.
இணையத்தில் வெளியாகிய சிரிய அரசின் மனிதப் படுகொலைப் புகைப்படங்கள்
வெனிசுலா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தீ விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு
எதிர்ப்புகளை மீறி சாதித்துக்காட்டிய ஈரான்
லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலையின் உரிமம் ரத்து
அஜ்மல் கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?

நன்றி வீரகேசரி

வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வட பகுதியான பராகுவானாவில் அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது . உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான அமுவேயில் கடந்த சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதுடன் வெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்தது. இதில் 26 பேர் பலியாகினர், மேலும் 80 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 26லிருந்து 41ஆக உயர்ந்துள்ளது.
அங்கு விபத்து ஏற்பட்டதும் அதன் அருகில் இருந்த கடைகள், வீடுகள் குலுங்கின. சுத்திகரிப்பு நிலையத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது என்று அதன் அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், நாளை முதல் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெனிசுலா துணை ஜனாதிபதி எலியாஸ் கூறுகையில்,
அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பலியானோர்களில் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 18 பேர் அடக்கம். இறந்தவர்களில் 6 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றார்.
இந்த விபத்து மிகவும் கவலை அளிப்பதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சவேஸ் தெரிவித்துள்ளார். மேலும் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்துத் தொடர்பாக, தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஹியூகோ சாவிஸ் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
எதிர்ப்புகளை மீறி சாதித்துக்காட்டிய ஈரான்
அணுஆயுத திட்டத்தால், ஈரானை மற்ற
நாடுகளிடமிருந்து தனித்துவைக்க அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் தீவிரமாக
செயல்பட்டு வரும் நிலையில், 120 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள அணிசேரா
நாடுகளின் மாநாடு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று ஆரம்பமாகின்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பல தலைவர்கள் ஈரான் சென்றுள்ளனர்.
ஈரானில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம், அமெரிக்காவை வெற்றி கொள்ளும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இதேவேளை இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அண்மையில் அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தன.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஈரான் இம்மாநாட்டை நடத்தவுள்ளமையை உலகநாடுகள் பல பாராட்டியுள்ளன. நன்றி வீரகேசரி
இணையத்தில் வெளியாகிய சிரிய அரசின் மனிதப் படுகொலைப் புகைப்படங்கள்
வெனிசுலா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தீ விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு
எதிர்ப்புகளை மீறி சாதித்துக்காட்டிய ஈரான்
லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலையின் உரிமம் ரத்து
அஜ்மல் கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
இணையத்தில் வெளியாகிய சிரிய அரசின் மனிதப் படுகொலைப் புகைப்படங்கள்
சிரியாவில் மோதல்கள் உக்கிரமடைந்துவரும் சந்தர்ப்பத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சுமார் 300 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கப் படையினராலேயே இவர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாகவும்,
கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக சிரியப்
போராளிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களின் படி கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் இளைஞர்கள் ஆவர்.
மேலும் சிறுவர்கள் பலர் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அசாத் அரசாங்கத்தின் இரக்கமற்ற நடவடிக்கைகளுக்கு உலகநாடுகள் பல தங்களது கண்டனத்தினை வெளியிட்டுள்ளன.
சிரியாவில் அரச ஆதரவுப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையிலான மோதலில் இதுவரை 21 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகப்
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
அங்கு அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் உலக நாடுகள் தோல்வியைத் தழுவியுள்ளன.
வெனிசுலா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தீ விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு
By
General 2012-08-27 |
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வட பகுதியான பராகுவானாவில் அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது . உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான அமுவேயில் கடந்த சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதுடன் வெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்தது. இதில் 26 பேர் பலியாகினர், மேலும் 80 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 26லிருந்து 41ஆக உயர்ந்துள்ளது.
அங்கு விபத்து ஏற்பட்டதும் அதன் அருகில் இருந்த கடைகள், வீடுகள் குலுங்கின. சுத்திகரிப்பு நிலையத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது என்று அதன் அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், நாளை முதல் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெனிசுலா துணை ஜனாதிபதி எலியாஸ் கூறுகையில்,
அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பலியானோர்களில் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 18 பேர் அடக்கம். இறந்தவர்களில் 6 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றார்.
இந்த விபத்து மிகவும் கவலை அளிப்பதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சவேஸ் தெரிவித்துள்ளார். மேலும் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்துத் தொடர்பாக, தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஹியூகோ சாவிஸ் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
எதிர்ப்புகளை மீறி சாதித்துக்காட்டிய ஈரான்
By
General 2012-08-30 |
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பல தலைவர்கள் ஈரான் சென்றுள்ளனர்.
ஈரானில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம், அமெரிக்காவை வெற்றி கொள்ளும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இதேவேளை இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அண்மையில் அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தன.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஈரான் இம்மாநாட்டை நடத்தவுள்ளமையை உலகநாடுகள் பல பாராட்டியுள்ளன. நன்றி வீரகேசரி
லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலையின் உரிமம் ரத்து
- பி.பி.சி
ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளுக்கு வெளியில் இருந்து வரும் மாணவர்கள் விசா பெறத் தேவையான
பரிந்துரை வழங்கும் உரிமத்தை லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்திடம்
இருந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லைக் காட்டுப்பாட்டு ஆணையம்(யூகேபிஏ)
பறித்துள்ளது.
இதன் காரணமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.
பல்கலைக்கழகத்தின்
செயற்பாடுகளில் ஆறு மாதங்கள் முன்பு கண்டறியப்பட்ட பாரதூரமான குறைபாடுகளை
களைய பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டதாக எல்லைக் கட்டுப்பாட்டு ஆணையம்
தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட
மாணவர்களுக்கு உதவ ஒரு சிறப்பு செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. வேறு
பல்கலைக்கழகங்களில் சேர அவர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
சில
தனியார் கல்லூரிகள் மீது முன்பு இத்தகைய நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டிருந்தாலும் – ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை
எடுக்கப்படுவது இதுவே முதல் முறை. முறையான விசா முடிந்தோர் அந்தப்
பல்கலைக்கழகத்தில் படிப்பதும், போதுமான ஆங்கிலப் புலமை இல்லாதவர்கள்
படிப்பதும், பல்கலைக்கழக மாணவர்களாக இருப்பவர்கள் வகுப்புக்கு ஒழுங்காக வர
வேண்டும் – முழு நேர வேலைக்கு போகக் கூடாது என்ற விதி மீறப்படுவதும் இந்த
நடவடிக்கை எடுக்கக் காரணம் என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் குடிவரவு அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
ஐக்கிய
ராஜ்ஜியத்தில் பல்கலைக்கழகங்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதி பெருமளவு
குறைக்கப்படுவதால் பல பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க
முனைப்பு காட்டுகின்றன.
இதற்கு உள்நாட்டு மாணவர்களை விட வெளிநாட்டு மாணவர்கள் கூடுதலான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ராஜ்ஜியத்தில் கடந்த 2010 – 2011 ஆண்டில் பட்டப்படிப்பில் 48,580
வெளிநாட்டு மாணவர்களும் 79,805 வெளிநாட்டவரும் இருந்தனர். அதாவது பட்டப்
படிப்பு படிப்பவர்களில் 11 சதவீதத்தினர் வெளிநாட்டவர். அவர்கள் செலுத்தும்
கல்விக் கட்டணம் பல்கலைக்கழகங்களின் கட்டண வருவாயில் மூன்றில் ஒரு பங்காக
இருக்கிறது.
வெளிநாட்டு
மாணவர்கள் கல்விக் கட்டணம் மற்றும் பிற செலவினங்கள் காரணமாக ஐக்கிய
ராஜ்ஜியத்தின் பொருளாதாரத்துக்கு 5 பில்லியன் பவுண்டுகள் கிடைக்கிறது என்று
கணிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு
மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தால் வரும் 2025 ஆண் ஆண்டு வாக்கில் இத்தொகை
17 பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு உயரும் என்று பல்கலைக்கழகங்கள்
கூறுகின்றன.
ஆனால்
அரசாங்கம் எடுக்கும் கடும் நடவடிக்கைகள் காரணமாக படிக்க வேண்டும் என்ற
உண்மையான விரும்பம் கொண்ட மாணவர்கள் கூட ஐக்கிய ராஜ்ஜியத்தை
தவிர்க்கக்கூடும் என்ற கருத்தை தேசிய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின்
இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கை பாதிக்கப்படும்
என்பதால் இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தேசிய மாணவர்
சங்கத்தின் தலைவர் லியம் பர்ன்ஸ் கோரியுள்ளார்.
மெட்ரோபொலிடன்
பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசின் முடிவை சட்ட
ரீதியாக எதிர்கொள்வது குறித்து தாம் ஆலோசித்து வருவதாக பல்கலைக்கழகத்தின்
துணை வேந்தர் மால்கம் கில்லிஸ் தெரிவித்துள்ளார். நன்றி தேனீ
அஜ்மல் கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல்
கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி
செய்துள்ளதைத் தொடர்ந்து, அவன் எப்போது தூக்கிலிடப்படுவான் என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து வந்து 2008ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மும்பையில் வெறியாட்டம் போட்ட 10 தீவிரவாதிகளில் உயிருடன் சிக்கியவன் கசாப் மட்டுமே. அவனை உயிருடன் பிடிக்க முக்கியக் காரணமாக அமைந்தவர் சப் இன்ஸ்பெக்டர் துக்காராம். அவரை தீவிரவாதிகள் படுகொலை செய்து விட்டனர்.
பிடிபட்ட கசாப் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளான். அவனுக்காக பெரும் பொருட் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறான்.
தற்போது அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கசாப்பை தூக்கிலிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூக்கிலிடுவதற்கான தேதியை ஆர்தர் சாலை சிறை நிர்வாகம்தான் முடிவு செய்து அறிவிக்கும். உடனடியாக தேதியை சிறை நிர்வாகம் அறிவிக்கும். அதுதான் வழக்கம்.
தேதி முடிவு செய்யப்பட்ட பின்னர் கசாப்பைத் தூக்கிலிடத் தேவையான ஏற்பாடுகள் நடைபெறும். முதலி்ல தூக்கிலிடுவதற்கான இடம் தயார் நிலைக்குக் கொண்டு வரப்படும். தூக்கிலிடுவதற்கான ஆளைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்படும். தூக்குக் கயிறு வாங்கப்படும்.
தினசரி இனி அவனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். உடல் நலப் பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் அவனைப் பார்த்துக் கொள்வார்கள்.
இருப்பினும் இதெல்லாம் ஒருபக்கம் நடந்து வந்தாலும் கூட இன்னும் கூட கசாப்புக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அதாவது குடியரசுத் தலைவரின் கருணைதான் அது.
இந்தியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குடியரசுத் தலைவரிடமிருந்து கருணையை எதிர்பார்த்து மனு செய்யலாம்.
அதில் குடியரசுத் தலைவர் நினைத்தால் தூக்குத் தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக்க முடியும். எனவே கசாப்புக்கும் கூட அந்த வாய்ப்பு உள்ளதால் அவனும் கருணை கோருவான் என்று தெரிகிறது.
கருணை மனுக்கள் மீ்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு எந்தவித நிர்ப்பந்தமும், கால வரையறை இல்லை என்பதால் அதில் எப்போது முடிவு வரும் என்பது பெரும் கேள்விக்குறியான விஷயம்தான். எனவே கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
நன்றி வீரகேசரி
அஜ்மல் கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
By
General 2012-08-29 |

No comments:
Post a Comment