வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார்கள்

.ஹெலன்ஸ்பேர்க் வருகிறார்கள் அறுபத்துமூவர்

சிதம்பரத்தில் ஒரு சுவையான சம்பவம். தேவாரப் பாடல்களின் ஏட்டுச் சுவடிகள் நெடுங்காலமாகப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் அறைக் கதவைத் திறக்கும்படி கேட்பான் அரசன்.  தேவாரம் பாடியவர்கள் நேரில் வந்து சொன்னால் திறப்போம் என்பார்கள் கோவில் பொறுப்பாளர்கள். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவருக்கும் சிலை வடித்துக் கொணர்ந்து நிறுத்துவான் மன்னன்.  மறு பேச்சின்றித் திறந்து விடுவார்கள் அறைக் கதவை. ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில்கூட வருகிறது இந்தக் காட்சி. 

அன்றைய காலத்தில் சிதம்பரத்துக்கு சிலையாக வந்தார்கள் மூவர். இன்றைய காலத்திலோ ஹெலன்ஸ்பேர்க் (Helensburgh NSW)  கோவிலுக்கு நாயன்மார்கள் அறுபத்துமூவரோடு தொகைஅடியார், மணிவாசகர், சேக்கிழார் ஆகியோரும் சேர்ந்து மொத்தம் 74   முன்னோடிகள் வருகிறார்கள் கருங்கற் சிலைகளாக.

இவர்கள் வருகையால் அன்பும் பக்தியும் உலகெங்கும் பெருகி மக்கள் வாழ்வு மேன்மேலும் உய்யுமென்று மனதார நம்பி வணங்கி நிற்போம். 

நிகழ்வுகள்:
தைலக்காப்பு - ஹெலன்ஸ்பேர்க் - நவம்பர் 24
கும்பாபிசேகம் - ஹெலன்ஸ்பேர்க் - நவம்பர் 25
சொற்பொழிவுகள் - விபரம் பின்னர் அறிவிக்கப்படும் 
குடும்பமாய் வாருங்கள்..  குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்
திருச்சிற்றம்பலம்

No comments: