வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 41 – மழையோ மழை!


 .

ஞானா:      அப்பா அன்டைக்கு மழை, கடவுளின்ரை அருட் சக்தியின் வெளிப்பாடு எண்டு
சொன்னியள். கொஞ்ச நாளைக்கு முந்தி மழை செய்த அருள் விளையாட்டைப் பாத்தனியள்தானே.

அப்பா:      அவுஸ்திரேலியாவிலை குவீனஸ்லன்ட் மாநிலம் எல்லாம் வெள்ளத்தாலை அழிவு,
           இலங்கையிலை மன்னார், மட்டக்களப்பு மாநிலம் எல்லாம் மழையாலை அழிவு,
சனங்கள் எல்hம் அல்லோல கல்லோலப்பட்டுத் துன்பத்திலை வாடித் தவிச்சிது உயிர்ச்சேதம்    கூட நடந்திருக்கு, இதுதானோ கடவளின்ரை அருள் எண்டு கேக்கவாறாய்     ஞானா.

ஞானா:      வேறை என்ன அப்பா. எங்கடை திருவள்ளுவரும் “வான் சிறப்பு” எண்டு சொல்லி
           மழையைப் புகழ்ந்து பத்துக்குறள் எழுதிவைச்சிட்டுப் போயிருக்கிறார்.

சுந்தரி:      நல்லாய்ச் சொன்னாய் ஞானா. “வானின்று உலகம் வழங்கி வருதலால்
                                  தானமிழ்ம் என்றுணரற் பாறு.
           எண்டு உயிர்களைச் சாகாமல் வைச்சிருக்கிற அமிழ்தம் எண்டு வேறை, குறள்
           எழுதிவைச்சிருக்கிறார். மழை உயிர்களைச் சாகடிக்கும் என்டு வள்ளுவருக்குத்
           தெரியேல்லையே அப்பா?


அப்பா:      சுந்தரி நீங்கள் இரண்டு பெம்பிளையளும் வெள்ளப் பெருக்கிலை அம்பிட்டுச் சீரழிஞ்ச
           ஆக்களைப் போலை எல்லே பேசிறியள். கஷ்டப்பட்ட சனம் உப்பிடிச் சொன்னாலும்
           பாதகம் இல்லை. நீங்கள் சிட்னியிலை நல்ல சோக்காய் இருந்துகொண்டு
           திருவள்ளுவரையும், மழையையும் குறைசொல்லிறது சரியே?

சுந்தரி:      ஏன் அப்பா வுஏ யளிலை காட்டின படங்களைப் பாக்கேல்லையே?

அப்பா:      வுஏ யைப் பாத்தவடனை பக்கத்து வீட்டுப் பப்பிலியானோ தன்ரை குழரச றாநநட னுசiஎந
                        எடுத்துக்கொண்டு குவீன்ஸ்லன்டுக்கு வொலன்ரியராய்ப் போட்டான் பிள்ளை. நீங்கள்
           என்ன செய்தனியள். வடிவாய்ச் சமைச்சுப் சாப்பிட்டிட்டு, மரக்கறி விலை ஏறப்போகுது
           சாமான்கள் விலை ஏறப்பொகுது எண்டு மகாநாடு நடத்தினதுதானே மிச்சம்.

ஞானா      அப்பா, நாங்களும் எங்களாலை இயன்ற குடழழன சுநடநைக னுழயெவழைn ஐக் குடுத்திட்டுத்
           தான் இருக்கிறம்.

அப்பா:      னுழயெவழைn எண்டவுடனைதான் ஞாபகம் வருகுது. எங்கடை மூத்தோர் சங்கத் தலைவர்
           வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை அனுப்பச் சொல்லி அங்கத்தவர் எல்லாருக்கம்
           பேர்பேராய்க் காயிதம் அனுப்பினவர். வாசிச்சுப் பாத்திட்டு மேசையிலை வைச்சனான்
           மறந்து போனன் சுந்தரி.

சுந்தரி      அப்பா நாங்களும் எத்தினைக் கெண்டு குடுக்கிறது. கிழமைக்கு ஐம்பது அறுபது எண்டு      போய்க்கொண்டுதானே இருக்குது.

அப்பா      சுந்தரி, நீர் சொல்லிறது உண்மைதான், ஆனால் கேக்கிற எல்லாருக்கும் இயன்ற
           மட்டிலை கொஞ்சம் கொஞ்சமாய் என்டாலும் பகிர்ந்து குடுக்கிறதுதான் நல்லது.

சுந்தரி:      நான் இப்ப குடுக்க வேண்டாம் எண்டு சொல்லேலை. இப்ப நாள்போட்டுது இனி
           கடழழன -சநடநைக னழயெவழைளெ குடுக்கலாமோ தெரியேல்லை.
            
அப்பா:      சுந்தரி, நான் ஒருக்கால் வநடநிhழநெ பண்ணிக் கேட்டிட்டு வாறன்.

ஞானா:      அப்பா! அப்பா! கதையை மாத்திக்கொண்டு எழும்பிப் போக வேண்டாம்.
           திருவள்ளுவற்றை கதைக்கு வாருங்கோ.

அப்பா:      ஞானா, நீங்கள் திருக்குறளைச் சரியாய் படிக்காட்டில் நான் ஒண்டும் செய்யேலாது.
           மழை கெடுக்கும் எண்டு வள்ளுவர் உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறார்.





-2-

           “கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
            எடுப்பதுஉம் எல்லாம் மழை”
          
           எண்ட 15 ஆவது குறளிலை சொல்லியிருக்கிறார் கண்டியளோ. மழை வந்து
           இரண்டு விதத்திலை மக்களைக் கெடுக்கும். ஒண்டு மழை பெய்யாமல் உலகத்திலை
           வறட்சியை ஏற்படுத்திப் பஞ்சம், பசி எண்டு கெடுக்கும்.

ஞானா:      மற்றது வந்தப்பா தேவையில்லாத அளவுக்கு அடிச்சூ+த்தி வெள்ளப் பெருக்கை
           உண்டுபண்ணிச் சனங்களைத் துன்புறத்தும்.

அப்பா:      உண்மைதான் ஞானா. ஆனால் மற்றப் பக்கமாய்ப் பாத்தால், கெட்டுப் போனவையை
           தூக்கிவிடுறதும் மழைதானே. வறட்சியாலை வாடிறவையின்ரை துன்பத்தைப் போக்க
           அளவாய்ப் பெய்து செழிப்பை ஏற்படுத்துதுதானே. வெள்ளம் வடிஞ்சு ஓடினாப் பிறகு
           பயிர்பச்சை வளர உதவிறதும் மழைதானே. மழைக்கு அவ்வளவு சக்தி உண்டு.

ஞானா:      ஆனால் அப்பா மழையை அருட் கொடை எண்டு எப்பிடிச் சொல்ல முடியும்.

அப்பா:      மழை கடவுளாலை தரப்பட்ட கொடை. கடவளுடைய அருளை சாதாரண மனிசர்
           புரிஞ்சுகொள்ள ஏலாது ஞானா. உலகத்தின் இயற்கை நன்மையும் தீமையும்
           நடைபெறுகிறதுதான். நன்மை வரும்போது புகழ்ந்தும், தீமை ஏற்படும் போது
           இகழ்ந்தும் வாழக்கூடாது. இரண்டையும் சமனாக ஏற்று வாழ்வதுதான் சிறந்த
           வாழ்வு.

சுந்தரி:      அதைத்தான் திருவள்ளுவர் கொடுப்பதுஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
           எடுப்பதுஉம் எல்லாம் மழை எண்டு சொல்லியிருக்கிறார். அப்பிடித்தானே அப்பா?

அப்பா:      ஓம் சுந்தரி கெடுக்கிறதும், தூக்திஎடுக்கிறதும் எல்லாம் மழை. மழை கடவுளின் சக்தியைக் காட்டிற அறிகுறி. கடவுள் மனிசருக்கு வேண்டியதைத்தான் செய்வார் எணடு நாங்கள் நம்ப வேணும்.

                                     (இசை)


No comments: