எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09ம் நாள், நடைபெற இருக்கும் இசைநிகழ்வு ஒரு சுகமான அநுபவமாகவே அமைய இருக்கிறது. இதற்கு இசை ரசிகர்களின் ஆதரவு இன்றி அமையாதது.
இளய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்கோடு, திறமை படைத்த இளையோரின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஆவலில், சில திறமை வாய்ந்த இளம் கலைஞர்களின் இசைநிகழ்வுகள் இடம் பெறு உள்ளது. இந்நிகழ்வு காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இடம் பெறும். இந்நிகழ்வுகளுக்கான நுழைவு அனுமதிகள் இலவசமே. திறமை வாய்ந்த உள்ளூர் இளம் கலைஞர் அனைவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கும் நோக்கில், இவ்வகையான நிகழ்வுகள் இனியும் தொடர்ந்து இடம் பெறும்;.
இதைத் தொடர்ந்து, புகழ் பெற்ற இளம்கலைஞர், சாக்கேதராமன் அவர்களின் இசைநிகழ்வு சரியாக மாலை 5:00 மணி;க்கு ஆரம்பமாகும். இந்நிகழ்வுக்கு அணிகலனாக, இளம் வயலின் வித்தகர் நாகை ஸ்ரீராம் அவர்களும், மிருதங்க சக்கரவர்த்தி புகழ் - மிருதங்க மேதை சங்கீதக்கலாநிதி உமையாள்புரம் சிவராமன் அவர்களும், பக்கவாத்தியக் கலைஞர்களாக இணைய உள்ளார்;கள்.
அனைத்து இசை ரசிகர்களையும் கலந்து கொண்டு, இளையோரின் இசைநிகழ்வை கேட்டு ரசித்து, அவர்களை வாழ்த்தி ஊக்கிவிப்பதுடன், சாக்கேதராமன் அவர்களின் கச்சேரியையும் கேட்டு இன்புறுமாறு வேண்டுகிறோம்.
அன்புடன் - ஸ்வரலயா
No comments:
Post a Comment