உலகச் செய்திகள்

.

இமயமலையில் பனிச்சரிவு: 9 பேர் பலி

பாகிஸ்தானில் நிர்வாணக் கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட மதகுருவின் மகள்

'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' தயாரிப்பாளரை கொல்வதற்கு 100,000 டொலர் சன்மானம்

சிரியாவின் அநேக பிராந்தியங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

பிரித்தானியாவில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை

சிரிய தலைநகரில் இரட்டைக் குண்டுவெடிப்புக்கள்

அந்தரங்கங்களை அம்பலப்படுத்தவுள்ள மோனிகா லெவின்ஸ்கி

பாகிஸ்தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?: ஹீனா ரப்பானி. பிலாவல் பூட்டோ காதல் விவகாரம்
  
 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தின் இயக்குனர் கைது!

 நேபாளத்தில் விமான விபத்து: 19 பேர் பலி
இமயமலையில் பனிச்சரிவு: 9 பேர் பலி
By General
2012-09-24
நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஐரோப்பியர்கள் மற்றும் பிற நாட்டைச் சேர்ந்த சிலர் 7000 மீற்றர் உச்சியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அதன்போது மலைக்கு மேல் படர்ந்திருந்த பனி திடீரென சறுக்கி வந்து மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோரை இழுத்து சென்றது.


வெள்ளமாய் இறங்கிய பனியில் புதைந்து குறைந்தது 9 பேர் பலியாயினர். 10 பேர் காயமடைந்தனர் இன்னும் ஆறுபேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த 10 பேர் காப்பற்றப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.   நன்றி வீரகேசரி

பாகிஸ்தானில் நிர்வாணக் கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட மதகுருவின் மகள்
By General
2012-09-24
மதகுரு ஒருவரது மகனின் முறையற்ற செயலுக்காக அவரது மகள் நிர்வாணக் கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
அல்லாஹ் தத்தா ௭ன்ற மதகுருவின் மகள்மாரில் ஒருவரே இவ்வாறு நிர்வாணமாக 5 இளைஞர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. அல்லாஹ் தத்தாவின் மூன்று மகள்மாரும் பொருட்களைக் கொள் வனவு செய்வதற்கு கடைத் தெருவுக்குச் சென்று விட்டுத் திரும்பிய வேளை பெய்ஸலாபாத் மாவட்டத்திலுள்ள நவான் லாகூர் ௭னும் இடத்தில் அவர்கள் 5 இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இரு மகள்மார் ஒருவாறாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆனால் மூன்றாவது மகளான ரஹிலா அவர்களிடம் சிக்கிக் கொள்ளவும் அவர்கள் அவரது ஆடைகளைக் கிழித்தெறிந்து நிர்வாணமாக்கி அவரைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளனர். அதன் பின் அவர்கள் ரஹிலாவை நிர்வாணக் கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
மேற்படி யுவதியைக் காப்பாற்ற முயற்சிப்பவர்களுக்கும் அதே கதியே நேரும் ௭ன அவர்கள் கிராமத்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
தாக்குதலை நடத்திய இளைஞர்களில் ஒருவர் தனது சகோதரியை மதகுருவின் மகன் கேலி செய்ததாக முறைப்பாடு செய்ததையடுத்து, ஊர்ப் பெரியவர்கள் மதகுருவின் மகனுக்கு கிராமத்துக்குள் இரு வருட காலத்துக்குப் பிரவேசிக்கக் கூடாது ௭ன உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யுவதியை நிர்வாணக் கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற 5 இளை ஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' தயாரிப்பாளரை கொல்வதற்கு 100,000 டொலர் சன்மானம்
By General
2012-09-23
இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்தின் தயாரிப்பாளரை கொல்வதற்கு பாகிஸ்தானிய புகையிரதத்துறை அமைச்சரான கோலம் அஹ்மட் பிலோரே 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்குவதாக அறிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தின் காட்சிகள் காரணமாக முஸ்லிம்கள் உலகமெங்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானிலும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதுடன் பலர் கொல்லப்பட்டுமுள்ளனர்.

இந்நிலையிலேயே பாகிஸ்தானிய அமைச்சர் சர்ச்சைக்குரிய இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்காரணமாக அமெரிக்காவானது பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  நன்றி வீரகேசரி


சிரியாவின் அநேக பிராந்தியங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு
By General
2012-09-24
சிரியாவின் அநேக பிராந்தியங்களின் கட்டுப்பாட்டை தாம் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டுக் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமது கட்டளை நிலையத்தை துருக்கியிலிருந்து சிரியாவிலுள்ள விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இடம்மாற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்களின் சிரிய விடுதலை இராணுவ அமைப்பு தெரிவித்தமைக்கு மறுநாளே இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
அதேசமயம் சிரிய நெருக்கடிகள் குறித்து ஐக்கிய நாடுகள் தலைவர் பான் கீ மூனும் ஐக்கிய நாடுகள் மற்றும் அரபு லீக்கின் சமாதானத் தூதுவர் லகடார் பிராஹிமியும் சனிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள் ளனர்.
இந்த மாத ஆரம்பத்தில் சிரியாவுக்கான தூதுவராக நியமனம் பெற்ற பிராஹிமி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் மற்றும் ௭திர்க் குழுவினர் ஆகியோருடன் நடத்திய தனது முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் குறித்து இன்று திங்கட்கிழமை உரையாற்றவுள்ளார்.

சிரியாவில் கடந்த 18 மாத காலமாக இடம்பெற்று வரும் வன்முறை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச சமூகம் முயற்சிகளை முன்னெடுத்துள்ள நிலையில் சிரியாவில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கப் படையினர் டமஸ்கஸ் நகரின் அயலிலுள்ள பிரதேசங்களான அலெப்போ, இட்லிப், ஹமா, ஹொம்ஸ், டரா ஆகிய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் உக்கிர ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

அலெப்போவில் பஸ்டான் அல் காஸர் மற்றும் பஸ்டான் அல் ஸஹ்ரா பிரதேசங்களில் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக் கு மிடையே உக்கிர துப்பாக்கிச் சமர் இடம் பெற்றுள்ளது.
சிரியாவில் சனிக்கிழமை இடம்பெற்ற வன்முறைகளில் 88 பொதுமக்கள், 30 கிளர்ச்சியாளர்கள், 32 படைவீரர்கள் உட்பட 150 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் டமஸ்கஸில் மேலும் 25 சடலங்கள் அன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டன.   நன்றி வீரகேசரி 
பிரித்தானியாவில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை
By General
2012-09-26
பிரித்தானியாவில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதனால் அங்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் வட கிழக்கு மற்றும் வட மேற்கு பிராந்தியங்களிலேயே இவ் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல பிராந்தியங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் வீடுகளும் பல வீதிகளும், புகையிரதப் பாதைகளும், வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.


கேம்பிரிட்ஜ்ஷியரில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட வீதி விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.

மற்றுமொரு இடத்தில் தாயொருவரும் மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலை தொடர்ந்தால் உயிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
 நன்றி வீரகேசரி  சிரிய தலைநகரில் இரட்டைக் குண்டுவெடிப்புக்கள்
By General
2012-09-27
சிரிய தலைநகர் டமஸ்கஸில் இராணுவ பொது உத்தியோகத்தர்களுக்கான தலைமையகத்துக்கு அண்மையில் இரட்டைக் குண்டுவெடிப்புக்கள் புதன்கிழமை இடம்பெற்றுள்ளன.
அரசாங்கக் கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் இடம்பெற்ற இந்தக் குண்டு வெடிப்புகளையடுத்து இராணுவ பொது உத்தியோகத்தர்களுக்கான தலைமையகக் கட்டடங்களில் பிரதான கட்டடம் தீப்பற்றி ௭ரிந்துள்ளது.
இரு தெருவோர குண்டுகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த சிரிய தகவல் அமைச்சர் ஒம்ரன் சோபி, குண்டுகளிலொன்று தலைமையகக் கட்டட வளாகத்தில் வைக்கப்பட்டிருந்திருக்கலாம் ௭ன சந்தேகிப்பதாக கூறினார். மேற்படி குண்டுகள் 15 நிமிட இடைவெளியில் சில நூறு யார்கள் தூர வித்தியாசத்தில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குண்டுவெடிப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள உமேயாட் சதுக்கத்துக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் பதவி விலக வேண்டும் ௭ன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் ஏனைய மேற்குலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத்தில் அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே இந்தக் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் ௭வரும் உயிரிழந்ததாக இதுவரை அறிக்கையிடப்படவில்லை ௭னவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியாவெங்கும் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வன்முறைகளில் 114 பேர் பலியாகியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கட்டார் ஆட்சியாளரான ஷெயிக் ஹமாட் பின் கலிபா அல் – தானி, பஷார் அல் அஸாத்தின் ஆட்சிக்கு ௭திராக தலையீடுகளை மேற்கொள்வதற்கும் சிரியாவிலுள்ள அகதிகளை பாதுகாக்க அந்நாட்டிற்கு மேலாக விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்ட வலயத்தை பிரகடனப்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.
சிரிய பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினதும் ஏனைய சர்வதேச நாடுகளதும் முயற்சிகள் தோல்வி கண்டுள்ளதால் அரபு நாடுகள் அது தொடர்பில் நடவடிக்கை ௭டுக்கவேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
அரபு நாடுகள் தமது மனிதாபிமான, அரசியல் மற்றும் இராணுவக் கடமைகளின் பிரகாரம் சிரியாவில் இரத்த ஆறு பாய்வதை தடுத்துநிறுத்துவதற்கு தேவையான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் ௭ன அவர் கூறினார். அதேசமயம் பராக் ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகையில், பஷார் அல் அஸாத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படுவதன் மூலமே சிரிய மக்கள் துன்பப்படுவது நிறுத்தப்படுவதுடன் புதிய உதயம் ஆரம்பமாகும் ௭ன்றும் தெரிவித்தார்.     நன்றி வீரகேசரி  அந்தரங்கங்களை அம்பலப்படுத்தவுள்ள மோனிகா லெவின்ஸ்கி
By General
2012-09-27
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுடனான காதல் தொடர்பில் தான் வெளீயிடவுள்ள புத்தகத்தில் கொட்டித் தீர்க்க முடிவெடுத்துள்ளார், அவரின் முன்னாள் காதலி மோனிகா லெவின்ஸ்கி.

அமெரிக்காவில், 1993 முதல், 2001ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் பில் கிளின்டன்.

ஆனால், ஆட்சியின் கடைசி காலத்தில் பாலியல் புகாரில் சிக்கி, பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, சீரழியும் நிலைக்கு ஆளானார், கிளின்டன். அமெரிக்க ஜனாதிபதிகளில் எண்ட்ரூ ஜொன்சனுக்கு பின், கண்டனத் தீர்மானத்தைச் சந்தித்த அடுத்த ஜனாதிபதி பில் கிளின்டன் மட்டுமே.

புகழின் உச்சியில் இருந்த கிளின்டனை கீழே விழ வைத்தவர், அவரின் உதவியாளர், மோனிகா லெவின்ஸ்கி.கடந்த, 14 ஆண்டாக, அமைதியாக இருந்த மோனிகா, இப்போது மீண்டும், பழைய பாலியல் புகாருக்கு புத்துயிர் கொடுக்க இருக்கிறார்.

கிளின்டனுடன் இருந்த அந்தரங்க உறவை, புத்தகமாக எழுதி, வெளிச்சம் போட்டு காட்டும் வேலையில் அதிரடியாக இறங்கி உள்ளார்.

புத்தகத்தில், கிளின்டனுடன் நடத்திய காதல் களியாட்டம், காதலின் உச்சத்தில் சொக்கிப்போய், அவருக்கு எழுதிய கடிதங்கள் என, எல்லாவற்றையும் அந்தரங்கமாக எழுதித் தள்ள திட்டமிட்டுள்ளார்.

இதற்கு முன் அளித்த பேட்டி எதிலும், மோனிகா, அந்தரங்க விஷயங்களை சொல்லவில்லை. கிளின்டனுடன் உறவை முறித்துக் கொண்ட பின், முதுகலைப் பட்டத்தை பெறுவதில் முனைப்பு காட்டினார். சிறிது காலம், பத்திரிகை ஒன்றில் நிருபராக பணியாற்றினார். அதற்கு மேல், பெரிதாக எதையும் அவரால் சாதிக்க முடியவில்லை. காரணம், கிளின்டனின் இடையூறு."எல்லாவற்றையும் கெடுப்பது கிளின்டன் தான்" என, மோனிகாவின் புதிய காதலர், வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதற்கு பழிவாங்க துடித்த, மோனிகா எடுத்த அதிரடி முடிவுக்குப் பலனாக, அவர் எழுதும் புத்தகத்துக்கு விலையாக, 60 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தன் மனைவி ஹிலாரியை, "உணர்ச்சி இல்லாத ஜடம்' என்று சொல்லி, கிளின்டன் சிரிப்பாய் சிரித்த கதையையும், மோனிகா, புத்தகத்தில் விவரிக்க உள்ளார்.     நன்றி வீரகேசரிபாகிஸ்தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?: ஹீனா ரப்பானி. பிலாவல் பூட்டோ காதல் விவகாரம்
By General
2012-09-27
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானியும், அந்நாட்டு ஜனாதிபதி சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவும் தீவிரமாக காதலித்து வருவதாக இடையே காதல் என பங்களாதேஷ் நாட்டு பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஹீனா யார் யாருக்கு தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டார் என்ற விவரத்தை கேட்டு அவரது கணவர் பாகிஸ்தான் மத்திய புலனாய்வுத் துறையை அணுகியுள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

இக்காதல் தொடர்பாக பாகிஸ்தானில் பல வாரங்களாக கிசுகிசுப்பட்டது. இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டு பத்திரிக்கை ஒன்று இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

தன்னைவிட கிட்டத்தட்ட 11 வயது குறைவான பிலாவலை ஹீனா காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் பாகி்ஸ்தானை விட்டு வெளியேறி ஸ்விட்சர்லாந்தில் வசிக்க முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்து அறிந்த சர்தாரி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான ஹீனாவை மணக்கக் கூடாது என்று தனது மகனைக் கண்டித்துள்ளதாகவும் குறித்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ஹீனாவை பிலாவல் மணந்தால் அவரது அரசியல் வாழ்க்கை பாதித்து விடுமே என்ற கவலையில் சர்தாரி உள்ளதாக அந்த பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதைவிட மேலும் பல சுவாரஸ்யமான விடயங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஹீனாவின் கணவரான பிரோஸ் குல்சார் ஒரு தொழில் அதிபராவார். மனைவியை கட்டுப்படுத்தி வைக்கும் படி, ரப்பானியின் கணவர் குல்சாருக்கு சர்தாரி மறைமுகமாக இடையூறு செய்துள்ளாராம்.

இதனையடுத்து குல்சார் மனைவியைக் கண்டித்த போதும் கணவரை விவாகரத்து செய்ய தயாராக உள்ளதால், கணவரின் பேச்சை உதாசீனப்படுத்தி விட்டாராம் ஹினா ரப்பானி.

இந்நிலையில் அவர் தனது மனைவி யார், யாருடன் தொலைபேசியில் பேசுகிறார் என்ற தகவலைக் கேட்டு மத்திய புலனாய்வுத் துறையின் உதவியை நாடியுள்ளாராம்.

அதிலும் குறிப்பாக ஹீனா அழைப்பை மேற்கொள்ளும் இரண்டு எண்கள் யாருடையது என்று தெரிந்து கொள்ள அவர் விரும்புகிறாராம். இதன் மூலம் ஹீனா-பிலாவல் காதல் வதந்தி அல்ல என்று பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்.

இச் சம்பவம் உண்மையாகும் பட்சத்தில் பாகிஸ்தான் அரசியலில் பல அதிரடி மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம்.   நன்றி வீரகேசரி
  'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தின் இயக்குனர் கைது!
By General
2012-09-28
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த அமெரிக்கரான நகோலா பேசலி நகோலாவை அமெரிக்கப் பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது நகோலா இயக்கிய 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படம். இதில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருந்தார் நகோலா. இதனால் இஸ்லாமியர்கள் கடும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

லிபியாவில் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கி அங்கிருந்த அமெரிக்க தூதரைக் கொலை செய்தனர்.

உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்காவுக்கு எதிராக பெரும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய நகோலாவை அமெரிக்க பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர். ஆனால் இவ் விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்படவில்லை. கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு வேறொரு வழக்கில் 21 மாத சிறைத் தண்டனை விதித்திருந்தது. இருப்பினும் பின்னர் அது புரேபஷனாக அது மாற்றப்பட்டது - அதாவது காத்திருப்புக் காலம். இந்த காத்திருப்புக் காலத்தின்போது அவர் இணையதளத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக தற்போது அவரைக் கைது செய்துள்ளனராம்.

காத்திருப்புக் காலத்தின்போது அவர் ஐந்து ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், கனணீ, இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதை மீறியதற்காகத்தான் தற்போது கைது செய்துள்ளனர். மற்றபடி இஸ்லாமை இழிவுபடுத்திய குற்றத்திற்காக அவரைக்
கைது செய்யவில்லை அமெரிக்க காவல்துறை.

நகோலாவை கைது செய்த பொலிஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி


 நேபாளத்தில் விமான விபத்து: 19 பேர் பலி

By General
2012-09-28

நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து எவரெஸ்ட் பிராந்தியத்தை நோக்கிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 19 பேரும் பலியாகியுள்ளனர்.

எவரெஸ்ட் பிராந்தியத்திலுள்ள லுக்லா நகரை நோக்கிச் சென்ற வேளையிலேயே குறித்த சிறிய ரக விமானம் மனோஹரா என்ற ஆற்றங்கரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.


விமானம் புறப்பட்டு சில நிமிடங்களுக்குள் அதன் பின்பக்கம் சூடாக மாறுவது உணரப்பட்டதாகவும் இதனால் விமானிகள் விமானத்தை ஆற்றங்கரையில் தரையிறக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது விமானத்தில் 16 பயணிகளும் 3 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். பயணிகளில் குறைந்தது 12 பேர் வெளிநாட்டுப் பிரஜைகளாவர்.விபத்தில் சிக்கி உயிரிழந்த வெளிநாட்டவர்களில் 9 பேர் பிரித்தானியர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தின் கறுப்புப் பெட்டி தற்போது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதும் இயந்திரக்கோளாறே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.


நேபாளத்தின் மலைப் பிராந்தியங்களில் சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

பாதுகாப்பற்ற சிறிய விமானங்களில் பயணிக்கும் போது பிரயாணிகள் கவனமாக இருக்கவேண்டுமென நேபாள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.No comments: