குயீன்ஸ்லாந்து பிராந்தியத்தில் தொடர்ந்து வெள்ள மட்டம் அதிகரித்து வருவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பருவகால மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பிராந்தியத்திலுள்ள ஆறுகள் பலவும் பெருக்கெடுத்ததனால் வீடுகளும் வர்த்தக கட்டிடங்களும் நீரில் மூ ழ்கியுள்ளன.
மத்திய குயீன்ஸ்லாந்திலுள்ள எமெர ல்ட் நகரில் 80 சதவீதமான பகுதி வெள்ளப் பெருக்கு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
குயீன்ஸ்லாந்து தலமைச்சர் அனா பிலிங், தாழ்நில பகுதிகளிலுள்ள மக்களை வெளியேறும்படி எச்சரித்துள்ளார். எமெரல்ட் நகலுள்ள நொகோவா ஆறு பெருக்கெடுக்கும் அபாய நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டதையடுத்து, வெள்ளிக் கிழமை அங்கிருந்து சுமார் 500 பேர் இடம்பெயர்ந்தனர்.
மாநிலத்தின் தென் பகுதி நகரான தியோ டோலுள்ள முழு சனத்தொகையும் வெள்ள அபாயத்தையடுத்து இடம்பெயர்ந்துள்ளது.
பேர்னெட் ஆறு பெருக்கெடுத்ததால் பண் டாபேர்க் நகர் இரண்டாக பிளவடைந்துள் ளது. அங்கு சுமார் 120 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இராணுவ உலங்குவானூர்திகள் மூலம் உலர் உணவுகள் போடப்பட்டன.
No comments:
Post a Comment