நான் ரசித்த குறும் படம் KNIVES

 .
                                                                                                                                                          செ.பாஸ்கரன் 

  நான் ரசித்த குறும் படம் கத்திகள். ஒரே சமூகத்தில் எல்லா வகையினரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். கத்தியை கையில்பிடித்துக்கொண்டு அலையும் கொலைவெறிபிடித்த மனிதன் அந்தமனிதனை சார்ந்த சமூகத்தில் பழி போடப்படுகின்றது பேசப்படுகின்றது. கத்தியை தொழிலாக கொண்டிருக்கும் கசாப்புக்கடைக்காரன் மனிதாபிமானத்தோடு ஒரு சமூகத்தைச் சார்ந்தவனை காப்பாற்றுவதற்கு அதே கத்தியை கையில் எடுத்துக்கொண்டு ஒரு வீரனைப்போல் நடந்து செல்கின்றான்.







அதே சமூகத்தைச் சார்ந்த இன்னொருவன் அதேகத்தியைக்கொண்டு மழைக்கு குடைதருகின்றான் அவன் மனதில் கருணைமழை பொழிகிறது. மொழி சிங்கள மொழியாக இருந்தாலும் என்ன காரணத்திற்காகவோ மொழிவிளங்காமலேயே பெரும்பாலும் பாவிக்கப்படுகிறது. இது நெறியாளர் தேவை கருதி செய்தாரா என்பது கேள்விக் குறியாகின்றது. ஆனால் மொழி இங்கு தேவையற்றே போகின்றது குழந்தையின் அழுகை மொழியும் தந்தையின் பயமொழியும் நன்றாகவே அத்தனை பேச்சையும் பேசிவிடுகின்றது. நெறியாளர் ஜே பி ஜே ஆனந்த ரமணன் பாராட்டுக்குரியவர். கடைசிவரை எம்மிலும் ஒரு பயஉணர்ச்சி பற்றிக்கொள்ள கத்திகள் நகர்கின்றது. 


3 comments:

kiRukkan said...

கசாப்புக்கடைக்காரரும் அதே சமுகத்தை சார்ந்தவராக படத்தை எடுத்திருந்தால் ஒரே சமுகத்தில் பலவிதமான மனிதர்கள் இருப்பார்கள் என்ற உண்மை கூடுதலாக புரிந்திருக்கும் , இன்னும் நன்றாக இருந்திருக்கும்...கசாப்புக்கடை வேறு ஒரு சமுகத்திற்கு சொந்தம்போல காட்டமுயற்சி செய்துள்ளனர் போல தெரிகிறது

Anonymous said...

lk

Anonymous said...

கல்லுக்குள் ஈரம்.