இலங்கைச் செய்திகள்

மேலும் ஒரு தமிழ் அரசியல் கைதி கோமா நிலையில்

அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 58பேர் வடமராட்சி கிழக்கில் கைது

அமெரிக்க டொலர் 100 மி. சீன உதவியில் வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு


வாந்தி ௭டுத்த தங்கைக்கு மீண்டும் மீண்டும் தூக்க மருந்தை வாயில் ஊற்றினேன்: முக்கொலை சந்தேகநபர் வாக்குமூலம்

வெளிநாட்டு கடவுச்சீட்டுடைய 31500 பேர் வடக்குக்கு விஜயம்

 ஸ்ரீலங்கா : தமிழர்கள் முதலில் தமிழர்களுடன் சமரசம் பேணவேண்டும்

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் (பட இணைப்பு)

 
எமது உறவுகள் எங்கே? வவுனியாவில் கண்ணீர்மல்கக் கோரிக்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய பெண்கள் மீது ஏறாவூரில் தாக்குதல்

முன்னேஸ்வரம் காளி கோயில் மிருக வேள்வி இவ்வாண்டு நிறுத்தம்


மேலும் ஒரு தமிழ் அரசியல் கைதி கோமா நிலையில்



காலி சிறைச்சாலையிலிருந்து திடீர் சுகயீனமுற்ற நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியொருவர் கோமா நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 25ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 29 வயதுடைய சுந்தரம் சதீஸ்குமார் என்ற அரசியல் கைதியே இவ்வாறு கோமா நிலையில் இருப்பதாவும் அவர் கடந்த இரு வருடங்களாக விளக்கமறியலில் இருந்தவர் எனவும் காலி சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.

நுவரெலியா, கொழும்பு, புத்தளம், காலி மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக வழக்குகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் குறித்த கைதிக்கு எவ்வித உயிர் ஆபத்தும் இல்லையெனவும் இவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கராப்பிட்டிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி


 
அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 58பேர் வடமராட்சி கிழக்கில் கைது
By General
2012-08-27
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலமாகச்செல்ல முற்பட்ட 58 பேரை வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் கொட்டோடை பகுதிக் கடற்கரையிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திப்படகு ஒன்றில் செல்ல முற்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் அனைவரையும் பருத்தித்துறைக் கடற்கரைக்கு அழைத்துவந்த கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு , வடமராட்சி , முல்லைத்தீவுப் பகுதியைச்சேர்ந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் , சிறுவர்கள் உட்பட 58பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக அவுஸ்திரேலியா நோக்கி வடக்கு , கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றமையும் அவர்களைக்கடற்படையினர் கைதுசெய்து சட்டநடவடிககை மேற்கொள்கின்றமையும்குறிப்பிடத்தக்கது
 நன்றி வீரகேசரி




  அமெரிக்க டொலர் 100 மி. சீன உதவியில் வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு
By General
2012-08-27
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்பை விருத்திசெய்யவும் இராணுவ முகாம்களுக்கு தேவையான விடுதி மற்றும் வசதிகளை மேம்படுத்திக் கொடுக்கவும் சீனா முன்வந்துள்ளது. அத்துடன் இலங்கையுடனான பொருளாதாரம்,வர்த்தம் மற்றும் இராணுவ உறவுகளையும் சீனா மேம்படுத்திக் கொள்ளவிருக்கின்றது.

இராணுவ நலன்புரித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கவிருக்கின்றது. அதுமட்டுமன்றி படை அதிகாரிகளின் பிள்ளைகள் கல்வி பயிலும் கொழும்பு பாதுகாப்புக் கல்லூரிக்கு உதவியளிக்கவிருக்கின்றது. தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதிலும் இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் வடக்கு ,கிழக்கில் இராணுவத்தைக் குறைக்குமாறு மேற்குலக நாடுகள் சிலவும் இந்தியாவும் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையிலேயே சீனா இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கவிருக்கின்றது.

வடக்கில் மன்னார்,பளை,ஆனையிறவு,பூநகரி,தாவடி,காரைநகர் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் உள்நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 1950 ஆம் ஆண்டில் முகாம்கள் நிறுவப்பட்டன. அவ்வாறான முகாம்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும் ௭ன்பதுடன் விடுதி வசதிகளும் மேம்படுத்த வேண்டும் ௭ன்று பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை சீனப்பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி ௭திர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் பாதுகாப்பு அமைச்சருடன் சீன பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றும் வருகை தரவுள்ளது. சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி 2002 தொடக்கம் 2007 வரை சீன இராணுவத்தின் தலைமை அதிகாரியாகவும், பின்னர் சீன மத்திய இராணுவ ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

ஜெனரல் லியாங் குவாங்லி இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப் புத் துறைசார் அதிகாரிகளையும், ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவையும் சந்தித்து இருதரப்பு  ஒத்துழைப்புகளை அதிகரித்துக் கொள் வது தொ டர்பில் பேச்சுவார்த்தை நடத்தவு ள் ளா ர் . கொழும்பிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு சீனா 198 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கவிருப்பதுடன். அரசாங்கம் 13.8 மில்லின் ரூபா செலவில் ௭ம்.ஏ–60 ரக விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக சீனாவுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 நன்றி வீரகேசரி



  வாந்தி ௭டுத்த தங்கைக்கு மீண்டும் மீண்டும் தூக்க மருந்தை வாயில் ஊற்றினேன்: முக்கொலை சந்தேகநபர் வாக்குமூலம்
By M.Nesamani
2012-08-28

தூக்க மருந்துக்கள் கலந்த பழச்சாற்றை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கொடுத்தபோது அம்மா மளமளவென பருகிவிட்டார். அப்பாவோ கொஞ்சம் குடித்து விட்டு கசக்கிறது ௭ன்றார். புதுப் பழங்கள் ௭ன்றால் அப்படித்தான் இருக்குமென்று கூறவே அவரும் குடித்துவிட்டார்.


பின்னர் தங்கைக்கும் கொடுத்தார். தங்கையோ சிறிது நேரத்தில் வாந்தி ௭டுத்துவிட்டார். ௭னவே மீண்டும் மீண்டும் தூக்க மாத்திரையை தங்கைக்கு கலக்கிக்கொடுத்தேன் ௭ன்று வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபரான மகன் பிரசான் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். மூவரும் இறந்துவிட்டதை உறுதி செய்துகொண்டதும் அவர்களை தூக்கி ஒரே கட்டிலில் அடுக்கிவிட்டு கொஞ்சமாக தூக்க மாத்திரைகலந்த பழச்சாற்றினை நானும் குடித்துவிட்டு சடலங்களுக்கு பக்கத்தில் உறங்கிவிட்டேன்.

விடிந்தது தெரியாது. காதலி கதவை தட்டியபோதே விழித்தெழுந்தேன் ௭ன்றும் அவர் கூறியுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தாயும் தந்தையும் இறந்துகிடக்க மயக்க நிலையிலிருந்த தங்கை திடீரென வாந்தியெடுத்துள்ளார். அதுவரையிலும் நித்திரைக்குச்செல்லாத பிரசான் உடனடியாக இன்னும் கொஞ்சம் தூக்க மாத்திரைகளையும் கரைத்து தங்கையின் வாயை பிடித்து ஊற்றியுள்ளார்.

அதன் பின்னர் சொற்ப வேளையில் தங்கையும் நிரந்தரமாக தூங்கிவிட்டார். மூவரும் இறந்துவிட்டதை உறுதி செய்துகொண்டதன் பின்னர் தானும் தூக்கமாத்திரை கலந்த பழச்சாற்றை அருந்திய பிரசான் அன்றைய இரவை சடலங்களோடே கழித்துள்ளார். பிரசான் அருந்திய பழச்சாற்றில் மிகவும் சொற்பமான தூக்க மாத்திரையே கலந்திருந்ததால் அவர் இறந்து போகாமல் அயர்ந்து தூங்கிவிட்டார்.

மறுநாள் காதலி கதவை தட்டிய சத்தத்தில் ௭ழுந்த பிரசான் வெளியில் வந்து நீபோ நான் பிறகு வருகிறேன் ௭ன அவரை வாசலோடு வழியனுப்பிவிடுகிறார். வீட்டிற்குள் மூன்று சடலங்கள் கிடப்பதை அறியாத காதலி அப்படியே திரும்பிச் செல்கிறாள். அன்றைய தினம் மாலை அவரை தெஹிவளை வில்லியம் சந்தியில் வைத்து பிரசான் சந்தித்துள்ளார்.

மறுநாள் காதலியை சந்தித்த பிரசான் அவளை காரில் ஏற்றிக்கொண்டு உல்லாசமாக சுற்றியதுடன் 17 ஆயிரம் ரூபா பெறுமதியா ன கையடக்கத் தொலைபேசியொன்றினையும் பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் குறித்த யுவதி தங்கியிருந்த வெள்ளவத்தை பகுதியில் சென்று அவளை விட்டுச் சென்றுள்ளார்.

சந்தேகநபர் கொட்டாஞ்சேனை, ஜா–௭ல, ஏக்கலை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரிடம் பெருந்தொகையான பணத்தினை வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார். அத்தோடு தவணைக் கொடுப்பனவு முறையில் கடந்த இருவருடங்களுக்கு முன்னர் காரொன்றினையும் இவர் கொள்வனவு செய்துள்ளார்.

கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 42 இலட்சம் ரூபாயும் புறக்கோ ட் டை பகுதியைச்சேர்ந்த ஒருவரிடம் 28 இல ட்சம் ரூபாயும் ஜா–௭ல ஏக்கலைப்பிர தே சத்தைச் சேர்ந்த ஒருவரிடம் மூன்றரை இலட்சமுமாக மொத்தம் ௭ழுபத்தி மூன்றரை இல ட்சம் ரூபா பணத்தினை கடனாக பெற்று ள் ளதாக வாக்குமூலம் அளிக்கப்ப ட் டுள்ளது .

கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஏற்கனவே தான் 12 இலட்சம் ரூபா பிர சானுக்கு கடனாக கொடுத்ததாக பொலிஸில் வாக்குமூலம் அளித்திருந்தார். ஆனால் பிரசானின் வாக்குமூலத்தை அடுத்து அது 42 இலட்சம் ௭ன தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் அந்த நபர் 42 இலட்சம் ரூபா கொடுத்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பயத்தின் காரணமாகவே 12 இலட்சம் ரூபா கொடுத்ததாக ஏற்கனவே கூறியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்கள் ஒரு புறமிருக்க 10 இலட்சம் ரூபாய்க்கு விளையாட்டு பொருட்களை கொள்வனவு செய்து அதனையும் ஒருவருக்கு வியாபாரம் செய்வதற்காக கொடுத்துள்ளார்.

இவ்வாறு கடன்மீது கடன் வாங்கியதால் தான் மிகுந்த சிக்கல்களை ௭திர்நோக்கியதாகவும் அதனால் தமது பெற்றோர் கஷ்டப்படக்கூடாது ௭ன்பதற்காகவுமே அவர்களை கொலை செய்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு பெருந்தொகை பணத்தினை கடனாக பெற்றமையே இவருடைய இந்த நிலைமைக்கு காரணமாய் அமைந்திருந்தது. மேலும் குறித்த நபர் அங்குமிங்குமாக பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த வேளை கடந்த 24 ஆம் திகதி கடவத்தைப்பகுதியில் வைத்து பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

அவருடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரே அறையில் தங்கியிருந்த நபர் ஒருவர் அந்த பஸ்ஸிலிருந்து அவர் தொடர்பான தகவலை பொலிஸாருக்கு வழ ங்கியுள்ளார். அதனடிப்படையிலேயே அச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. கஷ்ட நஷ்டத்திற்காக ௭ந்தவொரு நபரையும் யாருக்கும் கொலை செய்வதற்கான உரிமையில்லை. சந்தேக நபரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ள அதேவேளை இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளை மேலும் பல கோணங்களில் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  நன்றி வீரகேசரி



வெளிநாட்டு கடவுச்சீட்டுடைய 31500 பேர் வடக்குக்கு விஜயம்
By General
2012-08-26
இவ்வருட ஓகஸ்ட் மாதம் வரையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட 31500 வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்
போர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர். 2011 ஜூலை மாதத்துக்கு பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 51 400 கடவுச் சீட்டுகளை வைத்திருப்போர் இலங்கை விஜயத்தை மேற்கொண்டபோது யாழ்ப்பாணத்துக்கும் சென்று வந்துள்ளனர்.

அதிகமானவர்கள் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாவர். இவர்கள் தமது பரம்பரையினரின் வீடுகளையும் சொத்துக்களையும் நெருங்கிய உறவினரையும் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர்.
சேர் ஜோன் கொத்தலாவலை இராணுவ
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய பாதுகாப்பு
செயலர் ராஜபக்ஷ இத்தகவலை வெளியிட்டார்.   நன்றி வீரகேசரி
 





ஸ்ரீலங்கா : தமிழர்கள் முதலில் தமிழர்களுடன் சமரசம் பேணவேண்டும்.
              -  சேனாலி வதுகே
தீர்வுகளை கேட்பது சுலபம். ஆனால் மானிடர்களுக்கான தீர்வினைக் கேட்கும்போது அது அவசரமாக தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. எல்.ரீ.ரீ.ஈ யின் சர்வதேச பிரச்சாரங்கள் யதார்த்தத்தில் தமிழர்கள் சரியாக எவ்வாறு பிளவுபட்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் முக்கிய பாகங்களை எடுத்துக் காட்டியுள்ளன. எல்.ரீ.ரீ.ஈ அதன் பெருந்தொகை அமெரிக்க டொலர்  வருட வருமானத்தை, தனது சொந்த மக்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க ஆசைப்பட்ட பிரதேசங்களை மேம்படுத்த ஏன் பயன்படுத்தவில்லை, என்கிற கேள்வியை எழுப்ப அநேகமானோர் அக்கறை காட்டுவதில்லை. எல்.ரீ.ரீ.ஈயினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நவீன வசதிகளுடன் கூடிய பதுங்கு குழிகளையும் மற்றும் வீடுகளையும் கட்டுவதைத் தவிர உண்மையில் வேறு எதுவுமே செய்யப்படவில்லை. எல்.ரீ.ரீ.ஈ ஆட்சி செய்த காலம் முழுக்க வடபகுதிக்கு உணவையும் மற்றும் மருந்து வகைகளையும் ஸ்ரீலங்கா அரசாங்கமே அனுப்பி வந்தது. தமிழர்கள்(எல்.ரீ.ரீ.ஈயின் செழிப்பான காலப்பகுதியில் தமிழர்களை கட்டுப்படுத்தியவர்கள்) எதை விரும்புகிறார்;கள் மற்றும் தமிழர்களுக்கு என்ன தேவைப்படுகிறது (எல்.ரீ.ரீ.ஈ, தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் கையில் அகப்பட்டு துன்பப்படும் தமிழர்களுக்கு) என்பனவற்றுக்கு இடையே பாரிய வித்தியாசம் உள்ளது என்பதை உலகம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
கீழே தரப்பட்டுள்ள சில சம்பவங்களைப்பற்றி தமிழ் மற்றும் ஆங்கில பிரதான ஊடகங்களில் வெகு அரிதாகத்தான் சில பகுதிகள் இடம்பெற்றிருந்தன, ஒரு தமிழர் அல்லாதவர் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மேலும் கீழுமாக தாண்டிக் குதித்திருப்பதோடு உலகளாவிய ரீதியில் உள்ள இணையத்தளங்களை இந்தச் செய்திகள் பற்றிய குறிப்புகளாலும் படங்களாலும் மூழ்கடித்திருப்பார்கள். இந்த மௌனத்துக்கான காரணம் என்ன என்று நாங்கள் கேட்கிறோம்.
  • ஜூலை, 1, 2012 – கிரிலப்பனையை சேர்ந்த ஒரு 7வயது தமிழ் சிறுமி தமிழரான அவளது மாமனாராலும் மற்றும் இரண்டு ஆண்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் ஒரு சாக்கடை கால்வாயினுள் அமிழ்த்தப்பட்டுள்ளார்.   இதிலிருந்து வெளிப்பட்டிருப்பது, குற்றவாளிகளால் அந்தச் சிறுமி ஒரு மாதத்துக்கு மேலாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டு வந்துள்ளார் என்று.
  • 26. ஜூலை 2012 – 31 வயதான தமிழ் பெண் தொழிலதிபர், வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் மின்விசிறியில் தூக்கு மாட்டித் தொங்குவதாக அவரது காதலர் அறிவித்துள்ளார். தமிழரான வீட்டு வேலை செய்யும் அந்தக் காதலர், அவளது பெற்றோர்களிடமும் வேலை செய்து வந்துள்ளதாகவும், திருட்டு சம்பந்தமான பல தொடர் வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அவளது பெற்றோர் அவளைவிட 15 வயது மூத்த செல்வந்தரான ஒரு தொழிலதிபருக்கு அவளை மணம் செய்து கொடுத்து அதன்மூலம் அவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தபின், அவளது கணவருக்கு முந்திய திருமணம் ஒன்றின் மூலம் 3 பிள்ளைகள் இருப்பதாக கண்டு பிடித்துள்ளாள். அதனால் அவர்கள் பிரிந்தபின்னர், அவளது முன்னாள் காதலரான வீட்டு வேலைக்காரனுடன் அவள் மீண்டும் சோந்துள்ளாள்.
  • 29, பெப்ரவரி 2012 – ஒரு 48 வயதான தமிழ் பெண், கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்துகிடக்க காணப்பட்டாள். அவள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்திருந்தார்.
  • மே,2012 – ஊர்காவற்றுறை காவல்துறையினர் 80 வயதான தனது தாயாரின் கழுத்தில் கல்லைக் கட்டி அவரை கிணற்றுள் தள்ள முயற்சி செய்ததற்காக ஒரு மனிதரை கைது செய்துள்ளனர். ,ஏனெனில் அவரது தாய் அவருக்கு தொந்தரவாக உள்ளாராம். அந்த சந்தேக நபர் எல்.ரீ.ரீ.ஈயின் ஆயுதப் பிரிவில் ஒரு அங்கத்தவராக இருந்தவராம்.
  • 19 ஆகஸ்ட் 2012 – தமிழர் ஒருவர் 58 வயதான தந்தை, தாய்,மற்றும் 23 வயதான தங்கை ஆகியோரை, வெள்ளவத்தையில் உள்ள குடியிருப்பொன்றில் வைத்து கொலை செய்துள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர், எல்.ரீ.ரீ.ஈயிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதங்கள் வைத்திருந்த சகல தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்தும் ஆயுதங்களை களைவதற்கு வெகுதுர்ரம் முயன்று வருகின்ற அதேவேளை அந்த குழுக்களிடையே தோன்றும் பலவித சண்டைகள் காரணமாக மரணங்களும் மற்றும் காயங்களும் ஏற்பட்டு வருகின்றன.
தமிழர்களுக்கு புகலிடம் வழங்கியுள்ள எல்லா நாடுகளிலும் தமிழ் குழுக்களின் வன்முறைச் சம்பவங்கள் குறிப்பாக எச்சரிக்கை மணியை ஒலிக்க விட்டிருக்கின்றன. எந்த வித மிகைப்படுத்தலும்; இன்றிச் சொல்லுவதானால் ,கறுப்பர்களால் பாரம்பரியமாக ஆளப்பட்டு வந்த பல நகரங்களில் இந்த தமிழ் கும்பல்கள் இப்போது, வழிப்பறி, சூறையாடல், கடைகளை திருடுவது, கடனட்டை மோசடி போன்ற தீய நடவடிக்கைள் பலவற்றை செய்து வருகின்றன.
இப்போது வெளிநாடுகளில் வசிக்கும் மில்லியன் கணக்கான தமிழர்களுக்கு பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்க்கை எவ்வளவு தூரம் மாறிவிட்டது என்பதை அளவிடுவது அத்தனை கடினம் அல்ல. யாராவது வெள்ளவத்தை பகுதியில் பொருட்கள் வாங்கச் சென்றால் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள், பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் விலையுயர்வான இடம் அதுதான், காய்கறிகள் வாங்குவதற்குகூட அங்கு யாரும் பேரம் பேசுவதில்லை, சில கடைக்காரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தது, சில வாடிக்கையாளர்கள் தங்கள் மீதிப் பணத்தை பெறுவதற்குகூட காத்திருப்பதில்லை என்று. இதன் சாதரண கருத்தாக விளக்கப்படுவது, கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும்; வசிக்கும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தினரதும் குறைந்தது யாராவது ஒருவராகிலும் இப்போது வெளிநாட்டில் வாழ்கிறார்கள் என்பதுதான், அவர்களில் பலர் மறக்கக்கூடாதது, அவர்கள் அதற்காக நன்றி சொல்ல வேண்டியது எல்.ரீ.ரீ.ஈக்கு தான் என்று.
இங்கேதான் பிடி உள்ளது. தமிழர்கள் எந்த சாதியையோ அல்லது வகுப்பையோ சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஸ்ரீலங்காவின் மோதல் இப்போது முடிவடைந்ததையிட்டு ஒரு உள்ளார்ந்த நன்றியை செலுத்துகிறார்கள், ஏனெனில் தாங்கள் முன்பிருந்த சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்து காரணமாக எல்.ரீ.ரீ.ஈயினரை தட்டிக் கழிக்க முடியாதிருந்த நிலை மாறியிருப்பதையிட்டு, இருந்தாலும் அவர்கள் ஒரு தனிநாட்டை கோரினார்கள் என்பது இதன் அர்த்தமாகாது. இந்த சங்கடமான நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையை குழப்பத்திலாக்குவது, எல்.ரீ.ரீ.ஈ ஒரு பயங்கரவாத இயக்கம் வருடாந்தம் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை வருமானம் ஈட்டுகிறது மற்றும் அதன் சர்வதேச கூட்டு நடவடிக்கைகள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் பணக்காரர்களாக மாறியதுடன், சர்வதேச கண்ணோட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டு பிரதிநிதிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நபர்கள் 30 வருட காலமாக தாங்கள் அனுபவித்து வந்த சலுகைகளையும் மற்றும் சிறப்புரிமைகளையும் விட்டுக் கொடுப்பதற்கு விருப்பமற்றவர்களாக உள்ளனர். இதன் காரணமாகத்தான் அவர்கள் சிங்கள – தமிழ் பாகுபாட்டு கருத்தை உயர்த்திப் பிடிக்க விரும்புவதுடன், தங்கள் சட்டவிரோத பணத்தை பயன்படுத்தி கட்டுக்கதைகளை கிளப்பவும் வெளிநாட்டு அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கவும், மற்றும் வயது முதிர்ந்த முன்னாள் போர்க்குற்றவியல் வழக்கறிஞர்களை கொண்டு வினோதமான மந்திராலோசனை சபைகளை உருவாக்கவும் முயல்கிறார்கள்.
வெளிநாடுகளிலுள்ள இந்த தமிழர்களில் பெரும்பாலானோர் ஸ்ரீலங்காவில் கால்;பதித்ததோ அல்லது சாதாரண தமிழ்மக்களின் வாழ்வினை மேம்படுத்துவதற்காக ஒரு சதமேனும் அனுப்பியதோ கிடையாது, ஆனால் வடக்கிலுள்ள இராணுவ பிரசன்னத்தை அகற்றும்படி கூக்குரலிடுகின்றனர், அதேவேளை கரவெட்டியில் உள்ள தமிழர்கள் யாழ்ப்பாண  இராணுவ கட்டளைத் தளபதியிடம் தமிழ் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணருவதால் இராணுவத்தை தொடர்ந்து வைத்திருக்கும்படி வேண்டுகிறார்கள். இதே உணர்வைத்தான் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி, ஒரு கௌரவ பேச்சாளராக ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்தபோது வெளிப்படுத்தியிருந்தார். எனவே ஸ்ரீலங்காவுக்கு ஒருபோதும் வந்திராத தமிழர்களையா அல்லது இராணுவத்தின் மத்தியில் வாழும் தமிழர்களையா நாங்கள் நம்புவது? முல்லைத்தீவு போன்ற வடக்கின் உட்புற நிலப்பகுதிக்கு ஒருவர் ஆழமாகச் சென்றால், ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அடைந்திருக்கும் பிரபல்யம் ,சர்வதேச ரீதியாக ஸ்ரீலங்காமீது எதிர்ப்பு காட்டிவரும் எவரையும் பேசமுடியாமல் பொறாமையால் முகம் சுளிக்க வைக்கும்.
அநேகருக்கு, விசேடமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவு தேடும் வீரர்களுக்கு தெரியாதது, தமிழர்கள் தங்களுக்குள் ஒன்று சேருவதை ஊக்குவிக்க முடியாதபடி தங்களுக்குள் பெருமளவில் பிளவுபட்டுள்ளார்கள் என்கிற யதார்த்தத்தையே.
அந்தப் பிரிவுகள் பல்வேறு வகையானவை – அங்கு சாதிப் பாகுபாடு உள்ளது. ஒரு சிறு தொகையான வெள்ளாளர்கள் தொடர்ந்தும் முழுத் தமிழ் சனத்தொகைமீதும், ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். ஆட்சியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளிடையே அவர்களை நீங்கள் காணலாம். மற்றும் அவர்களின் தேர்தல் வெற்றிகள் காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து வாக்குகளைப் பெற்று வருவதைப் போன்றது, காந்தியின் நாய் தேர்தலில் நின்றால்கூட அதுவும் மாபெரும் வெற்றி பெறும் என்று சிலர் சொல்வதுண்டு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்(ரி.என்.ஏ) எல்.ரீ.ரீ.ஈயின் காலம் முழுவதும் ஏன் மௌனமாக இருந்தார்கள் என்று மட்டும் நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஒருவர்கூட வடக்குக்கு செல்வதற்கு துணியவில்லை, தமிழ் சிறுவர்களை கடத்திச் சென்று அவர்களை சிறுவர் போராளிகளாக மாற்றவேண்டாம் என்று ஒருவர்கூட எல்.ரீ.ரீ.ஈயிடம் விண்ணப்பிக்கவில்லை. ரி.என்.ஏ அரசியல்வாதிகள் மௌனமாக இருந்தது ஏனென்றால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் கொழும்புத் தமிழருடையதோ அல்லது உயர்சாதியினருடையதோ அல்லர், ஆனால் வறுமைப்பட்ட தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பதால். ஸ்ரீலங்கா இராணுவம் காப்பாற்றிய 297,000 தமிழ் குடிமக்கள் விடயத்திலும் இதுதான் உண்மை.
சாதி வித்தியாசம் அப்படியானது.  எந்த உயர்சாதிக்காரரும் தாழ்ந்த சாதிக்காரருடன் ஒரு குவளையைத்தானும் பங்கிட்டுக் கொள்ளமாட்டார்கள் என்பதை நீங்கள் காணலாம். நிச்சயமாக வௌ;வேறு கரண்டிகளும் கத்திகளும் கூட பயன்படுத்தப்படலாம். தமிழர்கள் தங்கள் சாதி வித்தியாசம் காரணமாக இரத்ததானம் செய்ய விரும்பாததால் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு ஆபத்தான வேளைகளில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இரத்ததானம் செய்துவருகிறார்கள். இந்த உண்மையை ஒப்புக்கொள்ளக்கூட எத்தனைபேர் கவனம் செலுத்துகிறார்கள்.
எனினும் 30 வருடங்கள் ஒரு நீண்ட காலம் மற்றும் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தங்களுக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொண்டார்கள், இப்போது அவர்கள் தங்களிடம் உள்ள அதிகாரம் மற்றும் பணம் என்பனவற்றைக் கொண்டு தங்களுக்கு தங்கள் சாதியின் காரணமாக மறுக்கப்பட்ட இடத்தை பெறுவதற்காக தங்கள் மக்களுடனேயே போட்டியிட அவர்கள் தயாராக உள்ளார்கள். இப்பொழுது ஸ்ரீலங்காவுக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களிடையே இவர்களை தெரிவு செய்வது சுலபம். இளைஞர்கள் காதில் கடுக்கன் அணிந்திருப்பார், இளம் பெண்கள் மைக்ரோ மினி பாவாடைகளை அணிந்திருப்பார்கள். ஒரு காலத்தில் நாணத்துடன் நடந்து கொண்ட தமிழ் பெண்கள் இப்போது அரைக் காற்சட்டைகளை அணிய வெட்கப்படுவதில்லை. அத்துடன் அனைவரும் புரிந்துகொள்ள முடியாத உச்சரிப்புகள் கொண்ட ஆங்கிலத்திலும் அதேபோல புரியாத மொழிகளிலும் பேசிக் கொள்கிறார்கள்.
இன்னும் அதிகமாகச் சொல்வதானால் தமிழர்கள் இப்போது அனுபவிக்கும் எல்லையற்ற சுதந்திரத்துக்கு ஸ்ரீலங்காப் படைகளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். படைகளால்கூட அவாகளின் சுதந்திரத்தை இப்போது கட்டுப்படுத்;த முடியவில்லை. காவல்துறையினரின் புள்ளி விபரங்கள் தமிழ் குடும்பங்களிடையே பாலியல் வல்லுறவு அதிகரித்துள்ளதாகவும் தந்தையே தனது சொந்த மகளை வல்லுறவுக்கு உட்படுத்துவதாகவும் மற்றும் தமிழ் யுவதிகளிடையே தேவையற்ற கர்ப்பங்கள் உருவாகி உள்ளதாக வழக்குகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் தமிழ் பெண்கள் தங்கள் பெற்றோர் அவர்களின் சாதகத்துக்கு பொருத்தமானவரை தேர்ந்தெடுக்கும் வரை பொறுமை காத்து வந்தார்கள், இப்போது காதல் தொடர்புகளை ஆரம்பிப்பதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை.
இதில் உள்வாங்குவதற்கு கடினமாக உள்ளது என்னவென்றால் புதிய தலைமுறை இளைஞர்கள் முதலாவதாக தங்கள் முந்திய தலைமுறையினரின் பாரம்பரிய சிந்தனை வடிவங்களை பின்பற்றுவதற்கான சாத்தியமில்லை. அதேவேளை பிரிவுகள் இருப்பதன் சௌகரியத்தினால், தங்கள் சொந்த மக்கள்மீதே ஆதிக்கம் செலுத்திவந்த பழைய தலைமுறையினர் முந்தைய நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காக  முயன்று வருகிறார்கள். வெளிப்படையாகவே அதில் ஒரு பாரிய பொருத்தக்கேடு உள்ளது. இந்தப் பிரிவினைகளுக்கு பாலம் போடுவதால் ஒரு யுத்தவெற்றி அடையக்கூடியது எதுவுமில்லை. தமிழர்களிடையே உள்ள பிளவுகளை ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். எங்களுடைய சங்கடங்கள் எல்லாம் இந்த தமிழர்களுடைய அபிலாஷைகளை எல்லாம் புறக்கணித்து விட்டு ஸ்ரீலங்கா அரசாங்கம், பெரும்பான்மையான ஏனைய தமிழர்கள் தங்கள் சொந்த மக்களாலேயே துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் என்பதை அறிந்து கொண்டும் ஒரு கைப்பிடி அளவான உயர்சாதி அல்லது வகுப்பினை சேர்ந்தவர்களுக்காக சமரசத் திட்டங்களை உருவாக்கிவிட முடியாது என்பதுதான். இந்த நவீன நாட்களில் விடயங்கள் எப்படி வேலை செய்யும் என்று சொல்லமுடியாது.
சில தமிழர்கள் வேண்டுவதற்கும் அநேக தமிழர்களுக்குத் தேவையானதுக்கும் இடையில் பாரிய ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். யதார்த்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் தீர்வினை வேண்டுவதன் மூலம் அவர்கள் 30 வருடங்களுக்கு மேலாக  தமிழர்களாலாயே விலக்கி வைக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்ய முடியாது
– குறிக்கோளை அடைவதற்கான ஒரு உத்தியை எட்டாதவரை.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
நன்றி தேனீ  


சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் (பட இணைப்பு)
By General
2012-08-29

சீன பாதுகாப்பு அமைச்சர் லியான் குவான்சிலி (29/08/2012)இன்று இலங்கை வந்தடைந்தார்.
dsd
yhnhf
dd

 நன்றி வீரகேசரி

 
 


 
      
      
      
எமது உறவுகள் எங்கே? வவுனியாவில் கண்ணீர்மல்கக் கோரிக்கை
        
By General
2012-08-30

சர்வதேச காணாமற் போனோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமற் போனோரின் உறவினர்களால் வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. எமது உறவுகள் எங்கே? அவர்களை மீட்டுத் தாருங்கள் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புக்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரி
 
 
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய பெண்கள் மீது ஏறாவூரில் தாக்குதல்
By Farhan
2012-08-30
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் ஹாபிஸ் நஸீர் அஹமத்திற்கு ஆதரவு திரட்டி பெண்களை சந்திப்பதற்காக வீடு வீடாகச் சென்ற நாற்பது பெண்கள் மீது இனம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது பாதிப்புக்குள்ளான மூவர் ஏறாவூர் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

திடீர் தாக்குதலின் விளைவாக அதிர்ச்சிக்குள்ளாகி சுய நினைவு இழந்திருந்த பெண்களில் சிலருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டன.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான உதவித் தேர்தல் ஆணையாளருக்கும் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.




 
 நன்றி வீரகேசரி
 
 
 
ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்றது ஆலய நிர்வாகம்:

முன்னேஸ்வரம் காளி கோயில் மிருக வேள்வி இவ்வாண்டு நிறுத்தம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து வேள்விப் பூஜையில் மிருகபலியை நிறுத்துவதற்கு சிலாபம் பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதனை தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாவும், பிரதம பூசகருமான காளிமுத்து சிவபாதசுந்தரம் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து புத்தரின் கபிலவஸ்து புனித தாது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் சூழ்நிலையில் சிலாபம் பத்திரகாளி அம்மன் கோவிலில் வேள்விப் பூஜையின் போது ஆடு மற்றும் கோழிகள் பலி கொடுக்கப்படுவதைக் கைவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தும், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் கபிலவஸ்து புனித தாதுவுக்கு மதிப்பளித்தும் இந்த ஆண்டு வேள்விப் பூஜையைக் கைவிடுவதாக பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் பிரதம பூசகர் மேலும் தெரிவித்தார்.
சிலாபம் பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் வருடம் தோறும் நடைபெறும் அலங்காரத் திருவிழாவின் இறுதி நாளன்று வேள்விப் பூஜை இடம்பெற்று ஆடு மற்றும் கோழிகள் மிருகபலி கொடுக்கப்படுவது வழமை. என்றாலும், தற்போது புத்தரின் கபிலவஸ்து புனித தாது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை கெளரவப்படுத்தும் வகையில் மிருக பலியை நிறுத்துவதற்குத் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், இறுதி நாளான முதலாம் திகதி அலங்கார உற்சவத்துடன் வழமையான பூஜைகள் நடைபெறும் அதேநேரம், வேள்விப் பூஜை நடைபெறாது என்று பிரதம பூசகருமான காளிமுத்து சிவபாதசுந்தரம் மேலும் தெரிவித்தார்.
முன்னேஸ்வரம் பத்திரகாளி கோவி லில் வருடாந்தம் நடத்தப்படும் வேள்விப் பூஜை தொடர்பில் பல்வேறு தரப்புக்களிலிருந்து எதிர்ப்புக்க ளும் விமர்சனங்களும் இருந்து வருகின்றன.
அதேநேரம், இங்கு இடம்பெறும் மிருகபலி பூஜை தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் தனது ஆட்சேபனையைத் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் வேள்விப் பூஜையை நிறுத்துவதற்கு ஆலய நிர்வாகம் எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு அமைச்சர் மேர்வின் சில்வா தனது மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
 

No comments: