மாலை மரியாதை - கார்த்திகா கணேசர்

.


திரு முருகபூபதி அவர்கள் இலக்கிய வாழ்வில் பங்குபற்றிய கருத்தரங்குகளில் ஏற்ப்பட்ட சலிப்பால் குருத்தரங்குகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும் எனும் கட்டுரையை எழுதியிருந்தார். தமிழ் இலக்கியத்தை வழர்க்கும் பொறுப்புள்ள எழுத்தாளர்கள் மகாநாட்டிலே நடக்கும் பிரச்சினைகளை பொதுமக்களும் அறியக்கூடியதாக இருந்தது.



மங'கல விளக்கேற்றல் பொன்னாடைகள், பூமாலைகள், வெறும் புகழாரங்கள் அத்தனையும் கருத்தரங்கிற்கு சம்பந்தமில்லாத சம்பிரதாயங்கள் பற்றிக் கூறியிருந்தார். இதை வாசித்தபோது நான் நான் அறிந்த விசயத்தை பிறரும் அறிந்திருக்க வேண்டும் என எண்ணுவதால் இங்கு அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் சென்னையில் கல்வி கற்றபோது பாதுகாவலராக இருந்தவர் திரு கண முத்தையா அவர்கள். இவர் தமிழ்ப்புத்தகாலயம் என்ற பிரபல நூல் வெளியீட்டு நிறுவனத்தின் அதிபர்மட்டுமல்ல யுத்த காலத்திலே நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்அவர்களின் செயலாளராகவும் பணிபுரிந்தவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோசுடன் இணைந்து வேலை செய்யும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியிருந்தார்

இந்திய சுதந்திரத்திற்கு ஆயுதம் ஏந்தி போரிட தயாரானவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்அவர்களின்

இதற்காக பர்மாவிலே இந்தியப்படையைத் திரட்டி பயிற்சியும் அழிக்கப்பட்டது. பர்மாவிலே இருந்த இந்தியர்கள் இந்த அணியில் சேர்ந்தார்கள். அவ்வாறே திரு கண முத்தையாவும் சேர்ந்தார். இவர் தமிழகத்தின் செட்டிமார் பரம்பரையில் வந்தவர். தமிழக செட்டிமாருக்கு வரவு செலவு கணக்கு எழுதுவதற்கு ஒரு தனிப்பாணி உண்டு. பலநூறு ஆண்டுகளாக வியாபாரமே தொழிலாகக் கொண்டு திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள் அல்லவா? இன்றும் இந்த செட்டிகளின் கணக்கு வைக்கும் முறை இந்தியன் வருமான வரி இலாகாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.அதனால் நேதாஜின் iனெயைn யெவழையெட யசஅல யின் வரவுசெலவை பராமரிக்க படையில் சேர்ந்த சில செட்டிகள் நியமிக்கப்பட்டனர். அவ்வாறே திரு கண முத்தையாவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட வௌ;வேறு இலாகாக்களுக்கு அப்பப்போ நேதாஜி வருவதுண்டு. ஒவ்வொரு தடவை அவர் வருகை தரும்போதும் அவருக்கு மாலை மரியாதை சம்பிரதாயமாக நடைபெறும்.

ஒருமுறை அவர் வரஇருந்தபோது திரு கணமுத்தையா சகாக்களிடம் கூறினாராம் "நாம் யாவருமே நாட்டு விடுதலைக்கு எமது உயிரை தியாகம் பண்ண வந்துள்ளோம் எம்மை வழிநடத்துபவர் நேதாஜி எமக்குள் என்ன சம்பிரதாயம் அவருக்கு மரியாதை செய்ய வேண்டுமா?என. யாவரும் மாலை மரியாதை வேண்டாம் என முடிவு செய்தனராம். நேதாஜியும் வந்தார் வழமையாக நடைபெறும் மாலை மரியாதை நடைபெறவில்லை, மற்றப்படிகணக்கு வழக்கு யாவும் வழமைபோல் ஆராயப்பட்டது.நேதாஜியும் விடைபெற்று சென்றுவிட்டார்.

மாலை மரியாதை தேவையில்லை என்ற எண்ணத்தை முன்வைத்தவர் யார் என அறிய விரும்பினாராம்நேதாஜி. அவருக்கு கண முத்தையாவே அந்த அபிப்பிராயத்தை கூறியவர் எனவும் தெரியவந்தது.

உடனடியாக திரு கண முத்தையாவை அழைத்த்து தன்செய்கைக்கு அதாவது இத்தனை நாட்களும் மாலை மரியாதையை ஊற்றதற்கு தான் வெட்கப்படுவதாக கூறியதுடன் அவரைத் தனது செயலாளராகவும் நியமித்துக்கொண்டார். அத்துடன் நில்லாது சகல இலாகாக்களுக்கும் நான் இனிமேல் வரும்போது மாலை மரியாதை செய்யவேண்டாம் என்னையும் உங்களில் ஒருவனாக நடத்துங்கள் என்று எழுதியதுடன் இத்தனை நாளும் மாலை மரியாதை பெற்றதற்கு வெட்கப்படுகிறேன் எனவும் எழுதி அனுப்பினார்.

உள்ளத்தால் நேர்மையாக உழைப்பவன் மாலை மரியதையை பெறத் தேவையில்லை அவனது உழைப்பே அவனை உயர்நதவனாக்கும். என்பதற்கு நேதாஜியே எமக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.

2 comments:

Unknown said...

எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்...இன்று பலர் மாலைக்காகவே விழா எடுக்கின்றார்கள்

பாவலர் கருமலைத்தமிழாழன் said...

மாலைக்காக மட்டுமன்றி விளம்பரத்திற்காகவும் விழா எடுக்கிறார்கள்.