வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 47 - நிலைக் கண்ணாடி

ஞானா:        அப்பா! எனக்கு ஒரு சந்தேகம்.

அப்பா:        சந்தேகமோ ஞானா?  உனக்குச் சந்தேகம் வந்தால் எனக்குச் சங்கடம்தான்.

ஞானா:        இப்ப பாருங்கோ அப்பாää ஆதியிலை திருக்குறளுக்கு பத்துப்பேர் உரை எழுதி  யிருக்கினம் எண்டு சொல்லுகினம். இந்தப் பத்துப்பேரும் ஏனப்பா ஒரே கருத்தைச்  சொல்லேல்லை.

அப்பா:        ஞானா திருக்கறள் வந்து ஒரு நிலைக் கண்ணாடி மாதிரி. எவர் எவர் வந்து அதுக்கு முன்னாலை நிக்கிறாரோ அவருடைய தோற்றத்தை அப்பிடியே காட்டும். பலருடைய  தோற்றமும் ஒரே மாதிரி இருக்க முடியாதுதானே.

சுந்தரி:        அப்பாவும் மகளும் ஆரம்பிச்சிட்டியளே தர்க்கத்தை?

அப்பா:    வாரும் சுந்தரி வாரும்,  நீர் இல்லாமல் தர்க்கம் நடக்குமே. ஒரு நிலைக் கண்ணாடிக்கு    முன்னாலை ஒரு குடிகாரன் வந்து நிண்டால் கண்ணாடியிலை ஆர் தெரிவான்.

சுந்தரி:        குடிகாரன்ரை தோற்றம்தான் தெரியும் அப்பா. இப்ப ஒரு சு10தாடி வந்து நிண்டால் ஆர் தெரிவான் ஞானா.

ஞானா:        சுதாடிதான் தெரிவான் அம்மா. அதைப்போலை திருக்குறளை ஆரார் படிக்கினமோ அல்லாட்டி ஆராயினமோ,  அவரவற்றை மனநிலையைப் பிரதிபலிக்கிற கருத்துத்தான்  வரும் எண்டு அப்பா சொல்ல வாறார்.

அப்பா:        ஓம் பிள்ளை ஞானா. திருவள்ளுவர் ஒருபொருளைப் பற்றிச் சொல்ல வெளிக்கிட்டால்   அதைப்பற்றிய எல்லப் பக்கங்களையும் புட்டுப் புட்டு வைப்பார். அதைப் படிக்கிறவை தங்களுக்குத் தெரிஞ்ச அளவிலை விளங்கிக் கொள்ளுவினம்.

ஞானா:        அனால் ஒண்டப்பா. பரிமேலழகர் கன இடத்திலை பிழைபடக் கருத்துத் தெரிவிச்சிருக்கிறார் எண்டால் சம்மதிப்பியளே.

அப்பா:        ஞானா நான் உனக்குப் பலமுறை சொல்லியிருக்கிறன். உரை அசிரியர் வாழ்ந்த காலம்,  இடம்,  பொருள்,  ஏவல்களைக் கவனிச்சு அவர்கள் சொன்ன கருத்துகளை ஆராய வேணும்;. இண்டைக்கு என்ன பிரச்சனையோடை வந்திருக்கிறாய்?

ஞானா:        இந்தப் பெம்பிளையளிலை பரிமேலழகருக்கு அவ்வளவு மதிப்பில்லைப் போலை  இருக்கு.

அப்பா:        பழைய குருடி கதவைத் திறவடி எண்டமாதிரி பிறகும் உதே பிரச்சனை. எந்தக் குறளிலை பரிலேழகரோடை சண்டை போடப் போறாய்.

ஞானா:        அப்பா திருக்குறளிலை கூடா நட்பு எண்டு ஒரு அதிகாரம் இருக்குத்தானே.

சுந்தரி:        ஓம் ஞானா 83ம் அதிகாரம் எண்டு நினைக்கிறன்.

ஞானா:        சரியாச் சொன்னியள் அம்மா. அதிலை 822 இலக்கக் குறள் வந்து

            “இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
             மனம்போல வேறு படும்.”
       
        எண்ட இந்தக் குறளிலை உள்ள “மகளிர் மனம் போல மாறுபடும்” எண்டதுக்கு  என்ன் பொருள் எண்டு அப்பாவைக் கேக்கிறன்.

அப்பா:        ஞானா பரிமேலழகர் உதுக்கு பெண்களின்ரை மனம்போலப் பேதலிச்சு மாறுபட்டு  நிற்கும் எண்டு உரை எழுதியிருக்கிறார் அது பிழை. அது பெண்களை இழிவுபடுத்திற  மாதிரி இருக்கு எண்டு சொல்ல வாறாய்.

சுந்தரி:        அப்பா முழுக்குறளின்ரை கருத்தையும் சொல்லாமல் இடையிலை சொல்லிறியள்.  எனக்கு அடியும் விளங்கேலலைää நுணியும் விளங்கேல்லை.

ஞானா:        அம்மா கூடாத நட்புக்கு வள்ளுவர் ஒரு உதாணம் உதிலை சொல்லிறார்.  அதாவது இணம்போன்று இனமல்லார் கேண்மை எண்டது நல்ல நண்பரைப்       போல நடிக்கிற கூடாத நண்பர் எப்பிடி இருப்பினம் என்டால் பெண்களின்ரை  மனத்தைப் போல அங்கிடு தத்தித் திரிவினம் எண்டு பரிமேலழகர் உரைஎழுதியிருக்கிறார்.

சந்தரி:        அதெப்பிடி எண்டு கேக்கிறன். எல்லப் பெம்பிளையளின்ரை மனங்களும் அங்கும் இங்கும் பாயிற மனமே? பெம்பிளையளுக்கு மனஉறுதி இல்லை, அங்கலாக்கிற  குணம் எண்ட மாதிரியெல்லோ கிடக்குது ஞானா.

ஞானா:        உதைப் பாத்திட்டுத்தான் நான் பரிமேலழகர் பிழைபட உரை எழுதியிருக்கிறார்   எண்டு சொல்லிறன். அப்பா ஏற்றுக் கொள்ளவாரோ எனக்குத் தெரியேல்லை.

அப்பா:        குறள் எண்ட நிலைக் கண்ணாடிக்கு முன்னாலை நீங்கள் இரண்டு பெம்பிளையள்  வந்து நிக்கிறியள். உங்கடை உள்ளங்களின்ரை தோற்றத்தைத் தான் அது பிரதிலிக்கும். பரிமேலழகர் தன்னுடைய காலச் சு10ழ்நிலைக்குத் தக்கபடி பொருள் சொலியிருப்பார். நீங்கள் தற்காலத்துக்கு ஏற்ற கருத்தைச் சொல்லுங்கோவன் பாப்பம்.

ஞானா:        அப்பா நாமக்கல் கவிஞர் என்ன சொல்லிறார் தெரியமோ? உந்தக் குறளிலை வருகிற “இனம்போன்று இனமல்லார்” எண்ட இரண்டு சொற்களையும் இரண்டு இடத்திலை வைச்சுக் குறளுக்குப் பொருள் காணவேணும் எண்டு சொல்லிறார்.  அதாவது,  இனம் போன்று இனமல்லார் கேண்மை இனம்போன்று இனமல்லா மகளிர் மனம்போல் வேறுபடும் எண்டு அமைக்க வேணுமாம்.
       
சுந்தரி:        அப்பிடி அமைச்சால் அப்பா நண்பரைப் போல நடிக்கிற கூடாநண்பர் மனைவிபை;   போல நடிக்கிற விலை மகளிரைப் போல இருப்பார்கள் எண்டு கருத்துவரும்.

ஞானா:        சரியாய் சொன்னியள் அம்மா. பொதுவாய் எல்லாப் பெண்களுடைய மனத்தையும்  குறைசொல்லிறதைத் தவிர்த்து கூடா ஒழுக்கமுடைய பெண்களின் மனத்தைக் குறை சொல்லிறதாய் முடியும்.

அப்பா:        எனக்கென்னமோ உது வலிந்து எடுத்த கருத்துமாதிரித்தான் படுகுது.

ஞானா:    அப்பா நாங்கள் இரண்டுபேரும் பெண்கள். இப்ப குறள் நிலைக் கண்ணாடிக்கு முன்னாலை வந்து நிக்கிறம். அப்ப குறள் எங்கடை மனப்பாங்கைத் தானே காட்டும்.

அப்பா:        சரி, சரி கண்ணாடிக்குக் கல்லெறியாமல் கவனமாய் பாவியங்கோ.

(இசை)
       

       
       

No comments: