அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விபரிக்கப்பட்டுள்ளதாவது-

“ஐ.நா மனிதஉரிமை ஆணையர் பிள்ளையின் அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் நீதித்துறையில் தலையீடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த உயர்ஆணையரின் கவலைகளில், அமெரிக்காவும் பங்கு கொள்கிறது.

போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள முன்னேற்றம் காணப்படாவிட்டால், அனைத்துலக விசாரணை அழைப்புகள் தொடரும் என்ற, ஐ.நா உயர் ஆணையரின் மதிப்பீட்டை அமெரிக்காவும் சுட்டிக்காட்டுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 நன்றி வீரகேசரி

 

 

 

No comments: