நவுரூ முகாம் அகதிகளின் அவசரக் கோரிக்கை

.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நவுரூ தடுப்பு முகாமிற்கு அனுப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களது அவலத்தைக் காண அங்கு நேரடியாக வரும்படி சர்வதேச ஊடங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தங்களுக்கு அவசரமாக உதவுமாறு சுமார் 400 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த அழைப்பினை விடுத்துள்ளனர்.

இந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் அதிகமானோர் இலங்கையர் என்பதுடன் அவர்கள் தற்காலிக குடில்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதோடு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதால் நோய்களுக்கு உள்ளாவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர் பலர் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐந்து பேர் வரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் கடந்த 11 நாட்களாக உணவு ஏதுமின்றியிருப்பதாகவும் இதனால் அவருடைய உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   நன்றி வீரகேசரி
 

No comments: