மட்டக்களப்பில் அரங்கேறிய வடமோடிக் கூத்து

.


மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களின் கூத்துத்திறனை வளர்க்கும் வகையில் பேராசிரியர் சி.மௌகுருவின் நெறியாள்கையில் இன்று மட்டக்களப்பு புனித திரேசா மகளிர் மகா வித்தியாலயத்தில் ‘மனம் மாறிய மன்னர்கள்’ எனும் தலைப்பில் வடமோடிக் கூத்து அரங்கேற்றப்பட்டது.





ஜீ.ரி.இசட் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் நடத்தப்பட்ட இந்த வடமோடிக் கூத்து போராசிரியர் சி. மௌனகுருவின் ஆட்டப்பயிற்சி, பிரதி ஆக்கம், ஒருங்கிணைப்பு, நெறியாழ்கையின் கீழ் எம்.பி.ரவிச்சந்திரா மேடை நிருவாகம் மற்றும் தயாரிப்பு நிருவாகத்தை செய்திருந்தார். இந்தக் கூத்தில் மட்டக்களப்பு வலயத்தின் 12 ஆசிரியர்கள் பங்கேற்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.



ஆசிரியர்களின் கூத்துத்திறனை வளர்ப்பதனுடாக கூத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் சென்று நல்லமுறையில் பேணும் வகையில் இந்த மனம் மாறிய மன்னர்கள் வடமோடிக் கூத்து அரங்கேற்றப்பட்டதாக பேராசிரியர் சி.மௌனகுரு வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.


















Nanri verakesari

No comments: