கோகிலா மகேந்திரனின் ‘உள்ளத்துள் உறைதல்’ - எனது பார்வையில் கார்த்திகா கணேசர்

.        
                                    நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

கோகிலா மகேந்திரனின் “உள்ளத்துள் உறைதல்” என்ற நூல் எவ்வாறு உள்ளத்திலே உறைந்தது என்பதையே இங்கு கூறுகிறேன்.
எமது இன்றய நாட்டு ப்பிரச்சனைகள் பலவும் எவ்வாறு வாழ்வை பாதிக்கிறது என்பதை இந்த நூல் மூலம் அறிய முடிந்தது. நகம் கடிப்பதும், கண்வெட்டுவதும் என சின்னஞ்சிறு பையன் செய்வது தந்தையைப் பிரிந்த ஆதங்கமே என அறிய எமது மனம் அந்த சிறுவனுக்காக வருந்துகிறது. என் வாழ்வில் சில சிறுவர் இரவில் படுக்கையை நனைப்பதை பார்த்திருக்கிறேன். இவ்வாறு நடப்பது சிறுவரின் மன பாதிப்பு என அறிய, இது எனக்கு அப்போதே தெரியவில்லையே, தெரிந்திருந்தால் அந்த சிறுவருக்கு ஆதரவாக இருந்திருப்பே ன்  என மனம் ஏங்கியது. மேலும் குண்டடியுண்ட இடத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் படிப்பில் கவனம் செலுத்த முடியாது போவது இன்று நடைபெறும் ஒரு பரிதாப நிலை. இது பலரை சிந்திக்கத்தூண்டி இருக்கும். கை கால்களை இழந்த சிறுவரை அறிவோம். மனதால் பட்ட துன்பம் என்றும் மாறாவடுவாக சிறுவரின் வாழ்வை பாதிப்பதை கோகிலா கூறும் வரை சிந்தித்தும் பார்க்கமுடியவில்லை.


வயதுவந்த பெண் ஒருவனை காதலித்ததால் தான் தவறு இளைத்து விட்டோமோ என்று எண்ணி தாக்கப்பட்டு, சோர்வு தலை யிடிக்கு ஆழாவது, எமது சமூக கட்டுப்பாட்டு சிந்தனையின் வெளிப்பாடே மாறிவரும். உலகில் காதலை காமத்தை பொறுப்பற்ற முறையில் கருதும் இன்றைய இழம் சமூகம் . ஏன் எமது சமூகத்தில் சிந்தனையும் மாறுவதை நாம் உணர்கிறோம். சாதிக் கொடுமை காதலுக்கு குறுக்கே நிக்க காதலியை விடுத்து வேறு திருமணம் செய்யும் ஆண், துரோகம் இளைத்துவிட்டோமோ என குற்ற உணர்வால் தாக்கப்படுவது .   சருகாக உதிர்ந்து போக வேண்டிய எமது சமூகசிந்தனை, துளிர்த்து வரும் இளம் சமூகத்தைக் கூட தாக்குவது எமது சமூக சிந்தனையின் கொடிய விழைவே.
பட்டப்படிப்பு படித்த பெண்ணை மட்டம் தட்டும் கணவன், கட்டிய மனைவி இருக்க பலரிடம் காதல் லீலை புரியும் டொக்டர், மனைவியையே பயித்தியமாக்க முயல்வது எமது நாட்டில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த சமூகத்திலும் இன்றும் நடைபெறுகிறது.
அப்பாவின் அடக்கு முறை அம்மா மேல், அதை பார்த்து வளர்ந்த மகன் சதோதிரிகள் மேல் காட்டும் அடக்குமுறை, அதனால் பாதிக்கப்படும் சகோதரி அத்தனையுமே, எமது சமூகத்தின் ஆண் ஆதிக்கமும் பெண் அடிமை சிந்தனையும் இன்றும் சமூக புண்ணாக  புரையோடுவதை காட்டுகிறது.

மொத்தத்திலே எமது சமூகத்தை படம் பிடித்து காட்டும் நூல் பேச்சுநடையிலே அழகாக வரையப்பட்டமை கோகிலா உளவியலாழர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாழர் என காட்டிநிற்கிறது. ஆழமான பிரச்சனையை அழகாக எடுத்துக்காட்டி எமது உள்ளத்தையும் உறைக்கவைக்கிறார்.
எனக்கு தெரிந்த ஒரு பெண் உளவியலை பாடமாக படித்தவர். திருமணத்தின்பின் பிள்ளைகள் வளர தன் துறையில் மேலும் படித்து PHD ஆய்வும் செய்தாள். சில காலத்தின் பின் என்ன செய்கிறாய் எனக் கேட்டேன், “ஆய்வு செய்தது உழவியலில், யாருக்காவது உதவுகிறயா” என கேட்டபோது, “அக்கா எனக்கு தெரிந்த எமது குடும்ப நண்பர்கள் மனநோய் வைத்திய தம்பதியர் அவர்களுடன் பேசினேன் அவர்கள் கூறுகிறர்கள் நாம் இருவரும் இந்த துறையில் படித்துவிட்டோம் தொழில் பார்க்கிறோம் ஆனால் இது ஊரார்;பிரச்சனை அத்தனையும் கேட்டு எமது மனதையே தொல்லை படுத்தும் தொழில். நீயோ ஓர் அழவு வசதியுடன் வாழ்கிறீர். நீ வருமானம் வேண்டும் என உழைக்கவேண்டாம். இப்போ இருக்கும் நிம்மதியை கெடாதே என கூறுகிறார்கள். அதனால் நமக்கு எதற்கு வம்பு என  விட்டுவிட்டேன் என்றார்.

இங்கு குசான் என்ற அம்மையாரிடம் தியானம் பயிற்சி பெறப்போறேன். அவரும் ஒரு உளவியலாழர். பேச்சுவாக்கிலே கூறினார் தமது தொழிலால் ஏற்படும் மன அளுத்தத்தை போக்க தமக்கும் கிளினிக் உண்டு என.
இதன் மூலம் இந்த உளவியல் வயித்தியம் எத்துணை சிரமமானது என உணரமுடிந்தது. ஆனால் நமது கோகிலாவோ இத்தனை பிரச்சனைகளையும் தாங்கி, பின் அதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக “தினக்குரல்” பத்திரிகையில் கதையாக வடித்துள்ளார்.
அதன் தொகுப்பே “உள்ளத்துள் உறைதல்” நூல். இது பலருக்கும் பயன் பெற்றிருக்கும். இந் நூல்  பேச்சுநடையில் அமைந்த ஒரு சிறுகதை தொகுதி மட்டுமல்ல, எமது இன்றைய சமூகத்தை ஆழமாக ஆய்வு செய்த நூலும் கூட.
மொத்தத்திலே என் உள்ளத்தை தொட்ட நூல்.


No comments: