.
என்ன செய்வதென்று தெரியாமல் காகங்கள் காலையிலேயேகரையத்தொடங்கிவிட்டன.ஆமாம் இந்தப்பட்டணத்தில் கோழி கூவாது.இங்கு மட்டுமல்ல எந்தப்பட்டணத்திற்கு சென்றாலும் கோழி கொக்கரிக்க மட்டுமே செய்யும். ஆனால் இன்னும் மக்கள் நம்புகிறார்கள் கோழிதான்கூவுகிறதென.ஆனால் பட்டணத்தில் கறிக்கடைகளில் மட்டுமேகொக்கரித்தும் கூவிக்கொண்டும் இருந்தன கோழிகளும் சேவல்களும் .
காகங்கள் கரைந்துகொண்டிருந்தது தானே.ஆமாம். காலை 7மணியாகிவிட்டதென யாரும் சொல்லாமல் தெரிந்திருந்தது காகங்களுக்கு.மனோ பாட்டி முன்னோர்களுக்கு படைப்பதென கருதி இரண்டு கரண்டிமாவினை இட்டவித்து சுவற்றின் மீது வைத்தாள். காகத்தின் கரைச்சல்முடிந்தது. நகரத்தில் இரைச்சல் ஆரம்பமானது. சிறிது நேரத்திலேயே யாசகம் கேட்டு வந்தான் சிறுவன் ஒருவன், எதுவுமில்லை என்று சுருக்கங்களை சுருக்கி கோரமுகம் காட்டினாள்.
சுத்தமான காற்றினை செலவு செய்து அசுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர் நம்மனித இனத்தினர்.அனைவருக்கும் அவசரமும் பதற்றமும்.இவர்களை சுமந்த பாவத்துக்கு அசுத்தமாகிக்கொண்டிருந்தது நிலமும்.குருவியின் சத்தம் அழகாய் கேட்டது அந்த சாலையில்.மரமில்லாத சாலையில் குருவியா?!, ஒரு அலைபேசியில் ரிங்டோனாக ஒலித்தது குருவியின் குரல். விநாயகப்பெருமான் போல வயிறு வீங்கிய போக்குவரத்துக்காவலர் ஒருவர் யாரோ கோட்டை தாண்டிவிட்டாரென கப்பம் வசூலித்துக்கொண்டிருந்தார்.
அரசாங்கத்தின் சாராய விற்பனையால் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தான்அங்கொரு சிறுவன். அது அவனின் தகப்பனுக்கு அன்றிரவு ஒருகுவார்ட்டரோ காலையில் கொக்கரித்த ஒரு கோழியாகவோ கிடைக்கஉதவி செய்யும்.கண்களில் பசியும்,இடுப்பில் இந்திய சட்ட அமைப்பில் இருப்பது போல ஆங்காங்கு ஓட்டைகளுடன் கூடிய ஒரு கால் சட்டையும் அணிந்திருந்தான். கால்சட்டையின் நிறம் பார்த்ததில் அவன் அரசாங்கப்பள்ளியில் படித்திருக்கவேண்டும், இல்லையேல் அவன் தந்தை துப்புரவுப்பணியாளனாய் இருக்கவேண்டும் என்று யூகிக்க தோன்றியது.
களைத்துப்போன சிறுவன் அங்கிருந்த மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்.பக்கத்தில் இங்கே குப்பைகள் கொட்டக்கூடாது என்று எழுதியதற்கு ஏற்றார்போல் குப்பைகள் குவிந்துகிடந்தது. அதில் தனது மானத்தைக்காத்துக்கொள்ள எதாவது துணி இருக்குமா எனத்தேடத்தொடங்கினான். அந்த ஓரமாய் நாய் மேய்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தான் ஒரு வசதி படைத்த வசம்பு. அவனுடைய நாய் மூத்திரம் போவதற்கு தடையாய் இருக்கிறான் இந்த சிறுவன் என அவனைத்துரத்த, சிறுவனோ அங்கு கிடைத்த ஒரு செய்தித்தாளை எடுத்து மானத்தை மறைத்து ஓடினான்.செய்தித்தாளில் "இந்தியன் என்பதில் பெருமதில் கொள்வோம்" என பிரதமர் பேட்டி அளித்திருந்தார்.
-கிட்டு.
Nantri:muttalinkavidhaigal
No comments:
Post a Comment