ஆங்கிலம் உட்பட இந்தோ: ஐரோப்பிய மொழிகள் தோற்றம் பெற்றது துருக்கியில்?


.

ஆங்கிலம் உட்பட இன்றைய இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பம் துருக்கி நாட்டிலிருந்து வழித்தோன்றல்களாக உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றின் மூலம் புதிய தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஆய்வாளர்கள், தென் மேற்கு ரஷ்யாவில் சுமார் 8- 9,500 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்திலிருந்து இம்மொழிக்குடும்பம் உருவாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளதுடன், இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கும், புராதன மொழிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பை பிணைக்கும் குடும்பச்சங்கிலி வரைபு ஒன்றின் மூலம் இம்மொழிகளுக்கான தோற்றம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

மொழிக்குடும்பம் எனப்படுவது, பொதுவான ஒரு மூதாதையரிடமிருந்து தோற்றம் பெற்று திரிபடைந்து வந்த மொழிகளை கொண்ட குடும்பம் ஆகும். அப்பொதுவான மூதாதையர்களை Proto-Language குழுவினர் என அழைக்கிறார்கள்.

ஆங்கிலத்திலும் ஜேர்மனியிலும் தண்ணீர் என்பதற்கு கிட்டத்தட்ட ஒரே சொல் அமைப்பு Water, Wasser காணப்படுவது போல, தாய்க்கு Ma எனும் உச்சரிப்புடன் பல்வேறு மொழிகளில் சொற்கள் காணப்படுகின்றன. ஐரோப்பிய - இந்தோ மொழிகள் ஒரே மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை என்பதற்கு இவற்றையும் உதாரணமாக கொள்ளலாம்.

உலகில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மொழிக்குடும்பங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகப்பெரிய மொழிக்குடும்பமாக இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பம் காணப்படுகிறது. சுமார் 400 மொழிகள் அடங்கிய இம்மொழிக்குடும்பம் 60 நாடுகளில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் இம்மொழிக்குடும்பத்தின் பூர்வீகம் எது, எங்கிருது தோற்றம் பெற்றது என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

இம்மொழிக்குடும்பம் ரஸ்யாவின் வடக்கு கஸ்பியன் கடற்பரப்பில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக தெரிவிக்கப்படுகிறது. 1980 களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பேராசிரியர் கொலின் ரென்ஃபிருவ், இம்மொழிக்குடும்பத்தின் தோற்றம் துருக்கியின் அனடோலியன் வலயத்திலிருந்து உருவாகியுள்ளது என்றார்.

இந்நிலையில் புதிய ஆராய்ச்சிகளின் படி மனிதனின் டி.என்.ஏக்களை வைத்து பரம்பரை பரம்பரையாக அதில் பதிவாகியிருக்கும் மொழித்தொடர்பு கூறுகளை இணங்கண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். பரிணாம உயிரியல் வளர்ச்சியின் ஊடாக இந்தோ ஐரோப்பிய மொழிகளின் விரிவாக்கத்தை புரிந்து கொள்ள முற்படுவது ஒரு அருமையான பயன்பாட்டை தருவதாக கூறியுள்ள விஞ்ஞானிகள்
சுமார் 8-9,500வருடங்களுக்கு முன்னர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் தோன்றியுள்ளன எனவும் அனடோலியன் வலயத்தில், அதாவது தற்போதைய துருக்கி உள்ள இடத்திலிலிருந்து இவை பரம்பல் அடைந்துள்ளன எனவும் கண்டுபிடித்துள்ளனர்.

Nantri:4tamilmedia.com

No comments: