நடனம் (பரத நாட்டியம்), சங்கீதம், வயலின், வீணை ஆகிய பாரம்பரிய கலை / இசைக்கருவிகள் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு.....

அன்புடையீர்
உலகத்தமிழ் இலக்கிய மாநாடு,  சிட்னி அவுஸ்திரேலியா:
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு சிட்னியில் செப்டெம்பர் (புரட்டாதி) 2013ல்   நடைபெறவுள்ளது.   இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் இளைய தலைமுறையினருக்குத் தமிழ் மொழியின் தொன்மை,  மகிமை, சிறப்பு, மாண்பு, தமிழ்ப்பண்பாட்டின் நன்மைகள் என்பவற்றை எடுத்துக் கூறுவதாகும்.
மாநாடு செப்டெம்பர் 6, 7, 8ம் திகதிகளில் நடைபெறும். இவ்விழாவிற்கு முத்தமிழாகிய இயல், இசை, நாடகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யவுள்ளோம். இதற்காக சிட்னியில் இயங்கிவரும் நடனம் (பரத நாட்டியம்), சங்கீதம், வயலின், வீணை ஆகிய பாரம்பரிய கலை / இசைக்கருவிகள் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடமிருந்து தரமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
துறையில் நன்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்பது விரும்பத்தக்கது. அத்துடன் நிகழ்ச்சிக்ள்இ மேற் குறிப்பிட்டுள்ள தமிழின் சிறப்புக்களை மையப் பொருளாகக் கொண்டிருப்பதோடுஇ 20 – 30 நிமிடங்களுக்கு மேற்படாமலும் அமைய வேண்டும்.
உலகத் தமிழ் மாநாட்டில் உங்கள் மாணவர்கள் பங்கேற்பதும் அதற்கு ஆசிரியர்களாகிய நீங்கள் உறுதுணையாக நிற்பதும் ஓர் அரிய சந்தர்ப்பம் ஆகும். தங்கள் பெயர்களை யூலை (ஆடி) மாதம் 13ம் திகதிக்கு முன்
utimsydney@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழால் அனைவரும் ஒன்றிணைவோம்

No comments: