.
அத்தோடு மந்திரியால் ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்திற்கு பாராட்டு பத்திரம் ஒன்றும் வழங்கப்பட்டது. இதனை தலைவர் திரு சச்சிதானந்தம் பெற்றுக்கொண்டார். ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்திற்கு அமைச்சர் வருகை தந்ததிற்காக செல்வன் ஜனார்த்தன் குமரகுருபரன் தமிழிலும் செல்வி ஆருதி குமணன் ஆங்கிலத்திலும் நன்றி உரை வழங்கினார்கள் . வகுப்பறைகளில் மாணவர்களோடும் போட்டிக்காக நடுவர்களாக வந்திருந்தவர்களோடும் உரையாடிய கௌரவ மந்திரி திரு. விக்ரர் டினெல்லோவும் திரு.Craig Laundy ம் தமிழ்முரசு ஆசிரியர்களில் ஒருவரான திரு.செ.பாஸ்கரனுடன் தமிழ்முரசுபத்திரிகை பற்றி உரையாடியதோடு தமிழ்ப் பத்திரிகை என்றாலும் திங்கட்கிழமை தானும் அதைப்பார்வையிடபோவதாக கூறி இப்படியான முயற்சிகளை தமிழ் சமூகத்திற்காக தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து திரு.திருநந்தகுமாரும் தலைவருமாக ஒவ்வொரு வகுப்பறைகளாக அழைத்துச் சென்று போட்டிகள் நடைபெறுவதை காட்டினார்கள். Citizenship, Communities and Aboriginal Affairs அமைச்சராகையால் பாடசாலைகளுக்கு விஜயம் செய்யும்போது ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தையும் தெரிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

சென்ற சனிக்கிழமை 12.05.2012 காலையில் ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்திற்கு றைட் தொகுதியின் நியூ சவுத்வேல்ஸ் பாராழுமன்ற உறுப்பினரும் மந்திரியுமான திரு. விக்ரர் டினெல்லோ (Citizenship, Communities and Aboriginal Affairs ) வும் winnable federal seat of Reid தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்டிருப்பவருமான திரு.Craig Laundy யும் விஜயம் செய்திருந்தார்கள். இவர்களை பாடசாலையின் தலைவர் திரு.சச்சிதானந்தம் , அதிபர் திரு.தேவராஜா மற்றும் உயர்வகுப்பு ஆசிரியர் திரு திருநந்தகுமார் ஆகியோர் வரவேற்று தமிழறிவுப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றார்கள்.
படப்பிடிப்பு: ராஜன்
தமிழ்க் கல்வி நிலையத்தின் சென்ற வார அறிவித்தலின் பேரில் தமிழ்க்கலாசாரத்தை பின்னணியாகக் கொண்டு மாணவர்களால் வரையப்பட்ட சித்திரங்களில் நடுவர்கள் குழுவால் சிறந்ததென தெரிவுசெய்யப்பட்ட சித்திரம் ஒன்று பாடசாலை நிர்வாகத்தால் மந்திரிக்கு வழங்கப்பட்டு கொளரவிக்கப்பட்டது. இந்த சித்திரவரைதலில் செல்வி தேனுகா ரவீந்திரராஜாவின் சித்திரம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. தேனுகா மந்திரியால் பாராட்டப் பட்டார்.
தொடர்ந்து திரு.திருநந்தகுமாரும் தலைவருமாக ஒவ்வொரு வகுப்பறைகளாக அழைத்துச் சென்று போட்டிகள் நடைபெறுவதை காட்டினார்கள். Citizenship, Communities and Aboriginal Affairs அமைச்சராகையால் பாடசாலைகளுக்கு விஜயம் செய்யும்போது ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தையும் தெரிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment