.
இரக்கமுள்ள அன்பர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்
அவுஸ்திரேலியாவில் இயங்கும் கல்வி நிதியத்தின் கோரிக்கை
“அன்னசத்திரம்  ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்”

                                -மகாகவி பாரதி-

இலங்கையில் நீடித்த போரினால் தமது பெற்றவர்களை இழந்து கல்வியைத்தொடரமுடியாமல் பாதிப்பிற்குள்ளான ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு கடந்த 23 வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவிலிருந்து நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் உதவி வழங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு சமீபத்தில் மேலும் பல மாணவர்களின் உதவி கோரும் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களான வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவுரூபவ் யாழ்ப்பாணம் ரூபவ் மட்டக்களப்பு திருகோணமலைரூபவ் அம்பாரை ஆகிய மாவட்டங்களிலிருந்து சமீபத்தில் கிடைக்கப்பெற்றுள்ள போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில்  அவசர உதவி தேவைப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடாக ஆயிரக்கணக்கான ஏழைத்தமிழ் மாணவர்கள் நிதியுதவி பெற்று கல்வியைத்தொடர்ந்து அவர்களில் பலர் பல்கலைக்கழகங்களிலும் பிரவேசித்துள்ளதுடன் தொழில்வாய்ப்புகளும் பெற்றுள்ளனர்.

இரக்கமுள்ள அன்பர்களின் ஆதரவினால்தான் இந்த நற்பணி சாத்தியமாகியுள்ளது.

ஒரு மாணவருக்கு மாதாந்தம் 20 வெள்ளிகளை($20.00 Dollars) நன்கொடையாக வழங்குவதன் மூலம் இந்தப்புனிதப்பணிக்கு எவரும் ஆதரவு வழங்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒருதடவை நிதியுதவி குறிப்பிட்ட தமிழ்ப்பிரதேசத்தில் இயங்கும் கல்வி நிதியத்தின் கிளை அமைப்புகள் மற்றும் குறிப்பிட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் ஊடாக நிதியுதவி அனுப்பப்படுகிறது.

 உதவும் அன்பர் இலங்கைசெல்லும் சந்தர்ப்பங்களில் தமது உதவியைப்பெற்றுக்கொண்டு கல்வியைத்தொடரும் மாணவரை நேரடியாக சந்தித்து உரையாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 நிதியுதவி பெறும் மாணவர் நிதி பெற்றுக்கொண்டதை அத்தாட்சிப்படுத்தும் நன்றிக்கடிதம் கல்வி முன்னேற்றச்சான்றிதழ் என்பனவும் உதவும் அன்பரின் கவனத்திற்கு கல்வி நிதியத்தினால் சமர்ப்பிக்கப்படும்.

அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் இங்கு பதிவுசெய்யப்பட்ட(Incorporated) அமைப்பாகும்.

 கல்வி நிதியத்தின் வங்கிக்கணக்கு விபரம்(Bank Details)
A/C Name: Ceylon Students Educational Fund (inc)
Bank: Commonwealth Bank of Australia
Branch: Brunswick, Victoria 3056, Australia
 BSB No: 063 111      A/C No: 1063 4651
மேலதிக விபரங்களுக்கும்உதவிதேவைப்படும் மாணவர்களின் பூரண விபரங்களுக்கும்:-

     மருத்துவக்கலாநிதி மதிவதனி சந்திரானந்த் (தலைவர்) 00 61 (03) 9708 1218
     திரு. எஸ். கோர்ணேலியஸ்          (செயலாளர்)  00 61 (03) 9308 5510
      திருமதி வித்தியா ஸ்ரீஸ்கந்தராஜா  (நிதிச்செயலாளர்) 00 61 (03) 9444 6916
       திரு. லெ. முருகபூபதி    (துணை நிதிச்செயலாளர்) 00 61 (03) 9308 1484

                    E.Mail : kalvi.nithiyam@yahoo.com     Web: www.csefund.org
                                                                      (தகவல்: லெ.முருகபூபதி)

No comments: