இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு




02/05/2013 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளார். 


கிறிஸ்மஸ் தீவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு சில மணித்தியாலங்களில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பது பற்றிய சரியான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.நன்றி வீரகேசரி