சிட்னியில் இனிய தீபாவளி சந்திப்பு



 
சிட்னி, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்திய இனிய தீபாவளி சந்திப்பு கடந்த சனிக்கிழமை நவம்பர் மாதம் 17ம் நாள்  ஸ்ரீ துர்க்கை அம்மன் கலாச்சார மண்டபத்தில் வெகு விமரிசையாக நடந்தேறியது. குத்து விளக்கு ஏற்றலுடன் துவங்கிய விழா பங்கேற்றோர் மனதை கவர்ந்த பரத நாட்டியம், இசை நிகழ்ச்சி, திரை இசை ஆடல் பாடல்கள், குறுநாடகம் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளுடன் தொடர்ந்தது. தமிழக இலக்கிய இணையர் இரா மோகன் மற்றும் நிர்மலா மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட விழாவில் பேராசிரியரின் இனியவை நாற்பது என்று நூல் வெளியிடப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்வாக பேராசிரியர் இரா மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையா? அதிர்ஷ்டமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. திறமையே என்ற அணியில் முனைவர் நிர்மலா மோகன், முத்து ராமச்சந்திரின், குமாரசெல்வம் ஆகியோரும் அதிர்ஷ்டமே என்ற அணியில் அனகன் பாபு, சௌந்தரி கணேசன், பொன்ராஜ் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை திறம்பட எடுத்துரைத்தனர். நடுவர் தமது தீர்ப்பில் திறமைக்கு 51% அதிர்ஷ்டத்திர்க்கு 49% என்று தீர்பளித்தார். கலந்து கொண்டோர் காலம் கடந்ததையும் பொருட்படுத்தாமல் மன நிறைவுடன் கலைந்து சென்றனர்.

















No comments: