ஞானா: அப்பா….அண்டைக்கு பனையின் பயன் சொல்லிக் கொண்டு
வந்து பாதியிலை நிப்பாட்டிப்போட்டுப் போட்டியள். இப்ப சொல்லுங்கோ விட்ட
இறத்திலை இருந்து, உறியும், உமலும், திருகணையும் ஊற்று இறைக்கக்
கொடிதானாவாய் எண்டால் என்ன கருத்து?
அப்பா: ஞானா, ஒவ்வொரு நாளும் நீதான் என்னைக் கேள்வி கேட்பாய், இண்டைக்கு நான் உன்னை ஒரு கேள்வி கேட்கப் போறன் அதுக்குப் பதில் சொன்னால், உதுக்கு நான் விளக்கம் சொல்லிறன்.
ஞானா: என்ன கேள்வி அப்பா கேளுங்கோ பாப்பம்.
அப்பா: அதாவது வந்து…வந்து…..திருக்குறளிலை ஊற்று என்ட சொல்லு இருக்கோ, சொல்லு பாப்பம்.
ஞானா: ஊற்று….ஆதாவது நிலத்திலை தண்ணீர் உறிறது அதுதானே அப்பா.
அப்பா: ஓமோம்…..அதுதான் …அதுதான் ஊற்று.
ஞானா: இருக்கப்பா…..”தெட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”
இந்தக் குறளிலை ஊற்று இருக்குத்தானே அப்பா.
அப்பா: இல்லையே. ஊற்று என்ட சொல்லு இல்லையே. ஊறும் என்ட சொல்லுத்தானே
இருக்குது ஞானா.
சுந்தரி: என்ன அப்பா? நீங்களும் ஒரு மனிசனே? .இல்லாட்டி மனிசனோ என்டு கேக்கிறன்.
இவள் பிள்ளை ஞானா, கேட்டவுடனை குறளைச் சொல்லியிருக்கிறாள். நீங்கள் போய்
அகட விகடம் பேசிறியள். ஊற்றுக்கும் ஊறும் என்டதுக்கும் என்ன வித்தியாசம?
அப்பா: ஊற்று எண்டால் பெயர்ச்சொல்லு, ஊறும் எண்டால் வினைச் சொல்லு அதுதான்
வித்தியாசம் சுந்தரி.
சுந்தரி: அப்பா நீங்கள் வினை பிடிச்ச மனிசன். திருக்குறளிலை ஊற்றைப் பற்றின செய்தி
இருக்கோ எண்டதுதானே உங்கடை கேள்வியின்ரை பொருள். அதைவிட்டிட்டு
இவள் பிள்ளையின்ரை கெட்டித்தனத்தை மெச்சாமல் பேசிறியளே.
அப்பா: சரி சரி சுந்தரி. உம்மடை மகள் கெட்டிக்காரிதான். கெட்டிக்காரி எண்டால் உந்தக்
குறள் எந்த அதிகாரத்திலை வருகுது. எத்தினையாவது குறள் எண்டு புத்தகத்தைப்
பாராமல் சொல்லச் சொல்லும் பாப்பம்.
சுந்தரி: தெரியாமல் கேக்கிறன் அப்பா நீங்கள் சொல்லவியளே?
அப்பா: நான்வந்து சுந்தரி கிழவன். டக்கெண்டு உதுகள் ஞாபகம் வரராது. இவள் இளம்
பிள்ளை படிச்சிருக்கிறாள் சொல்லத்தானே வேணும்.
ஞானா: அப்பா நேற்றுத்தான் திருக்குறளிலை கல்வி எண்ட 40 வது அதிகாரத்தைத்
தட்டிப்பாத்தனான். அதிலைதான் உந்தக் குறள் இருக்கு. 396 வது குறள்.
“தொட்டனைத் தூறும் அணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”
அப்பா சுந்தரிää சரியாய்த்தான் சொல்லிறாள் பிள்ளை. கெட்டிக்காரிதான். அப்ப பொருளையும்
சொல்லிவிடன் ஞானா.
ஞானா: அப்பா மணற்கேணி எண்டது, ஆற்று மணலிலை தேண்டிற கிணறு அல்லது பள்ளம்.
அதை எவ்ளவுக்கு எவ்வளவு ஆழமாகத் தோண்டிறமோ அவ்வளவுக்கு அவ்வளவு
தண்ணீர் ஊறும். அதுபோலை எவ்வளவுக்கு எவ்வளவு நூல்களைப் படிக்கிறோமோ
அவ்வளவுக்கு அவ்வளவு அறிவு பெருகும்;. சரிதானே அப்பா?
-2-
அப்பா: ஞானா…..என்ரை ஆசை வீண் போகேல்லை மகளே. நீ வாழ்க!
ஞானா: வாழ்தினது போதும் அப்பா, ஆனால் கதையை மாத்தி உறி, உமல், திருகணை ஊற்று இறைக்கக் கொடி எண்டு பாடினதை மறக்கப் பண்ணாதையுங்கோ.
சுந்தரி: விடாதை ஞானா…உவரை உப்பிடித்தான் கழுத்தாங்குத்திப் பிடி பிடிக்க வேணும்.
அப்பா: ஞானா அந்தக்காலத்திலை fridge இருந்ததே, சாப்பாடுகளை எறும்பு மொய்காமல்
பூனை நாய் தட்டித்தின்னாமல் பக்குவப்படுத்தி வைக்க. நிலத்திலை வைச்சால்
எறும்பு மொய்கும், பூனை நாய் தட்டும் அதுக்காக உயரமாய் பானை, சட்டியிலை போட்டுவைக்க உறியைப் பாவிச்சினம். ஒரு வளையத்திலை முக்கோணமாய் மூண்டு கயித்தைக் கட்டி அதைத் தொங்க விட்டு அதிலை பொருட்களை பத்திரப் படுத்தி வைச்சினம். அதுதான் உறி. அரிவரிப் புத்தகத்திலை படம் போட்டிருக்கும் பாத்துப் பிடி.
ஞானா: அப்பா உமல் என்டால் என்ன அப்பா.
அப்பா: நல்ல கேள்வி. இந்தக்காலத்திலை சாமான்கள் வாங்கப்போனால் கடையளிலை
plastic bags இலை போட்டுத்தருகினம். அந்தக் காலத்திலை கடைக்குப் போகேக்கை
ஒரு உமலை எடுத்துக்கொண்டு போவினம். அதிலைதான் சாமான்களைப் போட்டுக்
கொண்டு வருவினம். உமல் வந்து பணை ஓலையாலை இழைக்கப்பட்ட ஒரு
bag
எண்டு சொல்லன்;.
ஞானா: அப்பிடி எண்டால் அப்பா இந்தப்
plastic bags ஆலைவாற சுற்றுச் சு10ழல் மாசுபடுகிற
தொல்லை இருக்காது.
சுந்தரி: சரியாச் சொன்னாய் ஞானா. இந்தத் தொல்லை அந்தக் காலத்திலை இல்லை. உமல்
கிழிஞ்சால் மண்ணோடை மண்ணாய் உரமாய்ப் போயிடும்.
ஞானா: இப்ப சொல்லுங்கோ அப்பா. ஊற்று இறைக்கக் கொடி எண்டது என்ன?
அப்பா: அது வந்து யாழ்ப்பாணத்திலை கிணறுகளிலை இருந்துதான் நீர் இறைப்பினம்.
அந்தக் கிணத்தடியிலை தண்ணீர் அள்ள துலாக்கள் இருக்கும். அத்தத் துலா
க்களிலை பனை ஈர்க்காலை பின்னின துலாக் கொடி கட்டப்பட்டிருக்கும்;. அந்தக்
கொடியிலை ஒரு பனையோலையாலை இழைச்ச பட்டையைக் கட்டித் தண்ணீர்
இறைப்பினம்.
சுந்தரி: உதெல்லாம் இப்ப இல்லை எணடும் சொல்லிவையுங்கோ அப்பா இவள் பிள்ளைக்கு.
water pumps வந்தாப்பிறகு துலாவும் போச்சு, துலாக் கொடியும் போச்சு, பட்டையம்
போச்சு, ஒற்றுமையும் போச்சு.
அப்பா: உண்மைதான் சுந்தரி. தங்கடை காலிலை நின்ட சனத்தை முடமாக்கி நவீன
சாதனங்கள் வந்து வியாபார ஏட்டி போட்டியை உண்டுபண்ணினதுதான் மிச்சம்.
ஞானா: என்னப்பா உங்கடை கதை. உலகமே மாறியிருக்கேக்கை எங்கடை சனம் என்ன
செய்ய முடியும்? (றெலிபோன் மணி அடிக்கிறது)
அப்பா: றெல்லிபோனைப் போய் எடு ஞானா. நவீன சசாதனங்கள் மனிசனை ஆறுதலாய்
இருக்க விடுமே. அமைதியாய் இருக்க விடுமே. நாங்கள் ஆடிக்காதிலை அகப்பட்ட
இலவம் பஞ்சுதான்.
(இசை)

No comments:
Post a Comment