கம்பன் விழா 2012இல் மாருதி விருது மற்றும் சான்றோர் விருது பெற்ற விருதாளர்கள்.

.
இந்த ஆண்டிற்கான கம்பன் விழாவில் விருதுபெற்ற பெரியோரின், அவர் ஆற்றிய சேவை மற்றும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈட்டித்தந்த பெருமைகளை தமிழர்களாகிய நாம் அறிந்து கொள்ளவேண்டும் என்ற விருப்போடு தமிழ் முரசு அவுஸ்திரேலிய வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றுகின்றோம். இவ்விபரங்களை எமக்காகத் தந்துதவிய நல்ல உள்ளங்களுக்கு எம் ஆத்மார்த்த நன்றிகள்.
நன்றி.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்.

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் உயர் விருதான ~மாருதி| விருது – 2012 பெற்றவர் : இருதய மருத்துவ நிபுணர் திருமிகு. வைரமுத்து மனமோகன் அவர்கள்.
  
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது - 2012
பெற்றவர் : பொன். பூலோகசிங்கம் அவர்கள்


 அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது - 2012
பெற்றவர் : எஸ். பரம் தில்லைராஜா அவர்கள்

  
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது - 2012
பெற்றவர் : எஸ். பொன்னத்துரை (எஸ்.பொ.)


 அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது - 2012
பெற்றவர் : மருத்துவக்கலாநிதி பொன். சத்தியநாதன்அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் உயர் விருதான ~மாருதி| விருது – 2012

பெற்றவர் : இருதய மருத்துவ நிபுணர் திருமிகு. வைரமுத்து மனமோகன் அவர்கள்.

இருதயத்து வைத்தியராய் ஏற்றமுடன் உலகெங்கும்
மருத்துவத்தில் புகழ்பெற்ற மாண்பான பெரு மனிதன்
வருத்தமுடன் நம் இனத்தில் வாடுகின்ற மாந்தர்க்காய்
திருத்தமுறப் பேருதவி செய்யும் பெரும் கொடையோன்
இருதய மருத்துவ நிபுணர் திரு மனோமோகன் அவர்கள் அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களிடையே தனது தன்னலமற்ற சேவைகளினால் பெரிதும் அறிமுகமானவர். இலங்கையில் மருத்துவராக பணியாற்றிய காலத்திலிருந்தே அவரது தொழில்சார் கடமைகளுக்கு மேலாக சமூகப் பணிகளில் ஈடுபட்டார். பின்னர் மேற்படிப்புக்காக இலண்டனில் சிலகாலம் வசித்தபோதும், பின்னர் குடும்பத்தோடு புறு}ணை நாட்டிற்கு தொழில்நிமித்தம் புலம்பெயர்ந்து அங்கு வாழ்ந்;தபோதும், பல்வேறு வழிகளில் அங்கு வசித்த தமிழ் மக்களுக்கும், ஈழத்தில் அல்லலுற்ற மக்களுக்கும், வறிய ஆதரவற்ற மாணவர்களுக்கும் பொருளுதவி செய்தது என அவர் ஆற்றிய சேவைகள் ஏராளம்.

1993 ஆம் ஆண்டளவில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த திரு.மனோமோகன் அவர்கள், இங்கும் தனது சேவைகளை மேலும் முனைப்புடன் ஆற்றி வருகின்றார். 2000 ஆண்டளவில் தமிழ் மருத்துவ நிதியம் (Tamil Medical Aid Foundation) என்ற தொண்டு நிறுவனத்தினை ஆரம்பிப்பதில் முன்னோடியாக இருந்து செயற்பட்டு, அவ்வமைப்பு மூலம், இங்குள்ள மருத்துவர்களைத் திரட்டி பல தடவைகள் ஈழத்திற்குச் சென்று அங்கு போரினால் அல்லலுற்ற மக்களுக்கு சேவை செய்த பெருமைக்குரியவர் இவர். கடந்த 11 ஆண்டுகளில் இந்த அமைப்பு 2.8 மில்லியன் டொலர்களுக்கு மேலான தொகையினைத் திரட்டி தாயக மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றி வருகின்றது. இந்த அமைப்பில் திரு. மனோமோகன் அவர்களின் பங்கு அளப்பரியது.

அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்ற பல தமிழ் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அவர்களின் கல்வியைத் தொடர்வதற்கும், தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கும் பல்வேறு வழிகளில் பின்னிருந்து உதவிவருபவர் திரு மனோமோகன் அவர்கள். சமய, சமூக, மனிதாபிமானப் பணிகளிலும் நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுவருகின்றார்.

ஈழத்தில் தமது கல்வியைத் தொடர்வதில் அல்லலுறும் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கும், அங்குள்ள கிராமங்களில் போதுமான வைத்திய, சுகாதார வசதிகள் கிடைக்காமையினால் அவதியுறும் நோயாளருக்கும் தன்னால் முடிந்த அளவுக்குத் தொண்டாற்றி வரும் மருத்துவ நிபுணர் மனோமோகன் அவர்கள், அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம், சிட்னி தமிழ் அறிவகம், சைவ மன்றம் போன்ற சமூக நிறுவனங்களில் தலைவராகவும், உறுப்பினராகவும்; இருந்து தமிழ் அவுஸ்திரேலியர்கள் பெருமைப்படும் அளவிற்கு தனித்துவமான, சமூகப் பங்களிப்பை வழங்கி வருகின்றார்; என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

கலைகளையும், கலைஞர்களையும் மதித்துப் போற்றுதல், எல்லோரையும் சமமாக மதித்தல், அணுகுவோரை இன்முகத்துடன் உபசரித்தல் போன்ற நற்குணங்களின் இருப்பிடமான மருத்துவ நிபுணர் மனோமோகன் அவர்களுக்கு, அவுஸ்திரேலியக் கம்பன் கழக உயர்விருதான மாருதி விருது இந்த ஆண்டுக் கம்பன் விழாவில் வழங்கப்பட்டது.அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது - 2012
பெற்றவர் : பொன். பூலோகசிங்கம் அவர்கள்


செந்தமிழை உயிராக்கி செறிந்த அறிவதனால்
நந்தமிழர் பெருமையெலாம் நயத்தோடு உரைத்த மகன்
புந்தியினால் தமிழ்க்கடலுள் புகுந்தே கலாநிதியாய்
விந்தைமிகு தமிழ்ப் பெருமை வீறோடுரைத்த மகன்.
இலங்கையின் வவுனியாவில் செட்டிக்குளம் என்ற ஊரில் பிறந்த திரு.பொன். பூலோகசிங்கம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்; பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், ஆ. சதாசிவம், ச. தனஞ்சயராசசிங்கம், சு. வித்தியானந்தன் ஆகியோரின் மாணவராகப் பயின்று, 1961 ஆம் ஆண்டு முதல்; வகுப்பு தமிழ்ப் பட்டதாரியாக பட்டம்; பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவேளையில் பல்கலைக்கழகத்தின் புலமைப்பரிசில் பெற்று 1963 முதல் 1965 வரை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், திராவிட மொழியியலறிஞர் பேராசியர் தோமஸ் பரோவின் கீழ் மொழியியல் ஆராய்ச்சியை மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார்.
மீண்டும் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்து, கொழும்புப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 1997 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1997ஆம் ஆண்டு தனது பேராசிரியர் பதவியை விட்டு விலகி, புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் குடியேறி சிட்னி நகரில் தற்போது வசித்து வருகின்றார்.
பேராசிரியர், தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், பண்பாடு, சமயம், வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இரு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலே பங்கு கொண்டு தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர். 1886 ஆம் ஆண்டு பதிப்புப் பெற்ற ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபத்தினை  அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் 1975 இலும் 1979 இலும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நு}லுருவாகியுள்ளன.
1970 இல் வெளிவந்த ~தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்| என்ற இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது பெற்ற கட்டுரைத் தொகுப்பு, 1990 இல் வெளிவந்த இந்துக் கலைக் களஞ்சியம் - முதற் தொகுதி, 1997 இல் வெளிவந்த இலங்கை அரசின் விருது பெற்ற ~ஈழம் தந்த நாவலர்| கட்டுரைத் தொகுதி, ~நாவலர் பண்பாடு| என்ற கட்டுரைத் தொகுதி, சிலப்பதிகார யாத்திரை என்ற கட்டுரைத் தொகுதி, Pழநவ வுhயஅடிiஅரவார – ய pசழகடைந போன்ற நு}ல்கள்; திரு பொன்.பூலோகசிங்கம் அவர்களினால் இதுவரை வெளியிடப்பட்டவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும்.
நு}ல்கள் தவிர பல்வேறு மலர்கள், இதழ்களில் நு}ற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை தமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, சமயம், இலக்கணம் என்பன சார்ந்தவை. உலாப்பிரபந்தவளர்ச்சி, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் நெறி, தத்தை விடுது}து, பதினெட்டாம் நு}ற்றாண்டு வரையான ஈழத்துத் தமிழ் இலக்கியம், பத்தொன்பதாம் நு}ற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சி, ஈழத்துப் புராணங்கள், வன்னி நாட்டின் வரலாறு, கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ் இலக்கண விசாரம் என்பன குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளாகும்.
இவரது தமிழ்ப் பணிகளுக்காக 1993 ஆம் ஆண்டு இலங்கை அரசினால் “கலாகீர்த்தி”ப் பட்டம் அளிக்கப்பெற்ற முதல் தமிழர் இவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திரு.பொன். பூலோகசிங்கம் அவர்களின் தமிழ்ச் சேவையைப் போற்றி அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் அவருக்கு இந்த ஆண்டின், அமரர் வித்துவான் க. ந. வேலன் ஞாபகார்த்த அறக்கட்டளை விருதினை வழங்கிக் கௌரவித்தது.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது - 2012
பெற்றவர் : எஸ். பரம் தில்லைராஜா அவர்கள்


ஈழத்து இசை உலகை ஏற்றிப் புகழ் வளர்த்த
ஆழம் மிகு கலைஞன் அற்புதமாம் கானத்தால்
வாழ இளைஞர்க்கு வழி காட்டி வசை நீக்கி
நீளப் புகழ் கொண்ட நிகரில்லாப் பெருங்கலைஞன்

ஈழத்தின் மூத்த கர்நாடக இசை விற்பன்னர்களில் திரு. பரம் தில்லைராஜா அவர்களுக்குத் தனியிடம் உண்டு. தனது ஓன்பதாவது வயதிலேயே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பாடி, பலரது பாராட்டையும் பெற்றவர். தனது பதின்காவது வயதிலே இசை மேதைகள் வயலின்-சங்கீத கலாநிதி மருங்காபுரி கோபாலகிருஷ்ணய்யர், மிருதங்கம் - திருச்சி ஸ்ரீனிவாசன் ஆகியோரின் அணிசெய் இசையுடன் யாழ்நகரில் கச்சேரி செய்த ஒரு இளைய இசைத் திறனாளி என்ற பெருமையும் இவருக்குண்டு.
யாழ். பரியோவான் கல்லூரியில் விளையாட்டணித் தலைவனாகவும், மாணவ தலைவனாகவும் மிளிர்ந்தவர். பின் 1947ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல்தர இசைப்பட்டதாரியாக வெளியேறினார். 1950 இல் பொருளியலில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றார்.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் உயர்தர இசைக்கலைஞராக தன் இசை வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலேயே இடம்பிடித்தவர் இவர்;. தனக்கென ஓர் தனித்துவமான இசைப் பாணியை வரித்துக் கொண்டு சங்கீத மேடைகளை வெற்றிகரமாக ஆக்கும் வித்தை தெரிந்தவர்.
வடஇலங்கைச் சங்கீத சபையினரின் ஆசிரியர் தர இசைப் பாPட்சைகளுக்கு பாPட்சகராகப் பங்கேற்ற முதல் ஈழத்து இசைக் கலைஞர் என்ற பெருமையும் திரு. பரம் தில்லைராஜா அவர்களையே சாரும். சங்கீத ஜாம்பவான்கள் வீணை பாலசந்தர், டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா போன்றோருடன் இணைந்து இசைக் கச்சேரி செய்த பெருமையும் கொண்டவர் இவர். பல கௌரவப் பட்டங்களைத் தனக்காக்கிக் கொண்ட பரம் தில்லைராஜா அவர்கள், மதுரை ஆதீனத்தின் “கானாம்ருத வாரிதி” பட்டத்தையும் பெற்ற பெருமைக்குரியவராவார்.
பிரபல இந்திய இசை அரங்குகளிலும் இலங்கை மேடைகளிலும் இவரது  இசை நிகழ்ச்சிகள் பலத்த பாராட்டுக்களோடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவின் பல பாகங்களிலும் இசைக் கச்சேரிகளை வழங்கியவர், இலண்டன், பிரான்சு, மலேசியா, சிங்கப்பூரென தன் இசைப்பயணத்தின் முற்பகுதியிலேயே கச்சேரிகளை நிகழ்த்தி ஈழத்து இசையுலகத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றார். பிரித்தானிய அரசியின்
ஐம்பதாவது ஆண்டு அரசாட்சி நிறைவைப் பராட்டி நிகழ்ந்த நிகழ்வில் இவரது இசைக்கச்சேரி இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண மண்ணில் இவரது இசைக் கச்சேரி என்றால் அதற்கென சிறப்பான ஓர் ரசிகர் குழாமை தனது இசை ஆளுமையினால் ஏற்படுத்தி  வைத்திருந்தவர். அவுஸ்திரேலிய மண்ணிலும் இவரது கச்சேரிகள் சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றன. இவரது மாணவர்கள் இன்று உலகின் பல பாகங்களிலும் சிறப்பாக இசைப் பணி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை மிக்க பெருமிதத்தோடு எம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இவரின் இசைப் பயணமும் ஆற்றிய சேவையும் ஈழத்துத் தமிழிசை வரலாற்றில் நிச்சயமாய் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
திரு. எஸ். பரம் தில்லைராஜா அவர்களின் இசைச்; சேவையைப் போற்றி அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் அவருக்கு இந்த ஆண்டின், ‘அமரர் இலக்கணவித்தகர் இ. நமசிவாய தேசிகர் ஞாபகார்த்த அறக்கட்டளை விருதினை’ வழங்கிக் கௌரவித்தது.அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது - 2012
பெற்றவர் : எஸ். பொன்னத்துரை (எஸ்.பொ.)


சத்தான எழுத்ததனால் சரித்திரத்தை ஈழத்தில்
வித்தாக்கி விரிந்த பல வீரியமாம் இலக்கியங்கள்
சொத்தாகத் தந்த மகன் சோர்வின்றி இன்றுவரை
புத்தாக்க உலகத்தில் பொன் போலத் திகழுபவர்

1932 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ்.பொன்னுத்துரை சென்னைக் கிறிஸ்தவக் கல்லு}ரிப் பட்டதாரி. இலங்கையிலும் நைஜீரியாவிலும் ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். இலங்கைப் பாட விதான சபை, திரைப்படக் கூட்டுத் தாபனம் ஆகியவற்றிலும் சில காலம் கடமை ஆற்றியவர்.   
தன் பதின்ம வயதுகளிலேயே எழுத்துத் துறையில் கால் பதித்த அவர் இன்றுவரை ஓய்வொழிச்சலின்றி எழுதி வருவதுடன் சுவைபடப் பேசும் பேச்சாளர்கூட. இலக்கியவாதிகள் தமக்கென்று சில அணிகளைச் சார்ந்திருந்த வேளையில், நற்போக்கு என்ற புதிய பாதையில் பயணித்தவர் எஸ்.பொ ஐயா அவர்கள். அவருடைய ‘வீ’ சிறுகதைத் தொகுதி பல்வேறுபட்ட மொழியாளுமைகளையும் பரிசோதனைச் சிறுகதைகளையும் வெளிக்கொண்டு வந்தது. அவருடைய இரண்டாவது நாவல் ‘சடங்கு.’ அக்கால மத்தியதர வர்க்க அரச எழுது வினைஞரின் வாழ்க்கையையும் யாழ்ப்பாணப் பின்னணியையும் அவற்றுக்கேயுரிய மொழி, அங்கதம், வாழ்வியல் கூறுகளுடன் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் யதார்த்தமாக கையாண்ட சிறிய, ஆனால் சக்தி வாய்ந்த, நாவல் அது. அவரின் ‘நனவிடை தோய்தல்’ 1940, 50 யாழ்ப்பாண சமூகத்தை அழகாகப் படம் பிடித்த புகைப்படக் கருவி.
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய 'இனி ஒரு விதி செய்வோம்” என்ற நு}லும் பிரசித்தமானது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என இருபத்தைந்துக்கு மேலான நு}ல்களை எழுதியுள்ளார் எஸ்.பொ அவர்கள்.  சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் 'வரலாற்றில் வாழ்தல்” என்ற தமது சுயசரிதை நு}லையும் எழுதியுள்ளார். ஓர் ஈழத்து எழுத்தாளரின் வாழ்வையும், சமகால இலக்கிய ஆளுமைகளையும், இலங்கை அரசியலையும் ஒருங்கே கூறுகிறது இந்நு}ல். இவர் ஒரு நவீன இலக்கியகர்த்தாவாக இருப்பினும், மரபிலக்கியவாதிகளுடனும் நெருக்கமாக பழகினார்.
அந்தவகையில் மட்டக்களப்பு எவ்.எக்ஸ்.சி நடராசன், யாழ்ப்பாணத்தில் வித்துவான் வேந்தனார் போன்றோரின் இலக்கியப்பணிகளை மெச்சியவர் இவர்.
'தேடல்தான் புதிய அனுபவங்களையும் புதிய தரிசனங்களையும் புதிய விளக்கங்களையும் புதிய ஆர்வங்களையும் புதிய உற்சாகங்களையும் புதிய ஞானத்தையும் கொண்டுவந்து சேர்க்கிறது' என்று சொல்லும் எஸ்.பொ. இன்றும் தமிழ் சேவையில் தமிழுக்கு புதிய பரிணாமத்தையும் புதிய முகத்தையும் தந்துகொண்டிருக்கிறார். இவரை ஈழத்து ‘இலக்கியப் பிதாமகர்’ என்றால் அது மிகையில்லை. தமிழ் நாட்டின் பிரபல மூத்த மற்றும் சமகால எழுத்தாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற எஸ்.பொ அவர்கள், நியுசவுத்வேல்ஸ் தமிழ்ப் பாடசாலை அமைப்புகளின் நூலாக்கங்களில் மூத்த ஆலோசகராக திகழ்பவர்; என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திரு.எஸ்.பொ. அவர்களின் தமிழ்ச் சேவையைப் போற்றி அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் அவருக்கு இந்த ஆண்டின் அமரர் வித்துவான் சி. ஆறுமுகம் ஞாபகார்த்த அறக்கட்டளை விருதினை வழங்கிக் கௌரவித்தது.அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது - 2012
பெற்றவர் : மருத்துவக்கலாநிதி பொன். சத்தியநாதன்


தாய்த் தமிழில் உயிர் பதித்து தன்னுயிரை மதியாது
வாய்த்த பெரும் பதவியதை வைத்தே எதிர்ப்புகளை
மாய்த்து தமிழ் மண்ணுக்காய் மாண்புடனே பல வழியில்
தோய்ந்து பல தொண்டாற்றி துலங்கும் பெருமனிதன்
அவுஸ்திரேலியா மெல்பனில் நீண்டகாலம் தமிழுக்கும் தமிழ்சார்ந்த பணிகளுக்கும் அளப்பரிய சேவை புரிந்தவர் மருத்துவக்கலாநிதி பொன். சத்தியநாதன் அவர்கள். இலங்கையின்; வடபுலத்தில், கரவெட்டியில் பிறந்து மருத்துவராகப் பட்டம் பெற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றியவர்.
ஆழ்ந்த தமிழ்ப்பற்றாளரான சத்தியநாதன,; தமிழ்த்தேசியத்திலும் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவர். தனது தமிழ் உணர்வுகளை தயக்கமின்றி வெளிப்படுத்தியமையால் அக் காலத்தில், இலங்கையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் ஆட்பட்டவர்.
மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்கு சென்ற திரு. சத்தியநாதன் அவர்கள் அங்கும் தமிழ் தகவல் அமைப்பு, தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் முதலான அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு அவற்றின்; ஊடாக ஈழத்தமிழ்மக்களுக்கு அர்த்தமுள்ள தொண்டாற்றினார்.
கணினி வழி தமிழை உருவாக்க வேண்டும் என்ற உணர்வால் கணினித் துறையில் சிறப்புப் பட்டம் பெற்று தமிழைப் பேச்சு வடிவத்திலிருந்து எழுத்து வடிவத்தில் பதிக்கும் மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்கான மொழியியல் ஆய்வுக்காக சிங்களம், சமஸ்கிருதம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றவர்.
அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னரும் தனது தமிழ்ப்பணிகளைத்  தொடர்ந்தார். குறிப்பாக கணினி ஊடாக தமிழை இலகுவான முறையில் தமிழ்ச்சிறார்களுக்குப் பயிற்றுவிப்பதற்கு தனது அறிவை முழுமையாகப்பயன்படுத்தினார். இதுதொடர்பாக மெல்பன், சிட்னி நகரங்களில் சில கருத்தரங்கு உரைகளை  காட்சிப்படுத்தலுடன் நிகழ்த்தியுள்ளார்.
மெல்பனில் ஒரு முழுநாள் தமிழ் மாநாட்டை, ~தமிழை தமிழர் புகலிட நாடுகளில் எவ்வாறு வளர்க்கவேண்டும|; என்ற தொனிப்பொருளில் நடாத்தினார். தமிழ் நூல், இதழ்கள் கண்காட்சி, கருத்தரங்கு, குறும்படம் என்பன இடம்பெற்ற இம்மாநாட்டில் அவுஸ்திரேலிய, தமிழக, சிங்கப்பூர், மலேசிய தமிழ் அறிஞர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மெல்பண், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், உலகளாவிய ~ஒன்றியத் தமிழ்த் தோழமை| போன்ற அமைப்புகளின்; தலைவராக இருந்தவர். அத்துடன் தமிழ் உலகம்  என்ற இருமொழிப்பத்திரிகையை சிறிதுகாலம் வெளியிட்டவர். தனது தமிழ் ஆய்வுப்; பணிகளுக்கு எவரிடமும் உதவி பெறாமல்,  தனது சொந்த உழைப்பில் கிடைத்த வருமானத்தையே செலவிட்டவர்.
திருவள்ளுவரையும் திருக்குறளையும் அவுஸ்திரேலிய வாழ் தமிழ்ச் சிறார்களிடையே பரவச்செய்வதற்காக, தமது சொந்தச்செலவில் திருவள்ளுவர் சிலைகளை இந்நாட்டில் அழகுற வடிவமைத்து தமிழ்மக்களின் இல்லங்களில் திருவள்ளுவர் சிலைகள் இடம்பெறுவதற்கு வழிவகுத்தவர் திரு.சத்தியநாதன் அவர்கள். 
மேலும், இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் போரில் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் இந்நாட்டில் கல்வி வாய்ப்பு பெறுவதற்கும் ஆக்கபூர்வமாக ஆதரவு வழங்கினார்.
விதி வசத்தால் மருத்துவக்கலாநிதி பொன். சத்தியநாதன் அவர்களின் பணிகள் தற்போது தேக்கமடைந்திருந்தாலும், அவரது தமிழ்ச் சேவையைப் போற்றி அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் அவருக்கு அமரர் கம்பகாவலர் கம்பகாவலர் க. சிவராமலிங்கம்பிள்ளை ஞாபகார்த்த அறக்கட்டளை விருதினை வழங்கிக் கௌரவித்தது.


No comments: