.
லிபியாவில் ரொக்கெட் வீசி தாக்குதல்: அமெரிக்க தூதர் உட்பட 4 பேர் பலி
அல்கொய்தாவின் முக்கிய கட்டளைத் தளபதி பலி
ஈரான் மீது முழுமையாகப் போர் தொடுக்க எவையெல்லாம் தேவை? அமெரிக்கா போட்டுள்ள கணக்கு

லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தபட்டதில் ஒருவர் பலியானார்.
இதனை தொடர்ந்து லிபியாவுக்கான அமெரிக்க தூதர் பாதுகாப்பான் இடத்துக்கு செல்ல முயன்றபோது அவரது காரைக் குறி வைத்து ரொக்கெட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் உட்பட 4 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி

அல்கொய்தா போராளிக் குழுவின் இரண்டாம் நிலைக் கட்டளைத் தளபதியென விபரிக்கப்படும் செயிட் அல் ஷிஹிட் தென் யேமனில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையொன்றின் போது கொல்லப்பட்டுள்ளார்.
ஹட்ரா மவ்ட் பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி தாக்குதல்களில் அல்ஷிஹ்ரியுடன் மேலும் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சவூதி அரேபியப் பிரஜை அல் சஷிஹ்ரி 2007 ஆண்டு கௌதமாலாபேயிலுள்ள தடுப்பு நிலையத்திலிருந்து அமெரிக்காவால் விடுதலை செய்யப்பட்டிருந்தார். நன்றி வீரகேசரி

ஈரான் மீது முழுவீச்சில் போர் தொடுத்து
அதனை வீழ்த்த வேண்டுமென்றால் எவையெல்லாம் தேவை என்பதனை வொஷிங்டனைச் சேர்ந்த
பாதுகாப்பு ஆய்வாளரான அன்டனி கோர்ட்ஸ்மென் வெளியிட்டுள்ளார்.
அவரது கணக்கின் படி ஈரானை முழுமையாகத் தாக்க வேண்டுமெனில் 100 க்கும் அதிகமான தாக்குதல் விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேவை.
இவற்றைத்தவிர ஆளில்லா விமானங்கள், டேங்கர்கள் ஆகியனவும் தேவைப்படுகின்றன.
ஈரானின் வான்பாதுகாப்பினைத் தாக்கியழிக்கவும், அதன் ஐந்து அணு உலைகள் மீதும் தாக்குதல் நடத்தவும் இவை தேவைப்படுகின்றன.
மேலும் வெவ்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்களை அமெரிக்கா தாக்கி அழிக்க வேண்டியிருக்குமெனவும் அன்டனி கோர்ட்ஸ்மென் தெரிவித்துள்ளார்.
இதனைத்தவிர பல்லாயிரக்கணக்கான கிலோ வெடி மருந்துகளும் இதற்குத் தேவைப்படுமென கோர்ட்ஸ்மென் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் அந்நாடு மீளவும் ஆரம்பித்து விடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நன்றி வீரகேசரி

No comments:
Post a Comment