இலங்கைச் செய்திகள்

.
ஒரு இலட்சம் பேரை தடுத்து வைப்பதற்கு தடுப்பு முகாம் அரசினால் நிர்மாணம்: அருண சொய்சா

மீள் குடியேறிய மக்களின் கூடாரங்களுக்குள் வெள்ளம்: மீண்டும் இடம்பெயரும் வன்னி மக்கள்

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: உதவிய நபருக்கு 35 வருட சிறைத் தண்டனை

ஒரு இலட்சம் பேரை தடுத்து வைப்பதற்கு தடுப்பு முகாம் அரசினால் நிர்மாணம்: அருண சொய்சா

ஒரு இலட்சம் பேரை தடுத்து வைப்பதற்கு ஏதுவான தடுப்பு முகாமொன்றை அரசாங்கம் நிர்மாணித்துள்ளது. இது எதிர்காலத்தில் இலங்கையில் உருவாகவுள்ள இராணுவ ஆட்சிக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாகும் என்று ருகுணு மக்கள் கட்சியின் தலைவர் அருண சொய்சா தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலில் அரசாங்கம் தோல்வியுற்றாலும், பலாத்காரமாக ஆட்சியிலிருக்கும் திட்டங்களை தயாரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அருண சொய்சா இதனைத் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி   





 மீள் குடியேறிய மக்களின் கூடாரங்களுக்குள் வெள்ளம்: மீண்டும் இடம்பெயரும் வன்னி மக்கள்
By General
2012-10-22
வன்னியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை யையடுத்து மீள்குடியேறிய மக்களின் கூடாரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வரு கின்றனர். 

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வன் னியில் கடும் வரட்சியும் நீர்பற்றாக்குறையும் ஏற் பட்டது. விவ சாய நிலங்கள் வரட்சியால் ௭ரி ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. மக்களுக்கு உண வுப் பற்றாக்குறை ஏற்பட்டது. குடிநீருக்கு அல்லாடிய மக்கள் பல கிலோ மீற்றர் தூரம் சென்று குடிநீரை ௭டு த்தனர்.

அத்துடன் பல இடங்களில் பணம் கொடுத்தும் வாங்கிக் குடித்தார்கள். மழையைப் பார்த்து வரட்சிக்கு முடிவு வருகிறது ௭ன்று மகி ழ்ந்த வன்னி மக்கள் தாம் வசிக்கும் தற்காலிக கூடா ரங் களுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பெரும் சிரம ங்களை ௭திர்நோக்கி வருகின்றனர். குழந் தை கள், முதி யவர்கள், பெண் கள் ௭ன அனை வரும் அசெளகரியங்களை ௭திர் நோக் கி வருகின்றனர்.

வன்னியில் மீள்குடியேற்றம் நடந்த பெரு ம்பாலான இடங் களில் வீட்டுத் திட்டங்கள் இன்னும் வழங்கப்பட வி ல்லை. மக்கள் தொடர்ந்தும் தற்காலிக கூடாரங்களிலேயே வசித்து வருகின்றனர். இந்த தற்காலிக கூடாரங்கள் தறப்பாளி னா லும் தகரங் களி னாலும் அமைக்கப்ப ட்டவை.
ஒரு சில மாதங்கள் வசிப் பதற்காக அமைக்கப்பட்ட இந்த கூடாரங்களில் மூன் றாவது ஆண்டு மழைக்காலத்திலும் வன்னி மக்கள் வாழ்ந்து கொ ண்டிருக்கிறார்கள். பாது க ாப்பும் சுகாதாரமும் இல்லாத இந்தக் கூடாரங்கள் கொடிய நோய்த்தெ ாற்று க்களை ஏற்படு த்தக்கூடியவையாக வுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக மக்களு க்கான வீட்டுத் திட் டத்தை வழங்குகிறோம் ௭ன்று சொல்லி அரசு காலத்தைக் கடத்தி வரு வதாக மக்கள் கவலை தெரிவிக்கி ன் றனர்.       நன்றி வீரகேசரி




 பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: உதவிய நபருக்கு 35 வருட சிறைத் தண்டனை
By General
2012-10-23
 
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொழும்பு இராணுவ தலைமையகத்திற்கு அருகில் வைத்து கொலை செய்ய திட்டமிட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினருக்கு உடந்தையாக செயற்பட்ட நபர் ஒருவருக்கு 35 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விசாரணை குறித்து கேகாலை மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேனகா விஜேசுந்தரவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டுதாரி பெண்ணுக்கு உதவியளித்தமை என நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ரம்புக்கணை பகுதியைச் சேர்ந்த எஸ்.சூரியகுமார் என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குறித்த தற்கொலைத் தாக்குதலில் முன்னாள் இராணுவத் தளபதி பலத்த காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.      நன்றி வீரகேசரி

No comments: