வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 33 “சொற் சிலை”


.
ஞானா: அப்பா! இந்த நீதி மன்றங்களிலை.....நீதி தேவதையின்ரை சிலை வைச்சிருக்கிறதைபாத்திருக்கிறியளே?

அப்பா: ஓ.....பாத்திருக்கிறன் ஞானா. அதுக்கு இப்ப என்ன? திருக்குறளை விட்டிட்டு டுயறபடிக்கப் போறியே?

ஞானா: இல்லை அப்பா...இந்த நீதி தேவதை ஒருகையிலை வாளும், மற்றக் கையிலை தராசும் வைச்சுக்கொண்டு, கட்டப்பட்ட கண்ணோடை நிக்கிறா. அவ எப்பிடி நீதி சொல்லப் பேறா என்டுதான் யோசிக்கிறன்.

அப்பா: தேவதை எண்டு சொல்லேக்கை அது ஒரு கற்பனை அல்லாட்டில் ஒரு உருவகம் எண்டதை நம்புவியோ ஞானா.ஞானா: நம்பத்தானே வேணும் அப்பா. ஆனால் இந்த உருவகத்தை ஆர் முதலிலை கண்டு பிடிச்சினம் எண்டது எனக்குத் தெரியேல்லை.

அப்பா: உதுவந்து ஞானா ஆதியிலை எகிப்தியற்றை தேவதையாம். ஆயயவ எண்டு பேராம். உதைப் போலை கிரேக்கரிட்டையும், ரோமரிட்டடையும் நீதி தேவதைகள் வௌ;வேறு பேரிலை இருந்ததாம்.

சுந்தரி: என்ன அப்பாவும், மகளும் தேவற்றை குறளைவிட்டிட்டுத் தேவதையளை ஆராய வெளிக்கிட்டிருக்கிறியள்.

ஞானா: வாருங்கோ அம்மா......இந்த நீதி தேவதைச் சிலையின்ரை கையிலை ஏன் வாளிருக்குது எண்டு அப்பாவைக் கேக்கிறன்.

சுந்தரி: அது உனக்குத் தெரியாதே ஞானா.... இப்ப உலகத்திலை ஒரிடமும் நீதி நடக்கிது இல்லை. ஆனபடியாலை இந்தக் கையிலை இருக்கிற வாளாலை நீதி செலுத்தாத எல்லாரையும் வெட்டிக் கொல்லப் போறன் எண்டு சொல்லித்தான் வாள் வைச்சிருக்கிறா.

அப்பா: அருமையான விளக்கம் சுந்தரி. உம்மடை விளக்கத்தைக் கேட்டு ஞானா உண்மை எண்டு நினைக்கப் போறாள். அது வந்து சுந்தரி இரண்டு பக்கமும் கூர்மையான வாள். ஒரு பக்கம் நீதி, மற்றப்பக்கம் நியாயம். இந்த வாளை விசுக்கினால் குற்றவாளியும் அகப்படலாம்.....குற்றம் சுமத்துகிறவனும் அகப்படலாம் எண்டதைக் குறிக்கிற அடையாளம்.

ஞானா: அப்பிடியென்டால் அவவின்ரை கண்ணை ஏன் கட்டியிருக்கு அப்பா.

சுந்தரி: நான் சொல்லட்டே ஞானா?

ஞானா: சொல்லுக்கோ அம்மா.

சுந்தரி: அதாவது வந்து காசு, பணம், பொருள் இதுகளை இலஞ்சமாய் நீதி செய்யிறஆக்களிடைக் குடுக்கேக்கை, ஒருத்தருக்கும் காட்டாமல், ஒருத்தற்றை கண்ணிலும் பாடாமல் இரகசியமாய் கொண்டு வந்து வீட்டிலை குடுங்கோ எண்டு சொல்லாமல் சொல்லிறா கண்டியோ.

அப்பா: என்ன ஞானா....இன்டைக்கு உன்ரை அம்மா விதண்டா வாதத்துக்கு ஆயித்தமாய் வந்திருக்கிறா. சுந்தரி நீர் சொன்னதின்ரை எதிர் மறைக் கருத்துத்தான் கட்டின கண்களிலை தங்கியிருக்கு. அதாவது பணம், பொருள், அதிகாரம், உயர்ச்சி, தாழ்ச்சி
இதுகள் ஒன்டையும் நான் பாக்க மாட்டேன் என்பதைக் குறிக்கிற அடையாளம் தான் அது.

சுந்தரி: அப்பா இனிஎன்ன...தராசு ஒண்டுதானே மிச்சம். அதையும்.....நடுநிலமை தவறாமல் தீர்ப்புச் சொல்லுவேன் என்டதைக் குறிக்கும் எண்டதைச் சொல்லிவிடுங்கோவன்.

அப்பா: ஞானா. உன்ரை அம்மாவும் பெரிய அறிவாளிதான்.

ஞான: அதை விடுங்கோ அப்பா. எங்கடை பழந்தமிழர் இப்பிடி ஒரு சிலையை அமைக்கேல்லையே அப்பா. எகிப்தியருக்கும், கிரேக்கருக்கும், ரோமருக்கும் இருந்த அறிவு தமிழருக்கு இல்லாமல் போயிட்டுதே.

அப்பா: ஞானா...பழந்தமிழர் கல்லிலை சிலை அமைச்சினமோ என்னவோ எனக்குத் தெரியேல்லை. ஆனால் சொல்லிலை சிலை அமைச்சு வைச்சிருக்கினம் எண்டதை உன்னாலை மறுக்க முடியாது.

ஞானா: அதெப்பிடி அப்பா?

அப்பா: திருக்குறள் படிக்கிற உனக்கே தெரியாமல் இருக்கிறது வெட்கக் கேடு. திருவள்ளுவர் நடுவுநிலைமை எண்ட 12 வது அதிகாரத்திலை ஒரு சிலை அல்லபத்துச் சிலை வடிச்சு வைச்சிருக்கிறார்.

சுந்தரி: அப்பிடிப் போடுங்கோ அப்பா அரிவாளை. கையிலை தராசு வைச்சிருக்கிற திருவள்ளுவற்றை சிலையைப் பற்றி நான் சொல்லிறன் கேளுங்கோ.

சமன்செய்து சீர்து}க்கும் கோல்பேல் அமைந்தோருபாற்

கோடாமை சான்றோர்க்கு அணி.

இப்ப பாருங்கோ அப்பா இந்த நடுவு நிலைமைக் குணம் பொதுவாக எல்லாக்காரியங்களுக்கும் தேவை. ஆனாலும் ஒரு வழக்கைச் சீர்து}க்தி நியாயம் சொல்லேக்கை பாரபட்சம் இல்லாமல் சொல்லவேணும். அதைத்தான் பண்டங்களைச் சரி சமனாக நிறுக்கிற தராசு போலை ஒரு பக்கத்துக்கும் சாராமால் இருக்க வேணும் ஏண்டு இந்தக் குறளிலை சொல்லியிருக்கிறார்;. பிள்ளை ஞர்னா. உனக்கு இந்த ஒரு சொற் சிலை போதுமோ இன்னும் வேணுமோ?

அப்பா: சுந்தரி....உந்தத் தராசை வைச்சு திருவள்ளுவர் அதே அதிகாரத்திலை இன்னுமொருகுறள் வடிச்சிருக்கிறார்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி


பிறவும் தமபோற் செயின்.

ஒரு நல்ல வியாபாரிக்கு அழகு என்னவென்றால், பிறருடையய பொருட்களையும் தன்னுடைய பொருள் போல குறைத்தோ, கூட்டியோ நிறுத்து அளக்காமால் சரி சமானாக அளக்க வேண்டியதுதான். அதுபோல நீதி வழங்கவேண்டியவர்களும் பிறருடைய நியாயத்தையும் தன்னுடையதுபோலவே சீர்து}க்கி நீதி வழங்கவேண்டும். அதுவே நடுநிலைமை எண்டதுதான் இந்தக் குறளின்ரை கருத்து.

சுந்தரி: பிள்ளை ஞான 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழாகள் நீதி தேவதையயைப்பற்றி அறிஞசிருக்கிறார்கள் என்டதை இப்ப நம்பிறியே.

ஞானா: நம்பிறன் அம்மா. இப்ப ஆளை விடுங்கோ. நான் ஒரு இடத்துக்குப் போகவேணும்.-இசை-

No comments: