இவ் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்!



.
இன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வந்தன. இதனால் ஏற்பட்ட சூரிய கிரகணம் அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் தெளிவாக தெரிந்தது.
அந்நாட்டின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், சுற்றுலாவாசிகள் மற்றும் வானியல் நிபுணர்கள் ஆகியோர் இக் கிரகணத்தை காண ஆவலுடன் கூடியிருந்தனர்.




கிரகணம் ஆரம்பித்த உடன் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து பார்வையாளர்களை சற்று நேரம் திகைத்து நின்றனர். பின்னர் கிரகணம் மறைந்தவுடன் மேகங்கள் சூழ்ந்து கொண்டன. அது இருள் தொடர்ந்து நீடித்தது. இந்த கிரகணம் ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் 150 கி.மீட்டர் வரை பரவி இருந்தது.

மேலும், கிழக்கு இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியின் சில இடங்களிலும், நியூசிலாந்து, பப்புவா நியூகினியா மற்றும் சிலி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் தென் பகுதியிலும் தெரிந்தது. ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக 2 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் நீடித்தது.


இது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம். அடுத்த சூரிய கிரகணம் வருகிற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு தான் அடுத்த சூரிய கிரகணம் தெரியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: