வானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு- 44. - காசு-

.
ஞானா:        அப்பா….இப்ப சொல்லுங்கோ அப்பா திருக்குறளிலை காசு எண்ட சொல்லு இருக்கோ எண்டு.

அப்பா:        நான் அறிஞ்ச மட்டிலை திருக்குறளிலை காசு எண்ட சொல்லு இருக்கிறதாய்  தெரியேல்லை ஞானா.

ஞானா:        காசு எண்ட சொல்லு எப்படித் திருக்குறளிலை இருக்கும் அப்பா. காசு ஆங்கிலச்சொல்லிலை இருந்து வந்த தமிழ்ச் சொல்லுத்தானே.

சுந்தரி:        முந்தி வந்த செவியைப் பிந்திவந்த கொம்பு பாத்துக் கேட்ட மாதிரி இருக்கு ஞானா  உன்ரை கதை.

அப்பா:        வாரும் சுந்தரி வாரும். நல்ல நேரத்திலை வந்தீர். இவாள் பிள்ளை ஞானாவின்ரை அகராதியிலை காசு எண்ட சொல்லு இங்கிலீசிலை இருந்து தமிழுக்கு வந்திருக்காம்.

ஞானா:    அப்பா cash, chshier, cash box எண்ட சொல்லுகள் எல்லாம் ஆங்கிலச் சொல்லுகள்தானே.

சுந்தரி:        ஞானா தமிழ்ச் சொல்லு காசு எண்டதிலை இருந்துதான் உந்த ஆங்கிலச் சொல்லுகள் வந்திருக்கு எண்டு  நான் கேள்விப்பட்டிருக்கிறன்.

அப்பா:        சுந்தரி, இவள்பிள்ளை ஞானா என்ன விஷயத்தை எடுத்தாலும் ஏதாவது குழப்பமோகுறும்போ இருக்கத்தான் செய்யும். உந்தக் காசு எண்ட சொல்லின்ரை விஷயம் ஒரு         சிக்கலான விஷயம். பிறெஞ்சு மொழியிலை இருந்து ஆங்கிலத்துக்கு வந்தது எண்டு சொல்லிறவையும் உண்டு.

சுந்தரி:    அப்பா இத்தாலி மொழியிலும் காசைப் போலை ஒலிவடிவத்திலை காசு எண்ட சொல்லு இருக்குதாம். ஆனால் நான் சொல்லிறன் காசு தமிழ்ச் சொல்லு. தமிழிலை  இருந்துதான் மற்ற மொழியளுக்குப் போயிருக்குது.

ஞானா:        அம்மா நீங்கள் சொன்னாப்போலை முடிஞ்சுதே. என்ன ஆதாரத்தோடை சொல்லிறியள்
       
அப்பா:        திருக்குறள் கதைக்க வெளிக்கிட்டு எங்கையோ போய் நிக்கிறம். ஞானா திருக்குறளிலை காசு இல்லை. விட்டிடன்.

ஞானா:        காசு பிறமொழியிலை இருந்துதான் தமிழுக்கு வந்திருக்கு எண்டதை அம்மாவை ஒப்புக் கொள்ளச் சொல்லுங்கோ பாப்பாம்.

சந்தரி:        அதெம்பிடி முடியும். 18ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்திலைதான் East India Company நாணயங்கள் அடிக்க வெளிக்கிட்ட பிற்பாடுதான் ஆங்கிலத்திலை cash எண்ட சொல்லு பிரபல்யமானதாம். 7ம்  நூற்றாண்டிலை வாழ்ந்த எங்கடை திருநாவுக்கரசு நாயனார் “வாசி தீரவே காசு நல்குவீர்” என்று தேவாரம் பாடியிருக்கிறார். அதிலை இருந்து அறிஞ்சுகொள் ஞானா செவியோ கொம்போ முந்தினது  எண்டு.

ஞானா:    ஞானா உன்ரை அம்மாவும் லேசுப்பட்ட ஆளில்லை. நீங்கள் இரண்டு போரும் இப்ப திருக்குறளுக்கு வாருங்கோ. திருக்குறளிலை காசைக் குறிக்கிறதுக்கு வள்ளுவர் பொருள் எண்ட சொல்லைத்தான் பவிச்சிருக்கிறார்.

சுந்தரி:        அப்பா, அதிலை சந்தேகம் இல்லை. பொருள் செயல் வகை எண்டு ஒரு அதிகாரமே திருக்குறளிலை இருக்கு. இந்த அதிகாரத்திலை பொருள் என்பது பணத்தைக்குறிக்கும்.

அப்பா:        உண்மைதான் சுந்தரி. 76 வது அதிகாரம். முதலாவது குறள் இலக்கம் 751 அதிலை வள்ளுவப் பெருந்தகை என்ன சொல்லிறார் எண்டதை ஒருக்கால் வாசிச்சுச் சொல்லு பிள்ளை ஞானா.

ஞானா:        இதுதான் அந்தக் குறள் அப்பா வாசிக்கிறன் கேளுங்கோ.

            “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
             பொருளல்ல தில்லை பொருள்.”


        அப்பா இந்தக் குறளிலை பொருள் என்ட சொல்லு நாலு இடத்திலை வருகுது.  இதிலை காசு, பணம் அல்லது செல்வம் என்ட அர்த்தம் எந்தப் பொருளிலை  வருகுது என்டு கேக்கிறன்.

அப்பா:        நல்ல கேள்விதான் ஞானா. முதலிலை வாற பொருளல்ல வரை என்டுது மதிக்கத்தகாதவர்களை எண்டு அர்த்தம். இரண்டாவதாக வாற பொருளாகச் செய்யும் எண்டது மதிக்கச் செய்யும் என்டு அர்த்தம், மூன்டாவதாக வாற பொருள் அல்லதில்லை  எண்டது செல்வத்தை அல்லது பணத்தை விட எண்டு அர்த்தம் நாலாவதாக வாற பொருள் எண்டது உடைமை எண்டு அர்த்தம்.

சுந்தரி:        அப்பா, மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கச் செய்கிற செல்வத்தை விட மக்கள் தேடவேண்டிய உடைமை வேறென்றும் இல்லை. என்டதுதானே இந்தக் குறளின்ரை முழுக் கருத்து.

அப்பா:        ஓம் சுந்தரி. இதிலை செல்வம் என்டது காசு, பணம், நிலபுலம் எல்லாத்தையும் சேர்த்துத்தான் சொல்லப்பட்டிருக்கு. ஞானா இப்ப நீ என்ன நினைக்கிறாய்?

ஞானா:        அப்பா, திருக்குறளிலை காசு என்ட சொல்லு தனிப்பட இல்லாவிட்டாலும், பொதுவாகச் செல்லவம். பணம், பொருள் என்ட அர்த்தத்திலை இருக்கு என்டு ஒப்புக்கொள்ளிறன்.

சுந்தரி:        அதோடை ஞானா காசு என்ட சொல்லு தமிழ்ச் சொல்லு, வேறை மொழியிலை இருந்து கடன் வாங்கேல்லை என்டதையும் ஒத்துக்கொள்.

ஞானா:        அம்மா ஒரு விஷயத்துக்குப் பல நம்பிக்கைகள் இருக்கு என்று அறிந்தால் அவற்றை ஆராய்ந்து உண்மை காண்பதுதான் சிறப்பான கொள்கை. காசு என்ட சொல்லுக்கு அபிப்பிராய பேதங்கள் இருந்தால் நாங்கள் செல்லிறதுதான் சரி என்டு நிக்கக் கூடாது. நீங்கள் என்ன நினைக்கிறியள் அப்பா?

அப்பா:    சுந்தரி, ஞானா சொல்லிறதிலையும் நியாயம் இருக்கு. அபிப்பிராய பேதங்களை  வைச்சு வாதிடுவதிலை பிரயோசனம் இல்லை. அழுங்குப்பிடி வாதங்களிலை எந்தவித நன்மையும் கிடையாது. காசு எந்த மொழியிலை இருந்து வந்தது என்றால் என்ன? இப்போ அந்தச் சொல்லு எல்லாரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல்லாகி விட்டது. பாவனையில்    இருக்கிறது. அத்தோடு நின்றுவிடுவது நல்லது.

சுந்தரி:        வங்கியிலை காசெடுக்கப் போகவேணும் என்டு சொன்னியள் அப்பா. எப்ப போகப் போறியள். பேட்டு வரேக்கை ஒரு போத்தல் நலலெண்ணெய், அந்த ளிiஉந ளாழி இலை வாங்கியாருங்கோ.

அப்பா: 
       ஓமோம். கதையிலை மறந்து போனன். நான் போட்டு வாறன்.


(இசை)

No comments: