உலகச் செய்திகள்

இத்தாலிய பிரதமர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு: இரண்டு காவலர்கள் பலி

மத்திய பிரதேசத்தில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 5 வயது சிறுமி மரணம்

நெதர்லாந்தில் புதிய மன்னராக வில்லெம்-அலெக்ஸாந்தர் பதவியேற்பு

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு: வழக்கறிஞர் சவுத்ரி சுல்பிகார் அலி சுட்டுக் கொலை========================================================================

இத்தாலிய பிரதமர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு: இரண்டு காவலர்கள் பலி

29/04/2013 இத்தாலிய பிரதமர் அலுவலகத்தில் நேற்று  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர்.
இத்தாலியில் நீண்ட நாள் அரசியல் குழப்பத்துக்கு பின், பிரதமராக என்ரிகோ லெட்டா தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று இவரது அவரது தலைமையிலான அமைச்சரவை ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்றது. அந்த நேரத்தில் ரோம் நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் மீது  ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார்.
http://www.virakesari.lk/image_article/Suspected-gunman-held-dow-016.jpg


இந்த சம்பவத்தில் துணை இராணுவப் படையை சேர்ந்த இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர்.துப்பாக்கியால் சுட்ட நபரும் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலிய தேர்தலில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் இடதுசாரி கட்சி கன்சர்வேடிவ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இத்தாலிய பாராளுமன்ற நிகழ்ச்சிகள் இன்று ஆரம்பமாகின்றன. பிரதமர் என்ரிகோ லெட்டா பாராளுமன்றம் நாளை பெரும்பான்மையை நிருபிக்க உள்ளார்    நன்றி வீரகேசரி
.


மத்திய பிரதேசத்தில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 5 வயது சிறுமி மரணம்

30/04/2013 இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் பலாத்காரம் 
செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி நேற்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், சியோனி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி கடந்த ஏப்.17ம் தேதி வீட்டின் வாசலருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அந்தச் சிறுமிக்கு 'சொக்லெட்' கொடுப்பதாக ஆசைகாட்டி அழைத்துச் சென்ற இருவர் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.

மறுநாள் வயல் வெளியில் மயங்கிக் கிடந்த சிறுமியை பெற்றோர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமியின் நிலை மோசமானதை அடுத்து, கடந்த 21ம் தேதி விமான எம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, நாகபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே சம்பவத்தில் தொடர்புடைய 2 குற்றவாளிகளைக் கைது செய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்குச் சென்ற சிறுமி திங்கட்கிழமை மாலை பரிதாபமாக உயிரிழந்தாள். 
இந்த சம்பவம் மத்தியபிரதேச மாநில மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  நன்றி வீரகேசரிநெதர்லாந்தில் புதிய மன்னராக வில்லெம்-அலெக்ஸாந்தர் பதவியேற்பு
நடுவிலே ஓய்வுபெறும் ராணி பியாத்ரிக்ஸுடன் புதிய மன்னராகும் அலெக்ஸாந்தரும் அவர் மனைவி மாக்ஸிமாவும் நிற்கின்றனர்.
dutch queenடச்சு நாட்டின் புதிய அரசராக பதவியேற்றுள்ள வில்லெம்-அலெக்ஸாந்தர் நாட்டின் அரசியல் சாசனத்தை நிலை நிறுத்த உறுதிபூணுவதாக தெரிவித்துள்ளார். தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வின் போதே அவர் இதை தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வின் போது தனது தாய்க்கு அவர் புகழஞ்சலி செலுத்தினார். முன்னதாக அவரது தாய் பியாட்ரிக்ஸ் அரசி முடிதுறப்பு பத்திரங்களில் கையெழுத்திட்டார். அவர் 33 வருடங்கள் நாட்டின் அரசியாக இருந்தார். இதையடுத்து அவரின் மூத்த மகன் வில்லெம்-அலெக்ஸாந்தர் புதிய மன்னர் பொறுப்பை ஏற்றார். புதிய அரசர் பதவியேற்கும் நிகழ்ச்சியை நாடெங்கும் பல பெரிய திரைகளில் கண்டு களித்தனர். கடந்த நூறாண்டுகளில் மூன்று அரசிகளுக்கு பிறகு முதல் முறையாக அரசர் ஒருவர் பதவியேற்றுள்ளார். புதிய அரசர் பதவியேற்றுள்ளதை கொண்டாடும் வகையில் நெதர்லாந்து முழுவதும் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வில்லெம்-அலெக்ஸாந்தர் புதிய அரசராக பதவியேற்றதை அடுத்து அவரது மனைவியான அர்ஜெண்டினாவில் பிறந்த மாக்ஸிமா அரசியாக அறிவிக்கப்படுகிறார். ஹாலந்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் மாக்ஸிமா.
- பி.பி.சி  நன்றி தேனீ 
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு: வழக்கறிஞர் சவுத்ரி சுல்பிகார் அலி சுட்டுக் கொலை


03/05/2013 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கின் விசாரணையை முன்னெடுத்து வரும் அந்நாட்டு அரசு தரப்பு வழக்கறிஞர் சவுத்ரி சுல்பிகார் அலி இன்று இஸ்லாமாபாத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் போது சுல்பிகார் அலியின் மெய்ப்பாதுகாவலர் காயமடைந்துள்ளதுடன் அவரின் வாகனம் மோதியதால் வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
சுல்பிகாரின் தலை, தோல் பட்டை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெனாசீர் பூட்டோ கொலை செய்யப்பட்ட போது முஷாரப் அந்நாட்டு ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தார்.
சரியான முறையில் பாதுகாப்பு வழங்காமையினாலேயே பெனாசீர் பூட்டோ கொலைசெய்யப்பட்டதாக முஷாரப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும் தான் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக முஷாரப் பாகிஸ்தானை விட்டு தப்பியோடியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் முஷாரப் பாகிஸ்தானுக்கு திரும்பி பின்னர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சவுத்ரி சுல்பிகார் அலி கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.