முத்தமிழ் மாலை 2012 01-12-2012

.

 

4 comments:

Anonymous said...

மாவீரர் வாரத்தில் களியாட்ட நிகழ்வா?

kirrukan said...

களியாட்டம் என்றால் என்ன?நாடகம் களியாட்டத்திற்க்குள் வராது என்பது என் கருத்து..என்னை பொருத்தவரை களியாட்டம் என்பது மது அருந்தி பொலிவூட் பாட்டுக்கு இடுப்பை ஆட்டி நடனம் ஆடுவது .அந்த வகையான நிகழ்ச்சியாக இது இருக்காது என்பது என் நம்பிக்கை.

இந்த அமைப்பினர் தாயக மக்களுக்கு செய்யும் உதவிகள் பல அதற்கு தலை வண‌ங்குகிறேன் .ஆனால் மாவீரர் வாரத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதை எந்த வகையிலும் எற்றுக்கொள்ள முடியவில்லை..

கோவில் திருவிழா காலத்தில் வேறு நிகழ்ச்சிகள் வைப்பதை தவிர்ப்பது போல மாவீரர் வாரத்திலும் இதை நடத்துவதை தவிர்த்திருக்கலாம்.....

மண்டபம் கிடைக்கவில்லை என ஏற்பாட்டாளர்கள் கூறுவார்கள் ஆனால் 12 வருடமாக தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தும் ஒரு அமைப்பினருக்கு இது தெரியாமலா போய்விடும்....
மனம் உண்டானால் இடம் உண்டு.....
ஜனநாயகத்தில் எதுவும் சரி....

Anonymous said...

அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களும் நேரத்தோடு தமது எதிர்ப்பை வெளியிட்டிருக்கலாம். இதே முரசு இணையத் தளத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாகவே விளம்பரம் செய்து வந்தார்கள். கார்த்திகை வரை கண்மூடி இருந்து விட்டுக் கடைசி நேரத்தில் குழப்ப வேண்டிய அவசியம் என்ன?

நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்த ஒரு பிரபல (?) தமிழ் வானொலி விளம்பரம் செய்யும் அதே வேளையில் நிகழ்ச்சிக்கு எதிராகப் பிரசாரமும் செய்தது. மாவீரர் வாரத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பு இருந்தால் விளம்பரத்தை வாங்கி இருக்கக் கூடாது. பணத்திற்காக விளம்பரம், புகழுக்காக எதிர்ப்பா? இதைக் கேட்க ஆள் இருக்காது என்று நினைத்தார்களா?

பயனுள்ள நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் பிள்ளைகள் அதே வாரத்தில் பிறந்த நாள் பார்ட்டிக்கும் நைட் கிளப் இற்கும் போய் உண்மையான களியாட்டம் ஆடுகிறார்கள். அதை உங்களால் தடுக்க முடியுமா?

மொத்தத்தில் எதற்கு எடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பதில் யாருக்கும் பயன் இல்லை. யாரோ நல்லது செய்பவர்கள் செய்யட்டும் விடுங்கள்!

kirrukan said...

[quote]மொத்தத்தில் எதற்கு எடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பதில் யாருக்கும் பயன் இல்லை. யாரோ நல்லது செய்பவர்கள் செய்யட்டும் விடுங்கள்![quote]


எதிர்ப்பு காட்டுவதும் ஒருத்தனின் உரிமையுங்கோ ...எதிர்ப்பு தெரிவித்து 2 கிழமைக்கு பின்புதான் நீங்களும் எதிர் கருத்து வைக்கின்றீர்கள்...கி..கி..